வியாழன், 12 அக்டோபர், 2017

TNPSC-TET-VAO important questions தீவிரவாதிகள் காலம் - (1905 - 1916)



TNPSC-TET-VAO important questions தீவிரவாதிகள் காலம் - (1905 - 1916)
🇮🇳 தீவிரவாதிகள்:-
1. பாலகங்காதர திலகர்
2. லாலாலஜிபதி ராய்
3. பிபின் சந்திர பால்
4. அரவிந்த கோஷ்
🇮🇳 தீவிரவாதிகள் முக்கிய குறிக்கோள் - சுயராஜ்யம் அல்லது முழு விடுதலை
🇮🇳 தீவிரவாதிகள் பின்பற்றிய வழிமுறைகள்:
1. அரசு நீதிமன்றங்களையும், பள்ளிகளையும், கல்லூரிகளையும் புறக்கணிப்பதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது.
2. தேசிய பொருட்களை ஆதரிப்பது, அந்நிய பொருட்களை வாங்க மறுப்பது.
3. தேசிய கல்வியை அறிமுப்படுத்தி வளர்ப்பது.
🇮🇳 ஷெர்-இ-பஞ்சாப் (பஞ்சாப் சிங்கம்) என்று அழைக்கப்பட்டவர் - லாலா லஜபத் ராய்
🇮🇳 லோக் மான்யர் என்று அழைக்கப்பட்டவர் - பால கங்காதர திலகர்
🇮🇳 பால கங்காதர திலகர் நடத்திய பத்திரிக்கைகள் - மராத்தா (ஆங்கிலம் மொழி) கேசரி (மராத்தி மொழி)
🇮🇳 பால கங்காதர திலகர் முக்கிய முழக்கம் - சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதனை அடைந்தே தீருவேன்
🇮🇳 பால கங்காதர திலகர் நடத்திய விழாக்கள் - விநாயகர் சதுர்த்தி, சிவாஜி பண்டிகை
🇮🇳 சைமன் குழு போராட்டத்தின் போது தடியடி பட்டு இறந்தவர் - லாலா லஜபத் ராய்
🇮🇳 மிதவாதியாக இருந்து தீவிரவாதியாக மாறியவர் - பிபின் சந்திர பால்
🇮🇳 தீவிரவாதியாக இருந்து ஆன்மீக வாதியாக மாறியவர் - அரவிந்த் கோஷ்
🇮🇳 அரவிந்த் கோஷ் முக்கிய முழக்கம் - அரசியல் சுதந்திரம் பெறுவதே நாட்டின் உயிர் மூச்சு
🇮🇳 அரவிந்த கோஷ் வெளியிட்ட பத்திரிக்கை - சுதேசி பந்தனா, சாதானா சமாஜ்
🇮🇳 புபேந்திரநாத் தத் வெளியட்ட பத்திரிகை - யுகாந்தர்
🇮🇳 ராஜ்பிகாரி போஸ் மற்றும் சச்சிந்திர சன்யா இருவரும் ஹார்டின்ச் பிரபு யானை மீது செல்லும் போது குண்டுவீசி தாக்கினர்
🇮🇳 மதன்லால் திங்ரா 1909 கர்சன் பிரபுவை இலண்டனில் படுகொலை செய்தார்
🇮🇳 பகத் சிங், பட்கேஸ்வரதத் இவர்கள் மத்திய சட்டப்பேரவையில் 1929-ல் வெடிகுண்டு வீசினார்கள்
🇮🇳 டாக்கா அனுசீலன் என்ற தீவிரவாத இயக்கத்தை தொடங்கியவர் - பூலின்தாஸ்
🇮🇳 கொல்கத்தா அனுசீலன் சமிதி தொடங்கியவர் - பீரேந்திரகுமார் கோஷ், ஜே.என். பானர்ஜி, பிரமோத் மித்ரா
🇮🇳 மித்ரமேளா என்ற இயக்கத்தை தொடங்குயவர் - சர்வார்க்கர் பிரதர்ஸ்
🇮🇳 இந்துஸ்தான் ரிபப்ளிக் அசோசியேசன் (HRA) 1924 தொடங்கியவர் - சச்சிந்திர சன்யால், ஜோஸப் சாட்டர்ஜி
🇮🇳 காதர் பார்ட்டி தொடங்கியவர் - லாலா ஹர் தயாள்
🇮🇳 காதர் பார்ட்டி தொடங்க அமெரிக்காவில் உறுதுணையாக இருந்தவர் - சோஹன்சிங் பக்கன்
🇮🇳 காதர் பார்ட்டி முக்கிய தலைவர்கள் - ரஹமத் அலிஷா, பாய்பரமானந்த், ராமசந்திரா
🇮🇳 காதர் பார்ட்டி நடத்திய பத்திரிகை - காதர்
🇮🇳 இலண்டனில் இந்தியா ஹவுசில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா இந்திய தேசியவாதிகள் ஆன மதன்லால் திஸ்ரா, வி.டி.சாவர்க்கர், வி.வி.எஸ். அய்யர், டி.எஸ்.எஸ்.ராஜன் மற்றும் மேடம் காமா ஆகியோர்களை ஒன்று திரட்டினார்.
🇮🇳 அஜித் சிங் என்பவர் ஒரு இரகசிய அமைப்பை ஏற்படுத்தினார்.
🇮🇳 வந்தே மாதரம் என்ற தாய் நாட்டு பற்று மிக்க பாடலை இயற்றியவர் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
🇮🇳 சூரத் பிளவு - 1907
🇮🇳 தமிழ்நாட்டில் இருந்த தீவிரவாதிகள்
1. சுப்பிரமணிய பாரதி
2. வ.உ.சிதம்பரனார்
3.சுப்பிரமணிய சிவா
4. வாஞ்சிநாதன்
5. வ.வே.சு. அய்யர்
6. நீலகண்ட பிரம்மச்சாரி
🇮🇳 பாரத மாதா சங்கம் தோற்றுவித்தவர் - நீலகண்ட பிரம்மச்சாரி
🇮🇳 தன்னாட்சி இயக்கம் புனேவில் ஏப்ரல் மாதம் தொடங்கியவர் - பால கங்காதர திலகர்
🇮🇳 தன்னாட்சி இயக்கம் சென்னையில் செப்டம்பர் மாதம் தொடங்கியவர் - அன்னி பெசன்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக