வியாழன், 12 அக்டோபர், 2017

TNPSC-TET-VAO important questions தாவர உலகம்


TNPSC-TET-VAO important questions தாவர உலகம்

🌳 ஐந்துலக வகைப்பாட்டை அறிமுக படுத்தியவர் - R.H.விட்டேகர்
🌳 பூஞ்சைகள்:
எ.கா. மோல்டுகள், காளான்கள், டோட்டூல்ஸ், அடைப்புகுறி பூஞ்சை, பஃப்பந்துகள்
🌳 ஒற்றை செல்களால் ஆனவை - ஈஸ்ட்
🌳 பல செல்களால் ஆனவை - ரைசோபஸ்,  அகாரிகஸ், அஸ்பர்ஜில்லஸ்
🌳 பூஞ்சையின் உடலம் மைசிலியத்தால் ஆனவை.
🌳 மைசிலியம் பல ஹைப்பாக்களின் தொகுப்பு.
🌳 பூஞ்சையின் செல்சுவர் - கைடின்
🌳உணவூட்டம் வகைகள் - 3
1. ஒட் டுண்ணிகள்:-
 மற்ற உயிரினங்கள் சார்ந்து வாழும்
எ.கா. பக்சீனியா
2. சாறுண்ணிகள்:-
இறந்த மற்றும் அழுகிய உயிரினங்கள் சார்ந்து வாழும்
எ.கா. அகாரிகஸ், ரைசோபஸ்
3. கூட்டுயிரிகள்:-
எ.கா. லைக்கன்கள், மைகோரைசா
🌳 பூஞ்சைகளின் வகைகள்:-
⭕ சைகோமைகோட்டா - ரொட்டி காளான்
⭕ பெசிடியோமைகோட்டா - கணுவடி பூஞ்சை
⭕ ஆஸ்கோமைகோட்டா - கோப்பைப் முந்தைய பூஞ்சை
⭕ டியுடெரோமைகோட்டா - பெனிசிலியம்
🌳 இதுவரை கண்டறியப்பட்ட பூஞ்சை வகைகள் -  1,00,000 மேல்
🌳 சுற்றுச்சூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிரிக் காட்டாயாக விளங்குவது - லைக்கன்கள்
🌳 உண்ணத் தகுந்த காளான்கள்
எ.கா. அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்,  அகாரிகஸ் பைஸ்போரஸ்
🌳 நச்சுத்தன்மை உடைய காளான்கள்
எ.கா. அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ்
🌳 காளான்களில் காணப்படும் சத்து - புரதம்,  கனிமங்கள்
🌳 பெனிசிலியம் எனும் பூஞ்சையில் இருந்து பெறப்படுவது - பெனிசிலின்
🌳 சில நுண்ணுயிரிகள்
எ.கா. ஸ்டெரெப்டோமைசின், நியோமைசின், கானாமைசின், ஜென்டோமைசின், எரித்ரோமைசின்
🌳 வைட்டமின் B தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை - அஸ்ஃப்யா காஸிப், எரிமோதீசியம் அஸ்ஃப்
🌳 பூஞ்சை நோய்கள்:-
1. மனிதன் - மைகோசஸ், பாதப்படை, படர் தாமரை
2. விலங்குகள் - எர்காட், பாதப்படை
3. தாவரங்கள் - துருநோய், கறுப்பழுகல், கரும்புள்ளி,  கேன்கர்
🌳 கிளாவிஸ்செப்ஸ் பா்பர்ரியா - பகற்கனவு பூஞ்சை
🌳 குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவது -  ஆஸ்பரிஜில்லஸ்
🌳 குழந்தைகளுக்கு ஒவ்வாமை பாதுகாப்பது - கிளாடோஸ்போரியம்
பாசிகளின் வகைகள்:-
🌳 பாசிகள் அவற்றின் வண்ணங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளது.
⭕ பச்சை
⭕ பழுப்பு
⭕ சிவப்பு
⭕ நீலப்பச்சை
1. பச்சை
🔺 நிறமி -  பச்சையம்
🔺 வகுப்பு - குளோரோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ஸ்டார்ச்
🔺 எ.கா. - கிளாமிடோமோனஸ்
2.  பழுப்பு
🔺 நிறமி - ப்யூகோஸாந்தின்
🔺 வகுப்பு -  பேயோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - லாமினாரியன்
🔺 எ.கா. - சர்காஸம்
3. சிவப்பு
🔺 நிறமி - பைகோஎரித்ரின்
🔺 வகுப்பு - ரோடோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ப்ளோரிடியன் ஸ்டார்ச்
🔺 எ.கா. - பாலிசை போனியா
4. நீலப்பச்சை
🔺 நிறமி - பைகோசயனின்
🔺 வகுப்பு - சயனோபைட்டா
🔺 சேமிப்பு உணவு -  சயனோ பைசியன்ஸ்டார்ச்
🔺 எ.கா. - ஆஸில்லடோரியா
🌳 மனிதர்கள், வீட்டு விலங்குகள், மீன்களுக்கு உணவாக பயன்படுத்த பயன்படும் பாசிகள் - உல்வா, லேமினாரியா, சர்காஸம், குளோரெல்லா
🌳 அகர் அகர் சிவப்பு பாசியில்  இருந்து பெறப்படுகின்றது.
(எ.கா.) ஜெலிடியம், கிராஸிலோரியா
🌳 பனிக்கூழ் தயாரிக்க பயன்படுவது - அகர் அகர்
🌳 சோதனை குழாயில் வளர்க்கபடும் தாவரங்களுக்கு வளர்தள பொருளாக பயன்படுவது -  அகர் அகர்
🌳 லேமினோரிய எனும் பழுப்பு பாசியில் இருந்து பெறப்படுவது - அயோடின்
🌳 மனிதர்களின் கழிவுநீர் சிதைக்க பயன்படுவது - குளோரெல்லா பைரெனோய்டோஸா
🌳 உலகிலேயே மிக வேகமாக வளரும் கடல்பாசி - இராட்சத கெல்ப்
🌳 இராட்சத கெல்ப் ஒரு நாளைக்கு எவ்வளவு வளரும் - 15 செ.மீ
🌳 இராட்சத கெல்ப் காணப்படும் இடம் -  கலிபோர்னியா
பாசிகள்:-

🌳 இலை, தண்டு, வேர், வேறுபாடுகள் பெற்றிருப்பதில்லை

🌳 பச்சையம் பெற்றிருப்பதால் தமக்கு தேவையான உணவை தாமே தயாரித்துக் கொள்ளும்.

🌳 இவற்றின் செல்சுவர் செல்லுலோஸால் ஆனது.

🌳 இனப்பெருக்க வகைகள்

⭕ தூண்டாதல் - (எ.கா.) ஸ்பைரோகைரா
⭕ பாலில இனப்பெருக்கம் - ஸ்போர்கள்
⭕ பால் இனப்பெருக்கம் - ஏணி இணைவு, பக்க இணைவு (எ.கா.) ஸ்பைரோகைரா
⭕ பால் உறுப்புகள் - ஆந்த்ரிடியம், ஆர்க்கிகோனியம் (எ.கா.) காரா

பாசிகளின் வகைகள்:-

🌳 பாசிகள் அவற்றின் வண்ணங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளது.
⭕ பச்சை
⭕ பழுப்பு
⭕ சிவப்பு
⭕ நீலப்பச்சை

1. பச்சை
🔺 நிறமி -  பச்சையம்
🔺 வகுப்பு - குளோரோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ஸ்டார்ச்
🔺 எ.கா. - கிளாமிடோமோனஸ்

2.  பழுப்பு
🔺 நிறமி - ப்யூகோஸாந்தின்
🔺 வகுப்பு -  பேயோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - லாமினாரியன்
🔺 எ.கா. - சர்காஸம்

3. சிவப்பு
🔺 நிறமி - பைகோஎரித்ரின்
🔺 வகுப்பு - ரோடோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ப்ளோரிடியன் ஸ்டார்ச்
🔺 எ.கா. - பாலிசை போனியா

4. நீலப்பச்சை
🔺 நிறமி - பைகோசயனின்
🔺 வகுப்பு - சயனோபைட்டா
🔺 சேமிப்பு உணவு -  சயனோ பைசியன்ஸ்டார்ச்
🔺 எ.கா. - ஆஸில்லடோரியா

🌳 மனிதர்கள், வீட்டு விலங்குகள், மீன்களுக்கு உணவாக பயன்படுத்த பயன்படும் பாசிகள் - உல்வா, லேமினாரியா, சர்காஸம், குளோரெல்லா

🌳 அகர் அகர் சிவப்பு பாசியில்  இருந்து பெறப்படுகின்றது.
(எ.கா.) ஜெலிடியம், கிராஸிலோரியா

🌳 பனிக்கூழ் தயாரிக்க பயன்படுவது - அகர் அகர்

🌳 சோதனை குழாயில் வளர்க்கபடும் தாவரங்களுக்கு வளர்தள பொருளாக பயன்படுவது -  அகர் அகர்

🌳 லேமினோரிய எனும் பழுப்பு பாசியில் இருந்து பெறப்படுவது - அயோடின்

🌳 மனிதர்களின் கழிவுநீர் சிதைக்க பயன்படுவது - குளோரெல்லா பைரெனோய்டோஸா

🌳 உலகிலேயே மிக வேகமாக வளரும் கடல்பாசி - இராட்சத கெல்ப்

🌳 இராட்சத கெல்ப் ஒரு நாளைக்கு எவ்வளவு வளரும் - 15 செ.மீ

🌳 இராட்சத கெல்ப் காணப்படும் இடம் -  கலிபோர்னியா
பிரையோபைட்டுகள்:-
🌳 இவை நீரில் இருந்து வெளி வந்து நிலத்தில் வாழ்வதற்காக தகவமைப்பு பெற்ற தாவரம்
🌳 இவை நீரின் இனப்பெருக்கம் செய்யாது.
🌳 மாஸ் எனப்படும் பிரையோபைட்டுகள் வேர், தண்டு, இலை ஒத்த உறுப்புகள் பெற்றுள்ளன.
🌳 கேமிட்டுகள் மூலம் பாலினப்பெருக்கம் நடைபெறும்.
🌳 ஸ்போர்கள், ஜெம்மா கிண்ணம், துண்டாதல் முறை மூலம் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறும்.
🌳 நீர், நிலம் இரண்டிலும் வாழ தகுதியினை பெற்றுள்ளன.
🌳 பூக்கும் தன்மையற்ற இருவாழ்விகள்
🌳 பிரையோபைட்டுகள் வகைகள்:
⭕ வகுப்பு - ஹெபாடிகே
🔺 வேறுபாடு அடையாத உடலம்
🔺 புரோட்டோனீமா நிலை இல்லை
🔺 எ.கா. ரிக்சியா
⭕ வகுப்பு - ஆந்த்தோசெரட்டே
🔺 ஸ்போரோபைட் தாவரம் சீட்டா, கேப்சூல் என வேறுபாடு அடைந்துள்ளது.
🔺 புரோட்டோனீமா நிலை இல்லை
🔺 எ.கா. ஆந்த்தோரோஸ்
⭕ மாஸ்கை
🔺 வேர், இலை, தண்டு போன்ற உறுப்புகளாக வேறுபாடு அடைந்துள்ளது.
🔺 எ.கா. ப்யூனாரியா
🌳 பிரையோபைட்டுகள் பயன்கள்:
⭕ உலர்த்தப்பட்ட பீட் மாஸ், ஸ்பாக்னம் ஆகியன எரிபொருளாக பயன்படுகிறது.
⭕ ஸ்பாக்னம் புரை தடுப்பானாகவும் பயன்படுகிறது.
⭕ மருத்துவ மனையில் உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிறது.
⭕ ஸ்பாக்னம் விதை நாற்றங்கால் பசுமை இல்லங்களில் பயன்படுகிறது.
⭕ மண்ணரிப்பு தடுக்க பயன்படுகின்றது.
ஜிம்னோஸ்பெர்ம்கள்:-
🌳 வேர், தண்டு, இலை என்ற வேறுபாடுகள் உள்ளது.
🌳 நன்கு வளர்ச்சி அடைந்த ஆணிவேர் தொகுப்பு.
🌳 ஸ்போரோபைட் மற்றும் கேமிடோபைட் நிலைகள் மாறிமாறி காணப்படும்.
🌳 ஆண் மற்றும் பெண் கூம்புகள் உருவாக்குகின்றன.
ஜிம்னோஸ்பெர்ம்கள் தாவர வகைகள்:
⭕ சைகடேல்ஸ் (எ.கா.) சைகஸ்
🔺 பனை போன்ற மரம்
🔺 சிறிகு வடிவ கூட்டிலைகள், கூம்பு வடிவ உச்சியை கொண்டது
⭕ ஜிங்க்கோயேல்ஸ் (எ.கா.) ஜிங்க்கோபைலோபா
🔺 இந்த குழுவில் வாழும் ஒருவகை சிற்றினம்
🔺 விசிறி வடிவ இலைகள் கொண்டது.
🔺 வருந்துகிற நாற்றம் தரக்கூடியது.
⭕ கோணிபெரேல்ஸ் (எ.கா.) பைனஸ்
🔺 பசுமைமாறாக் மற்றும் கூம்பு வடிவத் தாவரம்.
🔺 இலைகள் ஊசி அல்லது செதில்கள் காணப்படும்.
🔺இயற்கை உடைய விதைகளை கொட்ணது.
⭕ நீட்டேல்ஸ் (எ.கா.) நீட்டம்
🔺 உயர் பண்புகளை கொண்ட சிறிய தாவரம்
🔺 சூல்கள் யூப்போன்ற தண்டின் மீது திறந்த நிலையில் உள்ளன.
📚 ஜிம்னோஸ்பெர்ம்கள் பயன்கள்:-
🌳 பைடன், செங்கட்டை ஃபர், பீர், சைப்ரஸ் மரச்சாமன்கள் செய்ய பயன்டுகிறது.
🌳பைனிலிரிந்து மரக்கட்டை எண்ணெய் ரெசின் போன்றவை கிடைக்கிறது.
🌳 ரெசினில் இருந்து ஆயிண் மெண்டகள், வார்னிஸ்கள் தயாரிக்க பயன்படுகிறன.
🌳 எபிட்ரா - எபிட்ரின் தயாரிக்க பயன்படுகிறது
🌳 ஆல்கலாய்டு ஆஸ்த்துமா நோயை குணப்படுத்துகிறது.
🌳 நீட்டம் மூட்டு வாதத்தைக் குணப்படுத்துகின்றது.
🌳 ஆகாதிஸ் காதித கூழ் காகிதம் தயாரிக்க பயன்படுகிறது
🌳 ஆரக்கேரிய (குரங்கின் - புதிர்) பசுமை மாறாத அழகுத் தாவரம்
ஆஞ்சியோஸ்பெர்ம்:-
🌳 பூக்கும் தாவரங்களில் மிகப்பெரியதொரு தொகுதியாக இருப்பது.
🌳 2,60,000 உயிர்வாழ் தாவரங்களைக் கொண்டது.
🌳 சைலம், புளோயம் என்ற கடத்தும் திசுக்களை கொண்டவை
🌳 சூல்கள்  சூற்பையிலுள்ள சூலறைகளால் சூழப்பட்டுள்ளது.
🌳 சூற்பை பின்னர்க் கனியாக மாற்றமடைகின்றன.
🌳 நூல்கள் விதைகளாக மாறுகின்றன.
🌳 விதைகள் விதையிலைகன்
⭕ஆஞ்சியோல்ஸ்பெர்கள் வகைகள் - 2
1. ஒரு வித்திலை
2. இரு வித்தலை
⭕ஒரு வித்தலை
🌳 வேர் - சல்லிவேர்த் தொகுப்பு
🌳 இலை - இணைபோக்கு நரம்பமைவு
🌳 மலர் - புல்லி, அல்லி என வேறுபாடு இல்லை
🌳 எ.கா. - புல், நெல், சோளம், கோதுமை
⭕இரு வித்திலை
🌳 வேர் - ஆணிவேர் தொகுப்பு
🌳 இலை - வலைப்பின்னல் நரம்பமைவு
🌳 மலர் - புல்லி, அல்லி என வேறுபாடடைந்தவை
🌳 எ.கா. மா, புளி, வேம்பு
⭕ வேரின் அமைவு
🌳 வேரின் புறத்தோல் ரைசோடெர்மிஸ்
🌳 வேரின் அடுத்த அடுக்கு கார்டெக்ஸ்
🌳 கார்டெக்ஸ் கடத்துதலுக்கும் சேமித்தலுக்கும் பயன்படுகிறது
🌳 சைலம் வேரில் இருந்து தாவரங்களுக்கு நீரை கடத்துகிறது.
🌳 ப்ளோயம் இலையில் இருந்து உணவை தாவரங்களுக்கு பிற உறுப்புகளுக்கு கடத்துகிறது.
🌳 வேரின் மையப்பகுதி - பித்
🌳 ஒருவித்திலைத் தாவரங்களில் பித் உள்ளது.
🌳 இருவித்திலைத் தாவரங்களில் பித் இல்லை.
⭕ தண்டின் அமைப்பு
🌳 கியூட்டிக்கிள் - மொழுகு படலம்
🌳 எபிடெர்மிஸ் - உருளை வடிவமுடையவை பாதுகாப்பு அளிக்கின்றன.
🌳 கார்டெக்ஸ் (புரணி) மூன்று பகுதிகளை கொண்டது.
1. கோலன்கைமா:
* தடித்த செல்சுவர் கொண்டது
* தாங்குதல் பணி செய்கிறது
2. குளோரன்கைமா:
* மெல்லிய சுவர் கொண்டது
* பச்சையம் உள்ளதால் ஒளிசேர்க்கையில் துணை செய்கிறது
3. பாரன்கைமா:
* மெல்லிய சுவர் கொண்டது
* சேமிப்பு காற்றோட்டத்திற்கு உதவுகிறது.
🌳 எண்டோடெர்மிஸ்
* பீப்பாய் வடிவமுடையது.
* பாதுகாத்தல், கடத்துதல் போன்ற பணிகளைச் செய்கிறது.
🌳 பெரிசைக்கிள்
* ஸ்கிளிரென்கைமாவும், பாரன்கைமாவும் மாறி, மாறி அமைந்துள்ளன
🌳 வாஸ்குலார் கற்றை
* ப்ளோயம் - உணவு கடத்துதல்
* சைலம் - நீர் கடத்துதல்
* கேம்பியம் - இரண்டாம் நிலை வளர்ச்சி
🌳 குறுக்குக் கதிர் - வாஸ்குலார் கற்றைகளுக்கு இடையே பரவியுள்ளது
🌳 பித் - கடத்துதலில் பயன்படுகின்றது.
⭕இருவித்திலைத் தாவர இலையின் அமைப்பு
🌳 கியூட்டிக்கிள் - புறத்தோலின் வெளி அடுக்கு
🌳 மேற்புறத்தோல் - உருளை வடிவ செல்கள், பாதுகாப்பு அளிக்கிறது
🌳 கீழ்ப்புறத் தோல்:
*உருளை வடிவ செல்கள், இலைத் துளைகளைப் பெற்றுள்ளன.
* நீராவிபோக்கு, வாயு பரிமாற்றத்தில் துணை செய்கின்றது.
🌳 மீசோபில் திசு:
♦ இருபுறம் ஒத்த அமைப்புடைய இலை (ஐசோபைலேட்டரல்)
* ஒருவித்திலைத் தாவர இலையில் பாலிஸேடு அல்லது ஸ்பாஞ்சி பாரன்கைமா இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டுமே காணப்படும்
♦ மேல் கீழ் இலை (டார்சிவெண்ட்ரல்)
* இரு வித்திலைத் தாவர இலையில் பாலிஸேடு மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா இரண்டும் காணப்படும்.
♦ பாலிஸேடு பாரன்கைமா
* குழாய் வடிவ செல்கள் அதிக பசுங்கணிகங்களை பெற்றுள்ளன.
* ஒளிசேர்க்கைக்குச் துணை செய்கின்றன
♦ ஸ்பாஞ்சி பாரன்கைமா
* முட்டை அல்லது வட்ட வடிவமுடையவை குறைவான பசுங்கனிகங்கள் பெற்றிருள்ளன.
* சேமிப்பு மற்றும் கடத்துதலில் துணை செய்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக