இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் - நவம்பர் 26.
இந்திய அரசியலமைப்பு ஷரத்துகள்
#CONTENTS
#நோக்கம்
#அரசியல் நிர்ணய சபை குறிப்புகள்
#இந்திய அரசியலமைப்பின் மூலங்கள்
#இந்தியக் குடியரசுத் தலைவர்
#தகுதிகள்
#தேர்ந்தெடுக்கப்படும் முறை
#குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்
#இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர்
#நாடாளுமன்றம்
#குடியரசுத் தலைவர்
#மாநிலங்களவை:
#நாடளுமன்ற உறுப்பினர்களின் தகுதிகள்
#பண மசோதா
#கட்சித்தாவல் தடைச்சட்டம்
#உச்சநீதிமன்றம்
#உச்சநீதிமன்ற அதிகாரமும் நீதிவரம்பும்
#உயர்நீதிமன்றம்
#உயர்நீதிமன்றத்தின் நீதிவரம்பு மற்றும் #அதிகாரங்கள்
#ஆட்சிமொழி
#நோக்கம்
ஒரு நாட்டு மக்களை ஆட்சி புரியும் அடிப்படையான அரசியல் முறையைக் கூறுவதே அந்நாட்டின் அரசியலமைப்பு ஆகும். அரசின் தலையாய அங்கங்களாகிய சட்டமியற்றும் சபை, நீதித்துறை ஆகியவற்றைத் தோற்றுவித்து, அவற்றின் அதிகாரங்களை வரையறுத்து பொறுப்புகளைப் பகுத்து, பரஸ்பரம் அவைகளை வரையறுத்து, இடையேயும், அவற்றுடன் மக்களுக்கும் உள்ள உறவுகளை நெறிப்படுத்துவதே அரசியலமைப்பு ஆகும்.
#அரசியல் நிர்ணய சபை குறிப்புகள்
1922 மகாத்மா காந்தி இந்தியர்களுக்கென அரசியல் சட்டம் உருவாக்க வேண்டுமென கருதினார்.
மே 16 1946 - அமைச்சரவைத் தூதுக்குழு, அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது.
9 டிசம்பர் 1946 - டாக்டர். சச்சிதானந்த் சின்ஹா இந்திய அரசியல் தற்காலிக நிர்யண சபையின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார்.
11 டிசம்பர் 1946 – டாக்டர் இராசேந்திர பிரசாத், நிர்ணய மன்றத்தின் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தோராயமான வரைவு வி.என். ராவ் அவர்களால் தயாரிக்கப்பட்டது.
அரசியலமைப்பு முன்னுதாரணங்கள் தலைப்பில் மூன்று வரிசைகளில் தரப்பட்ட அந்தப் பின்னணி விவரங்களில் சுமார் அறுபது நாடுகளின் அரசியல் சட்டங்களின் சிறப்புக் கூறுகள் தொகுத்துத் தரப்பட்டிருந்தன. டாக்டர். பி.ஆர். அம்பெத்கர் தலைமையில் அரசியல் சட்ட வரைவுக்குழு ஒன்று 1947 ஆகஸ்ட் 29ஆம் தெதி நியமிக்கப்பட்டது.
வரைவுக்குழு 7 உறுப்பினர்களை கொண்டது.
தலைவர்: பி.ஆர். அம்பேத்கர்
#மற்ற உறுப்பினர்கள்:
கோபாலஸ்வாமி ஐய்யங்கார், கிருஷ்ணஸ்வாமி ஐயர், கே.எம். முன்சி, முகமது சாதுல்லா, என். மாதவராவ், டி. பி. கைதான்.
1949 நவம்பர் 26ஆம் தேதி வாயிலாக இந்திய இறையாண்மை மக்களாட்சிக் குடியரசின் அரசியலமைப்பை இந்திய மக்கள் இயற்றி ஏற்று கொண்டு தமக்குத் அளித்துக் கொண்டனர். அரசியலமைப்பை உருவாக்கும் இமலாயப் பணியை மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே அரசியல் நிர்ணயசபை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது.
1950 ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
#இந்திய அரசியலமைப்பின் மூலங்கள்
மூலங்கள்
கடைபிடிக்கப்பட்ட விதிகள்
1935ம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டம்
ஆட்சி அமைப்பின் அடிப்படை, மாநில உறவுகளை நெறிப்படுத்துவது, அவசர நிலை பிரகடனம்.
ஐரிஷ் அரசியல் அமைப்பு
நெறிமுறை கோட்பாடுகள். குடியரசு தலைவர் தேர்வர், ராஜ்ய சபையின் நியமன உறுப்பினர்கள் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவது.
கனடா அரசியல் அமைப்பு
கூட்டரசு அமைப்பு, ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு, அதிகாரப் பகிர்வு
ஆஸ்திரேலிய அரசியல் அமைப்பு
ஒன்றிய-மாநிலப் பொதுப்பட்டியல், ஒன்றிய-மாநில உறவு, வாணிகம், நாடாளுமன்ற உரிமைகள்
ஜெர்மன் அரசியல் அமைப்பு
அவசர நிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை நீக்குவது
யு.எஸ்.எ. அரசியல் அமைப்பு
கூட்டாட்சி, நீதித்துறையின் தனியுரிமை, நீதித்துறையின் மறுபரிசீலனை, அடிப்படை உரிமைகள், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது குறித்து
பிரிட்டிஷ் அரசியல் அமைப்பு
ஒற்றைக்குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி, சட்டம் இயற்றும் முறை.
#முகப்புரை
பொருள்:
முகப்புரை எனப்படுவது, இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். மேலும் அச்சட்டத்தின் கொள்கைகளை புரிந்து கொள்ளவும், சட்டமன்றத்தின் கருத்தை அறிந்து கொள்ளவும் சட்டத்தின் முகப்புரை பெரிதும் உதவுகிறது.
1976ம் ஆண்டில் 42வது அரசியல் திருத்தம் செய்யப்பட்டது. இத்திருத்தம் முகப்புரையில் மூன்று சொற்களை புகுத்தி உள்ளது. அதாவது சமதர்மநெறி, சமயச் சார்பின்மை, மற்றும் ஒருமைப்பாடு.
இந்தியா மற்றும் அதன் எல்லைகள்: பகுதி 1 (ஷரத்து ஒன்றிலிருந்து நான்கு வரை)
குடியுரிமை - பகுதி 2 (ஷரத்து ஐந்த முதல் பதினொன்று வரை)
அடிப்படை உரிமைகளின் வகைப்பாடு:
#சமத்துவ உரிமை
சுதந்திர உரிமை
கலாச்சார உ ரிமைகள்
அரசியலமைப்பு தீர்வழிகள் பெற உரிமை
மேற்படி அடிப்படை உரிமையில் சொத்துரிமை நீக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் அமைக்கப்பட்டதன் நோக்கமே சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான்.
சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமைகளின் மற்றொரு நோக்கமாகும். அரசு மற்றும் அரசு சம்பந்தப்பட்ட துறைகள் தலையிடும்போதுதான், அடிப்படை உரிமைகளின் தேவைப்பாடு எழும். அதாவது அடிப்படை உரிமைகளை அரசுக்கு எதிராகத் தான் எழுப்ப முடியும். தனி மனித செயல்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகளைக் கோர முடியாது.
இந்திய அரசியலமைப்பில், நீதிமுறை மறுசீராய்வு அதிகாரம் பற்றி 13, 32, 226 போன்ற ஷரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷரத்து 14 - சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சட்டங்களின் மூலம் நீ சமத்துவம்’ என்பதில் ‘சம பாதுகாப்பு’ என்ற இரு சொற்றொடர்கள் ஆட்சியையும் சமநீதியையும் குறிக்கின்றன.
ஷரத்து 15 சாதி, சமய, இன, வேறுபாடுகளினால் பாரபட்சம் காட்டாமை. ஷரத்து 16 சாதி, சமய, இன, பால், வம்சாவழி, பிறப்பிட, இருப்பிட வேறுபாடுகளினால் மட்டும் அரசு வேலையைப் பெறத் தகுதி இல்லை என்று எந்தக் குடிமகனுக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது.
1992ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி டல் கமிஷன் பரிந்துரையின்படி சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தங்கிய பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.
ஷரத்து 17 தீண்டாமை ஒழிப்பு - தீண்டாமைச் சட்டம் 1955, பின்னர் இதனையே ‘சிவில் உரிமைகள் / பாதுகாப்புச் சட்டம் என 1976ல் மாற்றப்பட்டது.
ஷரத்து 18 பட்டங்கள் ஒழிப்பு’ - ராணுவத்திலும் கல்வித் துறையிலும் சாதனை புரிவோருக்குப் பட்டங்கள் வழங்குவதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஷரத்து 19 சுதந்திர உரிமை
பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்
ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாகக் கூட்டம் கூடுவதற்குச் சுதந்திரம்
சங்கங்கள் அமைப்பதற்குச் சுதந்திரம்
இந்திய ஆட்சிப்பகுதிக்குள் எல்லா இளுத்தம் வருவதற்கான சுதந்திரம்
இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிக்கவும் குடியிருப்பதற்கும் சுதந்திரம்
எந்தத் தொழிலையோ, வாணிகத்தையோ மேற்கொள்வதற்கான சுதந்திரம்
1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 44வது அரசியல் சட்ட திருத்தத்திற்கு முன்பு சொத்துரிமையானது ஷரத்து 31ன் கீழ் ஒரு அடிப்படை உரிமையாக இருந்தது. பின்னர் 300ன் கீழ் சாதாரண உரிமையாக்கப்பட்டது. ஷரத்து 31 நீக்கம் செய்யப்பட்டது.
குற்றங்களுக்குத் தண்டனையளிப்பது குறித்த பாதுகாப்பு ஷரத்து 20 - இந்தப் பிரிவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவசர நிலையின் போதும்கூட ஓர் ஆணை மூலம் இந்த உரிமையை நிறுத்திவைக்க முடியாது என்று அரசியலமைப்பின் 42வது திருத்தச் சட்டம் கூறுகிறது.
ஷரத்து 21 - உயிருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு: சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள முறைப்படி அல்லாமல் எந்த ஒரு நபரின் உயிரையும் தனிச் சுதந்திரத்தையும் பறிக்க முடியாது என்று அரசியலமைப்பின் 21ஆவது பிரிவு உத்தரவாதமளிக்கிறது. இதுவும் அவசர நிலையின்போதும்கூட பிரிவு 359ன்படி ஓர் ஆணை மூலம் இந்த உரிமையை நிறுத்திவைக்க முடியாது.
ஷரத்து 22 கைது செய்யப்படுவதற்கும், காவலில் வைக்கப்படுவதற்கும் எதிரான பாதுகாப்பு.
ஷரத்து 22 (1) தடுப்புக்காவல் சட்டம். ஆலோசனைக்குழு போதுமான காரணம் இருப்பதாகக் கூறினால் ஒழிய எந்தச் சட்டத்தின் படியும் தடுப்பு மூன்று மாதங்களுக்கு மேல் போக அனுமதிக்கக்கூடாது. அத்துடன், எவ்வளவு காலத்திற்குத் தடுப்புக் காவல் என்பதையும் கண்டிப்பாகக் கூறியாக வேண்டும்.
ஷரத்து 23 சுரண்டலுக்கு எதிரான சட்டவிரோதமாக மனிதர்களை வியாபாரம் செய்வது, “பெண்கள்’ நிர்ப்பந்தப்படுத்தி வேலை வாங்குவது போன்ற சுரண்டல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
ஷரத்து 24 - 14 வயதுக்கு சிறுவர்களைத் தொழிற்சாலைகளிலோ, சுரங்கங்களிலோ, அபாயகரமான தொழில்களிலோ வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்கிறது.
ஷரத்து 25 - குடிமக்கள், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி எந்தச் சமயத்தையும் ஏற்கவும், பின்பற்றவும் பரப்பவும் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.
ஷரத்து 26 - எல்லா சமயத்தவருக்கும், பிரிவினருக்கும், சமயஶ்ரீ மற்றும் அறநிலைய அமைப்பு ஏற்படுத்திப் பராமரிக்க, சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தாமே நிர்வகித்துக்கொள்ள, சொத்துக்களை வாங்கி நிர்வகிக்க அடிப்படைஉரிமையை அளிக்கிறது.
ஷரத்து 27 - எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தின் வளர்ச்சிக்காகவும், பராமரிப்பிற்காகவும் ஆகும் செலவுகளுக்காக வரி செலுத்துமாறு எந்த ஒரு நபரையும் கட்டாயப்படுத்த முடியாது.
ஷரத்து 28 - முற்றிலும் அரசாங்க நிதியில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் சமய போதனை கூடாது என்று கூறுகிறது.
ஷரத்து 29 - இந்தியாவின் எந்தப் பகுதியிலேனும் வசிக்கின்ற குடிமக்களின் எந்த ஒரு பிரிவினரும் தமக்கென்று பிரத்யேகமான மொழியையோ, எழுத்து வடிவத்தையோ, பண்பாட்டையோ கொண்டவர்களாக இருந்தால் அவற்றைப் பேணிக்காக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.
ஷரத்து 30 - சிறுபான்மையினர் அனைவரும் - அவர்கள் சமயச் சிறுபான்மையினரானாலும் மொழிச் சிறுபான்மையினரானாலும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிப்பதற்கு உரிமையுண்டு.
ஷரத்து 32 - 1. நீதிப்பேராணை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல், ஒருவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்திலும் அரசியலமைப்பின் 3வது பகுதியில் தாக்கல் செய்யலாம்.
உத்திரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படும் பொழுது, உச்ச நீதிமன்றம் நீதிப்பேராணை வெளியிட அதிகாரம் படைத்துள்ளது.
ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை : சட்டத்திற்குப் புறம்பான முறையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டவரை விடுவிக்கச் செய்ய இவ்வாணை இடப்படுகிறது.
செயலுறுத்தும் நீதிபேராணை : பொதுக்கடமையான ஒரு செயலை ஓர் அதிகாரி அல்லது கீழ் நீதிமன்றம் செய்யத் தவறினால் அக்கடமையை செய்ய இவ்வாணை இடப்படுகிறது.
தடையுறுத்தும் பேராணை: கீழ் நீதிமன்றமோ, ஆட்சி அதிகாரியோ சட்டத்தை மீறி அல்லது சட்டத்துக்கு முரணாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அதை மேற்கொண்டு நடத்தாமல் செய்ய, இவ்வாணை இடப்படுகிறது.
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை: நீதிமுறை சார்ந்த அலுவல்களைச் செய்யும் தீர்ப்பாயங்கள், அதிகாரிகள், தம் அதிகார வரம்பை மீறி செயல்பட்டாலோ நெறிமுறைக்கு மாறாக நடவடிக்கை எடுத்தாலோ அவற்றை மறு ஆய்வு செய்து நீக்கம் செய்வதற்கென சம்பந்தமான ஆவணங்களைத் தமக்கு அனுப்புமாறு நீதிமன்றம் ஆணையிடுவதுதான் நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை ஆகும்.
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை: பொது அதிகாரப் பதவியில் உள்ளவரை அவர் எத்தகுதியில் அப்பதவி வகிக்கிறார் என்று வினவி, பிறப்பிக்கப்படும் ஆணைதான் தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை ஆகும்.
பத்து கடமைகள் புதிதாக அரசியல் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஷரத்தின் கீழ் அப்பத்து அடிப்படை கடமைகள் பின்வருமாறு கூறப்படுகிறது.
அரசியலமைப்பினைப் பின்பற்றுதல், மற்றும் அதன் குறிக்கோள்கள், அமைப்புகள் இவற்றிற்கு மரியாதை செலுத்துதல்
நமது நாட்டு விடுதலைப் போராட்ட வீர்ர்களின் படத்தை, அவர்களின் உயர்ந்த குறிக்கோள்களை பின்பற்றுதல் மற்றும் போற்றி வளர்த்தல்
இந்தியாவின் ஒற்றுமை, இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தல் மற்றும் பாதுகாத்தல்
நாட்டினைப் பாதுகாத்தல் மற்றும் அழைக்கப்படும் பொழுது தேசியப் பணிபுரிதல்
சமயம், மொழி மற்றும் வட்டாரம் அல்லது பிரிவு வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்களுக்குள் பொது சகோதரத்துவ உணர்வு மற்றும் இணக்கத்தினை மேம்படுத்துதல் பெண்களின் மேன்மையைத் தாழ்த்துகின்ற பழக்கங்களைத் துறத்தல்.
நமது பல்வகையான கலாச்சாரத்தின் உயர்ந்த பாரம்பரியத்திற்கு மதிப்பு அளித்தல் மற்றும் பேணுதல்
காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வன வாழ்க்கை உள்ளிட்ட இயற்கை சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல் மற்றும் (மேம்படுத்துதல் மற்றும் வாழும் உயிரினங்களுக்காக இரக்கம்)
ஆய்வறிவு விளைவு நிலை, மனித நலம் மற்றும் சீர்திருத்தங்களை மேம்படுத்துதல்
பொதுச் சொத்துக்கு பாதுகாப்பு அளித்தல்
எல்லாத் துறைகளிலும், தனிமனிதன் மற்றும் கூட்டுச்செயல்பாடுகளின் முதன்மை நிலையை நோக்கி முயலுதல்.
இந்தியக் குடியரசுத் தலைவர்
ஷரத்து 52 - இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்கவேண்டும் என்றும் இவர் இந்திய அரசாங்கத்தின் செயலாட்சி அதிகாரம் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும், இவர் அவ்வதிகாரத்தை இந்திய அரசியல் அமைப்புக்குட்பட்டு நேரடியாகவோ, / தனது கீழுள்ள அதிகாரிகள் மூலமாகவோ செயலுறுத்தலாம் என்று கூறுகிறது.
#தகுதிகள்
ஒரு இந்திய குடிமகனாகவும்
35 வயது நிரம்பியவராகவும்
பாராளுமன்றத்தின் மக்கள் சபைக்குப் போட்டியிடத் தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும்
மத்திய அரசாங்கத்திலோ அல்லது ஏதாவதொரு மாநில அரசாங்கத்திலோ அல்லது மேற்கண்ட அரசாங்கங்களின் கீழ் இயங்கும் ஏதாவதொரு வட்டார பிற அதிகார அமைப்பிலோ ஆதாய அடிப்படையில் அமைந்த ஒரு பதவியையும் வகிப்பவராக இருத்தல் கூடாது.
ஊதியம்
மாதச்சம்பளம் - ரூ.1,50,000
மேலும் வாடகை தராமல் அரசாங்க குடியிருப்பை பயன்படுத்திக்கொள்ள உரிமையுண்டு.
#தேர்ந்தெடுக்கப்படும் முறை
மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் மாறாக, அவர் ஒரு தேர்தல் குழுவின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இத்தேர்தல் (அ) பாரளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் (ஆ) மாநில சட்டமன்றத்தின் கீழவையான சட்டப்பேரவையில் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறு ஷரத்து 54 கூறுகிறது. இத்தேர்தல் குழுவினரால் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போது விகிதப் பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படும். உறுப்பினர்கள் அளிக்கும் ஓட்டு, ஒற்றைமாற்று ஓட்டு ஆகும்.
இந்தியக் குடியரசுத் தலைவர், தாம் பதவி ஏற்ற தினத்தில் இருந்து 5 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகிக்கலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் பதவித் தேர்தலுக்குப் போட்டியிடலாம்.
“குடியரசுத் தலைவர் மீது பழிச்சாற்றுவது”தொடர்பான நடைமுறைகளை ஷரத்து 61 கூறுகிறது. குடியரசுத் தலைவர் தாமாகவே தனது பதவியை இராஜினாமா செய்யலாம். (அல்லது பாராளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவையில் மொத்த உறுப்பினர்களில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்குக் குறையாது உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஒரு தீர்மானத்தின் வாயிலாக, குடியரசுத் தலைவர் மிது குற்றஞ்சாட்டலாம். குற்றச்சாட்டப்பட்ட தீர்மானத்தின் நகல் குடியரசுத் தலைவருக்கு, அது தொடங்கப்படும் 14 நாட்களுக்கு முன்பாகவே கொடுக்கப்பட வேண்டும். பிறகு அத்தீர்மானம் சபையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
#குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்
செயலாட்சித் துறை - உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களின் தணிக்கைத் தலைவர், பொதுப்பணிக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தனி அலுவலர்கள், தாழ்த்தப்பட்ட பகுதியின் விவரத்தை தயார் செய்யும் குழு, பிற்பட்டோர் நிலையை ஆயும் குழு மற்றும் சிறுபான்மையினருக்கு தனி அலுவலர் - இவர்களை நியமிக்கும் அதிகாரத்தை குடியரசு தலைவர் பெற்றுள்ளார்.
இராணுவ அதிகாரங்கள், தூதாண்மை அதிகாரங்கள், சட்டமன்றத்துறை அதிகாரங்கள் - பாராளுமன்றத்தின் அவைக் கூட்டங்களைப் பொறுத்த வரையில் அவைகளைக் கூட்டும் அதிகாரமும், ஒத்திவைக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவரிடம் உள்ளது. மக்களவையைக் கலைக்கும் அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலவையான, மாநிலங்களவையைக் (ராஜ்ய சபையை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) மேலும், குடியரசு தலைவர் பாராளுமன்றத்தின் சபைகளில் உரை நிகழ்த்தவும், அல்லது இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவும் உரிமைப் பெற்று உள்ளார். சபைகளுக்குச் செய்தி அனுப்பும் உரிமையையும் இவர் பெற்றுள்ளார். (ஷரத்து 86) மேலைவையான மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களையும், கீழவையான மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்.
குடியரசுத் தலைவர் பாராளுமின்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து தனது இசைவினை அளிக்கலாம் (ஷரத்து 111) அல்லது நிறுத்தி வைக்கலாம், அல்லது பண மசோதா சாதாரண மசோதாக்களில் தாம் குறிப்பிட்டுள்ள விபரம் குறித்து மிண்டும் மறு பரிசீலனை செய்வதற்காக அம்மசோதாவை அவைக்கே திருப்பி அனுப்பலாம். அம்மசோதா குடியரசுத் தலைவரின் யோசனைப்படி திருத்தப்பட்டோ அல்லது திருத்தப்படாமலோ மீண்டும் அவருடைய இசைவிற்கு அனுப்பட்டால், குடியரசுத் தலைவர் தன்னுடைய இசைவினை மறுக்க முடியாது. ஆனால் நிதி மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது.
ஒரு சாதாரண மசோதா குறித்து, பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கு இடையே முரண்பாடு எழுமேயாயின், அதனை தீர்த்து வைக்க, இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு (ஷரத்து 108).
இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர்
அரசாங்கத்திற்கு சட்ட சம்பந்தமான விஷயங்களில் ஆலோசனை வழங்கவும் சட்ட சம்பந்தமாக இடப்படும் பிற பணிகளை செய்யவும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆக நியமிக்கப்படுவதற்கான தகுதிகளை உடைய ஒருவரை இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
(ஷரத்து 76) குடியரசுத் தலைவர் விரும்பும்வரை அரசுத்தலைமை வழக்கறிஞர் பதவி வகிப்பார்.
அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரிலேயே அவர் நியமிக்கப்படுவதால் ஆட்சி மாறியவுடன் அட்டர்னி-ஜெனரலும் பதவி விலகுவது ஒரு மரபாக உருவாகிவிட்டது.
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்திலும் முதலில் தன்னுடைய கருத்தைக் கேட்குமாறு அவருக்கு உரிமை உண்டு. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலுமே கூட்டத்தொடரின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டு பேசுகிற உரிமையும் அவருக்கு உண்டு எனினும் தீர்மானங்களின்மீது கிடையாது.
#நாடாளுமன்றம்
மாநிலங்களவை மற்றும் மக்களவை என்ற இரண்டு அவைகள் ஆகியவற்றைக் கொண்டதாக இந்திய நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
#குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளின் கூட்டத்தொடர் நடைபெறாதபோது, குடியரசுத் தலைவர் உடனடியாகச் செயல்படவேண்டிய அவசியமான சூழ்நிலை திருப்தியடைந்தால், நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தைப் போலவே செயல்வீச்சுடைய அவசரச் சட்டத்தை குடியரசுத்தலைவர் பிறப்பிக்கலாம்.
#மாநிலங்களவை:
மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுப்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டது.
உத்தரப்பிரதேசத்திலிருந்து அதிகபட்சமாக 34 உறுப்பினர்களும், மணிப்பூர், மிசோரம், சிக்கிம், திரிபுரா போன்ற சிறிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு உறுப்பினரும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
மாநிலங்களவையில் 250 - க்கும் மிகாத உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில் 238 பேர் மாநிலங்களில் இருந்தும், 12 பேர் நேரடி ஆட்சிப் பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
சட்டத்தின்படி தகுதியிழப்புச் செய்யப்படாத பட்சத்தில், மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவராவார். மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் இருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 530 - க்கு மிகாமலும், நேரடி ஆட்சிப்பகுதிகளில் இருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 20 - க்கு மிகாமலும் கொண்டதாக மக்களவை இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புக் கூறுகிறது. மேலும், ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் மக்களவைக்கு நியமனம் செய்யலாம்.
நாடளுமன்ற உறுப்பினர்களின் தகுதிகள்
மாநிலங்களவைக்கு உறுப்பினராக வேண்டுமானால் இந்திய குடிமகனாகவும் 30 வயது நிரைந்தவராகவும் மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாதவராகவும் இருக்க வேண்டும்.
மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் தலைவர் ஒருவரும் துணைத்தலைவர் ஒருவரும் இருக்க வேண்டும் என அரசியலமைப்புக் கூறுகிறது. அத்தலைவரே மாநிலங்களவையின் தலைவரும் ஆவார். மாநிலங்களவையின் துணைத்தலைவராக தமக்குள்ளேயே ஒருவரை அந்த அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வர். மக்களவையின் தலைவரையும் (சபாநாயகர்) துணைத்தலைவரையும் (துணை சபாநாயகர்), தமக்குள்ளேயே அந்த அவையின் உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பர்.
மக்களவைத்தலைவரும், துணைத்தலைவரும், மக்களவையின் உறுப்பினர்களாக நீடிக்க முடியாத நிலையில் பதவி விலக வேண்டும். இருவரில் எவரேனும் பதவி விலக எண்ணினால் மற்றவருக்குத் தமது பதவிவிலகல் கடிதத்தை அனுப்ப வேண்டும். அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால், 14 நாட்கள் முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவைத் துணைத் தலைவரைப் பதவி நீக்கம் செய்வதற்கும் இதே போன்ற ஏற்பாடு பிரிவு 90ல் சொல்லப்பட்டு உள்ளது. மக்களவைத் தலைவர் தொடர்ந்து பதவியில் இருப்பார்.
ஒவ்வொரு கூட்டத்தொடருக்கும் இடையே ஆறுமாத கால இடைவெளி இருக்கக்கூடும். பொதுவாக ஒவ்வோராண்டும் மூன்று நாடாளுமன்றத்தின் கூட்டங்கள் நடைபெறும்
அவை
பட்ஜெட் கூட்டத்தொடர் (பிப்ரவரி.மே)
கூட்டத்தொடர் (ஜூலை,செப்டம்பர்)
குளிர்காலக் கூட்டத்தொடர் (நவம்பர், டிசம்பர்). ஆனால் மாநிலங்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மட்டும் மூன்று-நான்கு வாரகால இடைவெளியுடன் இரண்டு முறைகள் நடைபெற்று, ஒராண்டில் நான்கு கூட்டத்தொடர்களாக நடைபெறும்.
எந்த ஓர் அவையானாலும், அதனை நடத்திச் செல்வதற்கு அவையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கட்டாயம் ஆஜராகி இருக்க வேண்டும்.
பண மசோதாக்கள், நிதி மசோதாக்கள் தவிர வேறு எந்த மசோதாவானாலும் அதனை ஏதேனும் ஓர் அவையில் முதலில் அறிமுகப்படுத்தலாம். அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் முன்னர், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும், திருத்தங்கள் ஏதுமின்றியோ, இரண்டு அவைகளும் ஒப்புக்கொண்ட திருத்தங்களுடனோ, ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பண மசோதாவைத் தவிர, ஏதேனும் ஒரு மசோதா சம்பந்தமாக இரண்டு அவைகளுக்கும் இறுதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்குமானால் அவற்றைத் தீர்ப்பதற்காகக் குடியரசுத் தலைவர் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை அழைக்கலாம்.
#பண மசோதா
ஒரு மசோதா, பணமசோதாவா என்ற ஐயம் தோன்றினால், அதில் மக்களவைத் தலைவரின் தீர்ப்பே இறுதியானது. மசோதாவைக் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும்போது, அது பூரண மசோதா என்று மக்களவை தலைவர் சான்றளிக்க வேண்டும்.
பணமசோதாவைக் குடியரசுத்தலைவரின் பரிந்துரையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மாநிலங்களவைக்கு அனுப்பப்படும் பணமசோதாவின் மீது ஏதேனும் திருத்தங்களுக்கான பரிந்துரைகள் இருக்குமானால் அவற்றை 14 நாட்களுக்குள் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட வேண்டும்
14 நாட்களுக்குள் அந்த மசோதா திருப்பி அனுப்பப்படாவிட்டாலும், மக்களவை ஏற்றுக்கொண்ட வடிவத்திலேயே அந்த மசோதா இரண்டு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படும்.
ஓர் உறுப்பினர் பேசியது குறித்தோ, வாக்களித்தது குறித்தோ, எந்த அதிகார அமைப்பிலோ அல்லது நீதிமன்றத்திலோ எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று அரசியல் சட்டம் விதித்துள்ளது.
நாடாளுமன்றத்திற்குள் ஓர் உறுப்பினர் பேசிய பேச்சு நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருந்தாலும்கூட, எந்த ஒரு நீதிமன்றமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தின் மீது அல்லது அவர்களின் இடத்தைக் காலிசெய்வது சம்பந்தமாக பேசும்போது தவிர மற்ற சமயங்களில், அவர்களின் நடத்தையை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும்கூட விமர்சிக்க கூடாது.
கட்சித்தாவல் தடைச்சட்டம்
ஐம்பத்திரண்டாவது திருத்தச் சட்டம் 1985, அரசியலமைப்பின் 101, 191 ஆகிய பிரிவுகளைத் திருத்தியதுடன், புதிய அட்டவணை ஒன்றையும் (பத்தாவது அட்டவணை) சேர்த்தது. கட்சித்தாவல் காரணமாக உறுப்பினர்கள் பதவியிழப்பது சம்பந்தமான சில சட்டங்கள் இந்தத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன.
#உச்சநீதிமன்றம்
நீதித்துறை (ஷரத்து 124-147 மற்றும் 214-23 )
தலைமை நீதிபதி ஒருவரும், பிற நீதிபதிகள் எழுவரையும் கொண்டதாக உச்சநீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 124வது பிரிவு கூறுகிறிது. எனினும் ஏனைய நீதிபதிகளின் எண்ணிக்கையை சட்டம் இயற்றுவதன் மூலம் அகிகரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, தலைமை நீதிபதியைத் தவிர உச்சநீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் போன்றோரைக் கலந்தாலோசித்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார். தலைமை நீதிபதி நியமனம் தவிர மற்ற நீதிபதிகளை நியமிக்கும் போது கட்டாயமாகத் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவரும் 65 வயதுவரை பதவியில் இருக்கலாம். குடியரசுத் தலைவரின் ஆணையின் பேரிலேயே உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும். குடியரசுத்தலைவர் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்க வேண்டுமானால் சம்பந்தபட்ட நீதிபதிக்குத் அவர் முறைகேடாக நடந்துகொண்டார் என்றோ காரணம் காட்டி, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு உறுப்பினர்கள் ஆஜராகி வாக்களித்துப் பெரும்பான்மைவுடன், தனித்தனியாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற, அதனை நாடாளுமன்றத்தின் அந்தக் கூட்ட தொடரிலேயே குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, மாதமொன்றுக்கு ரூபாய் 1,00.000) ஏனைய நீதிபதிகளுக்கு 90,000 ரூபாயும், ஊதியமாக வழங்கப்படுகிறது. ஊதியம், தவிர ஏனைய படிகள், இலவசக் குடியிருப்பு, நாடுமுழுவதும் பயணச் செலவுகள், ஓய்வூதியம் போன்ற பிற சலுகைகளும் அவர்களுக்கு உண்டு.
ஏதேனும் ஒரு உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் போதிய நீதிபதிகள் இல்லை என்றால், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்துவதற்காக, உயர்நீதிமன்ற நீதிபதிகளிடையே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறும் தகுதியுடையவர்களைத் தேவையான காலத்திற்குத் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உண்டு. எனினும், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்த பின்னரும், குடியரசுத்தலைவரின் முன் அனுமதியைப் பெற்ற பின்னருமே இத்தகைய தற்காலிக நியமனங்களைச் செய்யலாம்.
உச்சநீதிமன்ற அதிகாரமும் நீதிவரம்பும்
உச்சநீதிமன்றத்தின் மூல நீதிவரம்பு.
உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு நீதிவரம்பு
உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை கூறும் நீதிவரம்பு
உச்சநீதிமன்றத்தின் மறுசீராய்வு அதிகாரம்
உயர்நீதிமன்றம்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் உயர்நீதிமன்றம் இருக்கவேண்டுமென அரசியலமைப்பு விதிக்கிறது. எனினும் சட்டம் இயற்றுவதன் மூலம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை பொதுவானதாகவும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஒரு நேரடி ஆட்சிப் பகுதிக்கும் பொதுவானதாகவும், ஓர் உயர் நீதிமன்றத்தை நாடாளுமன்றம் உருவாக்கலாம்.
உச்சநீதிமன்றத்தைப் போலே ஒவ்வோர் உயர்நீதிமன்றமும் ஓர் ஆவண நீதிமன்றமாகத் திகழ்வதுடன், மூலவிசாரணை வரம்பு, மேல்முறையீட்டு வரம்பு ஆகியவற்றுடன், நீதிமன்ற அவமதிப்புக்காகத் தண்டனை அளிக்கும் அதிகாரமும் உடையதாகத் திகழ்கிறது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியையும், சம்பந்தப்பட்ட மாநில ஆளுநரையும் கலந்தாலோசித்து, உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைத் தவிர மற்ற நீதிபதிகளை நியமிக்கும்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியையும், குடியரசுத்தலைவர் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்.
62 வயதாகும் வரை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியில் இருக்கலாம். உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலமே உயர்நீதிமன்ற நீதிபதியையும் பதவிநீக்கம் செய்யமுடியும்.
மாதச்சம்பளம் : தொன்னுாறாயிரம் ரூபாய்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து, ஓர் உயர்நீதி மன்றத்திலிருந்து இன்னோரு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் இடமாற்றம் செய்யலாம் எனினும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை அவருடைய ஒப்புதல் இன்றி இடமாற்றம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது
குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்று, ஒய்வுபெற்ற நீதிபதி ஒருவரை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமிக்கலாம்.
ஒவ்வொர் உயர்நீதிமன்றத்திற்கும் தன்னுடைய அலுவலர்கள் மீது முழுமையான கட்டுப்பாடு இருக்கும். நீதிபதிகள் மற்றும் ஏனைய அலுவலர்களின் ஊதியமும் மற்றபடிகளும், அந்தந்த மாநிலத்தின் ஒருங்கிணைப்பு நிதியத்திலிருந்து வழங்கப்படுகின்றன.
உயர்நீதிமன்றத்தின் நீதிவரம்பு மற்றும் அதிகாரங்கள்
எல்லா நீதிமன்றங்களையும் மேற்பார்வையிடும் அதிகாரம்
வழக்குகளைத் தானே எடுத்துக் கொள்ளும் அதிகாரம்.
சில நீதிப்பேராணைகளை வெளியிடும் அதிகாரம்.
பொது நீதிவரம்பு.
அதிகாரிகளையும் ஊழியர்களையும் நியமிக்கும் அதிகாரம்
ஆட்சிமொழி
மத்திய அரசின் ஆட்சிமொழி தேவநாகரி எழுத்துருவிலுள்ள இந்தி ஆக இருத்தல் வேண்டும் என்றும், மத்திய அரசின் அலுவல் முறை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய எண்களின் வடிவம், இந்திய எண்களின் பன்னாட்டு வடிவமாக இருத்தல் வேண்டும் என்றும், கூறுகிறது.
இந்திய அரசியலமைப்பு அடங்கிய 15 ஆண்டு கால அளவுக்கு அத்தகைய தொடக்கத்தை ஒட்டி முன்பு ஆங்கில மொழி, மத்திய அரசின் எந்த அலுவல் முறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்ததோ அந்த அலுவல் நோக்கங்கள் அனைத்திற்கும் இது தொடர்ந்து பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
ஆனால் மேற்சொன்ன கால அளவின் போது, மத்திய அரசின் அலுவல்முறை நோக்கங்களில் எதற்காகவேனும் ஆங்கில மொழியோடும் கூட தேவநாகரி வடிவ எண்களையும் (இந்தி மொழி எண்கள்) பயன்படுத்துவதற்கு குடியரசுத் தலைவர் ஆணை வாயிலாக அதிகாரமளிக்கலாம் என ஷரத்து 343 (2) கூறுகிறது.
Thanks Vikaspedia.
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .
*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக