இந்திய வானொலி வரலாறு
இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் வானொலி நிகழ்ச்சிகளை மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் போது 6 வானொலி நிலையங்களும், 18 டிரான்ஸ் மீட்டர்களும் இருந்தன. வர்த்தக நோக்கில் விவித்பாரதி என்ற சேவை 1957ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டது.
சென்னையில் முதல் பண்பலை நிலையம் 1977ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் நாள் தொடங்கப்பட்டது. ரெயின்போ, கோல்டு என்ற இரண்டு அலைவரிசைகளில் சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் அகில இந்திய வானொலி பண்பலை ஒலிபரப்புகிறது. பொதுவாக, ஒரு பண்பலை வானொலியின் ஒளிபரப்பு எல்லை 40முதல் 50 கிலோமீட்டர்களாகும். இதில் விதிவிலக்காக கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ளது. இதன் டிரான்ஸ் மீட்டர் என்கிற ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், இதன் ஒலிபரப்பு எல்லை, கிட்டத்திட்ட 250 முதல் 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்றடைகிறது.
Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக