புதன், 6 நவம்பர், 2019

திருவள்ளுவருக்கு இத்தனை உருவங்கள் இருக்கிறதா?

திருவள்ளுவருக்கு இத்தனை உருவங்கள் இருக்கிறதா?


samayam tamil
இன்று தமிழகத்தின் ஹாட்டான டாப்பிக் திருவள்ளுவர் தான். திருவள்ளுவர் காவி உடையுடன் நெற்றியில் திருநீருடன் வந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. திருவள்ளுவர் எந்த மதத்தைச் சார்ந்தவர். திருக்குறள் இந்து மதத்தைப் பறைசாற்றுகிறதா? உள்ளிட்ட பல விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த பதிவில் நாம் திருவள்ளுவரின் உருவம் எப்படி இருக்கும் என இதுவரை பல வரைபடங்கள், சிலைகள் மூலம் வெளியான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ஸ்ரீ குந்த குந்தர்

திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவரே அல்ல, அதை எழுதியவர் பெயர் ஸ்ரீ குந்த குந்தர் என்றும், அவர் ஏலாசாரியர் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும், அவரது மாணவர்களின் ஒருவரான திருவுள்ளம் நாயினாரே, குந்த குந்தர் எழுதிய திருக்குறளை மதுரை அரங்கேற்றியதாகவும், திருவுள்ளம் நாயினாரே பிற்காலத்தில் திருவள்ளுவர் என வழங்கப்பட்டதாகவும் சயினர்கள் எழுதிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே நீங்கள் காணும் புகைப்படம் ஸ்ரீ குந்த குந்தரின் புகைப்படம் தான்.

மயிலை திருவள்ளுவர் சிலை

மயிலாப்பூரில் திருவள்ளுவருக்குக் கோவில் உள்ளது. அதை இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. 16வது நூற்றாண்டிலேயே இந்த கோவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. 1897ல் வெளியான ஒரு புத்தகத்தில் இந்த கோவில் குறித்த குறிப்பு உள்ளது.

மயிலை வெண்கலச் சிலை

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் இந்த வெண்கலத்தால் ஆன திருவள்ளுவரின் சிலை உள்ளது. மயிலாப்பூரில் தான் திருவள்ளுவர் பிறந்தார் எனக் கருதப்படுவதால் கோவில் அங்கு அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மெரினா திருவள்ளுவர் சிலை

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 1968ம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது. இதையடுத்து அப்போதைய கல்வி, மற்றும் தொழில் துறை அமைச்சர் நெடுஞ்செழியன் இந்த சிலையைத் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி அய்யன் வள்ளுவன் சிலை

கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவில் சுமார் 133 அடி உயரத்தில் அய்யன் வள்ளுவன் சிலை உள்ளது. இது எல்லோருக்குமே தெரியும் கடந்த 2000மாவது ஆண்டு ஜனவரி 1ம் தேதி இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த சிலையைத் திறந்து வைத்தார்.

அனந்த நயினார் நூல்

1852ம் ஆண்டு வெளியிடப்பட்ட அனந்த நயினாரின் நூலில் திருவள்ளுவர் எப்படி இருப்பார் என ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் வள்ளுவர் தடி, மீசை, என எதுவுமே இல்லாத தோற்றத்தில் இருக்கிறார்.

செல்வ கேசவராய முதலியார்

1934ம் ஆண்டு திருமணம் செல்வ கேசவரா முதலியார் என்பரால் வரையப்பெற்ற திருவள்ளுவரின் தோற்றம் குறித்த ஓவியம் தான் இது. இவர் இலக்கியம், மொழியியல், வரலாறு ஆகிய துறைகளில் சிறந்த விளங்கியவர்.

சுவாமி சுத்தானந்த பாரதியார்

கவியோகி, மகரிஷி எனபோற்றப்பட்டவர் சுவாமி சுத்தானந்த பாரதியார் இவர் தமிழிசைப்பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் என பல பலவற்றை இயற்றியவர். இவர் எழுதிய திருக்குறள் குறித்த உரைநடை 1968ம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் அரங்கேற்றப்பட்டது. அந்த நூலில் உள்ள திருவள்ளுவரின் தோற்றம்தான் மேலே நீங்கள் பார்ப்பது.

பண்டிதர் கிருஷ்ணசாமி நூல்

1958ம் ஆண்டு பண்டிதர் கிருஷ்ணசாமி வெளியிட்ட நூல் ஒன்றில் திருவள்ளுவர் வெளியான உருவம் தான் மேலே நீங்கள் காண்பது.

வினோதன் பத்திரிக்கை

1935ம் ஆண்டு வெளியான வினோதன் என்ற பத்திரிக்கையில் திருவள்ளுவரின் உருவம் ஒன்று வெளியானது இந்த உருவம் அவர் நின்று கொண்டிருப்பது போலவும், உடலில் சால்வையுடனும் காட்சி தருகிறார்.

இறையன் நூல்

பெரியாரிய சிந்தனையாளர் பேராசிரியர் இறையன் எழுதிய நூல் ஒன்றில் திருவள்ளுவரின் உருவம் குறித்து வெளியான வரையப்பட்ட புகைப்படம் இது தான்.

புலவர் குழந்தை

புலவர் குழந்தை எழுதிய நூல் ஒன்றில் திருவள்ளுவர் உருவம் இவ்வாறு தான் இருக்கும் வெளியான வரைகலை புகைப்படம் இது. 1949ம் ஆண்டுவெளியான ஒரு நூலில் இடம் பெற்றிருந்தது.

கே.எம் பால சுப்பிரமணியன்

1962 ம் ஆண்டு வெளியான கே.எம் பால சுப்பிரமணியன் என்பவர் எழுதிய நூலில் திருவள்ளுவரின் உருவம் வெளியிடப்பட்டிருந்தது. அந்த உருவம் தான் இது.

எல்லீஸ் தங்க நாணயம்

எல்லீஸ் என்ற பிரிட்டிஷ் காரர்தான் திருக்குறளைக் கண்டு பிடித்து வெளி உலகிற்குக் கொண்டு வந்தார் என்பது எல்லாம் நாம் அறிந்ததே. அவர் அதைக் கொண்டு வந்த பின்பு திருவள்ளுவர் உருவத்துடன் தங்க நாணயம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த நாணயம் தான் நீங்கள் மேலே காணும் புகைப்படம்.
நன்றி சமயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக