வியாழன், 1 ஆகஸ்ட், 2019

ஹேராம்... ஹேராம்... அழியா சுவடு... எதிர்பாராத சம்பவம்... என்ன நடந்தது? இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை..!!


ஹேராம்... ஹேராம்... அழியா சுவடு... எதிர்பாராத சம்பவம்... என்ன நடந்தது?

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை..!!

👴காந்தியடிகள் அஞ்சியதுபோலவே இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த ஒருசில தினங்களுக்குள்ளாகவே இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர்.

👴தன் வாழ்நாள் முழுவதும் இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவையுமே கற்பனை செய்து வந்த காந்தியடிகள் ஒடிந்துபோனார். கசப்புணர்வு மேம்பட்டிருந்தாலும் அப்போதும்கூட அவர் எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கிவிடவில்லை. மதக்கலவரத்தால் துவண்டு போயிருந்த மக்களுக்கு ஆறுதலும் அமைதியும் கூற 'நவக்காளி" யாத்திரை மேற்கொண்டார்.

காந்தியின் மரணம் :

👴1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி புதுதில்லியில் ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார் காந்தியடிகள்.

👴சரியாக 10 நாட்களுக்கு முன்னர் அதேபோன்ற ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஓர் இளைஞன் காந்தியடிகளை நோக்கி குண்டு வீசினான். அதில் காயமின்றி தப்பிய காந்தியடிகள் அந்த இளைஞனை மன்னித்து விடுமாறு கூறி, போலீஸார் வழங்க முன்வந்த கூடுதல் பாதுகாப்பையும் நிராகரித்துவிட்டார்.

👴உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தும் ஜனவரி 30ஆம் தேதி இன்னொரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

👴அப்போது எதிர்பாராத விதமாக கைக்கூப்பியிருந்த காந்தியடிகளை நோக்கி மூன்று குண்டுகள் பாய்ந்தது. அதன்பின் கைகள் கூப்பிய நிலையில் 'ஹேராம்... ஹேராம்" என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு இந்திய நேரப்படி மாலை சுமார் 5 மணிக்கு தேசப்பிதாவின் உயிர் பிரிந்தது.


👴ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக