அதிக மாவட்டங்கள் கொண்ட மாநிலம் எது தெரியுமா?
தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் அதிக மாவட்டங்களை கொண்டது உத்திரப் பிரதேசம். அங்கு 75 மாவட்டங்கள் உள்ளது. மத்திய பிரதேசத்தில் 52 மாவட்டங்கள் உள்ளது. 38 மாவட்டங்களுடன் பீகார் 3 வது இடத்திலும், 37 மாவட்டங்களுடன் தமிழகம் 4 ஆவது இடத்தில் உள்ளது. 36 மாவட்டங்களுடன் மகாராஷ்ட்ரா 5ஆம் இடத்தில் உள்ளது. கர்நாடகா மற்றும் ஒடிசா 30 மாவட்டங்களை கொண்டுள்ளன.
அதிக பரப்பளவை கொண்டுள்ள 7வது மாநிலம் ஆந்திரா. ஆனால் அங்கு 13 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு 12 ஆயிரம் சதுர கிமீ.க்கு ஒரு மாவட்டம் என்று செயல்பட்டு வருகிறது. குறைவான மாவட்டங்களை கொண்டிருப்பது கோவா. அங்கு 2 மாவட்டங்கள்தான் உள்ளது. மிகவும் சிறிய மாநிலமான திரிபுராவில் 8 மாவட்டங்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக