செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

காந்தி பற்றிய தகவல்கள்..!!


காந்தி பற்றிய தகவல்கள்..!!

புகைப்படம் எடுப்பது உங்களுக்கு பிடிக்குமா? ஆனால் இவருக்கு பிடிக்காது...!!

👉காந்தியின் ஆங்கில உச்சரிப்பு அயர்லாந்து பாணியில் இருக்கும். அதற்கு காரணம் அவரின் முதல் ஆசிரியர் அயர்லாந்து ஆசிரியர்தான்.

👉காந்தியின் தாய்மொழி குஜராத்தி. தன் தாய்மொழியின் மீது அதீத பற்றுக்கொண்டிருந்தார் காந்தி. எனவே, தனது சுயசரிதையை குஜராத்தியில் தான் முதன்முதலில் எழுதினார். பின்னர் அவரது உதவியாளர்கள் அதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்தனர்.

👉புகைப்படம் எடுப்பது என்பது காந்திக்கு பிடிக்காத விஷயங்களில் ஒன்று. ஆனால், அந்த காலக்கட்டத்தில் அதிக புகைப்படங்கள் எடுக்கப்பட்டவர் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

👉தமிழை கற்பதிலும், தமிழ் கலாச்சாரம், பண்பாடு இலக்கியங்களை அறிந்து கொள்வதிலும் அளப்பரிய ஆர்வம் காட்டியவர் காந்தி. திருக்குறளின் மீது அளவற்ற மரியாதை கொண்டிருந்தார் காந்தி.

👉ஒளவையின் ஆத்திச்சூடி, கம்பனின் இராமாயணம், மாணிக்கவாசகரின் திருவாசகம் போன்றவைகளை தமிழாசிரியர்கள் துணைகொண்டு படித்தது மட்டுமல்லாமல், அவற்றையும் அவற்றின் கருத்துக்களை பற்றியும் பொதுக்கூட்டங்களில் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார் காந்தியடிகள்.

👉'எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றுபவர்கள் எளிய தமிழர்கள்" - என்று தமிழர்களுக்கு புகழாராம் சூட்டியிருக்கிறார் மகாத்மா காந்தி.

காந்தியின் நினைவுச்சின்னங்கள் :

👉சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

👉மதுரையில் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

👉முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கரையில் காந்தி நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இங்கு காந்தியடிகளின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

👉பிரித்தானிய அரசுக்கு எதிராக காந்தியடிகள் போராடிய போதிலும், அவர் இறந்து 21 ஆண்டுகள் கழித்து, பிரித்தானிய அரசு அவரது நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு காந்தியடிகளின் ஸ்டாம் வெளியிட்டது.

👉காந்தி இறந்தபிறகு இந்தியாவிற்குள் 53 பெரிய சாலைகளுக்கு காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. (சிறிய சாலைகள் அல்லாமல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக