பி.வி.சிந்து
#p_v_sindhu #pvsindhu
புசார்லா வெங்கட சிந்து (Pusarla Venkata Sindhu, தெலுங்கு: సింధూ, பிறப்பு: 5 சூலை 1995) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். 2016 ஆகத்து மாதம் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். சிந்து ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமியில் பயிற்சி பெற்று வருபவர். இந்திய விளையாட்டுவீரர்களில் ஒலிம்பிக்கில் பங்கு பெறத்தக்கவர்களை அடையாளம் கண்டு ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான ஒலிம்பிக் தங்க வேட்டை (Olympic Gold Quest) இவரை ஆதரிக்கிறது. இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உயர்ந்த 20 தரவரிசையாளர்களில் ஒருவராக செப்டம்பர் 21, 2012இல் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தற்போது பத்தாவது இடத்தில் இவர் உள்ளார். இக்கூட்டமைப்பின் இளநிலை ஆட்டக்காரர்களில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளார்.ஹாங்காங் அருகே உள்ள மக்காவ் நகரில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான மக்காவ் கிராண்ட் பிரீஸ் ஓபன் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் பி.வி. சிந்து.
"இந்த பதக்கத்தை இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்" என பதக்கம் வென்றபின் சிந்து தெரிவித்தார்.
இதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் பி.வி. சிந்து.
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரரும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார்.
பி.வி.சிந்து : ஃபோர்ப்ஸ் பட்டியலில் அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனையாக உயர்ந்தது எப்படி?
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து
அதே போன்று, கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்ற சிந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வென்றது அதுவே முதல்முறை.
2018 காமன்வெல்த் போட்டிகளிலும் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றார் பி.வி.சிந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அணி தங்கம் வெல்ல உதவினார்.
குவியும் வாழ்த்துக்கள்
தனது டிவிட்டர் பக்கத்தில் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சிந்துவின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் உத்வேகமளிக்கக்கூடியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிந்துவின் இந்த வெற்றி பல தலைமுறை வீரர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.
Narendra Modi
✔
@narendramodi
The stupendously talented @Pvsindhu1 makes India proud again!
Congratulations to her for winning the Gold at the BWF World Championships. The passion and dedication with which she’s pursued badminton is inspiring.
PV Sindhu’s success will inspire generations of players.
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
@sachin_rt
Sachin Tendulkar
✔
@sachin_rt
Amazing performance, @Pvsindhu1!
Congratulations on becoming the 1st ever 🇮🇳 to win the BWF World Championships!
You have made India proud, yet again.#BWFWorldChampionships2019.
மத்திய பாதுகாப்புத் துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
புசார்லா வெங்கட சிந்து
P.V. Sindhu.
2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் போது
நேர்முக விவரம்
பெயர்
புசார்லா வெங்கட சிந்து
பிறந்த தேதி
5 சூலை 1995 (அகவை 24)
பிறந்த இடம்
ஹைதராபாத், தெலுங்கானா, இந்தியா
உயரம்
1.79 மீ
எடை
65 கிகி
நாடு
இந்தியா
கரம்
வலக்கை
பயிற்சியாளர்
புல்லேலா கோபிசந்த்
பெண்கள் ஒற்றையர்
பெரும தரவரிசையிடம்
9 (13 மார்ச் 2014)
தற்போதைய தரவரிசை
10 (7 ஏப்ரல் 2016)
பி.வி.சிந்து பதக்கப்பட்டியல்
பதக்கங்கள்
இந்தியா
ஒலிம்பிக்சு
வெள்ளி 2016 ரியோ ஒலிம்பிக்சு மகளிர் ஒற்றையர்
பி.டபல்யூவ்.எஃப் உலக இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள்
வெண்கலம் 2013 பி.டபல்யூவ்.எஃப் உலக இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள் மகளிர் ஒற்றையர்
வெண்கலம் 2014 பி.டபல்யூவ்.எஃப் உலக இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள் மகளிர் ஒற்றையர்
உப்பர் கோப்பை
வெண்கலம் 2014 உப்பர் கோப்பை குழு
வெண்கலம் 2016 உப்பர் கோப்பை குழு
ஆசிய சாடிலைட் இறகுப்பந்தாட்ட போட்டிகள்
வெண்கலம் 2014 ஆசிய சாடிலைட் இறகுப்பந்தாட்ட போட்டி உப்பர் கோப்பை குழு
காமன்வெல்த் இளைஞர் ஆட்டங்கள்
வெண்கலம் 2014 காமன்வெல்த் இளைஞர் ஆட்டங்கள் மகளிர் ஒற்றையர்
ஆசிய வாகையாளர்
வெண்கலம் 2014 ஆசிய வாகையாளர் போட்டிகள் மகளிர் ஒற்றையர்
தென் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளி 2014 தென் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மகளிர் ஒற்றையர்
தங்கம் 2014 தென் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் குழு
ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டிகள்
வெண்கலம் 2011 ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டி பெண்கள் ஒற்றையர்
வெண்கலம் 2011 ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டி குழு
தங்கம் 2012 ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டி பெண்கள் ஒற்றையர்
காமன்வெல்த் இளைஞர் வாகையாளர் போட்டிகள்
தங்கம் காமன்வெல்த் இளைஞர் வாகையாளர் போட்டிகள் பெண்கள் ஒற்றையர்.
பிறப்பு
பி.வி.சிந்து பி. வி. ரமணா மற்றும் பி.விஜயா தம்பதியினருக்கு ஜூலை மாதம் 5, 1995 வருடம் பிறந்தார். இவரின் பெற்றோர் இருவரும் கைபந்து வீரர்களாவர்.இவரது தந்தை அர்சுனா விருது வென்றவராவார்.
ரியோ ஒலிம்பிக்ஸ்
இவர் 2016 ஆகத்து மாதம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கு பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இவர் ஒலிம்பிக் இறகுப்பந்து போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். சிந்து காலிறுதியில் உலகதர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் வாங்யிகானையும், அரையிறுதியில் உலக தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, எசுப்பானியாவின் கரோலினா மாரினிடம் தோல்வியைத் தழுவினார். இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வாங்கிய முதல் பெண்மணி இவர்.
போட்டி எதிராளி முடிவு ஆட்டமுடிவு புள்ளிகள்
பொது மிச்செல் லி வெற்றி 2–1 19–21, 21–15, 21–17
பொது லாரா சாரோசி (ஹங்கேரி) வெற்றி 2–0 21–4, 21–9
காலிறுதிக்கான முன்சுற்று தை சூ யிங் (சீனத்தைப்பே) வெற்றி 2–0 21–13,21–15
காலிறுதி வாங் யிஹான் (சீனா) வெற்றி 2–0 22–20, 21–19
அரையிறுதி நோசோமி ஓக்குஹரா (ஜப்பான்) வெற்றி 2–0 21–19, 21–10
இறுதி கரோலினா மாரின் (எசுப்பானியா) தோல்வி 1–2 21–19, 12–21, 15–21
ஆட்டக்கால சாதனைகள்
தொகு
உலக சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் பி.வி.சிந்து ஆவார்.
2013 ஆம் ஆண்டில் நடந்த முக்கியப் போட்டிகளில் இரண்டு தங்கமும்,ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.
1983 க்கு பிறகு ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே ஆவார்.
உலக சம்மேள தரவரிசையில் முதல் இருபது இடங்களுக்குள் இவர் உள்ளார்.
பி.டபிள்யூ ஜூனியர் தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இள வயதில் (பதினெட்டு வயது) அர்ஜுனா விருதையும் வாங்கியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு திசம்பர் 16 ஆம் நாள் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த பிடபிள்யூஎப் உலக சாம்பியன் போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.
பலரும் அறியாத பி.வி. சிந்து பற்றிய வியக்கவைக்கும் 8 உண்மைகள்!
பி.வி. சிந்து இன்று இவரை பற்றி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க முடியாது. ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கனவை மெய்ப்பிக்க போராடி வரும் வீர மங்கை. இறகுப்பந்து ஆட்டத்தின் ரியோ 2016 ஒலிம்பிக் இறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்று இந்தியர்களின் மனதில் பாசக்கார சகோதரியாக இடம் பெற்றிருக்கிறார்.
ரியோ 2016 ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் தொடர்ந்து பெண்கள் தங்கள் பங்களிப்பை பெருமளவு அளித்து, இந்தியாவின் பெயரை தலைநிமிர செய்துக் கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் தருணமாகும். அது மட்டுமின்றி இந்தியா என்றாலே கிரிக்கெட் மட்டும் தான் வேறு விளையாட்டுக்கு ஊக்கமளிக்க ரசிகர்கள் கூட இருக்க மாட்டார்கள் என்ற கூற்றை தவிடுபொடியாக்கி மல்யுத்தம், இறகுப்பந்து ஆட்டம் என இரவு பகல் பாராமல் பார்த்து, சமூக தளங்கள் மூலம் வீரர்களுக்கு இரசிகர்கள் தங்கள் ஆதரவு அளித்து வருவதும் ஓர் பெரும் மாற்றம் உண்டாகியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இனி, இறகுப்பந்து ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பி இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ள பி.வி. சிந்து பற்றி பலரும் வியக்க வைக்கும் உண்மைகள்...
பெற்றோர்!
பி.வி.சிந்து 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி ஐதராபாத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் இருவருமே நுட்பமான கைப்பந்தாட்ட வீரர்கள் ஆவார்கள். அர்ஜுனா விருது! பி.வி.சிந்துவின் தந்தை ரமணா கைப்பந்தாட்டத்தில் செய்த சாதனைகளுக்காக அர்ஜுனா விருது வென்றவர் ஆவார்.
விடாமுயற்சி!
21 வயது நிரம்பிய பி.வி.சிந்து தினமும் 27 கிலோமீட்டர் பயணம் செய்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தவர் ஆவார். தினமும் 4 மணிக்கு எல்லாம் எழுந்து பயிற்சி மேற்கொள்ள சென்றுவிடுவாராம் சிந்து. இந்தியன்! கடந்த 2014-ம் ஆண்டு என்.டி.டி.வி இவரை 2014-ம் ஆண்டின் சிறந்த இந்தியர் என அறிவித்து கௌரவித்தது.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
18 வயதிலேயே அர்ஜுனா விருது வென்று சாதனை செய்தவர் பி.வி.சிந்து! தன் விளையாட்டின் மீது கொண்ட பேரார்வம் காரணமாக தனக்கு மிகவும் நெருக்கமான சகோதரியின் திருமணத்திற்கு கூட செல்லாமல் விளையாட சென்றவர் பி.வி.சிந்து.
முதல் பெண்!
கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி, பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்திய பெண் என்ற கௌரவும் பெற்றார்.
பத்மஸ்ரீ!
கடந்த 2015-ம் ஆண்டு பி.வி. சிந்து இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ பெற்றார்.
உத்வேகம்!
பி.வி.சிந்து முன்னாள் இறகுப்பந்து ஆட்ட வீரர் புல்லேலா கோபிசந்த்தை பார்த்து உத்வேகம் பெற்றவர். அவரை தனது முன்மாதிரியாக வைத்து தான் விளையாட துவங்கினார். புல்லேலா கோபிசந்த் இங்கிலாந்து இறகுப்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக