ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

உலக சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்த பி.வி.சிந்து: ஒகுஹராவை வீழ்த்திய தங்கம் வென்று அசத்தல்!


உலக சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்த சிந்து: ஒகுஹராவை வீழ்த்திய தங்கம் வென்று அசத்தல்!

பசல்: உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

ஹைலைட்ஸ்:
உலக சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார் சிந்து.
தவிர, உலக சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது பதக்கம் வென்றார் சிந்து.
சுவிட்சர்லாந்தின் பசலில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் ஃபைனலில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் ஒகுஹாராவை சந்தித்தார்.

இதில் துவக்கம் முதல் சிந்துவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. இதன் முதல் செட்டை 21-7 என கைப்பற்றினார் சிந்து. தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் அதிக்கத்தை தொடர்ந்த சிந்து 21-7 என மிகச்சுலபமாக தன்வசப்படுத்தினார்.


முடிவில், இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
முதல் இந்தியர்:
இந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து.

ஐந்தாவது பதக்கம்:
இந்த வெற்றியின் மூலம் பிவி சிந்து, இந்தியாவிற்கு உலக சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது முறையாக பதக்கம் வென்று சாதித்தார் சிந்து. முன்னதாக கடந்த 2013 மற்றும் 2014ல் வெண்கலப்பதக்கம் வென்ற சிந்து, கடந்த 2017 மற்றும் 2018ல் வெள்ளிப்பதக்கம் வென்றார். தற்போது ஏற்கனவே சொன்னது போல தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார் சிந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக