#தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம் 1958
தமிழ்நாட்டில் உள்ள உணவு விடுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை ஒழுங்கு படுத்துவதற்காக தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம், 1958 இயற்றப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை மற்றும் உள்ள பெருநகரங்களுக்கும் நகர பஞ்சாயத்துகளுக்கும், பேரூராட்சிகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
#உணவு _விடுதி_பிரிவு _2(1):-
பிரிவு-2(1)ன் படி பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகம் அல்லது தங்கும் வசதியுடன் உணவு வழங்கும் தொழில் நடக்கின்ற இடங்கள் யாவும் உணவு விடுதிகள் எனப்படும். சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கத்தால் சிற்றுண்டி விடுதிகளும் , உணவகங்களும் இச்சட்டத்தின் கீழ் உணவு விடுதிகள் எனப்படும். ஆனால் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் சிற்றுண்டி விடுதிகள் மற்றும் உணவகங்கள் இச்சட்டத்தின் கீழ் உணவு விடுதி ஆகாது.
#உணவு_விடுதிகளை_பதிவு_செய்தல்_பிரிவு _4 :-
பிரிவு 3ன்படி ஒவ்வொரு உணவு விடுதியும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். பிரிவு 4 உணவு விடுதி ஒன்றினை பதிவு செய்வதற்கான நடைமுறைகளை விளக்குகிறது.
#பதிவுச்_சான்றிதழ்:-
பிரிவு 4ன் கீழ் வழங்கப்படும் பதிவு சான்றிதழ் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லத்தக்கதாகும். ஒவ்வொரு வருடமும் பதிவு சான்றிதழ் விடுதி உரிமையாளரால் புதுப்பிக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிவு சான்றிதழ் உணவு விடுதியில் அனைவரும் பார்க்க கூடிய இடத்தில் ஒட்டி வைக்கப்பட்ட வேண்டும்.
#வேலை_நேரம் _குறித்த _விதிகள்:-
1, 16 வயது பூர்த்தியடையாத குழந்தைகளை உணவு விடுதியில் வேலைக்கு அமர்த்தகக்கூடாது.(பிரிவு-7).
2, 16 வயது பூர்த்தியடைந்த ஆனால் 18 வயது பூர்த்தியடையாத இளைஞர்களை ஒரு நாளில் 7 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது.(பிரிவு-17).
3, மற்றத் தொழிலாளர்களை 9மணிநேரத்திற்கு மேலும் ஒரு வாரத்தில் 48 மணிநேரத்திற்கு மேலும் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது.(பிரிவு-7).
4, மிகுநேர வேலை செய்ய வேண்டியது இருந்தாலும் மொத்த வேலைநேரம் ஒரு நாளில் 10 மணிநேரத்தையும் மொத்த மிகுநேர வேலைநேரம் அடுத்தடுத்த மூன்று மாதத்தில் 54 மணி நேரத்தையும் தாண்டக்கூடாது.(பிரிவு-8).
5, வேலைநேரத்திற்கும் அதிகமாக தொழிலாளி பார்த்த வேலைக்கு அவரது சாதாரண சம்பளத்தில் இரண்டு மடங்கு சம்பளம் மிகுநேரக்கூலியாக வழங்கப்பட வேண்டும் என்று பிரிவு-8 கூறுகிறது.
6, ஒரு தொழிலாளி தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய கூடாது. அவருக்கு குறைந்தது அரைமணிநேரம் ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்று பிரிவு-9 கூறுகிறது.
7, ஒரு உணவு விடுதியின் பரவலான வேலைநேரம் ஓய்வு நேரத்தையும் சேர்ந்து 14 மணிநேரத்தை தாண்டக்கூடாது என்று பிரிவு-10 கூறுகிறது.
#விடுமுறை_நாட்கள் _பிரிவு _11:-
ஒவ்வொரு வாரத்திலும் ஒரு முழு நாள் வார விடுமுறையாக வழங்கப்பட வேண்டும். இவை தவிர அரசாங்க விடுமுறை நாளாக அறிவிக்கும் அனைத்து நாட்களுக்கு விடுதி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு விடுமுறை நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று பிரிவு-11 கூறுகிறது.
#சம்பளத்துடன் _கூடிய _விடுப்பு;-
ஒரு வருடத்தில் மொத்தம் 240 நாட்கள் வேலை செய்த தொழிலாளர்களின் வயது வந்தோருக்கு 20 நாட்களுக்கு ஒருநாள் வீதமும் இளைஞர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு நாள் வீதமும் அடுத்து வரும் ஆண்டில் சம்பளத்துடன் கூடிய வருடாந்திரவிடுப்பு வழங்கப்படும். பிரிவு-12ன் கீழ் வழங்கப்படும் வருடாந்திர விடுப்பு நாட்கள் ஒவ்வொன்றுக்கும் அவரது சராசரி ஒரு நாள் சம்பளத்திற்கு சமமானத்தொகை , விடுப்பு சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்று பிரிவு-13 கூறுகிறது.
#தொழிலாளர்களுக்கு உடைகள் வழங்க வேண்டும்:-
உணவு விடுதியில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு அதன் உரிமையாளர் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இலவசமாக உடைகள் தைத்து கொடுக்கவேண்டும் என்று பிரிவு-14 கூறுகிறது.
#வேலை நீக்கம்:-
ஒரு ஆண்டின் 6 மாதகாலத்தில் 125 நாட்கள் தொடர்ந்து வேலைசெய்த தொழிலாளியை உணவு விடுதியின் உரிமையாளர் ஒரு மாத கால முன்னறிவிப்பு இன்றி அல்லது அந்த அறிவிப்பிற்கு பதிலாக ஒரு மாத சம்பளம் தராமல் வேலைநீக்கம் செய்யக் கூடாது. என்று பிரிவு-19கூறுகிறது.
#ஆய்வாளர்:-
இச்சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக பிரிவு-20 ன் கீழ் மாநில அரசாங்கம் ஆய்வாளரை நியமிக்கலாம்..
#ஆய்வாளரின் அதிகாரம்:-
1, ஆய்வாளர் உணவு விடுதியாக பயன்படுத்தப்படும் எந்த இடத்திற்கும் சென்று பார்வையிடலாம்.
2, உணவு விடுதிகள் தொடர்பாக எந்த ஆவணத்தையும் பார்வைக்கு சமர்ப்பிக்குமாறு உணவு விடுதி நிர்வாகிக்கு உத்தரவு விடலாம்.
3, தன் முன்னர் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை ஆய்வாளர் தேவையெனில் நகல் எடுத்துக் கொள்ளலாம்.
4, ஆய்வாளரின் ஆய்வுக்கு இடையூறாக இருக்கும் தடங்களை ஆய்வு முடியும் வரை நீக்கி வைக்குமாறு உணவு விடுதி நிர்வாகிக்கு உத்திரவிடலாம்.
5, ஆய்வுக்கு அவசிய என கருதுபவற்றை ஆய்வாளர் புகைப்படம் மற்றும் அளவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக