சனி, 17 மார்ச், 2018

குரூப் -2 கலந்தாய்வுக்கு செல்வோருக்காக . துறைரீதியான தகவல்கள் .



குரூப் -2 கலந்தாய்வுக்கு செல்வோருக்காக . துறைரீதியான தகவல்கள் .

Thanks to
Ms.Rubiya DR (Registration)
Mr.Aravinth FCI.
Mr.venkat ranganathan DCTO
Mr.premkumar DCTO
Mr.murugan AC (LAbour dept)
 Mr.sakthivel ramasamy (Assistant inspector LF audit)\
Mr.prabhakar (Asst Insp LF audit)
Mr.prabhakar (Asst Insp HRNCE)
Ms.lakshmi (AI HRNCE)
Mr.Kannan (DEO)
Mr.kesavan (Industiral co-operative dept)
Mr.saravanan (Senior inspector -co-operatives)
and  friends .
  Please comment for any further info , and correct if anything is wrong .

1. துணை வணிகவரி அலுவலர் .
   
      சம்பளம் -46700 (மொத்தம்) மற்ற பணிகளை ஒப்பிடும்போது நல்ல அமைதியான பணிச்சூழல். ஜிஎஸ்டி வந்த பிறகு தற்போது நிலைமை இன்னும் நன்றாகவே உள்ளது .
 
   பதவி உயர்வு - அதிகபட்சம் 5 வருடங்களில் வணிகவரி அலுவலர் ஆக(5100 கிரேடு பே ) வாய்ப்பு. உதவி ஆணையர்(5400 கிரேடு பே) பதவிக்கு மேலும் 4 வருடம் ஆகலாம் . மற்ற துறைகளில் இருப்பது போன்று இங்கும் நேரடி நியமனம் மூலம் வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பதவி உயர்வு பிரச்சினை உள்ளது . தற்போது வரை நேரடி நியமனம் மூலம் வருபவருக்கு சாதகமான சூழல் உள்ளது . பெண்களுக்கு ஏற்ற ஒரு பணி. (சார் பதிவாளரை ஒப்பிடும்போது ). துணை ஆணையர் ஆக வாய்ப்பு உண்டு . சிறு வயதில் உள்ளவர்களுக்கு இணை ஆணையர்  பதவி உயர்வு     வாய்ப்பு உண்டு .

2. சார் பதிவாளர் - கிரேடு-2
     சம்பளம் -46700 (மொத்தம்) - குரூப் -2 பதவிக்கான ஒரு மரியாதை இங்கு மட்டுமே உண்டு . நீங்கள் தான் அலுவலக ராஜா/ ராணி . அலுவலகம் உங்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் . பணிச்சுமை உண்டு . பொறுப்புகள் அதிகம் (ஆபீஸ் ஹெட் ).

பதவி உயர்வு - ஏற்கனவே 560 பேர் எஸ் ஆர் (5400 கிரேடு பே system)ஆக உள்ளனர் . டிஆர் ஆக மினிமம் 10 ஆண்டுகள் ஆகும் .

3. தொழிலாளர் உதவி ஆய்வாளர் -
சம்பளம் -46700 . களப்பணி உள்ள ஒரு பதவி . பவர் இருக்கும் ஒரு பதவி . அனைத்து கடைகள் , தொழிலகங்கள் நிர்வாகம் கட்டுப்பாட்டில் வரும் . பணிச்சுமை உண்டு .
பதவி உயர்வு - 6 வருடங்களில் துணை ஆய்வாளர் பதவி .(5100 கிரேடு பே சிஸ்டம் ). அடுத்த 5 வருடம் -உதவி ஆணையர் பதவி உயர்வு .(5400 கிரேடு பே சிஸ்டம் ) இளநிலை வேலைவாய்ப்பு அலுவலரை ஒப்பிடும்போது நல்ல பணி. துணை ஆணையர் வரை செல்ல பதவி உயர்வு உண்டு .

4. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் .
 சம்பளம் -46700 . அமைதியான பணிசூழல் விரும்புபவர்கள் தொழிலாளர் துறையை விட இதை தேர்வு செய்யலாம் . மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக குறைந்த பட்சம் 12 வருடம் ஆகும் (5400 கிரேடு பே )

5. உதவி பிரிவு அலுவலர்.டிஎன்பிஎஸ்சி
 சம்பளம் -45500 வரை இருக்கும் (மொத்தம் ).
 வேலைப்பளு அதிகம் உண்டு .  தேர்வு காலங்களில் சனி ஞாயிறு வேலை உண்டு . ஆனால் வேலை இடம் ஒரே இடம் . அடுத்த 6 டு 7 வருடங்களில் பிரிவு அலுவலர் பதவி உயர்வு .  (5400 கிரேடு பே ). இணை செயலர் வரை வரலாம் . சென்னை தான் கடைசி வரைக்கும் .

6. உதவி ஆய்வாளர் -உள்ளாட்சி நிதி
சம்பளம் -43500 வரை .
 பொறியியல் படித்தவர்களுக்காகவே 78 போஸ்ட் ல் இருந்து 215 ஆக உயர்ந்தது போல் உள்ளது . புண்ணியம் .. துறையில் ஏற்கனவே 350 பேர் நேரடி நியமனம் மூலம் உள்ளனர் . துணை ஆய்வாளர் ஆக குறைந்தது 8 வருடம் ஆகும் (4800 கிரேட் பே ) அடுத்த 10 வருடம் அடுத்த பதவி உயர்வு  (5100 கிரேடு பே ) . குரூப் -1 கிடைக்க 25 வருடம் ஆகும் . பீஸ்புல் ஆக இருக்கும் . சில இடங்களில் டெய்லி அலுவலகம் செல்ல தேவை இல்லை . பைல் ஒர்க் வீட்டில் இருந்து பாக்கலாம் .

பணியிடம் சென்னை வாய்ப்பு உண்டு .

 குரூப்-1 படிக்க ஏற்ற துறை .லீவு கிடைக்கும் .

7.உதவி ஆய்வாளர் -இந்து அறநிலையத்துறை.

 கோவில் நிதி தணிக்கை . பதவி உயர்வுக்கு 10 வருடம் ஆகும் . (4800 கிரேடு பே ). அடுத்த பதவி உயர்வு 4 வருடம் (5100 கிரேடு  பே ). அடுத்த பதவி உயர்வுக்கு காலம் தெரியவில்லை . இதை ஒப்பிடும்போது உள்ளட்சி நிதிதி தணிக்கை மிகவும் நல்ல பதவி .பீஸ்புல் ஆக இருக்கும் . சில இடங்களில் டெய்லி அலுவலகம் செல்ல தேவை இல்லை . பைல் ஒர்க் வீட்டில் இருந்து பாக்கலாம் .

பணியிடம் சென்னை வாய்ப்பு உண்டு .
குரூப்-1 படிக்க ஏற்ற துறை . லீவு கிடைக்கும் .
8. கண்காணிப்பாளர் . தொழில் கூட்டுறவு துறை
ஆறு வருடத்தில் தொழில் கூட்டுறவு அலுவலர் பதவி உயர்வு (4900 கிரேட் பே )-அடுத்த 10 ஆண்டுகளில் உதவி இயக்குனர் ஆக வாய்ப்பு (5400 கிரேட் பே ).

9. முதுநிலை ஆய்வாளர் - கூட்டுறவு சங்கங்கள் துறை .

5 வருடங்களில் பதவி உயர்வு வாய்ப்பு (5100 கிரேடு பே ). அடுத்த பதவி உயர்வுக்கு மினிமம் 12 வருடம் ஆகும் . (5400 கிரேட் பே - மாவட்ட பதிவாளர் பதவி). பணிச்சுமை உண்டு .
பணியிடம் சென்னை வாய்ப்பு உண்டு .
10. வருவாய் உதவி ஆய்வாளர்

சம்பளம் -25000 மட்டும் . ஆனால் அடுத்த பதவி உயர்வு 6 வருடங்களில் துணை தாசில்தார். (4800 கிரேடு பே  மற்றும் சிறப்பு படிகள் உண்டு ). நல்ல பதவி .மரியாதை உண்டு . மக்கள் பணி செய்ய சிறப்பான பதவி. அடுத்தது தாசில்தார் . 4 வருடம் (5100 கிரேடு பே மற்றும் படிகள் உண்டு . கார் போன்ற வசதிகள் உண்டு ) . அடுத்து உதவி ஆட்சியர் பதவி . மாவட்ட வருவாய் அலுவலர் பதவி வரும்போது சம்பளம் இணை செயலர் க்கு சமமான சம்பளம் . (மாவட்ட ஆட்சியரை விட அதிகம் ).
எஸ்சி பிரிவினர் கு ஐ.ஏ.எஸ்  வாய்ப்பு உண்டு . அருந்ததியர் கு உறுதியான வாய்ப்பு உள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக