சனி, 3 மார்ச், 2018

டே சீரோ(Day zero)என்றால்?



டே சீரோ(Day zero)என்றால்?

கடைசி சொட்டு குடிநீரை ஏப்ரல் 12ம் தேதி பருகவுள்ள கேப்டவுன் நகரம்!
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் விரைவில் ‘டே சீரோ’ என்ற நிலையை எட்டவிருக்கிறது.

‘டே சீரோ’ என்றால் என்னவென்று யோசிக்கின்றீர்களா? உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல், முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. இதைத் தான் ஆங்கிலத்தில் “டே சீரோ” (Day Zero) என்று சொல்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி, கேப்டவுன் நகரம் இந்த நாளை எட்டுகிறது.

 சமூக தளங்களில் அவ்வப்போது பரவும் சில தகவல்களை போன்றதொரு நிலை உண்மையில் உருவாகப் போகிறது நம் கண் முன்னே. அதுவும், சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் போகும் நாளை துல்லியமாக அறிவிக்கப்பட்டு, அதை பதைபதைப்புடன் எதிர்நோக்கியுள்ளனர் கேப்டவுன் மக்கள்.

குறிப்பாக, சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி, தென்னப்பிரிககவுக்கு எதிராக இந்த கேப்டவுன் நகரில் உள்ள மைதானத்தில் விளையாடிய போது, இந்திய வீரர்கள் 2 நிமிடத்திற்கு மேல் குளிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஏன் இந்த நிலை?

கேப்டவுன் நகரில் 4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். ஒரு காலத்தில் உலகின் பசுமையான நகரில் ஒன்றாக கேப்டவுன் நகரம் இருந்தது. ஆனால், உலக வெப்பமயமாதல், மழை பெய்யாமை, அரசின் மெத்தன போக்கு, அதைவிட மக்களின் அலட்சியம் ஆகிய காரணங்கள் ஒன்று சேர, இன்று ஒரு சொட்டுத் தண்ணீருக்காக கையேந்த உள்ளது கேப்டவுன் நகரம்.

கேப்டவுனுக்குப் பல காலமாக உயிர் ஆதாரமாக இருந்த தீவாட்டர்ஸ்க்லூஃப் (Theewaterskloof) அணையின் கொள்ளளவில், கடந்த 2016ம் ஆண்டு 13 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இப்போது நீர் 10%க்கும் குறைவான நிலையில் வறட்சியை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. நகருக்கு தண்ணீர் வழங்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் இன்னும் சில அணைகளும் 15% வந்துவிட்டன. அது 13.5% எனும் நிலையை எட்டும்போது, “டே சீரோ” நிகழும்.

கடந்த 2007ம் ஆண்டே, தென்னாப்பிரிக்க நீர் விவகாரங்கள் துறை, நிலத்தடி நீர் குறைந்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து மக்களிடமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மக்கள் இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், தக்க நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் மீதும் புகார்கள் கடுமையாக எழுகிறது.


டே சீரோவுக்கு பிறகு கேப்டவுன் மக்களின் நிலை?

மிக அபாயகரமான நிகழ்வுகள் டே சீரோவுக்கு பிறகு தான் காத்திருகின்றன. கடந்த டிசம்பர் மாதம், ஒரு நாளைக்கு ஒருவர் 87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று சட்டம் போடப்பட்டது. மீறினால், அபராதத் தொகையோடு தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 1 முதல் ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 லிட்டர் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

டே சீரோ நிலை ஏற்பட்ட நாள் முதல், நகரின் எந்தக் குழாய்களிலும் தண்ணீர் வராது. அதனால், நகர் முழுக்க 200-க்கும் அதிகமான “தண்ணீர் பெறும் மையங்களை” அமைத்திருக்கிறது அரசு. வெளியிலிருந்து கொண்டுவரும் தண்ணீரை அதில் நிரப்புவார்கள். வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 25 லிட்டர் மட்டுமே.

இதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான். அதற்குள், பஞ்சம் தீரவில்லை எனில், மக்களிடையே நீருக்காக சண்டை ஏற்படும். பணம், காரை திருடும் முறை மாறி, தண்ணீரை திருடும் சூழல் உருவாகும். அப்போது, காவல்துறை, ராணுவம் கொண்டு அரசு மக்களை ஒடுக்கும். இதனால், கலவரங்கள் உருவாகும். ஒரு நகரத்திற்குள் ஏற்படும் நீர் வறட்சி போர், நாடுகளிடையேயான போராகவும் மாறும்.:)

இந்த நிலை நமக்கு வராமல் தடுக்க தண்ணீரை சேமிப்போம்!  மரங்களை வளர்ப்போம்! இயற்கையை பாதுகாப்போம்!    இந்த விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக