வெள்ளி, 27 ஜூலை, 2018

சிங்கங்களை பற்றி நீங்கள் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்

சிங்கங்களை பற்றி நீங்கள் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்

யாருடைய வீரத்தையாவது புகழ்ந்து சொல்லும் போது நாம் அதிகம் பயன்படுத்துவது"சிங்கம்மாதிரி"அவன் என்று கூறுவோம். சிங்கங்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வாங்க பார்க்கலாம்
1)சிங்கம் பூனை குடும்பத்தை சேர்ந்தது. ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது. பெண் சிங்கம் வேட்டையாடி கொண்டு வரும் உணவை தான் ஆண் சிங்கம் சாப்பிடும். ஆண் சிங்கங்கள் அபூர்வமாக தான் வேட்டைக்கு செல்லும்.
2)சிங்கங்கள் இனப்பெருக்கதின் போது தொடர்ந்து ஒரு நாளுக்கு 25-40முறை வரை கூட உடல் உறவில் ஈடுபடுமாம்.
3)சிங்கங்களுக்கு இனிப்பு சுவையை உணர முடியாது.
4)சிங்கங்களின் கூட்டத்தை எதிர்த்து சண்டையிடும் துணிச்சல் முள்ளம்பன்றிக்கு உள்ளது.
5)சிங்கங்களின் கர்ஜிக்கும் சத்தம் 8கி.மீ வரை எதிரொலிக்கும் தன்மை கொண்டது.
6)தீ கோழி ஒரே உதையில் சிங்கங்களை உயிர் இழக்க செய்துவிடும் திறன் கொண்டது.
7)சிங்கங்கள் பொதுவாக 10-14 வருடங்கள் உயிர் வாழும்.
8)பெண் சிங்கங்களுக்கு பிடரி மயிர் அதிகமாக இருக்கும். ஆண் சிங்கங்களின் மீது அதிக ஈர்ப்பு இருக்கும்.
9)சிங்கங்கள் 250 கிலோ வரை எடை கொண்டது.
10)மலை சிங்கங்கள் தனக்கு கிடைத்த உணவை மண்ணில் புதைத்து வைத்து பசி எடுக்கும் போது எடுத்து சாப்பிட வேண்டும்.

வியாழன், 26 ஜூலை, 2018

நீங்கள் அறிய இயலாத வினா விடைகளை காண்போம்...


நீங்கள் அறிய இயலாத வினா விடைகளை காண்போம்...

காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? சீனா
உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது? கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்? லூயி பாச்டர்
கிரேக்கர்கள் வணங்கிய சூரியக்கடவுளின் பெயர் என்ன? அப்போலோ
ஹார்மோன் இல்லாத உயிரினம் எது? பாக்டீரியா
நூற்றாண்டு போர் எந்த இரு நாடுகளுக்கு இடையில் நடந்தது? இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் இடையே
டிரான்ஸ் பார்மரைக் கண்டுபிடித்தவர் யார்? வில்லியம் ஸ்டான்லி
உயிர் வெள்ளி எனப்படுவது எது? பாதரசம்
நிறமுள்ள கண்ணாடி தயாரிக்க சேர்க்கப்படுவது எது? உலோக ஆக்சைடுகள்
எறும்புகளின் கொடுக்கில் உள்ள அமிலம் என்ன? பார்மிக் அமிலம்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது?
  • 1972 ஆம் ஆண்டு
தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள் ?
  • தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்
தமிழ்நாட்டின் பன்னாட்டு விமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
  • சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் உள்நாட்டு விமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
  • சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்
ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
  • சென்னைக்கு அருகில் ஆவடியில்
பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது
  • 1972 ஆம் ஆண்டு
தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?
  • 12,115 ( 2013 வரை )
தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?
  • 3504 ( 2013 வரை )
தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?
  • 1958
தமிழ் நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?

  • 1,30,058 சதுர கிலோமீட்டர்கள்.


தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? - கங்காரு எலி
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? - ஏழு
பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? - 330
உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? - நெதர்லாந்து
நாய்கள் இல்லாத ஊர் எது? - சிங்கப்பூர்
தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது? - மக்ரானா
நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன? - ஆறு தசைகள்
கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி? - வௌவால்
உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது? - ஸ்வீடன்
நின்று கொண்டு தூங்கும் பிராணி எது ? - குதிரை


நீங்கள் அறிய இயலாத அறிவு சார்ந்த வினா விடைகளை காண்போம்...

நீங்கள் அறிய இயலாத அறிவு சார்ந்த வினா விடைகளை காண்போம்...

இந்திய அரசியலமைப்பின் எந்தச் ஷரத்து, ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவரக் குடியரசுதலைவர்க்கு அதிகாரமளிக்கிறது?
  • 356வது ஷரத்து

யாருடைய கையொப்பம் பெற்ற பின்னர் மசோத, சட்டம் ஆகும் ?
  • குடியரசுத்தலைவர்
“சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” என்று கூறியவர் யார் ?
  • லாஸ்கி
இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு எது ?
  • 1959
இந்திய ஜனாதிபதி என்பவர் யார் ?
  • இந்திய அரசின் தலைவர்

பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கடைசி நிறுவனம் எது ?
  • கிராமப் பஞ்சாயத்து
பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்து?
  • 1950
இந்தியா-அமெரிக்கா நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?
  • அக்டோபர் 11, 2008.
முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம்?
  • ராஜஸ்தான்
ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  • 12

இந்திய அரசாங்கம் பற்றி சில பொது அறிவு கேள்விகள்?

இந்திய அரசாங்கம் பற்றி சில பொது அறிவு கேள்விகள்?

1.குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்
2.டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக அமைப்பின் கூறுகள்
3.ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி
4.200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்
5.உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்
6.பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982

7.எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது
8.காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915

9.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957
10.தி.மு.கவை நிறுவியவர் யார்? அண்ணாதுரை
11.தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ

திருக்குறள் பற்றி சில பொது அறிவு கேள்வி பதில்கள்.

திருக்குறள் பற்றி சில பொது அறிவு கேள்வி பதில்கள்.

1.தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொடர்
2.ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை
3.முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர்

4.வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்
5.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்
6.தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்

7.தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்
8.இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்

9.மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை
10.சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு

புதன், 25 ஜூலை, 2018

நீங்கள் அறிய இயலாத வினா விடைகளை காண்போம் ...

நீங்கள் அறிய இயலாத வினா விடைகளை காண்போம் ...


1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது-வேளாண்மை
2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?-ஆந்திரப்பிரதேசம்
3. ஈராக் நாட்டின் தலைநகரம்-பாக்தாக்

4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்-பெங்களூர்
5. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்-பொகரான்

6. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்-A.P.J. அப்துல் கலாம்
7. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு-1919
8. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்-சத்யஜித்ரே
9. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்-தாலமி
10. குஜராத் மாநிலத்தின் தலைநகரம்-காந்தி நகர்

கடற்கரை மணல் துகள்களைவிட நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமா?

கடற்கரை மணல் துகள்களைவிட நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமா?

"இந்த புவியில் உள்ள அனைத்து கடற்கரையிலும் இருக்கும் மணல் துகள்களைவிட இந்த பிரபஞ்சத்தில் அதிக நட்சத்திரங்கள் இருக்கின்றன."இதை சொன்னவர் பிரபல வானியல் அறிஞர் கார்ல் சகன். என்பதுகளில் மிகவும் பிரபலமாக இருந்த காஸ்மோஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்தான் கார்ல் சகன் இவ்வாறாக கூறினார்.

இதனை பிபிசி ஆய்வாளர்களின் துணையுடன் கணக்கிட்டது.
நாம் பெரிய எண்ணிக்கைகளை எடுத்து விளையாட போகிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.பேராசிரியர் கெர்ரி கில்மோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியல் அறிஞர் இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.பிரிட்டனின் திட்டமான கையா அவர் தலைமையில்தான் நடந்து வருகிறது. கையா திட்டம் மூலம் நட்சத்திரங்களை எண்ணுவதுதான் செயல்திட்டம்.இந்த திட்டத்தில் ஐரோப்பியன் விண்வெளிக்கலமும் இருக்கிறது. இப்போது அந்த விண்வெளிக்கலம் வட்டப்பாதையை சுற்றி வருகிறது.

பிபிசியிடம் பேசிய பேராசிரியர் கெர்ரி கில்மோர், "கையா வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவல்களின் படி, இரண்டு பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த பால்வீதியில் உள்ள மொத்த நட்சத்திரங்களில் ஒரு சதவீதம்தான் இது" என்கிறார்.இந்த கேல்க்ஸியில் மட்டும் 200 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன.ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்த கேலக்ஸியில் மட்டும்தான் 200 பில்லியன் நட்சத்திரங்கள்.

இதனை சரியாக கணக்கிட்டால் 375 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் இருப்பது தெரிய வருகிறது.ஒரு கியூபிக் மீட்டரில் 10 பில்லியன் அளவுக்கு மணல் துகள்கள் இருக்கின்றன.நாம் முன்பே கணக்கிட்ட 375 பில்லியன் க்யூபிக் மீட்டரை மணல் இந்த 10 பில்லியனுடன் பெருக்கினால், கடற்கரைகளில் மொத்தம் எவ்வளவு மணல் துகள்கள் இருக்கின்றன என்பது தெரியவரும்.
அதாவது இந்த பிரபஞ்சத்தில் 10,000,000,000,000,000,000,000 நட்சத்திரங்கள் இருக்கின்றன.உலகத்தில் உள்ள கடல்களில் மொத்தமாக 4,000,000,000,000,000,000,000 மணல் துகள்கள் உள்ளன.ஆக, கார்ல் சாகன் சொன்னது சரி. நட்சத்திரங்கள்தான் மணலைவிட அதிகமாக உள்ளன.

நீங்கள் அறிய முடியாத அறிவு சார்ந்த வினாக்களை காண்போம்...

நீங்கள் அறிய முடியாத அறிவு சார்ந்த வினாக்களை காண்போம்...


11.இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு-23 சதவீதம்

12. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?-கங்கை
13. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?-1947
14. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?-லக்னோ
15. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?-பி.டி. உஷா
16.இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?-டேவிட் ஜசன் ஹோவர்

17. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?-எயிட்ஸ்
18. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?-நவசக்தி
19. ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?-12
20. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி-உருது

நாம் அறிய இயலாத பொது அறிவு கேள்விகளை பற்றி காண்போம் வாங்க..

நாம் அறிய இயலாத பொது அறிவு கேள்விகளை பற்றி காண்போம் வாங்க..

1.வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்?-ஈ.வீ.ராமசாமி

2. பழனி மலை அருகே அமைந்துள்ள முக்கிய கோடை வாசஸ்தலம்-கொடைக்கானல்
3. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?-பாதரசம்
4. மிக அடர்த்தியான கார்பன் எது?-கரி
5. உலகில் மிக பழமையான வேதம் எது?-ரிக்வேதம்
6. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகப்புகழ் பெற்றவர்-தேவநேயப் பாவாணர்

7. “மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர்-சுவாமி விவேகானந்தர்

8. உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?-கணையம்
9. மிக அடர்த்தியான கார்பன் எது?-கரி
10. ரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம்-அலகாபாத்

செவ்வாய், 24 ஜூலை, 2018

கணிதவியல் வினா விடை TNPSC CCSE-IV 100 - 500 க்கு மேற்பட்ட ஒரு எண் பகா எண்ணா?

 கணிதவியல் வினா விடை TNPSC CCSE-IV

 100 - 500 க்கு மேற்பட்ட ஒரு எண் பகா எண்ணா?

1. 2, 3, 5, 7 ஆகிய எண் பகா எண், ஆனால் இதில் முடியும் எண் அனைத்தும் பகா எண் அல்ல.

2. 2 ஆல் வகுபட, ஒரு எண் அந்த எண்ணின் கடைசி இலக்க எண் இரட்டைப்படை எண்ணாக இருக்க வேண்டும்.

3. ஒரு எண் 3 ஆல் வகுபட, அந்த எண்ணை அனைத்து இலக்கத்தை கூட்டி அந்த எண் 3 அட்டவணை சரிபார்க்க வேண்டும்.

4. ஒரு எண் 5 ஆல் வகுபட, அந்த எண்ணின் கடைசி இலக்க எண் 0, 5 எண்ணாக இருக்க வேண்டும்.

5. ஒரு எண் பகா எண்ணால் வகுக்கும் போது வரும் எண் பகா எண் அவ்வாறு இல்லை எனில் அது பகு எண்.

(எ.கா)
i) 137
பகா எண்ணால் வகுத்து மீதி கிடைக்கும் எண் பகா எண்

ii) 319
பகா எண்ணால் வகுத்து மீதி 0 கிடைக்கும் எண் பகு எண்.

100 க்கும் மேல் 500க்குள் உள்ள பகா எண்கள்
101 - 200
10, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 173, 179, 181, 191, 193, 197, 199
மொத்தம் = 21 பகா எண்கள்

1. அதிக இடைவெளி உள்ள பகா எண் = 113, 127
2. 101 - 200 க்குள் உள்ள முதல் பகா எண் = 101
3. 101 - 200 க்குள் உள்ள கடைசி பகா எண் = 199

201 - 300
211, 223, 227, 229, 233, 239, 241, 251, 257, 263, 269, 271, 277, 281, 283, 293
மொத்தம் = 16 பகா எண்கள்
1. 201 - 300 க்குள் உள்ள முதல் பகா எண் = 211
2. 201 - 300 க்குள் உள்ள கடைசி பகா எண் = 293

301 - 400
307, 311, 313, 317, 331, 337, 347, 349, 353, 359, 367, 373, 379, 383, 389, 397 மொத்தம் = 16 பகா எண்கள்
1. 301 - 400 க்குள் உள்ள முதல் பகா எண் = 307
2. 301 - 400 க்குள் உள்ள கடைசி பகா எண் = 397

401 - 500
401, 409, 419, 421, 431, 433, 439, 443, 449, 457, 461, 463, 467, 479, 487, 491, 499
மொத்தம் = 17 பகா எண்கள்
1. 401 - 500 க்குள் உள்ள முதல் பகா எண் = 401
2. 401 - 500 க்குள் உள்ள கடைசி பகா எண் = 499
1 முதல் 500 வரை உள்ள பகா எண்களின் எண்ணிக்கை = 95+1 = 96
1 முதல் 500 வரை உள்ள பகு எண்களின் எண்ணிக்கை = 404

TNPSC பொது அறிவு கணிதவியல் வினாவிடை திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வு

TNPSC  பொது அறிவு கணிதவியல் வினாவிடை திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வு

1. முதல் 40 இயல் எண்களின் சராசரியை காண்க.

விடை : 20.5

விளக்கம் :
முதல் n இயல் எண்களின் கூடுதல் = (n (n   1))/2
n = 40
முதல் 40 இயல் எண்களின் கூடுதல் = (40 (40+ 1))/2
= (40 * 41) / 2
= 820
தேவையான சராசரி = 820/40
 = 20.5

2. ஒரு எண்ணுடன் 7யைக் கூட்டி, விடையை 5 ஆல் பெருக்கி வருவதை 9 ஆல் வகுத்து கிடைக்கும் ஈவிலிருந்து 3 யைக் கழித்தால் 12 என்பது மீதியாக கிடைக்கும். ஆகவே அந்த எண்ணைக் காண்க.

விடை : 20

விளக்கம் :
கண்டுபிடிக்க வேண்டிய எண்ணை x எனக் கொள்க.
( ( ( x + 7 )* 5 )/ 9 ) - 3 = 12
( ( ( x+ 7 )* 5 ) - 27 = 108
5x+ 35 - 27 = 108
x=20
கண்டுபிடிக்க வேண்டிய எண் = 20

3. 2, 7, 6 மற்றும் x ஆகிய எண்களின் சராசரி 5 ஆகும். அதுபோல, 18, 1, 6, x மற்றும் y ஆகியவற்றின் சராசரி 10. ஆகவே, y இன் சராசரியைக் காண்க.

விடை : 5, 20

விளக்கம் :
2, 7, 6 மற்றும் ஒ ஆகிய எண்களின் சராசரி 5 :
(2 +7 + 6 + x)/ 4 = 5
15 + x  = 20
X  = 5
18, 1, 6, x மற்றும் y ஆகியவற்றின் சராசரி 10 :
(18 + 1 + 6 x+ y)/ 5= 10
x ன் மதிப்பினை பிரதியிட,
25+ 5 +y = 50
30 + x = 50
y = 20

4. ஒரு குறிப்பிட்ட அசலுக்கு தனிவட்டி வீதத்தில் 3 வருடங்களில் ரூ.815 ம், 4 வருடங்களில் ரூ.854 ம், கிடைக்கிறது எனில் அசலினைக் காண்க.

விடை : ரூ. 698

விளக்கம் :
ஒரு வருடத்திற்கு தனிவட்டி = ரூ. (854 - 815) = ரூ.39
3 வருடங்களுக்கு தனிவட்டி = ரூ. (39 * 3) = ரூ.117
அசல் = (815 - 117) = 698
அசல் = ரூ.698

பொது அறிவு வினா விடை கணிதம் TNPSC CCSE-IV

 பொது அறிவு வினா விடை கணிதம்
TNPSC CCSE-IV

திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வு

1. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் U,A,B,C என்ற 3 நபர்களின் மொத்த சம்பளங்களின் சராசரி ரூ.15000. அவர்களின் சம்பள விகிதம் 3 : 5 : 7 எனில் அவர்களின் சம்பளங்களில் குறைந்த சம்பளம் பெறுபவர் யார் அவரின் தொகை எவ்வளவு?

விடை : குறைந்த சம்பளம் பெறுபவர் A, ரூ.9000

விளக்கம் :
A : B : C = 3x : 5x : 7x
3 நபர்களின் மொத்த சம்பளம் = சராசரி * 3
= 15000 * 3
= ரூ.45000
3 நபர்களின் மொத்த விகிதம் = 3x+ 5x + 7x + = 15x
15x = 45000
x = 3000
மூவரின் சம்பளத்தில் குறைந்த அளவு தொகை பெறுபவர் A = 3x = 3 * 3000
= ரூ.9000

2. 10 எண்களின் சராசரி 18. ஒவ்வொரு எண்ணுடனும் 5 ஐக் கூட்டினால் கிடைக்கும் எண்களின் சராசரி என்ன?

விடை : 23

விளக்கம் :
10 எண்களின் மொத்த மதிப்பு = சராசரி * எண்ணிக்கை
= 18 * 10
= 180
அதிகரித்த மதிப்பு = 5 * 10 = 50
10 எண்களின் புதிய மதிப்பு = 180+ 50 = 230
10 எண்களின் புதிய சராசரி = 230 / 10 = 23

10 எண்களின் புதிய சராசரி = 23.

3. வளவன் என்பவர் ஒரு மிதி வண்டியை ரூ.1400 க்கு வாங்கி 15% நட்டத்திற்கு விற்றார். எனில் விற்றவிலை என்ன.

விடை : ரூ.1190

விளக்கம் :
நட்டம் = (நட்ட சதவீதம் / 100)* வாங்கிய விலை
= (15/100)* 1400
= ரூ.210
விற்றவிலை = வாங்கிய விலை - நட்டம்
= 1400 - 210 = 1190

விற்ற விலை
= ரூ.1190

4. ஓர் அரைக்கோளத்தின் வளைபரப்பு 1232 செ.மீ3. இதன் விட்டத்தைக் காண்க.

விடை : 28 செ.மீ

விளக்கம் :
அரைக்கோளத்தின் வளைபரப்பு
 = 1232
2πr2 = 1232
r2 = 1232 / 2π
r2 = (1232 * 7) / ( 2 * 22 )
r2 = 196
r = 14 செ.மீ
விட்டம் d=  2r
= 2 * 14 = 28

விட்டம் d = 28 செ.மீ

TNPSC MATH'S shortcut GROUP -2 EXAM 2018 : திறனாய்வுத்தேர்வு 001

 TNPSC  MATH'S shortcut
GROUP -2 EXAM  2018 : திறனாய்வுத்தேர்வு

1. x/y= 6/5 எனில் (x2+y2) / (x2 - y2) -இன் மதிப்பு காண்க?

விடை : 61/11

விளக்கம்:
x= 6 எனவும், y= 5 எனப் பிரதியிட,
(x2  + y2) / (x2-y2) =(62 +52)/ (62 - 52)
= (36 +25) / (36 - 25)
= 61/11

2. ஓர் எண்ணில் 12% ஆனது 40 எனில், அந்த எண் யாது?

விடை : 333(1/3)

 விளக்கம்:
அந்த எண்ணை x என எடுத்துக்கொள்வோம்.
(12 / 100)* x = 40
12 x = 40 * 100
x = (40 * 100) / 12
x = 1000 / 3
x = 333(1/3)

3. கூட்டு விகித சமன்பாடு காண்க : (2 : 5) (3 : 4) (4 : 9)

விடை : 2 : 15

விளக்கம்:
கூட்டு விகித சமன்பாடு = (A/B ) * (B / C) * (C / D)
= (2/ 5) * (3 / 4) * (4 / 9)
= 2/15
(2 : 5) (3 : 4) (4 : 9)-ன் விகிதம்
 = 2 : 15

4. 10, 17, 15, 7, 40, 5, 22, 11 இவற்றின் இடைநிலை காண்க?

விடை : 13

  விளக்கம்:
கொடுக்கப்பட்ட எண்களை ஏறுவரிசையில் எழுத வேண்டும்.
5, 7, 10, 11, 15, 17, 22, 40
இடைநிலை
= (11+15) / 2
= 26 / 2
இடைநிலை = 13

5. 32 மாணவர்களின் சராசரி வயது 10. ஆசிரியர் வயதைச் சேர்த்தால் சராசரி 11 ஆகிறது எனில், ஆசிரியரின் வயது என்ன?

விடை : 43

விளக்கம்:
32 மாணவர்களின் சராசரி வயது = 10
32 மாணவர்களின் வயதின் கூடுதல்
= 32 * 10
= 320
ஆசிரியரின் வயதைச் சேர்த்தால் சராசரி வயது = 11
மொத்த வயது = (33 * 11)
= 363
32 மாணவர்களின் வயது = 320
ஆசிரியரின் வயது = (363 - 320)
= 43.


ஞாயிறு, 22 ஜூலை, 2018

நட்சத்திரம் ஏன் விட்டு விட்டு ஒளிர்கிறது என்று தெரியுமா?

நட்சத்திரம் ஏன் விட்டு விட்டு ஒளிர்கிறது என்று தெரியுமா?

ஒவ்வொரு நட்சத்திரமும் ஏன் விட்டு விட்டு ஒளிர்கிறது என்பதற்குப் பின்னால் உள்ள ரகசியத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கக் கூடும். 
முன்னர் அருகிலுள்ள இரு கோள்கள் மோதுவதால் உண்டாகும் சிதைவுகளை நட்சத்திரமானது வழுங்குவதால் அவை அவ்வாறு தோன்றுகின்றன என விஞ்ஞானிகள் நம்பியிருந்தனர். இக் கருத்து நீண்ட காலமாகவே விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு புதிராகவே இருந்து வந்துள்ளது. 

இது சிறிய நட்சத்திரம், 430 ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ளது. RW Aur A என்றழைக்கப்படும் இந் நட்சத்திரம் 1937 ஆம் ஆண்டளவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சில தசாப்தங்களுக்கும் இது வியப்பான விடயங்களை காட்டிக்கொண்டிருக்கிறது. 

இது ஒவ்வொரு தடவையும் பிரகாசமாக மாறுவதற்க முன்னர் மங்குகிறது. அண்மித்த காலங்களில் இந் நிகழ்வு அடிக்கடி நிகழ்வதுடன், அது நீடித்த காலம் நிலைத்திருந்ததையும் அவதானிக்க முடிந்திருந்தது. 

தற்போது அதிலிருந்து பெறப்பட்ட தரவுகள் அது ஏன் மங்குகிறது என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்துகின்றது.

அதன்படி நட்சத்திரத்தினை அதன் ஒழுக்கில் சுற்றிவரும் பாரிய திணிவுகள் மோதியிருக்கக் கூடும், இதன் போது உருவாகிய சிதைவுகள் அவற்றின் சிறு திணிவு காரணமாக ஈர்ப்பு சக்தியின் விளைவாக நட்சத்திரத்தினை நோக்கி விழுங்கப்பட்டிருக்கலாம், இதன் போது உண்டாகும் முகில் காரணமாகத்தான் அவை தற்காலிகமாக மறைக்கப்படுகின்றன, நமக்கு அவற்றின் பிரகாசம் குறைந்து மங்குவது போல தோன்றுகிறது என்கின்றனர்.

TNPSC முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசு.. உடனே படிங்க.

TNPSC முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசு.. உடனே படிங்க.


டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழக சட்டபேரவையில் கடந்த ஜுன் 1ந் தேதி தமிழக முதல்வர் விதி எண் 110ன் கீழ், டி.என்.பி.எஸ்.சி குருப் தேர்வுகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என அறிவித்தார். இதனையடுத்து அவரது அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுகளுக்கான வயது வரம்பு எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி வகுப்பினருக்கு 35 வயதிலிருந்து 37 வயதாகவும், பொதுப்பிரிவினருக்கு (ஓ.சி.) 30 வயதிலிருந்து 32 வயதாகவும் உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது.
குஜராத், அரியானா, பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருப்பதைப் போல டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 40 வயதாகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 வயதாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அவ்வாறு உயர்த்த இயலாவிட்டால் குறைந்தபட்சம் இந்த வயது வரம்புக்குள் இருப்பவர்களுக்கு தேர்வெழுதவாவது ஒரு வாய்ப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்

வெள்ளி, 20 ஜூலை, 2018

தமிழ்நாடு காவல்துறை தேர்வு முடிவு. இன்று. வெளியீடு. தேர்வு வாரியம் அறிவிப்பு


தமிழ்நாடு காவல்துறை தேர்வு முடிவு.  இன்று. வெளியீடு. தேர்வு வாரியம் அறிவிப்பு

Cut off      Male    Female

OC                52        44

BC                43        34

MBC            44        34

BC(M)          40        29

SC                43        35

SC( A)          38        30

ST                 40        33

http://www.tnusrbonline.org

வியாழன், 19 ஜூலை, 2018

துறைமுகங்கள் பற்றிய சில தகவல்கள்


துறைமுகங்கள் பற்றிய சில தகவல்கள் :-

இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகம் -13
மேற்கு கடற்கரை துறைமுகம் -6
1. கண்ட்லா (குஜராத்)
வரியில்லா துறைமுகம்
உயர் கடலலை துறைமுகம்
ஒதத் துறைமுகம்
2. நவசேவா (மகாராட்டிரா)
ஜவஹர்லால் நேரு துறைமுகம்
மிகப்பெரிய நவீன செயற்கை துறைமுகம்
3. மும்பை (மகாராட்டிரா)
மிகப்பெரிய இயற்கை துறைமுகம்
இந்தியாவின் கடல்வழி நுழைவாயில்
4. மர்மகோவா (கோவா)
இயற்கை. துறைமுகம்
அழகிய கடற்கரை கொண்ட துறைமுகம்
5. மங்களூர் (கர்நாடகா)
குதிரை மூக்கு துறைமுகம்
டைடல் போர்ட் எனப்படும் துறைமுகம்
6. கொச்சி (கேரளா)
நறுமண துறைமுகம்
அரபிக் கடலின் ராணி
மும்பை அடுத்து மேற்கு கடற்கரை பெரிய துறைமுகம்
கிழக்கு கடற்கரை துறைமுகம் -6
7. தூத்துக்குடி (தமிழ்நாடு)
தமிழ்நாட்டின் கடல்வழி நுழைவாயில்
ஆழமற்ற பெரிய துறைமுகம்
1974 ல் பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.
முத்து குளித்தல் நடைபெறும் துறைமுகம்
தமிழ்நாட்டின் பழைமையான துறைமுகம்
வேறு பெயர் - கொற்கை
வ.உ.சி. துறைமுகம்
8. சென்னை (தமிழ்நாடு)
தென்னிந்திய நுழைவாயில்
செயற்கை துறைமுகம்
இந்தியாவின் 3வது பெரிய துறைமுகம்
9. எண்ணூர் (தமிழ்நாடு)
12வது பெரிய துறைமுகம்
காமராசர் துறைமுகம்
10. விசாகப்பட்டினம் ( ஆந்திரா பிரதேசம்)
டால்பின் மூக்கு துறைமுகம்
ஆழம் அதிகமான துறைமுகம்
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்
11. பாரதீப் (ஒடிசா)
சீனாவுக்கும் இரும்புத் தாது ஏற்றுமதி
12. கொல்கத்தா (ஹூக்ளி) (மேற்கு வங்காளம்)
வைர துறைமுகம்
நதித் துறைமுகம்
இந்தியாவின் இரண்டாம் பெரிய துறைமுகம்
காடர்ன் ரிச் கப்பல் கட்டும் தறம்
13வது பெரிய துறைமுகம் - போர்ட் பிளேயர் (அந்தமான் தீவு)
இந்தியாவின் கப்பல் கட்டும் தளங்கள்:-
கோவா - கோவா
மலாகான்டாக் - மும்பை
கொச்சி - கொச்சி
இந்துஸ்தான் - விசாகப்பட்டிணம்
பைபாவ் - குஜராத்
கார்டன் ரீச் - கொல்கத்தா
காட்டுப்பள்ளி - சென்னை (எண்ணூர்

உடல் உறுப்பு தானம் பற்றிய குறிப்புகள்...

உடல் உறுப்பு தானம் பற்றிய குறிப்புகள்...

'உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.
"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?"
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.
இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?
இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.
உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?
18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?
  1. ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன. 1954-ம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-
  2. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
  3. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.
  4. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?
பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடிஸ்தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் 'ப்ளாஸ்மா பெரிஸிஸ்' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்­ரலையும் எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப்படுவதில்லை.
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?
பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்குள் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.
வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?
கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது னரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், னரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.
ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?
ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன. மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.
உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?
உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த நீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகள் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகள் உள்ளன. அவை 'வயாஸ்பான் திரவம்', 'யுரோ கால்லின்ஸ்" திரவம், 'கஸ்டோயியல்' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.
முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
நம்மிடையே உள்ள ஆதாரங்களின்படி 1902-ம் வருடம் முதன் முதலாக 'அலெக்ஸில்' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.
  • 1905-ம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
  • 1918-ம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
  • 1954-ம் ஆண்டுதான், அமெரிக்காவின் 'பாஸ்டன்' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
  • 1954-ம் ஆண்டு பீட்டர் பென்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
  • 1960-ம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
  • 196-ம் ஆண்டு 'கொலராடோ'விலுள்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
  • 1965-ம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
  • 1967-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் 'கேப்டவுன்' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 'டென்னிஸ் டார்வெல்' என்பவரின் இதயத்தை 'லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி' என்பவருக்கு பொருத்தினார்.
  • 1968-ம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
  • 1981-ல் முதன் முறையாக ஒரேநேரத்தில் இதய, நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் ஸ்டான்போர்டில் நடைபெற்றது.
  • 1983-ம் ஆண்டு 'சர். மாக்டியா கூப்' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
  • 1986-ம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
  • 1994-ம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உள்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.
  • 2001-ம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
  • 2005-ம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
  • சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
  • கல்லீரல் - 18 மணி நேரம் வரை
  • இதயம் - 5 மணி நேரம் வரை
  • இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை
  • கணையம் - 20 மணி நேரம் வரை
  • கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
  • எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
  • தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
  • எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
  • இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொ,துவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.
சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா?
மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம். ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.