வரலாற்று சாதனை படைத்தார் ஹிமா தாஸ்!
20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் தற்போது பின்லாந்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடந்த அரை இறுதி ஆட்டத்தில் 18 வயது நிரம்பிய இந்தியாவின் ஹிமா தாஸ் 52.10 வினாடிகளில் எல்லையை கடந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்
இதைத்தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இறுதி போட்டியில் ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் எல்லையை கடந்து தங்கப் பதக்கம் வென்றார் .
இதன் மூலம் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கணை என்கிற புதிய வரலாற்றை படைத்தார்.
இவரைத்தொடர்ந்து ரோமனியாவின் ஆண்ட்ரியா மைக்லஸ் 52.07 வினாடிகளில் இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவின் டெய்லர் மன்சன் 52.28 வினாடிகளில் எல்லையை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
இதுவரை சர்வதேச தடகள போட்டியில் இந்தியா ஜொலித்ததில்லை என்ற ஏக்கத்தை நீக்கிய ஹிமா தாஸூக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.
பின்லாந்து: 20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் இந்தியாவை சேர்ந்த ஹிமாதாஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் தற்போது பின்லாந்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடந்த அரை இறுதி ஆட்டத்தில் 18 வயது நிரம்பிய இந்தியாவின் ஹிமா தாஸ் 52.10 வினாடிகளில் எல்லையை கடந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்
இதைத்தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இறுதி போட்டியில் ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் எல்லையை கடந்து தங்கப் பதக்கம் வென்றார் .
இதன் மூலம் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கணை என்கிற புதிய வரலாற்றை படைத்தார்.
இவரைத்தொடர்ந்து ரோமனியாவின் ஆண்ட்ரியா மைக்லஸ் 52.07 வினாடிகளில் இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவின் டெய்லர் மன்சன் 52.28 வினாடிகளில் எல்லையை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
இதுவரை சர்வதேச தடகள போட்டியில் இந்தியா ஜொலித்ததில்லை என்ற ஏக்கத்தை நீக்கிய ஹிமா தாஸூக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக