வியாழன், 26 ஜூலை, 2018

நீங்கள் அறிய இயலாத அறிவு சார்ந்த வினா விடைகளை காண்போம்...

நீங்கள் அறிய இயலாத அறிவு சார்ந்த வினா விடைகளை காண்போம்...

இந்திய அரசியலமைப்பின் எந்தச் ஷரத்து, ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவரக் குடியரசுதலைவர்க்கு அதிகாரமளிக்கிறது?
  • 356வது ஷரத்து

யாருடைய கையொப்பம் பெற்ற பின்னர் மசோத, சட்டம் ஆகும் ?
  • குடியரசுத்தலைவர்
“சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” என்று கூறியவர் யார் ?
  • லாஸ்கி
இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு எது ?
  • 1959
இந்திய ஜனாதிபதி என்பவர் யார் ?
  • இந்திய அரசின் தலைவர்

பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கடைசி நிறுவனம் எது ?
  • கிராமப் பஞ்சாயத்து
பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்து?
  • 1950
இந்தியா-அமெரிக்கா நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?
  • அக்டோபர் 11, 2008.
முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம்?
  • ராஜஸ்தான்
ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  • 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக