செவ்வாய், 31 டிசம்பர், 2019

2020... ஆண்டின் முதல் நாள்... ஜனவரி 01... வரலாறு என்ன சொல்கிறது?



2020... ஆண்டின் முதல் நாள்... ஜனவரி 01... வரலாறு என்ன சொல்கிறது?

🎉 🎉 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....! 🎉 🎉



'இதயம் கூட ஒரு வெற்று காகிதம்தான்
வருடத்தின் முதல் நாள் அன்று
இனி புதிதாக எழுத ஆரம்பிப்போம்....!

இனி வரும் நாட்களில் முயற்சிகள் எல்லாம்
இமயத்தை தாண்டிச் சென்று சாதனைகள் படைக்கும்
என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வையுங்கள்...!

நீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்
இனி உங்களுக்கு
ஒரு புது முகவரி தேடித் தரும்
இந்த இனிய புத்தாண்டில்......!"

🎉🎉🎉புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020🎉🎉🎉இன்றைய பொன்மொழி !
'உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே... உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார்... வெற்றியை விட உயர்ந்தது." சத்தியேந்திர நாத் போஸ்



இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் 1894ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

இவர் 1920ஆம் ஆண்டுகளில் குவாண்டம் துறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும், அதன் மூலம் போஸ்-ஐன்ஸ்டீன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போஸான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

இவர் அறிவியலில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி பத்ம விபூஷண் விருது இவருக்கு இந்திய அரசால் 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் 1974ஆம் ஆண்டு மறைந்தார். முக்கிய நிகழ்வுகள்
1995ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.
1992ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கோபால் (ஊழுடீழுடு) நிரலாக்க மொழியை கண்டறிந்த கிரேஸ் முர்ரே ஹாப்பர் மறைந்தார்.
1999ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி யூரோ நாணயம் (ஐரோப்பா) அறிமுகமானது.1881ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மணியார்டர் அனுப்பும் முறை தொடங்கப்பட்டது.

சினிமா 2019... விருதுகளை அள்ளிய நட்சத்திரங்கள்... உங்களுக்கு பிடித்த நட்சத்திரம் யார்?



சினிமா 2019... விருதுகளை அள்ளிய நட்சத்திரங்கள்... உங்களுக்கு பிடித்த நட்சத்திரம் யார்?
பிலிம்பேர் விருதுகள்...!!
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளின் தென்னிந்திய பிரிவாகும்.

தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் திரைப்பட கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

🏆 சிறந்த தமிழ் படத்திற்கான விருது கதிர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாளுக்கு கிடைத்தது.

🏆 சிறந்த இயக்குநருக்கான விருது ராட்சசன் படத்தை எடுத்த ராம் குமாருக்கு கொடுக்கப்பட்டது.

🏆 சிறந்த நடிகருக்கான விருது வடசென்னை படத்திற்காக தனுஷஷுக்கும், 96 படத்திற்காக விஜய் சேதுபதிக்கும் கிடைத்தது.

🏆 சிறந்த நடிகருக்கான விருது (விமர்சன அடிப்படையில்) செக்கச் சிவந்த வானம் படத்திற்காக அரவிந்த் சாமிக்கு வழங்கப்பட்டது.

🏆 சிறந்த நடிகைக்கான விருது 96 படத்திற்காக த்ரிஷாவுக்கு கிடைத்தது.


முன்னணி நட்சத்திரங்கள் பங்குபெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்...!


🏆 சிறந்த நடிகைக்கான விருது (விமர்சன அடிப்படையில்) கனா படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷஷுக்கு கிடைத்தது.

🏆 சிறந்த துணை நடிகர் விருது கனா படத்திற்காக சத்யராஜுக்கு கிடைத்தது.

🏆 சிறந்த துணை நடிகைக்கான விருது கோலமாவு கோகிலாவுக்காக சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்தது.

🏆 சிறந்த இசையமைப்பாளருக்கான விருது 96 படத்திற்காக கோவிந்த் வசந்தாவிற்கு கிடைத்தது.

🏆 சிறந்த பாடலுக்கான விருது 96 படத்தில் வந்த காதலே காதலே பாடலுக்கு கிடைத்தது.

🏆 சிறந்த பாடகர் விருது பியார் பிரேமா காதல் படத்தில் வந்த ஹே பெண்ணே பாடலை பாடிய சித் ஸ்ரீராமிற்கு கிடைத்தது.

🏆 சிறந்த பாடகிக்கான விருது 96 படத்தில் வந்த காதலே காதலே பாடலை பாடிய சின்மயிக்கு கிடைத்தது.

🏆 சிறந்த நடன அமைப்புக்கான விருது ரவுடி பேபிக்காக பிரபுதேவாவிற்கு வழங்கப்பட்டது.

திங்கள், 30 டிசம்பர், 2019

டிசம்பர் 31... வரலாற்றில் என்ன நடந்தது?...



டிசம்பர் 31... வரலாற்றில் என்ன நடந்தது?...

வரலாற்றில் இன்று !!
ச.வே.சுப்பிரமணியன்



செந்தமிழ் மொழிக்கு சிறப்பாக தொண்டாற்றிய தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் 1929ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் பிறந்தார்.

மூன்றாண்டுகள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவராக வழிநடத்தினார்.

இவர் இலக்கிய நினைவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, கம்பன் கற்பனை, இளங்கோவின் இலக்கிய உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம் மூலம், சிலம்பும் சிந்தாமணியும், பாரதியார் வாழ்க்கை கொள்கைகள், தமிழ் நிகண்டுகள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

1969ஆம் ஆண்டு; நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை தொடங்கினார். 1985ஆம் ஆண்டு; நெல்லை மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 'தமிழூர்" என்ற ஊரை உருவாக்கி அங்கு வாழ்ந்தார். இவரது வீட்டின் பெயரே 'தமிழகம்".

இவர் ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு, ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி விருது, அவ்வை தமிழ் அருளாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்திய சாகித்ய அகாடமியின் 'பாஷா சம்மான்" விருது பெற்ற முதல் தமிழறிஞர் என்ற பெருமைக்குரியவர்.


வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த ச.வே.சுப்பிரமணியம், 2017ஆம் ஆண்டு மறைந்தார்.தியாகி விஸ்வநாத தாஸ்



இன்று இவரின் நினைவு தினம்..!!
சுதந்திரப் போராட்ட தியாகியும், மேடை நாடகக் கலைஞருமான எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ் 1886ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகாசியில் பிறந்தார்.

தேசிய உணர்வால் உந்தப்பட்ட இவர், மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். மேடை நாடகங்கள் வாயிலாக, மக்களிடையே சுதந்திர உணர்வை தீவிரமாக வளர்த்ததால், வீரத் தியாகி என்றும் அழைக்கப்பட்டார்.

ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து இவர் எழுதிய, பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது என்ற பாடல் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தினார்.

விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதால் பலமுறை ஆங்கிலேய அரசால் சிறையில் அடைக்கப்பட்டார். முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் 1940ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
1879ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வெள்ளொளிர்வு விளக்கு முதல்முறையாக தாமஸ் ஆல்வா எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
1909ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.

2019-ல் இந்தியாவின் சாதனைகள் - பகுதி-2 !!


2019-ல் இந்தியாவின் சாதனைகள் - பகுதி-2 !!

தெலுங்கானா

🎀 தெலுங்கானாவின் MNJ புற்றுநோயியல் மற்றும் பிராந்திய புற்றுநோய் நிறுவனமானது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசால் நடத்தப்படும், முதல் மருத்துவமனை ஆகியுள்ளது.

🎀 ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில், மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், போலாவரம் திட்டத்தின் கீழ், அணையில் 10 ஆயிரத்து, 872 சதுர அடி பரப்பளவில், 24 மணி நேரத்தில், கான்கிரீட் பணிகள் முடிக்கப்பட்டன. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

🎀 ஹைதராபாத்தை சேர்ந்த 8 வயது சாருதா என்ற சிறுமி, 20 நிமிடங்களில் அடுத்தடுத்து 202 செராமிக் டைல்ஸ் கற்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

🎀 தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள கணினி மென்பொருள் நிறுவனத்தில், 12 வயதான சித்தார்த் ஸ்ரீவத்சவ் பில்லி என்ற சிறுவன், டேட்டா சயின்டிஸ்ட் ஆக பணியில் சேர்ந்துள்ளான்.
கர்நாடகா

🎀 2017-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு ஏப்ரல் வரை நாடு முழுவதும் 19 ஆயிரத்து 400.83 கி.மீ. தூரத்தை மும்பை சயான் பகுதியை சேர்ந்த பாக்யஸ்ரீ என்பவர் பெங்களூருவை சேர்ந்த பவான் எம்.ஜே. என்பவருடன் சேர்ந்து சைக்கிளில் சென்று சாதனை படைத்தார். இவரின் இந்த சாதனை கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்

🎀 ராஜஸ்தானின் உதய்ப்பு%2Bர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த லக்ஷயராஜ் சிங் மேவார் என்பவர், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட துணிகளைத் தானமாகப் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
டெல்லி

🎀 மேற்கு டெல்லியில் குதுப் விகார் பகுதியை சேர்ந்த மீனா உபத்யாய் என்ற பெண், 122 ரோஜாக்களை 14 இஞ்ச் மட்டுமே கொண்ட சிமெண்ட் தொட்டிக்குள் வளர்த்து, பராமரித்து வந்துள்ளார். அவரது இந்த சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாகலாந்து

🎀 நாகலாந்தில் உள்ள கேண்யாக் இனத்தைச் சேர்ந்த 5000 பெண்கள் தங்களின் பாரம்பரிய நடனமாடி ஆவோலிங் மன்யு%2B (Aoleang Monyu Festival) திருவிழாவில் உலக சாதனை படைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா

🎀 லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் விமானம் %லம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த உலகின் முதல் பெண் எனும் பெருமையை மும்பையைச் சேர்ந்த ஆரோகி பண்டிட் என்பவர் பெற்றுள்ளார்.

🎀 மும்பையை சேர்ந்த சின்மய் பிரபு என்ற 20 வயது இளைஞர் தண்ணீருக்கள் ரூபிக் க்யு%2Bப்பை சரியாக ஒன்றிணைத்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.

🎀 மும்பை பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட முதல் திருநங்கை பட்டதாரி என்ற பெருமையை சந்தோஷ் லோண்டே (வயது 36) என்பவர் பெற்றுள்ளார்.

🎀 ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தை ஜூலை 31-ம் தேதி ஏறி 9 வயது இந்திய சிறுவன் அத்வைத் பார்தியா (மராட்டிய மாநிலம்) சாதனை படைத்துள்ளான்.
பொது

🎀 இந்தியாவின் ஐ.ஏ.எஸ் அதிகாரி, அங்குர் கர்க், ஹhர்வர்ட் பல்கலைக்கழகத்தில் 170 மதிப்பெண்களுக்கு 171 பெற்று தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தி உள்ளார். இவருக்கு பல்கலைக்கழகம் 101% மதிப்பெண் அளித்துள்ளது.

🎀 புத்தாண்டில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு குறித்து, ஐக்கியநாடுகள் சபையின் குழந்தைகளுக்கான நல அமைப்பான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-ம் ஆண்டும் இந்தியா சாதனை படைத்துள்ளது.

🎀 கடந்த நிதியாண்டில், இந்திய ரயில்வே, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி, 6,037 ரயில் பெட்டிகளை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.

🎀 ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொண்டு நிறுவனம் 1 கி.மீ. தொலைவுக்கு மிக நீண்ட இஃப்தார் விருந்தை நடத்தி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


ஞாயிறு, 29 டிசம்பர், 2019

தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர்... யார் இவர்?



தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர்... யார் இவர்?

வரலாற்றில் இன்று !!
பிரகாஷ் வீர் சாஸ்திரி


தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர், ஆரிய சமாஜ தலைவரான பண்டிட் பிரகாஷ் வீர் சாஸ்திரி 1923ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.

இவர் 'என்னைவிட சிறந்த பேச்சாளர்" என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் பாராட்டு பெற்றவர். சுவாமி தயானந்தரின் கருத்துக்கள், ஆரிய சமாஜ கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

இவர்தான் ஐ.நா.சபையில் இந்தியில் பேசிய முதல் இந்தியர். இவர் சிறந்த கவிஞரும் கூட. மக்களவை தேர்தலில் 2 முறை சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக ஆரிய சமாஜ வளர்ச்சிக்காக பல பணிகளை மேற்கொண்டார்.

உத்தரப்பிரதேசத்தின் ஆரிய பிரதிநிதிகள் சபை தலைவராகப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் சேவை செய்து வந்தார். கட்டாய மத மாற்றத்தை தடுக்க மத பாதுகாப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 1960ஆம் ஆண்டு முன்மொழிந்தார்.

அபார பேச்சாற்றல் கொண்டவரும் தலைசிறந்த சமஸ்கிருத அறிஞருமான பிரகாஷ் வீர் சாஸ்திரி, 1977ஆம் ஆண்டு மறைந்தார். 2003ஆம் ஆண்டு துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி இவரது நாடாளுமன்ற உரைகளின் ஒரு பகுதியை புத்தகமாக வெளியிட்டார்.இரமண மகரிஷி



தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி இரமண மகரிஷி 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடராமன்.

அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர், திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, 'இரமண ஆசிரமம்', உலகப் புகழ் பெற்றதாகும்.

இவரை பின்பற்றியவர் விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார் ஆவார். இவர் 1950ஆம் ஆண்டு மறைந்தார்.விக்கிரம் சாராபாய்



இன்று இவரின் நினைவு தினம் !!
இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்கிரம் ஆம்பாலால் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார்.

சிறுவயதிலிருந்தே கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார். இங்கிலாந்தில் பிஹெச்.டி. ஆராய்ச்சியை முடித்த பிறகு 1947ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவினார்.

இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண் ஏவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் இவரே. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் (மறைவுக்குப் பிறகு) ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி, ஆராய்ச்சி கல்வியின் மேம்பாட்டிற்காக கடுமையாக பாடுபட்ட விக்கிரம் சாராபாய் 1971ஆம் ஆண்டு மறைந்தார்.

2019ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள்...!!


📺2019 சினிமா.. திரைப்பட விருதுகள்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி🏆
2019ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள்...!!
திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமானதாக கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். இந்த விருதுகள் திரைப்படத்துறையில் சிறப்பாக நடித்தவர்களை கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமா விருதுகளில் மிகவும் கௌரவம் வாய்ந்த விருதாக தேசிய திரைப்பட விருதுகள் கருதப்படுகின்றன.

🌟சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (மகாநடி திரைப்படம்)

🌟சிறந்த நடிகர் - ஆயுஷ்மான் குர்ராணா (பதாய் ஹோ திரைப்படம்), விக்கி கௌஷல் (உரி திரைப்படம்)

🌟சிறந்த அறிமுக இயக்குநர் - சுதாகர் ரெட்டி யாக்காந்தி

🌟சிறந்த திரைப்படம் - ஹெல்லாரோ (குஜராத்தி)

🌟சிறந்த இயக்குநர் - ஆதித்யா தார் (உரி திரைப்படம்)

🌟சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - பதாய் ஹோ திரைப்படம் (ஹிந்தி)

🌟சமூக நலனுக்கான சிறந்த திரைப்படம் - பேட்மேன் திரைப்படம் (ஹிந்தி)

🌟சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த திரைப்படம் - பானி திரைப்படம் (மராட்டியம்)

🌟சிறந்த துணை நடிகர் - சுவானந்த் கிர்கிரே (சும்பக் திரைப்படம்)

🌟சிறந்த துணை நடிகை - சுரேகா சிக்ரி (பதாய் ஹோ திரைப்படம்)

🌟நர்கிஸ் தத் விருது - ஒண்டல்ல இரட்டல்ல திரைப்படம் (கன்னடம்)

🌟சிறந்த நடன இயக்கம் - க்ருதி மஹேஷ் மிட்யா மற்றும் ஜோதி டி டொம்மார் (பத்மாவத் திரைப்படம்)

🌟சிறந்த சண்டை இயக்கம் - கே.ஜி.எஃப் திரைப்படம் (கன்னடம்)

🌟சிறந்த பஞ்சாபி திரைப்படம் - ஹர்ஜீதா திரைப்படம்

🌟சிறந்த அசாமி திரைப்படம் - புல்புல் கேன் சிங் திரைப்படம்

🌟சிறந்த தமிழ் திரைப்படம் - பாரம் திரைப்படம்

🌟சிறந்த தெலுங்கு திரைப்படம் - மகாநடி திரைப்படம்

🌟சிறந்த மலையாள திரைப்படம் - சுண்டனி ஃபிரம் நைஜீரியா திரைப்படம்

🌟சிறந்த வசனம் - தாரிக் திரைப்படம் (வங்காளம்)

🌟சிறந்த குழந்தை நட்சத்திரம் - பி.வி.ரோகித், சாகிப் சிங், தாளா அர்ஷத் ரேஷி மற்றும் ஸ்ரீநிவாஸ் போகலே

🌟சிறந்த ஒலி வடிவமைப்பு - தீபக் சாட்டர்ஜீ (உரி திரைப்படம்)

🌟சிறந்த படத்தொகுப்பு - நதிசரமி திரைப்படம் (கன்னடம்)

🌟சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - கம்மார சம்பவம் திரைப்படம் (மலையாளம்)

🌟சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ஆவ் திரைப்படம் (தெலுங்கு)

🌟சிறந்த ஆண் பாடகர் - அர்ஜித் கிங் (பத்மாவத் திரைப்படம்)

🌟சிறந்த ஆடை வடிவமைப்பு - மகாநடி திரைப்படம் (தெலுங்கு)

🌟சிறந்த இசை இயக்குநர் - சஞ்ஜய் லீலா பன்சாலி (பத்மாவத் திரைப்படம்)

🌟சிறந்த பாடல் வரிகள் - நதிசரமி திரைப்படம் (கன்னடம்)

🌟சிறந்த திரைக்கதை (அசல்) - சி லா சோ திரைப்படம் (தெலுங்கு)

🌟சிறந்த திரைக்கதை (தழுவல்) - அந்தாதுன் திரைப்படம் (ஹிந்தி)

🌟சிறந்த ஹிந்தி திரைப்படம் - அந்தாதுன் திரைப்படம் (ஹிந்தி)

🌟சிறந்த சிகை அலங்காரம் - ஆவ் திரைப்படம் (தெலுங்கு)

🌟திரையுலகிற்கு ஏற்ற மாநிலம் - உத்தரகாண்ட்

🌟சிறப்பு விருது - சுருதி ஹரிஹரன், சந்திசூர் ராய், ஜோஜோ ஜார்ஜ், சாவித்ரி.

கடந்து வந்த பாதை.. 2019 சினிமா.. இவர்கள் மறையலாம்.. நினைவுகள் மறையுமா?


கடந்து வந்த பாதை.. 2019 சினிமா.. இவர்கள் மறையலாம்.. நினைவுகள் மறையுமா?

2019 சினிமா.. இவர்கள் மறையலாம்... நினைவுகள் மறையுமா?...
2019ஆம் ஆண்டு தமிழ் திரையுலகம் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து உலகளவில் பிரபலமானாலும் சில இழப்புகளையும் சந்தித்திருக்கிறது.

2019ஆம் ஆண்டில் நம் மனதை விட்டு நீங்காமல் நினைவில் இருக்கும் முக்கிய சினிமா பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.
கிரேஸி மோகன்
பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மாரடைப்பு காரணமாக கடந்த ஜூன் மாதம் காலமானார். கிரேஸி மோகன், பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். அபூர்வ சகோதரர்கள் படம் மூலமாக கமல்-கிரேஸி இணைந்த கூட்டணி மகளிர் மட்டும், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் எனப் பல படங்களில் இணைந்து ரசிகர்களை மகிழ்வித்தது.
ஜே.கே.ரித்தீஷ்
நடிகரும், ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், கடந்த ஏப்ரல் மாதம் ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். பொறியியல் பட்டதாரியான இவர் கானல் நீர், பெண் சிங்கம், நாயகன், சின்னபுள்ள மற்றும் எல்.கே.ஜி. உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் மகேந்திரன்
பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இவர் முள்ளும் மலரும் படத்தினை இயக்கி தமிழில் அறிமுகமானவர். மேலும் உதிரிப் பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, கை கொடுக்கும் கை போன்ற முக்கியமான தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இவர் தெறி, சீதக்காதி, நிமிர், பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி
தெலுங்கு திரைப்படத்துறையின் முன்னணி நடிகையாக இருந்த கீதாஞ்சலி நவம்பர் மாதம் காலமானார். தெலுங்கில் வெளியான சீதாராம கல்யாணம் திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் கிரீஷ் கார்னாட்
பன்முகக்கலைஞர் கிரீஷ் கார்னாட் உடல்நலக்குறைவால் கடந்த ஜுன் மாதம் காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பதாக கர்நாடக அரசு அறிவித்தது. புகழ்பெற்ற எழுத்தாளர், நாடகக் கலைஞர், நடிகர், திரைப்பட இயக்குநர், முற்போக்கு சிந்தனையாளர் என்று பன்முகம் கொண்டவர் கிரீஷ் கார்னாட்.
நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி
நான் கடவுள், தவசி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. படப்பிடிப்பில் இருந்தபோது கிருஷ்ணமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இயக்குநரும், நடிகருமான ராஜசேகர்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் காலமானார். பாரதிராஜாவின் நிழல்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் பாடலான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாடலில் நடித்தவர். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடித்துள்ளார்.
நடிகர் பாலாசிங்
நடிகர் பாலாசிங் மாரடைப்பு காரணமாக நவம்பர் மாதம் சென்னையில் காலமானார். 1995ஆம் ஆண்டு வெளிவந்த அவதாரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.


2019-ல் இந்தியாவின் சாதனைகள் !!



2019-ல் இந்தியாவின் சாதனைகள் !!

இந்த 2019-ம் ஆண்டில் நமது இந்தியா நிகழ்த்திய சாதனைகள் எண்ணற்றவை, இவை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. அத்தகைய அளப்பரிய சாதனைகள் என்னவென்று தெரிந்துகொள்வோம்....!

தமிழ்நாடு
🏆 தமிழக கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம், உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்று, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ளது.

🏆 சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியில் தி ஆர்ட் மற்றும் தரன்சியா நிறுவனம் சார்பில், உலக அமைதியை வலியுறுத்தி, 4 மணி நேரத்தில் 950 மாணவ, மாணவிகளின் முகங்களில் ஓவியம் வரையப்பட்ட நிகழ்வுக்கு கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது.

🏆 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் 1,353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று, அசத்திய ஜல்லிக்கட்டு போட்டி, கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.

🏆 விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர் சிறுமியின் இருதய வால்வில் ஏற்பட்டிருந்த வீக்கத்தை சரிசெய்ய, சவால் நிறைந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் குழு சாதனை படைத்துள்ளது.

🏆 விஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க மனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய அதிநவீன ரோபோவை சென்னை ஐ.ஐ.டி உருவாக்கி உள்ளது.

🏆 யோகாவில் பதினான்கு உலக சாதனைகளை படைத்துள்ள ஒன்பதே வயதான நெல்லையைச் சேர்ந்த, பிரிஷாவிற்கு ஜெருசலேம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

🏆 தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில், ஒரே நாளில் 59 ஆயிரத்து 839 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

🏆 புதுக்கோட்டையைச் சேர்ந்த, பல் டாக்டர் ராஜேஷ்கண்ணன் என்பவர் கின்னஸ் சாதனை முயற்சிக்காக, 33.3 அடி உயரத்தில் செயற்கை பல் ஒன்றை, புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் வடிவமைத்தார். இந்த 33.3 அடி உயர செயற்கை பல், கின்னஸ் சாதனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🏆 திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 1,000 நடன கலைஞர்கள் பங்கேற்று, சிவபுராணத்தின் பொருளை உணர்த்தும் பாடலுக்கு 20 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியமாடிய நிகழ்ச்சி, கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

🏆 உலக அளவில் மிகக் குறைந்த வயதில் அபாகஸ் என்ற கணித முறையின் 8 படிநிலைகளை வென்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த கலைமதி (6 வயது) பெற்றுள்ளார்.

🏆 மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

🏆 சென்னையைச் சேர்ந்த, 14 வயது சிறுமி தீபிகா, ஆங்கிலத்தில் நாவல் எழுதி சாதனை படைத்துள்ளார்.

🏆 சிலம்பம் போட்டியில் வெற்றிகளைக் குவித்து இந்தியா புக் ஆப் ரெகார்டில் இடம் பிடித்துள்ளார் சு%2Bளகிரியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் தரஸ்வின்.

🏆 பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்தித்த புகைப்படத்தை நினைவுகூறும் வகையில், பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் நெசவாளர்கள் நரேந்திர மோடி, ஜீ ஜின்பிங் சந்திப்பு புகைப்படத்தை நு}ல் சேலையில் 3டி முறையில் நெய்து சாதனை படைத்துள்ளனர்.

🏆 சேலம் மாவட்டம், உலிபுரத்தைச் சேர்ந்த, 2 வயது சிறுமி சஹhனாஆப்ரீன், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில், அற்புத குழந்தையாக இடம்பெற்றுள்ளார்.

🏆 ஒரே ஆண்டில், 682 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டு சென்னை ஐ.ஐ.டி. சாதனை படைத்துள்ளது.

சனி, 28 டிசம்பர், 2019

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் எளிமை..!!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் எளிமை..!!


🌟சிறுவயதில் பேச்சு வராமல் சிரமப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், எப்போதும் எதையாவது சிந்திப்பதிலேயே கவனத்தை செலுத்தினார். அப்படி ஒருமுறை ஐன்ஸ்டீன், எதையோ தனிமையில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

🌟இதை கண்ட அவரது உறவினர் ஒருவர், 'உன் மகன் ஆல்பர்ட்டை பார்... எதையோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். அவன் ஓர் ஆராய்ச்சியாளன்... ஒரு சிந்தனையாளன்..." என்று நக்கலாக சொல்லிவிட்டார்.

🌟அவ்வளவுதான், ஐன்ஸ்டீனின் தாயிற்கு கோபம் தலைக்கேறிவிட்டது. எந்த தாய், தன் பிள்ளையை விட்டுக்கொடுப்பாள்? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல... அவரை விட்டு வைக்கவில்லை.

🌟'அவன் ஒரு சிறந்த சிந்தனையாளன்... அறிவாளி... அதனால்தான் அடக்கமாக இருக்கிறான். எதிர்காலத்தில் அவன் ஒரு புகழ்பெற்ற பேராசிரியனாக திகழப்போகிறான்" என்றார்.

🌟ஐன்ஸ்டீனின் அன்னை அவ்வாறு சொன்னது அந்த உறவினருக்கு முகத்தில் அறைந்தது போன்று இருந்தது...!!

🌟அன்று ஐன்ஸ்டீனின் அன்னை சொன்னது... நூற்றுக்கு நூறு உண்மை ஆயிற்று. ஆம், பிற்காலத்தில் அவர் எல்லா நாட்டவரும் போற்றும்படியாக வாழ்ந்த மிகச்சிறந்த சிந்தனையாளராக, சாகும்வரை அடக்கத்துடனும், எளிமையுடனும் வாழ்ந்தார்.

🌟ஆடைகள் அணிவதிலும், அலங்காரம் செய்வதிலும் அவர் அலட்சியமாகவே இருப்பார். அழுக்கு ஆடையை பல நாட்கள்கூட அணிந்திருப்பார். வெட்டப்படாத தலைமுடியுடன் வீதிகளிலும், விழாக்களிலும் வலம் வருவார். சில நேரங்களில் செருப்பில்லாமலும், மேலங்கி அணியாமலும் கூட வெளியே செல்வாராம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கேட்கும் சந்தேகம்...


ஐன்ஸ்டீனின் சந்தேகம்... பேச்சா... ஆடையா?... திகைத்த மனைவி..!!


🌟எளிமையான மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஓரிடத்திற்கு ஒருமுறை சொற்பொழிவாற்ற சென்றிருந்தார். அப்போது... அவருடன், அவர் மனைவி எல்சாவால் செல்ல முடியவில்லை.

🌟ஆதலால், தம் கணவருக்கு வேண்டிய நல்ல ஆடைகளை எடுத்து, ஒரு பெட்டியில் வைத்து அதை அவரிடம் கொடுத்து, 'இந்தப் பெட்டியில் நல்ல உடைகளை வைத்திருக்கிறேன். சொற்பொழிவுக்கு செல்லும்போது நீங்கள் மறந்துவிடாமல், அவைகளை எடுத்து அணிந்து கொள்ளுங்கள்" என்றார்.

🌟தன் மனைவி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட ஐன்ஸ்டீன், நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். கணவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்த எல்சா, தாம் கொடுத்து அனுப்பிய பெட்டியை வாங்கி திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.

🌟எல்சா கொடுத்து அனுப்பிய ஆடைகள் அப்படியே இருந்தன. கோபமடைந்த எல்சா, தன் கணவரிடம், 'ஏன் இந்த ஆடைகள் அடுக்கி வைத்தபடியே இருக்கின்றன... அவைகளை நீங்கள் அணிந்து கொள்ளவில்லையா?" என்றார்.

🌟எல்சா கேட்டதை கண்டு கொஞ்சமும் கவலையடையாத ஐன்ஸ்டீன், சிரித்துக்கொண்டே அவரிடம்... 'அடடா, எனக்கு மறந்தே போய்விட்டது. நீ கோபித்துக்கொள்ள வேண்டாம்" என்றவர், 'அது இருக்கட்டும்... ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம்" என்று அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார்.

🌟'எல்லோரும் என் பேச்சை கேட்க வருகிறார்களா? அல்லது என் ஆடையை பார்க்க வருகிறார்களா?" என்பதே அது. பாவம் எல்சாவால் அதற்கு பதில் சொல்லவே முடியவில்லை.

🌟வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும், தாழ்வுமே. அதில், சரியாகப் பயணிப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடங்கும்.

🌟இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது, எந்த சூழலிலும் தன் வழியை மாற்றிக்கொள்ளாதவர். அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🌟'எதை நான் விரும்பவில்லையோ, அது என்னைத் தேடி வருகிறது" என்று முணுமுணுத்தார். அத்துடன், தன் மனைவி எல்சாவிடம்... 'இந்த பணம் நமக்கு தேவையில்லை. பாதி தொகையை தர்ம காரியங்களுக்கும், மீதித் தொகையை மிலவாவுக்கும் (ஐன்ஸ்டீனின் முதல் மனைவி) கொடுத்துவிடலாம்" என்றார். அவர் கருத்துக்கு என்றுமே மறுப்பு சொன்னதில்லை எல்சா. அதனால்தான், அவர்களுடைய இல்லற வாழ்க்கை இனித்தது.

2019 - இந்திய விருதுகள் - பகுதி-3



2019 - இந்திய விருதுகள் - பகுதி-3

நோபல் பரிசு 2019 :
🏆 உலகளவில் மருத்துவம், வேதியியல், இயற்பியல், சமாதானம், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

🏆 அண்டை நாடான எரித்திரியா எல்லைப் பிரச்சனையில் அமைதியான முறையில் தீர்வு கண்டதற்காக, அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டது.

🏆 2019 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு எழுத்தாளர் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்பட்டது.

🏆 லித்தியம்-அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக அமெரிக்க விஞ்ஞானி ஜான் கூட்எனஃப், இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டான்லி விட்டிங்ஹhம், ஜப்பான் விஞ்ஞானி அகிரா யோஷினோ ஆகியோருக்கு 2019ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

🏆 2019 இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் கியு%2Bலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

🏆 மனித உடல் செல்கள் குறித்த ஆய்வுக்காக வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ரேட் கிளிப், கிரேக் எல்.செம்ன்ஸா ஆகியோருக்கு 2019 மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது
🏆 சசிதரூர் ஆங்கில மொழியில் எழுதிய அன் ஈரா ஆப் டார்க்னெஸ் என்ற நு}லுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🏆 தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ.தர்மனின் சு%2Bழ் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திடைப்படத் துறை
🏆 திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது இந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.

🏆 பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படத்திற்கு சிறந்த தமிழ் படம் விருது வழங்கப்பட்டது.

🏆 கோவாவில் நடைபெற்ற 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு 'கோல்டன் ஐகான்" சிறப்பு விருதை ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார்.
சரஸ்வதி சம்மான் விருது :
'பக்ககி ஒத்திகிலிதே" என்ற கவிதை நு}லுக்காக தெலுங்கு கவிஞர் கே.சிவா ரெட்டிக்கு, சரஸ்வதி சம்மான் விருது குடியரசு துணைத் தலைவர் வெங்கய நாயுடு வழங்கினார்.
பாரத ரத்னா விருது
🏆 முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் பாடகர் பு%2Bபென் ஹசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 27 டிசம்பர், 2019

2019 - இந்திய விருதுகள் - பகுதி-2


2019 - இந்திய விருதுகள் - பகுதி-2

தமிழகம் :
🏆 சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் விருதை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.

🏆 மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரத்யேகமாக பு%2Bங்கா அமைத்ததற்காக சீர்மிகு நகரத் திட்ட கவுன்சில் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

🏆 நீர் வளத்தை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கூறி, தமிழகத்துக்கு மூன்று தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

🏆 அதிமுக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையனுக்கு தந்தை பெரியார் விருதை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

🏆 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பு%2Bண்டி அருகே உள்ள ஆதிரங்கத்தில் மறைந்த நெல் ஜெயராமனின் இயற்கை வேளாண் பண்ணைக்கு அட்மா திட்டத்தின் கீழ், சிறந்த வேளாண் சேவைக்கான சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

🏆 உடல் உறுப்பு தானத்தில் 5-வது முறையாக முதல் இடம் பெற்ற தமிழகத்திற்கு மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் விருது வழங்கினார்.

🏆 பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றியோர்க்கு தமிழக அரசால் வழங்கப்படும், பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதானது, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ரக்சனா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


விளையாட்டுத் துறை :
🏆 6-வது முறையாக தங்கப் பந்து விருதை கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி தட்டி சென்றார்.

🏆 சிறந்த வீரருக்கான லாரஸ் விருதை, செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் வென்றார்.

🏆 இந்தியாவின் முதல் கால்பந்து ரத்னா விருது சுனில் சேத்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

🏆 ஆசியன் ஹhக்கி சம்மேளனத்தின் 2018-ம் ஆண்டின் சிறந்த ஹhக்கி வீரருக்கான விருது இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங்க்கு வழங்கப்பட்டுள்ளது.

🏆 இந்திய டெஸ்ட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஐசிசி-யின் 2018-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🏆 தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளி வீராங்கனை தீபா மாலிக்குக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது உள்பட பல்வேறு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு அர்ஜுனா, துரோணாச்சார்யா விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

🏆 சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

பெண்களுக்கான விருது :
🏆 மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வாங்கி கொடுத்த, பெண் போலீஸ் அதிகாரி, சாயா சர்மா, 2019-ம் ஆண்டுக்கான ஆசிய சமூக மாற்றத்துக்கான விருதினை பெற்றார்.

🏆 குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பு%2Bஜா தேசாய் என்ற இளம் பெண் இந்த ஆண்டுக்கான மிஸஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.

வியாழன், 26 டிசம்பர், 2019

2019-ல் இந்தியாவின் சாதனைகள்..!!



2019... 💪சாதனைக்கு வயது உண்டா?🏆 நிரூப்பித்தவர்கள்..!

2019-ல் இந்தியாவின் சாதனைகள்..!!

இந்த 2019ம் ஆண்டில் நமது இந்தியா நிகழ்த்திய சாதனைகள் எண்ணற்றவை, இவை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. அத்தகைய அளப்பரிய சாதனைகள் என்னவென்று தெரிந்துகொள்வோம்....!

தமிழ்நாடு
🏆தமிழக கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம், உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்று, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளது.

🏆சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியில் தி ஆர்ட் மற்றும் தரன்சியா நிறுவனம் சார்பில், உலக அமைதியை வலியுறுத்தி, 4 மணி நேரத்தில் 950 மாணவ, மாணவிகளின் வௌ;வேறு முகங்களை வரைந்து கின்னஸ் சாதனை படைத்தது.

🏆புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் 1,353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று, அசத்திய ஜல்லிக்கட்டு போட்டி, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.

🏆விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர் சிறுமியின் இருதய வால்வில் ஏற்பட்டிருந்த வீக்கத்தை சரிசெய்ய, சவால் நிறைந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து, மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் குழு சாதனை படைத்துள்ளது.

🏆விஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க மனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய அதிநவீன ரோபோவை சென்னை ஐ.ஐ.டி உருவாக்கி உள்ளது.

🏆யோகாவில் பதினான்கு உலக சாதனைகளை படைத்துள்ள ஒன்பதே வயதான நெல்லையைச் சேர்ந்த, பிரிஷாவிற்கு ஜெருசலேம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

🏆தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில், ஒரே நாளில் 59,839 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

🏆புதுக்கோட்டையை சேர்ந்த, பல் மருத்துவர் ராஜேஷ்கண்ணன் என்பவர் கின்னஸ் சாதனை முயற்சிக்காக, 33.3 அடி உயரத்தில் செயற்கை பல் ஒன்றை, புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் வடிவமைத்தார். இந்த 33.3 அடி உயர செயற்கை பல், கின்னஸ் சாதனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🏆திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 1,000 நடன கலைஞர்கள் பங்கேற்று, சிவபுராணத்தின் பொருளை உணர்த்தும் பாடலுக்கு 20 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியமாடிய நிகழ்ச்சி, கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

🏆உலக அளவில் மிகக் குறைந்த வயதில் அபாகஸ் என்ற கணித முறையின் 8 படிநிலைகளை வென்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த கலைமதி (6 வயது) பெற்றுள்ளார்.

🏆மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

🏆சென்னையைச் சேர்ந்த, 14 வயது சிறுமி தீபிகா, ஆங்கிலத்தில் நாவல் எழுதி சாதனை படைத்துள்ளார்.

🏆சிலம்பம் போட்டியில் வெற்றிகளை குவித்து இந்தியா புக் ஆப் ரெகார்டில் இடம் பிடித்துள்ளார் சூளகிரியை சேர்ந்த 4 வயது சிறுவன் தரஸ்வின்.

🏆பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்தித்த புகைப்படத்தை நினைவுக்கூறும் வகையில், பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் நெசவாளர்கள் நரேந்திர மோடி, ஜீ ஜின்பிங் சந்திப்பு புகைப்படத்தை நூல் சேலையில் 3டி முறையில் நெய்து சாதனை படைத்துள்ளனர்.

🏆சேலம் மாவட்டம், உலிபுரத்தை சேர்ந்த, 2 வயது சிறுமி சஹானாஆப்ரீன், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில், அற்புத குழந்தையாக இடம்பெற்றுள்ளார். இச்சிறுமி எந்த பொது அறிவு கேள்வியாக இருந்தாலும் சரியாக பதிலளிக்கிறார்.

🏆ஒரே ஆண்டில், 682 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டு சென்னை ஐ.ஐ.டி. சாதனை படைத்துள்ளது.


புதன், 25 டிசம்பர், 2019

ஐன்ஸ்டீனின் மீளாத்துயரம்... திக் திக் நிமிடங்கள்... என்ன நடந்தது?...


ஐன்ஸ்டீனின் மீளாத்துயரம்... திக் திக் நிமிடங்கள்... என்ன நடந்தது?...

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மீளாத்துயர்..!!
💣இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த தருணத்தில் ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி, அமெரிக்கா உலகின் முதல் அணுகுண்டை ஜப்பான் மீது வீசியது.


💣ஜப்பானில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட குண்டுக்கு 'லிட்டில் பாய்" எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்டை குறிக்கும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டிருந்தது.

💣குண்டு விழுந்த இடத்திலிருந்து 500 அடி சுற்றளவில் இருந்த அனைவரும் உடனடியாக ஆவியானார்கள். மாபெரும் புகை மற்றும் மிகப்பெரிய தீ சுவாலைகள் பரவியது. ஹிரோஷிமாவில் இருந்த 60 சதவீத கட்டிடங்கள் அழிந்துபோயின. இந்த குண்டு வீச்சில் லட்சக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்தது.

💣இறந்தவர்களில் 60 சதவீதம் பேர் தீக்காயங்களாலும், 30 சதவீதம் பேர் கட்டிட இடர்பாட்டிற்குள் சிக்கியும் பலியானார்கள். இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.

💣ஜெர்மனியும் அணுகுண்டை தயாரிக்க முயற்சித்து கொண்டிருந்த நிலையில், இந்த குண்டின் மூலம் அமெரிக்கா அந்த பந்தயத்தில் முந்தியதாக கருதப்பட்டது.

💣இந்நிகழ்வு நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு, நாகசாகி நகரத்தின் மீது மீண்டும் ஒரு அணுகுண்டு வீசப்பட்டது. இதனால் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த அணுகுண்டு வீச்சின் காரணமாக, ஆசியாவில் உலகப் போர் சட்டென முடிவுக்கு வந்தது.

💣ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் தரைமட்டமாகின. எங்கு நோக்கினும் மரண ஓலங்கள், இந்தக் கொடுமையின் பாதிப்பிலிருந்து இன்றும்கூட அந்த நகரம் முழுவதும் விடுபடவில்லை. அன்று வீசிய அணுகுண்டு கதிர் வீச்சுக்கள் இன்று பிறக்கும் குழந்தைகளையும் பாதிப்பதாகப் பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

💣அந்த அணுகுண்டு ஜப்பான் நகரங்களின் மீது வீசப்பட்டதையும், அதனால் மனித குலம் பாதிக்கப்பட்டதையும் அறிந்து தேம்பித் தேம்பி அழுதார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த சோகத்திலிருந்து விடுபட அவருக்கு பலகாலம் ஆயிற்று.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மறைவை பற்றி நாளைய பகுதியில் பார்க்கலாம்...!!இதுபோல் இன்னும் 100-க்கும் மேற்பட்ட அரசியல், அறிவியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?...

2019... புதிய நியமனங்கள்... திரும்பி பார்க்க வைத்ததா? ஓர் பார்வை..!!



2019... புதிய நியமனங்கள்... திரும்பி பார்க்க வைத்ததா? ஓர் பார்வை..!!

2019... கடந்து வந்த பாதை..!!

நியமனங்கள் - ஓர் பார்வை !!
நவம்பர்
நவம்பர் 7ஆம் தேதி இந்திய விமான நிலைய ஆணையத்தின் தென் மண்டலத்தில், முதலாவது பெண் தீயணைப்பு வீரராக ரம்யா ஸ்ரீ கண்டன் நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 13ஆம் தேதி மேகாலய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி முகமது ரஃபீக் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நவம்பர் 18ஆம் தேதி ஆளுநரின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐஏஎஸ், தமிழகத் தலைமைத் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் ஐஏஎஸ், நியமனம் செய்யப்பட்டார்.

நவம்பர் 18ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்றுக்கொண்டார்.

நவம்பர் 20ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் பதவியேற்றுக் கொண்டார்.

நவம்பர் 21ஆம் தேதி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக்கொண்டார்.

நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையராக, ஆர்.ராஜகோபால் பதவியேற்றார்.

நவம்பர் 27ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக பேராசிரியர் என்.பஞ்சநாதம் நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 28ஆம் தேதி மகாராஷ்டிராவின் முதலமைச்சராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.

நவம்பர் 30ஆம் தேதி தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்துவந்த நிரஞ்சன் மார்டி ஓய்வுப்பெற்றதை அடுத்து புதிய உள்துறைச் செயலராக நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருக்கும் எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டார்.
கோயபுத்தூர் ஷாப்பிங் திருவிழா 2019


கண்கவர் நடன நிகழ்ச்சிகளையும் கண்டுகளியுங்கள்...!!


டிசம்பர்
டிசம்பர் 2ஆம் தேதி புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சோமா ராய் பர்மன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

டிசம்பர் 6ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, ஓய்வுபெற்ற தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி கே.விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 10ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் பிராண்டு தூதராக நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 13ஆம் தேதி ஸ்பெயினின் லா லிகா கால்பந்தாட்ட தொடருக்கான இந்திய விளம்பர தூதராக, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 18ஆம் தேதி நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை குஜராத்தை சேர்ந்த 22 வயதான ஹாசன் சஃபின் பெற்றார்.

டிசம்பர் 18ஆம் தேதி சந்திரயான்-3 திட்ட இயக்குநராக வீர முத்துவேலை நியமனம் செய்து இஸ்ரோ அறிவித்தது.

டிசம்பர் 21ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் மையத்தின் தலைவராக இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சேதுராமன் பஞ்சநாதன் நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 22ஆம் தேதி அமெரிக்க தகவல் தொடர்பு ஆணையத்தின் (எஃப்சிசி) முதல் பெண் தலைமை தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) மோனிஷா கோஷ் என்ற இந்திய அமெரிக்கர் நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 23ஆம் தேதி இந்திய வெளியுறவுச் செயலராக ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நியமிக்கப்பட்டார்.

2019 - இந்திய விருதுகள் ஓர் பார்வை..! - பகுதி-1



2019 - இந்திய விருதுகள் ஓர் பார்வை..! - பகுதி-1.

கல்வி, விண்வெளி, இராணுவம், விளையாட்டு... மேலும் இதுபோன்று ஒவ்வொரு துறையிலும் சாதிப்பவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.
கடந்த 2019 ஆம் வருடத்தில் எந்தெந்த துறைகளில் எவரெல்லாம் சாதனை படைத்தார்கள் என்பதைப் பற்றி தௌpவாக காண்போம்..!

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய ஸ்பெயின் மக்களை இந்திய மீட்பு படையினர் காப்பாற்றியதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு, உயரிய விருதான கிராண்ட் கிராஸ் விருதை வழங்கி ஸ்பெயின் அரசு கௌரவித்துள்ளது.

வன விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாத்ததற்காக வழங்கப்படும் சர்வதேச விருதான 'உலகளாவிய எதிர்காலத்திற்கான இயற்கை விருது 2019" இந்தியாவின் திவ்யா கர்னாடு (Divya Karnad) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ சேவையில் சிறப்பாக பணியாற்றியதற்காக மதுரை மருத்துவர் அமுதகுமாருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பல்வேறு நாடுகளின் பெயர்களை கூறும் 2 வயது சிறுமி காவ்யஸ்ரீக்கு, மெடல்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு, உலக சாதனை விருது வழங்கி கௌரவித்துள்ளது.

கனடாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்படும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கனட திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தில் அமைந்துள்ள, சர்தார் படேல் சிலையை வடிவமைத்த, ராம் வான்ஜி சுதார் உட்பட, மூவருக்கு கலாச்சார ஒருமைப்பாட்டுக்கான, தாகூர் விருது வழங்கப்பட்டது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் 20 மீட்டர் தொலைவில் இருந்து 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய மேஜர் துசார் கவுபாவுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.

ஆசியாவின் நோபல் விருது என்று கருதப்படும் மகசேசே விருதை இந்திய ஊடகவியலாளர் ரவீஷ் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சு%2Bழல் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மின்சார வசதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் 'இந்தியாவின் பசுமைக் கட்டட விருதானது" (Indian Green Building Award) விஜயவாடா இரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

விமான சேவை மற்றும் விமான தரத்தின் அடிப்படையில் ஒடிசாவில் புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக் விமான நிலையத்திற்கு 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான நிலையம் என்ற விருது வழங்கப்பட்டது.

தன் வீட்டுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை அடித்து விரட்டிய, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் இர்பான் ரம்ஜான் ஷேக்குக்கு, சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.
ஸ்வச் சர்வேக்ஷன் விருது 2019
தூய்மையான நகரங்கள் பட்டியலில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது. 2-வது இடத்தை சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபு%2Bர் நகரமும், 3-ம் இடத்தை கர்நாடகத்தின் மைசு%2Bரும் பெற்றுள்ளது.

சிறிய நகரங்களில் தூய்மையான நகரத்துக்கான விருது தில்லி நகராட்சி நிர்வாகத்துக்கும், பெரு நகரங்களில் தூய்மையான நகரத்துக்கான விருது குஜராத்தின் அகமதாபாத்துக்கும், போபால் நகரத்திற்கு சிறந்த தூய்மையான தலைநகரம் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது.

சிறந்த கங்கை நகரத்துக்கான விருது உத்தரகாண்ட் மாநிலத்தின் கௌசார் நகரத்துக்கு வழங்கப்பட்டது.


Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

செவ்வாய், 24 டிசம்பர், 2019

பண்பலை ஒலிபரப்பு பற்றிய தகவல்கள்!


பண்பலை ஒலிபரப்பு பற்றிய தகவல்கள்!

பண்­பலை என்­பது எப்.எம். என்­ப­தன் தமி­ழாக்­கத்தை குறிக்­கி­றது. இன்­றைக்கு எப்.எம். ரேடி­யோக்­கள் இளை­ஞர்க ளையும், இசை­யை­யும் ஆள்­கி­றது. 'வானெலி அர­சுக்கு மட்­டும் சொந்­த­மில்லை. அது மக்­க­ளுக்­கா­னது' என்ற உச்­ச­நீதி மன்ற தீர்ப்­பொன்­றின் விளைவே தற்­போது இந்­திய ஒலி உல­கத்தை ஆக்­கி­ர­மித்­துள்ள தனி­யார் ஒளி­ப­ரப்­புக்­கள், வானொலி அலை­களை அவை பர­வும் விதத்தை வைத்து இரண்டு வகை­யா­கப் பிரிக்­க­லாம். அவை மீடி­யம் வேவ் என்­கிற மத்­திய அலை­யும், சார்ட் வேவ் என்­கிற சிற்­ற­லை­யும் ஆகும். இந்த இரண்­டை­யும் ஒன்று சேர்த்து ஆம்­பி­ளி­டி­யுட் மாடு­லே­ஷன் என்று அழைக்­கி­றார்­கள்.
இதில் வேறொரு அலை இயல்பு 'பிரிக்­வன்சி மாடு­லே­ஷன்' அதா­வது எப்.எம். என்­கிற பண்­பலை எப்.எம்.மின் சிறப்­பி­யல்பு என்­ன­வென்­றால், குறைந்த துாரத்­திற்கு சமச்­சீ­ரான ஒலி­ப­ரப்பு என்­பதே.
ஒலி­ப­ரப்பு வகை­க­ளில் இந்த ஒளி­ப­ரப்பே தனி ஒரு மதிப்பு பெற்­றுள்­ளது. இது ஒரு அதி­ச­யம்­தான். இந்த அதி­ச­யம் இந்­தியா முழு­மைக்­கும் நேர்ந்­துள்­ளது.
பண்­பலை ஒலி­ப­ரப்­பு­க­ளின் உரி­மை­யா­ளரை வைத்து இரண்டு வித­மாக பிரிக்­க­லாம். பிர­சார் பாரதி என்­னும்  தன்­னாட்சி உரிமை பெற்ற இந்­திய ஒலி­ப­ரப்­புக் கழ­கத்­தின் கீழ் இயங்­கும் அகில இந்­திய வானொ­லி­யின் கட்­டுப்­பாட்­டில் செயல்­ப­டும் பண்­பலை நிலை­யங்­கள் ஒரு­வகை.
இந்­திய அர­சின் செய்தி மற்­றும் ஒலி­ப­ரப்பு அமைச்­ச­கத்­தின் நேரடி அனு­மதி பெற்று இயங்­கும் தனி­யார் பண்­பலை நிலை­யங்­கள் இன்­னொரு வகை.
இந்த இரு வகை ஒலி­ப­ரப்பு நிலை­யங்­க­ளுமே இப்­போது நேர்ந்­துள்ள பண்­ப­லைப் புரட்­சிக்கு வித்­திட்­டவை. பண்­ப­லை­யின் ஒலி­ப­ரப்பு உயர் தொழில்­நுட்­பம் சார்ந்­தது. அத­னால் அதன் ஒலி­ப­ரப்பு செவிக்கு இனி­மையை கொடுக்­கி­றது.
நிகழ்ச்­சி­க­ளி­லும் வழக்­க­மான தன்மை மாறி­யுள்­ளது. கேட்க மட்­டுமே இருந்த நிகழ்ச்­சி­க­ளில், நேயர்­க­ளும் பங்­கேற்­கும் நேரடி ஒலி­ப­ரப்பு நிகழ்ச்­சி­க­ளும் பண்­ப­லை­யில் மட்­டுமே சாத்­தி­ய­மா­னது. ஒரு மணி நேரத்­தில் 20 முதல் 40 வரை உயர்ந்­துள்­ளது. ஒலி­ப­ரப்பு மொழி­யும், மக்­கள் பேசும் வழக்கு மொழி­யாக மாறி­யுள்­ளது. இதுவே மக்­க­ளி­டம் செல்­வாக்­கைப் பெற்­றுத் தந்­துள்­ளது.
இந்­தி­யா­வின் முதல் பண்­பலை வானொலி ஒலி­ப­ரப்பு 23.7.1977ல் சென்­னை­யில் தொடங்­கப்­பட்­டது. ஆனா­லும் பண்­ப­லை­யின் வளர்ச்சி சிக­ரத்தை எட்­டி­யது கடந்த 10 ஆண்­டு­க­ளில்­தான்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

நான்பூமி பேசுகிறேன்


நான்பூமி பேசுகிறேன்

1. எனது பெயர் – பூமி (மனிதர்கள் வைத்தது)
2. எனது பிறப்பு - 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
3. எனது உடன் பிறப்புகள் – 8 பேர் (இது வரையில் மனிதர்கள் கண்டுபிடித்து எனக்கு சொன்னது> (புதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி,நெப்டியூன்,ப்ளூட்டோ)
4. நான் சூரிய மண்டலத்தில் - மூன்றாவது கோள்
5. எனது துணைக்கோள் - சந்திரன்
6. எனது அண்டை வீட்டார் - வெள்ளியும், செவ்வாயும்
7. எனக்கு மிகவும் தொலைவிலுள்ள சொந்தம் – ப்ளூட்டோ
8. என் பாதுகாவலன் – வியாழன் ( என்னை நோக்கி வரும் சிறு கற்கள் முதல் பெரும் எறி நட்சத்திரங்கள் வரை தன்னுடைய ஈர்ப்பு விசையால் தன் மேல் விழச் செய்யும் )
9. என்னுடைய நண்பர்கள் – என்னில் வாழ்ந்து என்னையும் வாழவைக்கும் மரங்கள்
10. என்னுடைய எதிரிகள் – என் நண்பர்களான மரங்களை அழிக்கும் மனிதர்கள்
11. நான் சுழலும் முறை - வலமிருந்து இடம் ( மேற்கிலிருந்து கிழக்காக )
12. என்னை நானே சுற்றும் கால அளவு - 23 மூன்று மணி நேரம் 56 நிமிடங்கள் 4.100 நொடிகள்
13. நான் சூரியனைச் சுற்றும் கால அளவு - 365.256366 நாட்கள்
14. சூரியனிலிருந்து நான் இருக்கும் தூரம் - 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர்
15. நான் சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதை வேகம் - நொடிக்கு வேகம் 29.783 கிலொ மீட்டர்
16. எனது விட்டம் - நிலநடுக் கோட்டின் வழியாக பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டர் , ஆனால் வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கிலோ மீட்டர் ஆகும்.
17. என்னுடைய எடை - 5,980,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் ஆகும்.
18. என்னுடைய மொத்தப் பரப்பளவு - 510,072,000 கிலோ மீட்டர் அதில் நீர்ப்பரப்பளவு : 361,132,000 கிலோ மீட்டர் (70.8 %), நிலப்பரப்பளவு : 148,940,000 கிலோ மீட்டர் (29.2 %)
19. என்னுடைய மேற்பரப்பு வெப்பம் - அதிகபட்சம் : 331 கெல்வின் 57.7 °செல்சியஸ், குறைந்தபட்சம் : 184 கெல்வின் −89 °செல்கியஸ்.
20. என்னுடைய மையப் பகுதியின் வெப்பம் - 7000 கெல்வின்
21. என்னுடைய வெளிப்புற அழுத்தம் - ஒரு சதுர அடிக்கு 14.7 பவுன்ட்ஸ்
22. என்னுடைய மையப்புற அழுத்தம் - 360 ஜிகாபேஸ்கல்ஸ்
23. என்னுடைய சுற்றளவு - 40,075.02 கிலோ மீட்டர்.
24. நான் சுழலும் விதம் - 23.5 டிகிரி சாய்வாக
25. என்னைப் பிரிப்பது - அட்ச ரேகைகள், தீர்க்க ரேகைகள்
26. எனக்கு மேல் வாயு (வளிமண்டலம்) பரந்திருக்கும் தூரம் - 1000 கி.மீ
27. எனக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் - 240,000 கி.மீ
28. எனக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது - அமாவாசை
29. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வருவது - பெளர்ணமி
30. சூரிய ஒளி என்னை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் - 480 விநாடிகள் (சுமார் 8 நிமிடங்கள்)
31. சூரியனுக்கும் எனக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் என் மீது விழும் போது ஏற்படுவது - “சூரிய கிரகணம்" அதாவது அமாவாசையில் வரும்.
32. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வரும்போது என்னுடைய நிழல் சந்திரனை மறைக்கும் போது ஏற்படுவது - “சந்திரகிரகணம்" அதாவது பெளர்ணமியில் வரும்.
33. என் மேல் இருக்கும் நிலப்பரப்பின் கண்டங்கள் – மொத்தம் 7 > ஆசியா கண்டம், ஆப்பிரிக்க கண்டம், ஐரோப்பாக் கண்டம், தென் அமெரிக்க கண்டம், வட அமெரிக்க கண்டம், ஆஸ்திரேலியாக் கண்டம், அண்டார்டிகா கண்டம். இவற்றில்தான் அனைத்து நாடுகளும் உள்ளடங்கி உள்ளது.
34. என் மேல் இருக்கும் பெருங்கடல்கள் – மொத்தம் 5 > பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல். இவற்றில்தான் மற்ற அனைத்து சிறு கடல்களும் உள்ளது.
35. என்னுடைய தற்போதைய பிரச்சனை – சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நான் வெப்பமடைந்து கொண்டிருக்கிறேன். அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.
36. என்னுடைய வேண்டுகோள் – மனிதர்களே, மரங்களை வெட்டாதீர்கள் அப்படி அடிப்படைத் தேவைக்காக வெட்டினால், அதைவிட அதிக மரங்களை நட்டு பராமரியுங்கள். கரியமில வாயுவை வெளியேற்றும் எரி பொருளையும், உபகரணங்களையும் முடிந்த அளவு குறையுங்கள். அதற்கு மாற்று எரிபொருளை உருவாக்குங்கள். நினைவிருக்கட்டும் நான் இருந்தால் தான் நீங்கள் வாழ முடியும்.

வியாழன், 19 டிசம்பர், 2019

சில வரலாறுகள்


சில வரலாறுகள்

நதியும், கடலும்

எல்லா நதிகளும் கடலில்தான் சங்கமிக்கின்றன என்பது பொதுவான இயற்கை அமைப்பு. இதற்கு முக்கிய காரணம், நதிகள் மலைகள் போன்ற உயரமான பகுதிகளில் உருவாகி, தாழ்
நிலைப் பகுதிகளை நோக்கி ஓடி வருவதுதான். ஒரு நதியைப் பொறுத்தவரை, கடல் என்பது அதன் நிலையிலிருந்து தாழ்வானது. ஆகவேதான் தன் இயல்புப்படி பள்ளத்தை நோக்கி வருகிறது நதி.

தாலி எப்படி வந்தது?

பண்டைய தமிழகத்தில் ஒரு திருமணத்தின் முக்கியமான சம்பிரதாயம், தாலி கட்டுவதாக இன்று போலவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் அந்நாளில் ஒரு பனை ஓலையை மடித்து அதனுள் நூல் கோத்து, அதை மணமகன், மணமகள் கழுத்தில் கட்டுவான். இந்தத் தாலியை 'தால பத்திரம்’ என்று அழைத்தார்கள். நாளடைவில் தால பத்திரமே தாலியாகி விட்டது.

முதல் பயணச் சீட்டு

ரயிலில் பயணம் செய்வதற்காக சிறிய அட்டையில் பயணச் சீட்டை அச்சிட்டுத் தருகிறார்கள். இந்த முறையை முதன்முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் எட்மன்ட்சன் என்பவர்தான் அறிமுகப்படுத்தினார். 1836ம் ஆண்டு இங்கிலாந்தில் ஸ்டேஷன் மாஸ்டராக அவர் பணியாற்றியபோது இந்த உத்தி அவருக்குத் தோன்றியது. அதற்கு முன் ஒரு காகிதத்தில் பயணச் சீட்டு எழுதித் தரப்பட்டு வந்தது.

கடன் ஊக்குவித்த ஊக்கு

பதினெட்டாம் நூற்றாண்டில் மக்கள் தங்கள் உடைகளை ஒரு சீராக அணிந்துகொள்ள பலவகை ஊக்குகளைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் அடிக்கடி கைவிரல்களில் ஊசிக்குத்தும், ரத்தப் பெருக்கும் ஏற்பட்டன. இப்போது நாம் பயன்படுத்தும் ‘ஸேஃப்டி பின்’, 1849ம் ஆண்டில் நியூயார்க் நகரைச் சேர்ந்த வால்டர் ஹன்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஸேஃப்டி பின் தயாரிப்பு நுட்பத்தை யாரிடமோ தான் பட்டிருந்த 15 டாலர் கடனுக்கு ஈடாக அவர் கொடுக்க வேண்டியிருந்தது!

வீல் சத்தம் கேட்காத சக்கரம்

லண்டன் நகரிலுள்ளது ஆயிர மாண்டு சக்கரம். ‘மில்லினியம் வீல்’ எனப்படும் இச்சக்கரம், பிக்பென் கடிகார கோபுரத்தைவிட நான்கு மடங்கு உயரமானது. 2100 டன் இரும்பால் உருவாக்கப்பட்ட சக்கரம் இது. நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டது. இந்தச் சக்கரத்தில் சுற்றுலாவாசிகள் உல்லாசமாகச் சுற்றி வர 32 பெட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 25 பேர் வீதம் பயணிக்கலாம்.

பெட்டி உயரே செல்லும்போது 40 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலிருக்கும் இடங்களைத் துல்லியமாகக் காண முடிகிறது. உலகின் மிகப் பெரிதான இந்தச் சுழலும் சக்கரத்தை சரியான கோணத்தில் நிலைநிறுத்துவதற்கு மட்டும் ஒரு வாரம் ஆயிற்றாம்.

எருமையூர்

கர்நாடக மாநிலம் மைசூரின் ஆரம்பகாலப் பெயர் மஹிஷுரு. மஹிஷம் என்றால் எருமை என்று பொருள். அந்தவகையில் மஹிஷுரு என்றால் எருமையூர் என்று பொருள்.

அப்போதே பெண்களுக்கு முக்கியத்துவம்

பெண்களுக்கென தனி பள்ளிக்கூடம் அமைத்த பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. தஞ்சை மாவட்டம் தரங்கம்பாடியில்தான் இவ்வாறு முதல் பள்ளிக்கூடம் அமைந்தது. எந்த வருடம் தெரியுமா? 1727!
நன்றி முத்தாரம்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

டிசம்பர் 20 சிறப்புகள்

டிசம்பர் 20 சிறப்புகள்.

👪இன்று... சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் !!👪
முத்தான சிந்தனை துளிகள்!
ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைக்காதே, விழுந்தாலும் எழுந்துவிடுவோம் என்று ஓடு...!!சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்


👪 சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

👪 ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியத்தை நிறுவியது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

👪 நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள மக்களிடம் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள், அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்படவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப்


👉 அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

👉 அவர் சிறுவயதில் கால்பந்து விளையாடும்போது கால் முறிந்ததால் பல மாதங்கள் வீட்டிலிருந்தார். அப்போது இன்ஜின்கள் குறித்து பல நூல்களைப் படித்தார்.

👉 பின்பு அலபாமா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1924ஆம் ஆண்டு மேரி க்யூரி அணுக்கருவை குறித்து சில செயல்முறை விளக்கங்களை கொடுத்ததை கண்டு கவரப்பட்ட இவர் அணு ஆற்றல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.

👉 மேலும், இவர் மின்னியல் ஆக்ஸிலரேஷன் துறையிலும் பல மேம்பாடுகளை செய்துள்ளார். கெல்வின் வகை உயர் மின்னழுத்த ஜெனரேட்டரை மேம்படுத்தும் முயற்சியை தொடங்கி இறுதியாக, 7 மில்லியன் வோல்ட் உற்பத்தி செய்யும் 43 அடி உயர ஜெனரேட்டரை உருவாக்கினார். இந்த ஜெனரேட்டருக்கு 1935ஆம் ஆண்டு உரிமம் பெற்றார். இது மருத்துவத்துறைக்கு உதவியாக இருந்தது.

👉 இரண்டாம் உலகப்போரில் இவரது ஜெனரேட்டரை பயன்படுத்தி கடற்படை தளவாடங்களை எக்ஸ்-ரே ஆய்வு செய்வதற்கான பொறுப்பில் நியமிக்கப்பட்டார். பின்பு அணு ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த பல சாதனங்களைக் கண்டுபிடித்த வான் டி கிராஃப் 1967ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
✦ 1955ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.👭 1969ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பெண் இயக்கத்திற்காகப் பாடுபட்ட சமூக சீர்த்திருத்த சிந்தனையாளர் சகோதரி சுபலட்சுமி மறைந்தார்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வரலாற்றில் சில சுவாரஸ்யங்கள்


வரலாற்றில் சில சுவாரஸ்யங்கள்

கழுதைப்பாலும் முட்டைக் கருவும்

எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்தாள் என்பது தெரிந்ததே. ஸ்பெயினை ஆண்ட இரண்டாம் பிலிப் மன்னனின் மனைவி ராணி எலிசபெத் தினமும் தன் மேனியை மேலும் பட்டு மேனியாகப் பளபளக்கச் செய்ய, முட்டைகளின் வெள்ளைக் கருவில் குளித்தாளாம்.

கங்கை நீர்

1902ம் ஆண்டு ஏழாம் எட்வர்டு, இங்கிலாந்தின் மன்னராக பதவி ஏற்றுக் கொண்டபோது, இந்தியாவில் இருந்து ஜெய்ப்பூர் மகாராஜா விருந்தினராகச் சென்றார். போகும்போது ஆறு மாதத்திற்குத் தேவையான கங்கை நீரையும் குடிப்பதற்காக கப்பலில் கொண்டு சென்றாராம்!

வாய் நிறைய வைரம்

ஒருவரைப் பாராட்டும்போது அவருக்கு வாய் நிறைய சர்க்கரை போட வேண்டும் என்பார்கள். ஒருவரைப் பாராட்ட வாய் நிறைய வைரங்களைப் போட்டவர் உண்டா? உண்டு. அவர் சுல்தான் முகமது. இவர், காஸ்னாவின் மன்னர். அரசவைக் கவிஞராக இருந்தவர் அன்சூர். இவரது கவிதைகள் மகத்தானவை. ஒருமுறை இவரது கவிதை இன்பத்தில் திளைத்த சுல்தான் இவருக்குப் பரிசாக விலைமதிப்பு மிக்க வைரக் கற்களை மூன்று முறை அவர் வாய் நிரம்பப் போட்டார்.

மகிழ்வுற்ற கவிஞர் அன்சூர், ‘‘எனது வாய் சிறியது சுல்தான். இப்படி எனக்கு மூன்று வாய் வைரம் பரிசு அளிப்பதாக முன்னதாகத் தெரிவித்து இருந்தால் எனக்குப் பதிலாக வாயைத் திறக்க என் மனைவியை அழைத்து வந்திருப்பேன்’’ என்றார். அதைக் கேட்டு அரசவையே சிரிப்பால் குலுங்கியது.

பூனை பக்தி!

பண்டைய எகிப்தியர்கள் பூனையை புனிதப் பிராணியாகக் கருதினார்கள். தெய்வமாக பூஜித்தார்கள். பூனையை யாராவது கொன்றுவிட்டால் அவர்களைக் கொன்றார்கள். இந்த ‘பூனை பக்தி’யால் அண்டை நாடான பெர்ஷியாவிடம் யுத்தத்தில் இவர்கள் தோல்வி அடைந்த வரலாறும் உண்டு.

2500 ஆண்டுகளுக்கு முன், பெர்ஷிய நாட்டுப் படைகள் எகிப்து நாட்டுக்கு புறப்பட்டன. எகிப்தியர்களின் ‘பூனை பக்தி’ பற்றி நன்கு அறிந்த பெர்ஷியர்கள், தங்கள் படைகளுக்கு முன் ஏகப்பட்ட பூனைகளை அழைத்துச் சென்றனர். இதைக் கண்டு எகிப்து சிப்பாய்கள் அதிர்ச்சி அடைந்தனர்! பூனைகள் மீது ஒரு அம்புபட்டால் கூட கடவுள் கோபிப்பார்.... எனவே, ஆயுதங்களை எடுக்கவோ, யுத்தம் செய்யவோ முயலவில்லை. பூனையால் எகிப்து ‘அம்பேல்’ ஆனது.

கைப்பிடி வைரம்

ஔரங்கசீப்பின் அரசவைக் கவிஞராக இருந்தவர் அரேபியக் கவிஞரான தஜ்ஹர் என்பவர். இவருக்குச் சம்பளமாக மன்னர் ஔரங்கசீப் ஆண்டுக்கு இரண்டு பிடி வைரங்கள் கொடுத்து வந்தார். தன் பிறந்த தினத்தன்று இப்புலவரை ஔரங்கசீப் தனது கஜானாவுக்கு அழைத்துச் சென்று வைரங்கள் நிறைந்த பெரிய பையில் கைகளை விட்டுப் பிடி நிறைய எடுக்கச் சொல்வாராம். இவ்வாறு அந்த அரசவைக் கவிஞர் 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்!

ஆற்றுக்கு தண்டனை!

பாரசீகத்தின் மன்னன் சின்டெஸ். ஒருமுறை இவன் தன் பரிவாரங்களோடு ஆற்றைக் கடக்கும்போது ஆற்றில் வெள்ளம் வந்து மன்னனின் குதிரையை அடித்துச் சென்றுவிட்டது. தான் பிரியமாக வளர்த்த குதிரையை ஆற்று வெள்ளம் கொன்றுவிட்டதாகக் கருதிய மன்னன், அந்த ஆற்றுக்கு மரண தண்டனை விதித்தான்! மரணதண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

 எப்படித் தெரியுமா? 360 கால்வாய்களை வெட்டி அந்த ஆற்றினை தூர்ந்து போகச் செய்தான். ஆனால், சில வருடங்களுக்குள் வாய்க்கால்கள் தூர்ந்து போய் ஆறு மீண்டும் ஓடத் தொடங்கியது. அந்த ஆறு எது தெரியுமா? தற்போது ஈராக் நாட்டில் பாயும் ‘டையலா’ நதிதான் அது!

இருமுறை முடிசூட்டு விழா!

ஒரே வருடத்தில் இரண்டு முறை முடிசூட்டிக் கொண்டார் சத்ரபதி சிவாஜி. ஏன்? 1794, ஜூன் 6ம் தேதி சிவாஜிக்கு மகுடாபிஷேகம் நடந்தது. 8ம் தேதி அவரது தளபதி மரணம் அடைந்தார். அடுத்த மூன்று நாளில் அவரது மனைவி கேஷாபாய் அமரராகிவிட்டார்.

அடுத்த எட்டு நாளில் அன்னை ஜீஜாபாய் காலமானார். நிஸ்சல்பூரி என்ற அறிஞர், ‘சிவாஜி பட்டம் சூடத் தேர்ந்தெடுத்த நாள் சரியில்லை’ என்று கூறி, மறுமுறை முடிசூடச் சொன்னார். 80 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் முடிசூட்டிக் கொண்டார் சிவாஜி.

வரலாற்று விந்தைகள்

* முதல் உலகப்போரின் தொடக்கத்தில் பிரெஞ்சு அரசாங்கத்திடம் தனது படைகள் அனைத்தையும் அனுப்ப போதிய லாரிகள் இல்லை. ஆகவே, 12,000 டாக்ஸி களை வாடகைக்குப் பிடித்து அவற்றில் போர் வீரர்களை ஏற்றிப் போருக்கு அனுப்பி வைத்தது.

* முதல் உலகப் போரில், பிரான்ஸ் நாட்டின் போர் முனையிலிருந்து செய்தி கொண்டு வரவும், போர்முனைக்குச் செய்தி அனுப்பவும் பயன்படுத்தப்பட்ட புறா ஒன்றுக்கு, போர் முடிந்த பின், அதன் சேவையைப் பாராட்டி மெடல் வழங்கப்பட்டது.

* 1739ம் ஆண்டு ஸ்பெயின் மீது இங்கிலாந்து போர் தொடுத்தது. ஏன்? ஜெங்கின்ஸ் என்ற கப்பல் தலைவனின் காதை ஸ்பெயின் கப்பல் படையினர் நடுக்கடலில் துண்டித்துவிட்டார்கள். ஜெங்கின்ஸ் அறுந்து விழுந்த தன் காதைப் பத்திரமாக எடுத்து ஒரு பெட்டியில் வைத்து இங்கிலாந்துக்குக் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் காட்டி முறையிட்டார். உடனே போர் ஆரம்பமானது. ‘ஜெங்கின்ஸ் காதுச் சண்டை’ என்றே இதற்குப் பெயர்.

* பால பருவத்திலேயே இளவரசராக முடிசூட்டப்பட்டவர் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்டு. வேல்ஸ் நாட்டின் இளவரசராக 1841ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முடிசூட்டப்பட்டபோது அவரது வயது என்ன தெரியுமா? பிறந்து 29 நாட்கள்!

* பிரான்செல்டான் என்பவர் பிரான்ஸைச் சேர்ந்த பெரும் பணக்காரர். இவர் பாஸ்டில் சிறையில் 69 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்தார். இவர் செய்த குற்றம், 14ம் லூயி மன்னனின் வழுக்கைத் தலையைப் பார்த்துச் சிரித்தது.
நன்றி முத்தாரம்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

கவரிமான் என்பது மான் இனம் அல்ல


கவரிமான் என்பது மான் இனம் அல்ல

#கவரிமான் என்பது மான் இனம் அல்ல,
அதன் உண்மையான பெயர் #கவரிமா .
அதாவது #கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல.
இமயமலையில் வாழும் மாடு வகையை சார்ந்தது,
அதுவும் எருமை மாடு வகையைச் சார்ந்ததாகும்.
இதையே நமது மக்கள் #கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள்.
#கவரிமான் எங்கு வசிக்கிறது..?
முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..?
எப்படித் தற்கொலை செய்து கொள்ளும்?
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.”
என்கிறார் திருவள்ளுவர் ( 969ஆம் குறளில் )
கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும்....
அதே போல மானம் மிக்கவர்கள்,
தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள்
என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்..
ஆனால்
இப்படி ஒரு மான் இருப்பது பற்றி
அறிவியல் புத்தகங்களில் இல்லையே ?
குழப்பமாக இருக்கிறது அல்லவா?
அந்தக் குறளைக் கவனமாகப் பாருங்கள்..
அதில் சொல்லப்பட்டு இருப்பது “கவரி மான் அல்ல..”
*#கவரி மா…*!
ஆம்.. #கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது..
அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..
புறநானூற்றில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது..
"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்"…
இமயமலைப் பகுதியில் ,
*#கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு ,
தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும்* என்பது இதன் பொருள்...
அதாவது #கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல…
இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் வியப்பு...
*#கவரிமா என்பது மான் வகையைச் சார்ந்தது அல்ல..*
மாடு வகையைச் சார்ந்தது என்பது அடுத்த வியப்பு...
வள்ளுவர் சொன்னது இதைத்தான் ...
இந்தக் *#கவரி மா குறித்து
பதிற்றுப் பத்து* போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன...
*முடி சடை போல தொங்கக் கூடிய விலங்கு*தான் #கவரிமா…
இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்..
#கவரி என்பதில் இருந்துதான் *சவரி முடி* என்ற இன்றைய சொல் உருவானது..
*#மா * என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.
சரி..
இந்தக் குறளுக்குப் பொருள் என்ன?
பனிப் பகுதியில் வாழும் #கவரிமாவுக்கு ,
அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..
*அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ,*
மனிதர்களால் வெட்டப்பட்டாலோ,
*குளிரினால் இறந்து விடும்..*
அதே போல சில மனிதர்கள்...
அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால்,
அவர்கள் வாழ்வது அரியதாகி விடும்…
எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை..
பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை..
ஆனால் *#கவரிமா வைக் #கவரிமான் எனப் புரிந்து கொள்வது தான் தவறு,,,,,,,

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பொறியியல் படிப்புடன் பி.எட்., முடித்தவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகலாம்...!


பொறியியல் படிப்புடன் பி.எட்., முடித்தவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகலாம்...!

✍ ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் பணியின் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test - TET) நடத்தப்படுகிறது.

✍ கலை, அறிவியல் படிப்புடன் B.Ed., படித்தவர்கள் மட்டுமே இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதினர்.

✍ தற்போது பொறியியல் படிப்புடன் B.Ed., முடித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

✍ B.E.,B.Ed., படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தேர்வை எழுதி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

✍ ஆரம்ப காலத்தில் கலை, அறிவியல் படிப்பை படித்தவர்கள் மட்டுமே B.Ed., படிக்கலாம் என்ற நிலையை மாற்றி, 2015-16 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் மாணவர்களும் B.Ed., படிக்க அனுமதி வழங்கப்பட்டது.

✍ ஆனால், டெட் தேர்வை எழுத தகுதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால், B.E., படித்து B.Ed., முடித்தவர்கள் ஆசிரியராக முடியாத சு%2Bழல் இருந்தது.

✍ இதனால் B.Ed., படிக்க அனுமதி இருந்தும் பொறியியல் மாணவர்கள் B.Ed., படிப்பில் சேராமல் இருந்தனர்.

✍ தற்போது B.E.,B.Ed., முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராகலாம் என அரசாணை வெளியிட்டுள்ளதால், டெட் தேர்வெழுத தகுதி பெறுவர்..!

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

திங்கள், 9 டிசம்பர், 2019

TNPSC Group-1 முதன்மைத் தேர்வுக்கான Result வெளியீடு..!


TNPSC Group-1 முதன்மைத் தேர்வுக்கான Result வெளியீடு..!

💥 தமிழக அரசுப்பணிகளுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தேர்வு செய்து வருகிறது.

💥 உதவி மாவட்ட ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. சமீபத்தில் இந்தத் தேர்வுக்கு 181 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

💥 அதன்படி, முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது.

💥 தற்போது குரூப்-1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பு%2Bர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



ஞாயிறு, 8 டிசம்பர், 2019

டிசம்பர் 09 சிறப்புகள்


டிசம்பர் 09  சிறப்புகள்

ஊழலை ஒழிப்போம்... இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்..!!

முத்தான சிந்தனை துளிகள் !
ஊக்கம் நிறைந்த உழைப்பாளி ஊசி முனையில் நடந்து கூட முன்னேறி விடுவான்... ஏக்கம் மட்டுமே கொண்ட சோம்பேறி ஏணிகள் ஆயிரம் இருந்தாலும் ஒரு அடி கூட நகர மாட்டான்..!!

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்


⚖ ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் 9ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஊழலானது நாடுகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தி பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்குகிறது. எனவே இதை தடுக்கும் நோக்கில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது இத்தினத்தை பிரகடனப்படுத்தியது.
வெ.தட்சிணாமூர்த்தி



கர்நாடக இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான வெ.தட்சிணாமூர்த்தி 1919ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கேரளாவில் பிறந்தார்.

1950ஆம் ஆண்டு வெளிவந்த 'நல்லதங்காள்" திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்த பெருமைக்குரியவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இசை அமைத்துள்ளார்.

இவர் சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது, சுவர்ணமால்யா யேசுதாசு விருது, கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது, மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் ஆகியவற்றை பெற்றுள்ளார். நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்த பெருமைக்குரிய இவர் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தார்.✍ 1868ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி வேதிப் போர்முறையின் தந்தை ஃபிரிட்ஸ் ஹேபர் (குசவைண ர்யடிநச) பிறந்தார்.🚩 1937ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கலங்கரை விளக்கை உருவாக்கிய நில்ஸ் குஸ்டாப் டேலன் (Nடைள புரளவயக னுயடநn) மறைந்தார்.👉 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்திய சட்டசபை, ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.👪 1971ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் அமைப்பு ஐ.நா.வில் இணைந்தது.

வியாழன், 5 டிசம்பர், 2019

புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினம் டிசம்பர் 05.


புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினம் டிசம்பர் 05.

#Dr_BR_Ambedkar

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.

பிறப்பு: ஏப்ரல் 14, 1891

இடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா

பணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்

இறப்பு: டிசம்பர் 6,  1956

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.

1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.

உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்

பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.

சமூகப்பணிகள்

1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”

இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.

தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடவடிக்கைகள்

வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.

விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு



ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26,  1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.    அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.

பெளத்த சமயம் மீது பற்று

தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.

அம்பேத்கரின் பொன்மொழிகள்

“ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”
“ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”
“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”.
“சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”
“வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”
இறப்பு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

அறிவுக்கான அளவீடு

அறிவுக்கான அளவீடு

அறிவுக்கான அளவீடு வைத்து கணிக்கும் போது  மூன்று வகையாக அவற்றை  சுருங்க பிரித்து விடலாம். அவை எந்த மாதிரியான குணாதிசயங்களை, தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காணலாம்.

நுண்ணறிவு அளவு (IQ)
Intelligent Quotient (IQ)

மனவெழுச்சி  அளவு (EQ)
Emotional Quotient (EQ)

சமூக அளவு (SQ)
Social Quotient (SQ)

1. நுண்ணறிவு அளவு (IQ):
நாம் எந்த மாதிரியான புத்தகத்தை தேர்வு செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள, கணிதம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை தீர்க்க, செய்திகளை  மனப்பாடம் செய்து, அவற்றை நினைவுபடுத்த உதவுகிறது.

2.  மனவெழுச்சி அளவு  (EQ) :
மற்றவர்களுடன் சமாதானத்தை நிலை நிறுத்தவும், குறித்த நேரத்தில் ஒரு செயலை செய்யவும், அவரை பொறுப்புள்ளவராக, நேர்மையானவராக, உண்மையான அக்கறையுள்ளவராக உருவாக்குகிறது..

3. சமூக அளவு (SQ):
நண்பர்களின் வட்டத்தை உருவாக்க மற்றும் அவற்றை நீண்ட காலத்திற்கு  பேணிக்காக்க உதவுகிறது.

புதன், 4 டிசம்பர், 2019

டிசம்பர் 05 சிறப்புகள்


டிசம்பர் 05 சிறப்புகள்

சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம்

சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் டிசம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபை 1985ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

உலக மண் வள தினம்

உலகின் இயற்கைச் சூழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை மையமாகக் கொண்டு உலகளாவிய ரீதியில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் டிசம்பர் 5ஆம் தேதியை உலக மண் தினமாகக் கடைபிடித்து வருகிறது.

மண் வளம் காக்க உறுதி ஏற்போம்... மண் வள தினம் !!


ஜெயலலிதா

இன்று இவரின் நினைவு தினம்..!!
தமிழக முன்னாள் முதல்வர், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் கோமலவள்ளி.

தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக இளம் வயதில் ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய 'எபிஸில்" என்ற ஆங்கில திரைப்படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவர் 'வெண்ணிற ஆடை" என்ற திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை தந்த திரைப்படம் 1980ஆம் ஆண்டு வெளியான 'நதியை தேடி வந்த கடல்" ஆகும்.

பின்பு அஇஅதிமுக கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர் அவர்கள், இவரை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அஇஅதிமுக கட்சியின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் 1989ஆம் ஆண்டு, அஇஅதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது.

1991, 2001, 2011, 2016 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். தமிழ்நாட்டின் தங்க தாரகையாக திகழ்ந்த ஜெயலலிதா அவர்கள் 2016ஆம் ஆண்டு மறைந்தார்.

 முக்கிய நிகழ்வுகள்

1950ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இந்திய ஆன்மீகவாதி ஸ்ரீ அரவிந்தர் மறைந்தார்.1954ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தமிழ் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா மறைந்தார்.1901ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்தார்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் டிசம்பர் 5.

சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் டிசம்பர்  5.
(International Volunteer Day for Economic and Social Development)

தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும். இதற்காக ஐ.நா. சபை 1985ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை தனியார் நிறுவனங்களும் 2006ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடுகின்றன.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

திங்கள், 2 டிசம்பர், 2019

Vocabulary - Commonly Used Words part 02.

Vocabulary - Commonly Used Words part 02.

Vocabulary - வார்த்தைகள் அறிவோம்.

501 ஆற்றல் energy
502 வேட்டை hunt
503 சாத்தியமான probable
504 படுக்கையில் bed
505 சகோதரர் brother
506 முட்டை egg
507 சவாரி ride
508 செல் cell
509 நம்பிக்கை believe
510 ஒருவேளை perhaps
511 எடுக்க pick
512 திடீர் sudden
513 எண்ண count
514 சதுரம் square
515 காரணம் reason
516 நீளம் length
517 பிரதிநிதித்துவம் represent
518 கலை art
519 பொருள் subject
520 பகுதி region
521 அளவு size
522 மாறுபடுகிறது vary
523 குடியேற settle
524 பேச speak
525 எடை weight
526 பொது general
527 பனி ice
528 விஷயம் matter
529 வட்டத்தின் circle
530 ஜோடி pair
531 சேர்க்கிறது include
532 பிளவை divide
533 அசையாக syllable
534 உணர்ந்தேன் felt
535 பெரும் grand
536 பந்து ball
537 இதுவரை yet
538 அலை wave
539 கைவிட drop
540 இதய heart
541 நான் am
542 தற்போதைய present
543 கனரக heavy
544 நடன dance
545 இயந்திரம் engine
546 நிலையை position
547 கை arm
548 பரந்த wide
549 புறப்பட்டது sail
550 பொருள் material
551 பகுதி fraction
552 காட்டில் forest
553 உட்கார sit
554 இனம் race
555 சாளர window
556 கடையில் store
557 கோடை summer
558 ரயில் train
559 தூக்கம் sleep
560 நிரூபிக்க prove
561 தனி lone
562 காலை leg
563 உடற்பயிற்சி exercise
564 சுவர் wall
565 catch
566 ஏற்ற mount
567 விரும்புகிறேன் wish
568 வானத்தில் sky
569 குழு board
570 மகிழ்ச்சி joy
571 குளிர்காலத்தில் winter
572 சனி sat
573 எழுதப்பட்ட written
574 காட்டு wild
575 கருவி instrument
576 வைத்து kept
577 கண்ணாடி glass
578 புல் grass
579 மாடு cow
580 வேலை job
581 விளிம்பில் edge
582 அடையாளம் sign
583 வருகை visit
584 கடந்த past
585 மென்மையான soft
586 வேடிக்கை fun
587 பிரகாசமான bright
588 எரிவாயு gas
589 வானிலை weather
590 மாதம் month
591 பத்து லட்சம் million
592 தாங்க bear
593 பூச்சு finish
594 சந்தோஷமாக happy
595 நம்பிக்கை hope
596 மலர் flower
597 உடை clothe
598 விசித்திரமான strange
599 சென்று gone
600 வர்த்தகம் trade
601 மெல்லிசை melody
602 பயணம் trip
603 அலுவலகத்தில் office
604 பெற receive
605 வரிசையில் row
606 வாயில் mouth
607 துல்லியமான exact
608 சின்னம் symbol
609 இறக்க die
610 குறைந்தது least
611 சிக்கல் trouble
612 கத்தி shout
613 தவிர, except
614 எழுதியது wrote
615 விதை seed
616 தொனி tone
617 சேர join
618 பரிந்துரைக்கிறது suggest
619 சுத்தமான clean
620 இடைவெளி break
621 பெண் lady
622 முற்றத்தில் yard
623 உயரும் rise
624 கெட்ட bad
625 அடியாக blow
626 எண்ணெய் oil
627 இரத்த blood
628 தொட touch
629 வளர்ந்தது grew
630 சதவீதம் cent
631 கலந்து mix
632 அணி team
633 கம்பி wire
634 செலவு cost
635 இழந்தது lost
636 பழுப்பு brown
637 அணிய wear
638 தோட்டத்தில் garden
639 சம equal
640 அனுப்பி sent
641 தேர்வு choose
642 விழுந்தது fell
643 பொருந்தும் fit
644 பாயும் flow
645 நியாயமான fair
646 வங்கி bank
647 சேகரிக்க collect
648 காப்பாற்ற save
649 கட்டுப்பாடு control
650 தசம decimal
651 காது ear
652 வேறு else
653 மிகவும் quite
654 வெடித்தது broke
655 வழக்கு case
656 நடுத்தர middle
657 கொலை kill
658 மகன் son
659 ஏரியில் lake
660 கணம் moment
661 அளவில் scale
662 உரத்த loud
663 வசந்த spring
664 அவதானிக்கவும் observe
665 குழந்தை child
666 நேராக straight
667 மெய் consonant
668 தேசிய nation
669 அகராதியில் dictionary
670 பால் milk
671 வேக speed
672 முறை method
673 உறுப்பு organ
674 செலுத்த pay
675 வயது age
676 பிரிவில் section
677 ஆடை dress
678 மேகம் cloud
679 ஆச்சரியம் surprise
680 அமைதியான quiet
681 கல் stone
682 சிறிய tiny
683 ஏறு மெதுவாக தொற்றி ஏறு climb
684 குளிர் cool
685 வடிவமைப்பு design
686 ஏழை poor
687 நிறைய lot
688 சோதனை experiment
689 கீழே bottom
690 முக்கிய key
691 இரும்பு iron
692 ஒற்றை single
693 குச்சி stick
694 பிளாட் flat
695 இருபத்தி twenty
696 தோல் skin
697 சிரிப்பு smile
698 மடி crease
699 ஓட்டை hole
700 குதிக்க jump
701 குழந்தை baby
702 எட்டு eight
703 கிராமம் village
704 சந்திக்க meet
705 ரூட் root
706 வாங்க buy
707 உயர்த்த raise
708 தீர்க்க solve
709 உலோக metal
710 என்பதை whether
711 மிகுதி push
712 ஏழு seven
713 பத்தி paragraph
714 மூன்றாவது third
715 போகலாமா shall
716 நானும் held
717 முடி hair
718 விவரிக்க describe
719 சமையற்காரர் cook
720 தரையில் floor
721 ஒன்று either
722 இதன் விளைவாக result
723 எரிக்க burn
724 மலை hill
725 பாதுகாப்பான safe
726 பூனை cat
727 நூற்றாண்டின் century
728 கருத்தில் consider
729 வகை type
730 சட்ட law
731 பிட் bit
732 கடற்கரையில் coast
733 பிரதியை copy
734 சொற்றொடர் phrase
735 அமைதியாக silent
736 உயரம் tall
737 மணல் sand
738 மண் soil
739 ரோல் roll
740 வெப்பநிலை temperature
741 விரல் finger
742 தொழில் industry
743 மதிப்பு value
744 சண்டை fight
745 பொய்யை lie
746 அடிக்க beat
747 தூண்ட excite
748 இயற்கை natural
749 பார்வை view
750 உணர்வு sense
751 தலைநகர் capital
752 இல்லை won’t
753 நாற்காலியில் chair
754 ஆபத்து danger
755 பழம் fruit
756 பணக்கார rich
757 தடித்த thick
758 சிப்பாய் soldier
759 செயல்முறை process
760 செயல்பட operate
761 நடைமுறையில் practice
762 தனி separate
763 கடினமான difficult
764 மருத்துவர் doctor
765 தயவு செய்து please
766 காப்பாற்று protect
767 நண்பகல் noon
768 பயிர் crop
769 நவீன modern
770 உறுப்பு element
771 வெற்றி hit
772 மாணவர் student
773 மூலையில் corner
774 கட்சி party
775 வழங்கல் supply
776 அதன் whose
777 கண்டறிவது locate
778 மோதிரத்தை ring
779 பாத்திரம் character
780 பூச்சி insect
781 பிடித்து caught
782 காலம் period
783 குறிக்கிறது indicate
784 ரேடியோ radio
785 பேசினார் spoke
786 அணுவின் atom
787 மனித human
788 வரலாற்றில் history
789 விளைவு effect
790 மின்சார electric
791 எதிர்பார்க்க expect
792 எலும்பு bone
793 ரயில் rail
794 கற்பனை imagine
795 எப்படி provide
796 ஒப்புக்கொள்கிறேன் agree
797 இவ்வாறு thus
798 மென்மையான gentle
799 பெண் woman
800 கேப்டன் captain
801 யூகிக்க guess
802 தேவையான necessary
803 கூர்மையான sharp
804 இறக்கை wing
805 உருவாக்கு create
806 அண்டை neighbour
807 கழுவு wash
808 மட்டை, வௌவால் bat
809 மாறாக rather
810 கூட்டத்தில் crowd
811 சோளம் corn
812 ஒப்பிட்டு compare
813 கவிதை poem
814 சரம் string
815 மணி bell
816 சார்ந்திருக்கிறது depend
817 இறைச்சி meat
818 துடைப்பான் rub
819 குழாய் tube
820 பிரபலமான famous
821 டாலர் dollar
822 ஓடுகிற stream
823 பயம் fear
284 பார்வை sight
825 மெல்லிய thin
826 முக்கோணம் triangle
827 கிரகம் planet
828 அவசரம் hurry
829 தலைமை chief
830 காலனி colony
831 கடிகாரம் clock
832 என்னுடைய mine
833 கழுத்து பட்டை tie
834 நுழைய enter
835 முக்கிய major
836 புதிய fresh
837 தேடல் search
838 அனுப்பு send
839 மஞ்சள் yellow
840 துப்பாக்கி gun
841 அனுமதிக்க allow
842 அச்சு print
843 இறந்த dead
844 குறிவைத்த புள்ளி spot
845 பாலைவனம் desert
846 வழக்கு suit
847 நடப்பு current
848 லிப்ட் lift
840 உயர்ந்தது rose
850 வரும் arrive
851 எசமான் master
852 பாடல் track
853 பெற்றோர் parent
854 கரை shore
855 பிரிவு division
856 தாள் sheet
857 பொருள் substance
858 சாதகமாக favor
859 இணைக்க connect
860 பின் post
861 செலவு spend
862 நாண் chord
863 கொழுப்பு fat
864 மகிழ்ச்சி glad
865 அசல் original
866 பங்கு share
867 நிலையம் station
868 தந்தை dad
869 ரொட்டி bread
870 வசூலிக்க charge
871 முறையான proper
872 பட்டியில் bar
873 வாய்ப்பு offer
874 பிரிவு segment
875 அடிமை slave
876 வாத்து duck
877 உடனடி instant
878 சந்தை market
879 பட்டம் degree
880 விரிவுப்படுத்த populate
881 குஞ்சு chick
882 அன்பே dear
883 பகைவன் enemy
884 பதில் reply
885 பானம் drink
886 ஏற்படும் occur
887 ஆதரவு support
888 பேச்சு speech
889 இயற்கை nature
890 எல்லை range
891 நீராவி steam
892 இயக்கம் motion
893 பாதை path
894 திரவ liquid
895 புகுபதிகை log
896 பொருள் meant
897 ஈவு quotient
898 பற்கள் teeth
899 ஷெல் shell
900 கழுத்து neck