புதன், 25 டிசம்பர், 2019

2019... புதிய நியமனங்கள்... திரும்பி பார்க்க வைத்ததா? ஓர் பார்வை..!!



2019... புதிய நியமனங்கள்... திரும்பி பார்க்க வைத்ததா? ஓர் பார்வை..!!

2019... கடந்து வந்த பாதை..!!

நியமனங்கள் - ஓர் பார்வை !!
நவம்பர்
நவம்பர் 7ஆம் தேதி இந்திய விமான நிலைய ஆணையத்தின் தென் மண்டலத்தில், முதலாவது பெண் தீயணைப்பு வீரராக ரம்யா ஸ்ரீ கண்டன் நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 13ஆம் தேதி மேகாலய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி முகமது ரஃபீக் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நவம்பர் 18ஆம் தேதி ஆளுநரின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐஏஎஸ், தமிழகத் தலைமைத் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் ஐஏஎஸ், நியமனம் செய்யப்பட்டார்.

நவம்பர் 18ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்றுக்கொண்டார்.

நவம்பர் 20ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் பதவியேற்றுக் கொண்டார்.

நவம்பர் 21ஆம் தேதி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக்கொண்டார்.

நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையராக, ஆர்.ராஜகோபால் பதவியேற்றார்.

நவம்பர் 27ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக பேராசிரியர் என்.பஞ்சநாதம் நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 28ஆம் தேதி மகாராஷ்டிராவின் முதலமைச்சராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.

நவம்பர் 30ஆம் தேதி தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்துவந்த நிரஞ்சன் மார்டி ஓய்வுப்பெற்றதை அடுத்து புதிய உள்துறைச் செயலராக நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருக்கும் எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டார்.
கோயபுத்தூர் ஷாப்பிங் திருவிழா 2019


கண்கவர் நடன நிகழ்ச்சிகளையும் கண்டுகளியுங்கள்...!!


டிசம்பர்
டிசம்பர் 2ஆம் தேதி புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சோமா ராய் பர்மன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

டிசம்பர் 6ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, ஓய்வுபெற்ற தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி கே.விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 10ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் பிராண்டு தூதராக நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 13ஆம் தேதி ஸ்பெயினின் லா லிகா கால்பந்தாட்ட தொடருக்கான இந்திய விளம்பர தூதராக, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 18ஆம் தேதி நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை குஜராத்தை சேர்ந்த 22 வயதான ஹாசன் சஃபின் பெற்றார்.

டிசம்பர் 18ஆம் தேதி சந்திரயான்-3 திட்ட இயக்குநராக வீர முத்துவேலை நியமனம் செய்து இஸ்ரோ அறிவித்தது.

டிசம்பர் 21ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் மையத்தின் தலைவராக இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சேதுராமன் பஞ்சநாதன் நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 22ஆம் தேதி அமெரிக்க தகவல் தொடர்பு ஆணையத்தின் (எஃப்சிசி) முதல் பெண் தலைமை தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) மோனிஷா கோஷ் என்ற இந்திய அமெரிக்கர் நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 23ஆம் தேதி இந்திய வெளியுறவுச் செயலராக ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நியமிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக