செவ்வாய், 10 டிசம்பர், 2019

பொறியியல் படிப்புடன் பி.எட்., முடித்தவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகலாம்...!


பொறியியல் படிப்புடன் பி.எட்., முடித்தவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகலாம்...!

✍ ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் பணியின் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test - TET) நடத்தப்படுகிறது.

✍ கலை, அறிவியல் படிப்புடன் B.Ed., படித்தவர்கள் மட்டுமே இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதினர்.

✍ தற்போது பொறியியல் படிப்புடன் B.Ed., முடித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

✍ B.E.,B.Ed., படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தேர்வை எழுதி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

✍ ஆரம்ப காலத்தில் கலை, அறிவியல் படிப்பை படித்தவர்கள் மட்டுமே B.Ed., படிக்கலாம் என்ற நிலையை மாற்றி, 2015-16 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் மாணவர்களும் B.Ed., படிக்க அனுமதி வழங்கப்பட்டது.

✍ ஆனால், டெட் தேர்வை எழுத தகுதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால், B.E., படித்து B.Ed., முடித்தவர்கள் ஆசிரியராக முடியாத சு%2Bழல் இருந்தது.

✍ இதனால் B.Ed., படிக்க அனுமதி இருந்தும் பொறியியல் மாணவர்கள் B.Ed., படிப்பில் சேராமல் இருந்தனர்.

✍ தற்போது B.E.,B.Ed., முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராகலாம் என அரசாணை வெளியிட்டுள்ளதால், டெட் தேர்வெழுத தகுதி பெறுவர்..!

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக