திங்கள், 30 டிசம்பர், 2019

2019-ல் இந்தியாவின் சாதனைகள் - பகுதி-2 !!


2019-ல் இந்தியாவின் சாதனைகள் - பகுதி-2 !!

தெலுங்கானா

🎀 தெலுங்கானாவின் MNJ புற்றுநோயியல் மற்றும் பிராந்திய புற்றுநோய் நிறுவனமானது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசால் நடத்தப்படும், முதல் மருத்துவமனை ஆகியுள்ளது.

🎀 ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில், மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், போலாவரம் திட்டத்தின் கீழ், அணையில் 10 ஆயிரத்து, 872 சதுர அடி பரப்பளவில், 24 மணி நேரத்தில், கான்கிரீட் பணிகள் முடிக்கப்பட்டன. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

🎀 ஹைதராபாத்தை சேர்ந்த 8 வயது சாருதா என்ற சிறுமி, 20 நிமிடங்களில் அடுத்தடுத்து 202 செராமிக் டைல்ஸ் கற்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

🎀 தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள கணினி மென்பொருள் நிறுவனத்தில், 12 வயதான சித்தார்த் ஸ்ரீவத்சவ் பில்லி என்ற சிறுவன், டேட்டா சயின்டிஸ்ட் ஆக பணியில் சேர்ந்துள்ளான்.
கர்நாடகா

🎀 2017-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு ஏப்ரல் வரை நாடு முழுவதும் 19 ஆயிரத்து 400.83 கி.மீ. தூரத்தை மும்பை சயான் பகுதியை சேர்ந்த பாக்யஸ்ரீ என்பவர் பெங்களூருவை சேர்ந்த பவான் எம்.ஜே. என்பவருடன் சேர்ந்து சைக்கிளில் சென்று சாதனை படைத்தார். இவரின் இந்த சாதனை கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்

🎀 ராஜஸ்தானின் உதய்ப்பு%2Bர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த லக்ஷயராஜ் சிங் மேவார் என்பவர், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட துணிகளைத் தானமாகப் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
டெல்லி

🎀 மேற்கு டெல்லியில் குதுப் விகார் பகுதியை சேர்ந்த மீனா உபத்யாய் என்ற பெண், 122 ரோஜாக்களை 14 இஞ்ச் மட்டுமே கொண்ட சிமெண்ட் தொட்டிக்குள் வளர்த்து, பராமரித்து வந்துள்ளார். அவரது இந்த சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாகலாந்து

🎀 நாகலாந்தில் உள்ள கேண்யாக் இனத்தைச் சேர்ந்த 5000 பெண்கள் தங்களின் பாரம்பரிய நடனமாடி ஆவோலிங் மன்யு%2B (Aoleang Monyu Festival) திருவிழாவில் உலக சாதனை படைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா

🎀 லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் விமானம் %லம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த உலகின் முதல் பெண் எனும் பெருமையை மும்பையைச் சேர்ந்த ஆரோகி பண்டிட் என்பவர் பெற்றுள்ளார்.

🎀 மும்பையை சேர்ந்த சின்மய் பிரபு என்ற 20 வயது இளைஞர் தண்ணீருக்கள் ரூபிக் க்யு%2Bப்பை சரியாக ஒன்றிணைத்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.

🎀 மும்பை பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட முதல் திருநங்கை பட்டதாரி என்ற பெருமையை சந்தோஷ் லோண்டே (வயது 36) என்பவர் பெற்றுள்ளார்.

🎀 ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தை ஜூலை 31-ம் தேதி ஏறி 9 வயது இந்திய சிறுவன் அத்வைத் பார்தியா (மராட்டிய மாநிலம்) சாதனை படைத்துள்ளான்.
பொது

🎀 இந்தியாவின் ஐ.ஏ.எஸ் அதிகாரி, அங்குர் கர்க், ஹhர்வர்ட் பல்கலைக்கழகத்தில் 170 மதிப்பெண்களுக்கு 171 பெற்று தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தி உள்ளார். இவருக்கு பல்கலைக்கழகம் 101% மதிப்பெண் அளித்துள்ளது.

🎀 புத்தாண்டில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு குறித்து, ஐக்கியநாடுகள் சபையின் குழந்தைகளுக்கான நல அமைப்பான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-ம் ஆண்டும் இந்தியா சாதனை படைத்துள்ளது.

🎀 கடந்த நிதியாண்டில், இந்திய ரயில்வே, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி, 6,037 ரயில் பெட்டிகளை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.

🎀 ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொண்டு நிறுவனம் 1 கி.மீ. தொலைவுக்கு மிக நீண்ட இஃப்தார் விருந்தை நடத்தி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக