புதன், 25 டிசம்பர், 2019

ஐன்ஸ்டீனின் மீளாத்துயரம்... திக் திக் நிமிடங்கள்... என்ன நடந்தது?...


ஐன்ஸ்டீனின் மீளாத்துயரம்... திக் திக் நிமிடங்கள்... என்ன நடந்தது?...

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மீளாத்துயர்..!!
💣இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த தருணத்தில் ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி, அமெரிக்கா உலகின் முதல் அணுகுண்டை ஜப்பான் மீது வீசியது.


💣ஜப்பானில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட குண்டுக்கு 'லிட்டில் பாய்" எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்டை குறிக்கும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டிருந்தது.

💣குண்டு விழுந்த இடத்திலிருந்து 500 அடி சுற்றளவில் இருந்த அனைவரும் உடனடியாக ஆவியானார்கள். மாபெரும் புகை மற்றும் மிகப்பெரிய தீ சுவாலைகள் பரவியது. ஹிரோஷிமாவில் இருந்த 60 சதவீத கட்டிடங்கள் அழிந்துபோயின. இந்த குண்டு வீச்சில் லட்சக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்தது.

💣இறந்தவர்களில் 60 சதவீதம் பேர் தீக்காயங்களாலும், 30 சதவீதம் பேர் கட்டிட இடர்பாட்டிற்குள் சிக்கியும் பலியானார்கள். இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.

💣ஜெர்மனியும் அணுகுண்டை தயாரிக்க முயற்சித்து கொண்டிருந்த நிலையில், இந்த குண்டின் மூலம் அமெரிக்கா அந்த பந்தயத்தில் முந்தியதாக கருதப்பட்டது.

💣இந்நிகழ்வு நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு, நாகசாகி நகரத்தின் மீது மீண்டும் ஒரு அணுகுண்டு வீசப்பட்டது. இதனால் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த அணுகுண்டு வீச்சின் காரணமாக, ஆசியாவில் உலகப் போர் சட்டென முடிவுக்கு வந்தது.

💣ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் தரைமட்டமாகின. எங்கு நோக்கினும் மரண ஓலங்கள், இந்தக் கொடுமையின் பாதிப்பிலிருந்து இன்றும்கூட அந்த நகரம் முழுவதும் விடுபடவில்லை. அன்று வீசிய அணுகுண்டு கதிர் வீச்சுக்கள் இன்று பிறக்கும் குழந்தைகளையும் பாதிப்பதாகப் பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

💣அந்த அணுகுண்டு ஜப்பான் நகரங்களின் மீது வீசப்பட்டதையும், அதனால் மனித குலம் பாதிக்கப்பட்டதையும் அறிந்து தேம்பித் தேம்பி அழுதார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த சோகத்திலிருந்து விடுபட அவருக்கு பலகாலம் ஆயிற்று.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மறைவை பற்றி நாளைய பகுதியில் பார்க்கலாம்...!!இதுபோல் இன்னும் 100-க்கும் மேற்பட்ட அரசியல், அறிவியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக