பண்பலை ஒலிபரப்பு பற்றிய தகவல்கள்!
பண்பலை என்பது எப்.எம். என்பதன் தமிழாக்கத்தை குறிக்கிறது. இன்றைக்கு எப்.எம். ரேடியோக்கள் இளைஞர்க ளையும், இசையையும் ஆள்கிறது. 'வானெலி அரசுக்கு மட்டும் சொந்தமில்லை. அது மக்களுக்கானது' என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பொன்றின் விளைவே தற்போது இந்திய ஒலி உலகத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் ஒளிபரப்புக்கள், வானொலி அலைகளை அவை பரவும் விதத்தை வைத்து இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை மீடியம் வேவ் என்கிற மத்திய அலையும், சார்ட் வேவ் என்கிற சிற்றலையும் ஆகும். இந்த இரண்டையும் ஒன்று சேர்த்து ஆம்பிளிடியுட் மாடுலேஷன் என்று அழைக்கிறார்கள்.
இதில் வேறொரு அலை இயல்பு 'பிரிக்வன்சி மாடுலேஷன்' அதாவது எப்.எம். என்கிற பண்பலை எப்.எம்.மின் சிறப்பியல்பு என்னவென்றால், குறைந்த துாரத்திற்கு சமச்சீரான ஒலிபரப்பு என்பதே.
ஒலிபரப்பு வகைகளில் இந்த ஒளிபரப்பே தனி ஒரு மதிப்பு பெற்றுள்ளது. இது ஒரு அதிசயம்தான். இந்த அதிசயம் இந்தியா முழுமைக்கும் நேர்ந்துள்ளது.
பண்பலை ஒலிபரப்புகளின் உரிமையாளரை வைத்து இரண்டு விதமாக பிரிக்கலாம். பிரசார் பாரதி என்னும் தன்னாட்சி உரிமை பெற்ற இந்திய ஒலிபரப்புக் கழகத்தின் கீழ் இயங்கும் அகில இந்திய வானொலியின் கட்டுப்பாட்டில் செயல்படும் பண்பலை நிலையங்கள் ஒருவகை.
இந்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நேரடி அனுமதி பெற்று இயங்கும் தனியார் பண்பலை நிலையங்கள் இன்னொரு வகை.
இந்த இரு வகை ஒலிபரப்பு நிலையங்களுமே இப்போது நேர்ந்துள்ள பண்பலைப் புரட்சிக்கு வித்திட்டவை. பண்பலையின் ஒலிபரப்பு உயர் தொழில்நுட்பம் சார்ந்தது. அதனால் அதன் ஒலிபரப்பு செவிக்கு இனிமையை கொடுக்கிறது.
நிகழ்ச்சிகளிலும் வழக்கமான தன்மை மாறியுள்ளது. கேட்க மட்டுமே இருந்த நிகழ்ச்சிகளில், நேயர்களும் பங்கேற்கும் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சிகளும் பண்பலையில் மட்டுமே சாத்தியமானது. ஒரு மணி நேரத்தில் 20 முதல் 40 வரை உயர்ந்துள்ளது. ஒலிபரப்பு மொழியும், மக்கள் பேசும் வழக்கு மொழியாக மாறியுள்ளது. இதுவே மக்களிடம் செல்வாக்கைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்தியாவின் முதல் பண்பலை வானொலி ஒலிபரப்பு 23.7.1977ல் சென்னையில் தொடங்கப்பட்டது. ஆனாலும் பண்பலையின் வளர்ச்சி சிகரத்தை எட்டியது கடந்த 10 ஆண்டுகளில்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக