வியாழன், 5 டிசம்பர், 2019

அறிவுக்கான அளவீடு

அறிவுக்கான அளவீடு

அறிவுக்கான அளவீடு வைத்து கணிக்கும் போது  மூன்று வகையாக அவற்றை  சுருங்க பிரித்து விடலாம். அவை எந்த மாதிரியான குணாதிசயங்களை, தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காணலாம்.

நுண்ணறிவு அளவு (IQ)
Intelligent Quotient (IQ)

மனவெழுச்சி  அளவு (EQ)
Emotional Quotient (EQ)

சமூக அளவு (SQ)
Social Quotient (SQ)

1. நுண்ணறிவு அளவு (IQ):
நாம் எந்த மாதிரியான புத்தகத்தை தேர்வு செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள, கணிதம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை தீர்க்க, செய்திகளை  மனப்பாடம் செய்து, அவற்றை நினைவுபடுத்த உதவுகிறது.

2.  மனவெழுச்சி அளவு  (EQ) :
மற்றவர்களுடன் சமாதானத்தை நிலை நிறுத்தவும், குறித்த நேரத்தில் ஒரு செயலை செய்யவும், அவரை பொறுப்புள்ளவராக, நேர்மையானவராக, உண்மையான அக்கறையுள்ளவராக உருவாக்குகிறது..

3. சமூக அளவு (SQ):
நண்பர்களின் வட்டத்தை உருவாக்க மற்றும் அவற்றை நீண்ட காலத்திற்கு  பேணிக்காக்க உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக