தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர்... யார் இவர்?
வரலாற்றில் இன்று !!
பிரகாஷ் வீர் சாஸ்திரி

தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர், ஆரிய சமாஜ தலைவரான பண்டிட் பிரகாஷ் வீர் சாஸ்திரி 1923ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.
இவர் 'என்னைவிட சிறந்த பேச்சாளர்" என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் பாராட்டு பெற்றவர். சுவாமி தயானந்தரின் கருத்துக்கள், ஆரிய சமாஜ கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
இவர்தான் ஐ.நா.சபையில் இந்தியில் பேசிய முதல் இந்தியர். இவர் சிறந்த கவிஞரும் கூட. மக்களவை தேர்தலில் 2 முறை சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக ஆரிய சமாஜ வளர்ச்சிக்காக பல பணிகளை மேற்கொண்டார்.
உத்தரப்பிரதேசத்தின் ஆரிய பிரதிநிதிகள் சபை தலைவராகப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் சேவை செய்து வந்தார். கட்டாய மத மாற்றத்தை தடுக்க மத பாதுகாப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 1960ஆம் ஆண்டு முன்மொழிந்தார்.
அபார பேச்சாற்றல் கொண்டவரும் தலைசிறந்த சமஸ்கிருத அறிஞருமான பிரகாஷ் வீர் சாஸ்திரி, 1977ஆம் ஆண்டு மறைந்தார். 2003ஆம் ஆண்டு துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி இவரது நாடாளுமன்ற உரைகளின் ஒரு பகுதியை புத்தகமாக வெளியிட்டார்.இரமண மகரிஷி

தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி இரமண மகரிஷி 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடராமன்.
அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர், திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, 'இரமண ஆசிரமம்', உலகப் புகழ் பெற்றதாகும்.
இவரை பின்பற்றியவர் விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார் ஆவார். இவர் 1950ஆம் ஆண்டு மறைந்தார்.விக்கிரம் சாராபாய்

இன்று இவரின் நினைவு தினம் !!
இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்கிரம் ஆம்பாலால் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார். இங்கிலாந்தில் பிஹெச்.டி. ஆராய்ச்சியை முடித்த பிறகு 1947ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவினார்.
இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண் ஏவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் இவரே. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் (மறைவுக்குப் பிறகு) ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி, ஆராய்ச்சி கல்வியின் மேம்பாட்டிற்காக கடுமையாக பாடுபட்ட விக்கிரம் சாராபாய் 1971ஆம் ஆண்டு மறைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக