#எளியவழிமுறை_கணிதம்_15_வினாக்கள் :-
*#கணிதம்_Shortcut :-
1..ஒரு எண்ணின் 16⅔ % என்பது 40 எனில் அந்த எண் என்ன ???
அ) 200. ஆ) 270 இ) 240. ஈ) 280
*Shortcut :- 16⅔% --> 50/3%. பின்ன வடிவில் சுருக்க கிடைப்பது 50/300 = 1/6
6 பங்கு 40 --> 6*40 = 240 என்பது விடை
2...2/3பங்கு சாமான்கள் 5% இலாபத்திலும் மீதி 2% நட்டத்திலும் விற்கப்படுகின்றன . மொத்த லாபம் ரூ.400 எனில் மொத்த சாமான்களின் மதிப்பு எவ்வளவு !?!!
அ) 10000 ஆ) 12000. இ) 20000. ஈ) 15000
*Shortcut :- 5% இலாபம் 2% நட்டம்
5% ---> 5/100 --> 1/20 பின்ன வடிவம்
2% --------> 1/50
கணக்கின்படி 2/3 * 1/20 = 2/60. = 1/30 இலாப பங்கு
1/3 * 1/50 = 1/150 நட்டபங்கு
1/30-1/150 = 5-1/150 = 4/150
4 பங்கு -- 4*100= 400 இலாபம் எனில் மொத்த பங்கு 150
150*100 = 15000 விடை ஈ√√
3).. ஒரு உணவு மேசையின் அடக்கவிலை ₹8400 ... ஆனால் அதை ஒருவர் 10 மாத தவணையில் செலுத்த நினைக்கிறார் .. மாத தவணை ₹875 எனில் வட்டி எவ்வளவு சதவீதம் ????
அ) 3%. ஆ) 5%. இ) 6% ஈ) 8%
*Shortcut:- 10 மாதம் 875 = 8750 -8400= 350 வட்டி
12 மாதங்கள் = 12*35 = 420[. வட்டி 1 வரு]
420 என்பது 840 இல் பாதி. 1/2
420 என்பது 8400 இல். 1/20 -->. சதவீதமாக்க 100 ஆல் பெருக்க 5% என்பதே விடை√√
4) .. ஒரு தொகை குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60% வட்டி கிடைக்கிறது ..₹12000 க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டி எவ்வளவு ??
அ) 2160. ஆ) 3210. இ) 3972 ஈ) 3600
*Shortcut :-
6 ஆண்டுக்கு 60%
1 ஆண்டுக்கு 10%. --
SI :- 3*120*10 = 3600-(3 year )
CI : 1200(10%) + 1200.+ 1200. = 3600
120. +. 120. + 120 = 360
+. 12 = 3600 +360 +12
= 3972
5... 25 எண்களின் சராசரி 15 .. ஒவ்வொரு எண்ணுடன் 4 ஐ கூட்டினால் புதிய சராசரி என்ன ??
அ) 16 ஆ) 16.5. இ) 19. ஈ) 60
*Shortcut :-
15 + 4 = 19. √√√
இந்த மாடல் கணக்குக்கு ஒவ்வொரு எண்ணுடன் கூட்ட ,கழிக்க, பெருக்க ,வகுக்க என்றால் பழையசராசரி யோடு +/-/×/÷ செய்துவிடுங்கள்
6)...3.தொடர் தள்ளுபடிகள் முறையே 10% , 20% என்றவாறு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி ரூ.14,400 க்கு விற்கப்பட்டது எனில்
குறித்த விலை என்ன?
அ) 17500 ஆ) 16000 இ) 18000. ஈ ) 20000
*Shortcut:-* 10% தள்ளுபடி ---> 90
20%. தள்ளுபடி ----> 80
8*9 --->72. 144. இல் 72 என்பது 2 தடவை வரும் .. இரு தள்ளுபடி எனவே 2*100*100
₹ 20000 என்பதுவிடை √√√
7)...₹12000-க்கு , 15% வட்டி வீதத்தில் ,2 ஆண்டுக்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வேறுபாடுஎன்ன ???
அ) 234. ஆ) 240. இ) 270. ஈ) 320
*#Shortcut for 2 year diffe. between SI & CI*
12000(15%) = 1800
1800(15%) = 270√√√
8)......100 எண்களின் சராசரி. 45. மறு ஆய்வின் போது 27. என்ற எண் 72 என்று தவறுதலாக குறிக்கப்பட்டுவிட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது எனில் சரியான சராசரி என்ன??
அ) 46.27. ஆ) 44.45 இ) 45.99. ஈ) 44.55
*Shortcut:-* 45. + ((27-72)/100)
45 + (-45/100). = 45- 0.45
44.55√√√
9...அருண் , உமா இவர்களின் வயது விகிதம் 5:4 . மூன்று வருடங்களுக்குப் பிறகு வயது விகிதம் 11:9 என்று ஆகிறது எனில் உமாவின் தற்போதைய வயது என்ன ???
அ) 27. ஆ) 24. இ) 28. ஈ) 40
*Shortcut :- 5:4. -----> 2----> 10:8. × 3. = 30:24
3 yr. 11:9 ------> 1---> 11:9 × 3. = 33:27
*நடப்பு விகிதம் 5-4 = 1*
*3 வரு பின். 11-9. =2. 2 ,1 ஐ குறுக்கு பெருக்கல் *மூலம் விகிதங்களை பெருக்க விகிதம் 10: 8::: 11:9 மாறும் ...3 வரு பின் என்பதால் *3 ஆல் பெருக்க 30:24 :;;33:27*
*உமாவின் வயது 24√√√*
10)..ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 10 ஆண்டுகளில் 600 தனிவட்டி கிடைக்கிறது..
ஆனால் 5 ஆண்டுகளில் அசல் தொகையானது 3 மடங்காக மாறியிருந்தால் 10 வது ஆண்டு இறுதியில் கிடைக்கும் தனிவட்டி என்ன ??
அ) 600. ஆ) 900. இ) 1800 ஈ) 1200
*Shortcut :- தொகை = 100 என்க
10 ஆண்டு --600. --60% வ.வீதம்
5 ஆண்டு 3 மடங்கு -->
R = ( 3மடங்கு-1)/5. *100 = 40%
3மடங்கு -300* 40%*10 = ₹1200
10 வது ஆண்டு இறுதியில் கிடைக்கும் ..
11)... .√103 என்பதன் தோராயமான வர்க்க மூலம் காண்க
(A) 10.105. (B) 10.31. (C) 10.13 (D) 10.15
*Shortcut :- 103 இல் அடங்கியுள்ள வர்க்க எண் 100. அதன் மூலம் 10 ... மீதி 3. (3 ஐ )வர்க்கமூல எண்ணை 2 பெருக்கி 3 ஐ வகுக்க வேண்டும்
√103 ~ 10+ (103-100/2*10)= 10+ 3/20
= 10+ 0.15= 10.15 தோராயமான வர்க்க மூலம்
12...ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 2 ஆண்டுகளில் அசலில் 9/4 மடங்கு கூடுதல் கிடைக்கிறது...எனில் கூட்டுவட்டிவீதம் என்ன ??
அ) 20%. ஆ)50%. இ) 100% ஈ)200%
*shortcut :- 2 ஆண்டுகளில் எனவே வர்க்கமூலம் எடுக்க வேண்டும்
(3/2 - 1) *100 = 1/2 *100 = 50% என்பது விடை
13.. ஒரு பேனாவை 4% நட்டத்திற்கு விற்பதற்கு 4% இலாபத்தில் விற்றால் அவருக்கு ₹6 அதிகம் கிடைக்கிறது எனில் , பேனாவின் அடக்க விலை காண்க .. ?
அ) ₹ 50. ஆ) ₹35. இ) ₹75. ஈ) ₹70
*Shortcut :- 4% ---> 1/25 ( i). 25 ,க்கு 1 நட்டம்= 24/25
4% இலாபம். 1/25. II) 25 க்கு 1 லாபம்= 26/25
26-24/ 25 = 6
2---> 6*25 = 150
1 பங்கு 150/2 = 75
75 என்பது விடை அடக்கவி்லை
#விடை தெரிவிலிருந்து
4%. --->. 4/100-->1/25
25 ஆல் நேரடியடியாக வகுபடும் விடை தெரிவு 50, 75
1). 50/25 = 2.
(50+2) -(50+2) = 4.
So 75 right... 75/25 = 3+75
(75+3)- (75-3) = 6
14). ஒரு வகுப்பில் 30 மாணவர்களின் சராசரி 18 ஆசிரியரின் வயதை சேர்க்கும் போது சராசரியில் 1 அதிரிக்கிறது எனில் ஆசிரியரின் வயது என்ன ??
அ) 48. ஆ) 35 இ) 49. ஈ) 47
*Shortcut:* 30----->. 18
1. = 19
30+19= 49
15). 5 எண்களின் சராசரி 32. ... அவ்வெண்ணில் ஒன்றை நீக்கும் போது சராசரியில் 4 குறைகிறது ... நீக்கப்பட்ட எண் யாது ..
அ) 28. ஆ) 36. இ) 49 ஈ) 48
*Shortcut :- 5. ----> 32
5-1= 4 ---- 4 குறைவு.
32+ 4*4 = 32+16 = 48√√