இந்தாண்டும் கல்வியில் இந்த நாடுதான் டாப்!
உலகின் கல்வித்திறன் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 44-வது இடத்தில் உள்ளது.
உலகப் பொருளாதார பேரமைப்பு (World Economic Forum) 2016 - 2017 ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் போட்டித்திறன் குறித்த மதிப்பீட்டையும் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 138 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ள நாடுகள் கல்வித் தரத்தில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி கல்வித்தரத்தில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், ஸ்விட்சர்லாந்து இரண்டாம் இடத்திலும், கத்தார் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்தியா 44 இடத்தில் உள்ளது. அமெரிக்கா 16-வது இடத்தில் உள்ளது. ஏமன் கடைசி இடத்தில் உள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரில் பின்பற்றப்படும் சிறப்பான கல்வி முறையே உலகளவில் கல்வித்தரத்தில் முன்னிலை வகிப்பதற்கு காரணம் என்று உலகப் பொருளாதார பேரமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டும் கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக