GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.
1. Second sales என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.
2. Online மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
3. உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10,15,20 ஆகிய தேதிகளில் மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.
4. Aggregated turnover என்பது taxable goods +exempted good +Zero rated goods+Export goods ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.மேலும் ஒரே PAN number ல் இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூ ட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
5. Tin number பெற்றவர்கள் VAT department கொடுக்கும் temporary id &password மூலம் GST portal ல் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். 10 ந்தேதிக்குள் பதிவு செய்து கொண்டால் அந்த மாதத்திற்குண்டா ITC claim செய்ய முடியும்.
6. வரி விகிதங்கள் 3 தலைப்புகளாக பிரிக்கப்பட்டு ள்ளது.
- 1)CGST - Central goods and service tax.
- 2)SGST -State goods and service tax.
- 3)IGST - Integrated goods and service tax.
இதில் IGST என்பது வேறு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது Invoice ல் குறிப்பிடவேண்டும். IGST தலைப்பில் வரி செலுத்த வேண்டும். IGST =CGST +SGST.
IGST என்பது IT based centrally managed automated mechanism to monitor the "Inter state sales and supply of goods and services.
7. வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர். Input tax credit எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.
8. Invoice ல் விலை குறிப்பிடும் போது வரி உள்ளடக்கியது என குறிப்பிடமுடியாது. வரி தணியே காண்பிக்க வேண்டும்.அப்போதுதான் அவரிடம் வாங்குபவர் ITC தன்னுடைய ரிட்டர்ன் ல் காண்பிக்க முடியும். Packing charges, freight ஆகியவற்றை வரி கணக்கிடும்போது சேர்க்க தேவையில்லை. விற்பனை தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.
9.Invoiceகள் 3 copy இருக்க வேண்டும். நிதி ஆண்டின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தொடர் எண்கள் இருக்கவேண்டும். முறையே buyer, transporter, seller ஆகியோருக்கு 3 காப்பிகள்.உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று reference number வாங்கி supplementary invoice போட்டு transport மூலம் சரக்குகள் அனுப்பலாம். Supplementary invoice ல் orginal invoice number குறிப்பிடவேண்டும். Original invoice ல் reference number குறிப்பிடவேண்டும்.
10. Capital goods க்கும் ITC எடுக்கலாம். ஆனால்அவை Income tax return ல் depreciation claim செய்யாமல் இருக்க வேண்டும். இது குறித்து ஆடிட்டரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.
11. வணிகர்கள் composite scheme மூலம் குறைந்த அளவு வரி செலுத்த முடியும். 50 லட்சம் ரூபாய் வரை "aggregated turnover" உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்பவர்கள் தகுதியானவர்கள். ஆனால் ITC எடுக்க முடியாது. சட்டம் அமலுக்கு வந்த30 நாட்களுக்கு உள்ளாக உரிய அனுமதி பெற்று செய்யலாம். வாங்கி விற்பவர்கள் மட்டும் தகுதியானவர்கள். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால் composite scheme மூலம் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் இருந்து வாங்கி வியாபாரம் செய்யும் அடுத்த வணிகர் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். முடிந்தவரை composite வணிகர்களிடம் consumer-ஐ தவிர மற்றவர்கள் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.
12. Casual trader என்பவர் ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர் ஆகும். உதாரணமாக பண்டிகை காலங்களில் மட்டுமே கல்யாண மண்டபம் மற்றும் வேறு இடங்களில் வியாபாரம் செய்பவர் ஆகும். அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால் turnover limit ஏதுமின்றி எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடையாது.
13. Gst சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நமக்கு மூலப் பொருட்கள் வழங்கும் வியாபாரிகள் composition scheme மூலம் வியாபாரம் செய்கிறாரா அல்லது ITC எடுத்து வியாபாரம் செய்கிறார்களா என 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளவேண்டும் Consumer- ஐ தவிர மற்றவர்கள் composition scheme மூலம் செய்யும் வியாபாரிகளை தவிர்ப்பது நல்லது. நாம் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். நமது வியாபாரம் மற்றவர்களைவிட குறைவாகவே நடக்கும்.
14. வரி விதித்துள்ள பொருட்களை ஒரு வியாபாரி தனது பில்லில் வரி குறிப்பிடாமல் கொடுத்தால் அவர் Composition scheme மூலம் வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
அல்லது 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
15. GST ரிஜிஸ்டர் செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. 20 லட்சம் ரூபாய் வரை job work செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள தேவை இல்லை.
16. Job work கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில் கொடுக்கவேண்டும்.180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி அபராதம் விதிக்கப்படும்.
17. Inter state self supplies such as stock transfer will be taxable as a taxable person has to take state wise registeration.
B2C means supplies to unregistered person. (i. e.)business to consumers.
B2B means supplies to registered person. (i. e.)business to business men.
18. அரசுஅறிவிக்கும் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள தவறியவர்கள் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தங்களது stock பொருட்களுக்கு Input credit கோர முடியாது. ஒரு வணிகர் ஒரு பில்லில் உள்ள ITC யை பில் தேதிகளில் இருந்து ஒரு வருடத்திற்குள் உபயோகித்து கொள்ள வேண்டும். ஒரு Invoice ல் bill amount ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 1%TDS பிடித்து அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
19. வரி செலுத்தும் போது கீழ் கண்ட GST account code எழுத வேண்டும்.
CGST -Tax 00010001,
IGST -Tax-0002 0001
SGST -Tax00030001
Interest, fees, penalty, additional tax ஆகியவற்றிற்கு தனி தனி account codeகள்உள்ளன.
20. வரியுள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் உள் மாநிலத்தில் அதற்கு வரி செலுத்த வேண்டும் அன்றிலிருந்து மாதாமாதம் படிவம் தாக்கல் செய்ய வேண்டும் வெளி மாநில வியாபாரங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு என்பது கிடையாது.
21.Every registered taxable person whose aggregated turnover during a financial year exceeds one crore rupees shall get his account audited and he shall furnish a copy of audited annual accounts and a reconciliation statement duly certified in FORM GSTR-9B,electronically through a common portal.
22. ஒரு பில்லில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் வரியுள்ள பொருட்களை
unregistered person க்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் டெலிவரி செய்யும் இடம், மாநிலம், மாநில எண் ஆகியவற்றை பில்லில் குறிப்பிட வேண்டும்.
23. வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.உள்மாநில விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.
24.GST வரி செலுத்துபவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு transport வாடகை கொடுக்கும் போது transporter கொடுக்கும் invoice ல் உள்ள tax யை ITC-யாக எடுத்துக்கொள்ளலாம்.
25. வருடாந்திர ரிட்டர்ன் அடுத்து நிதியாண்டு 31 டிசம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும். Compsition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Form GSTR-4,GSTR -4 A ஆகிய 2 படிவங்களும் GSTR-9A என ஒரு வருடாந்திர படிவமும்
தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். வெளி மாநில purchase &sales செய்யக்கூடாது.
26. ஒரு வியாபாரி வேறு மாநில Consumer அல்லது unregistered person க்கு விற்றால், அதன் மதிப்பு ரூ 2,50,000 க்கு மேல் இருந்தால்அந்த invoice details GSTR-1 ரிட்டர்னுடன் upload செய்ய வேண்டும். ரூ 2,50,000 க்கு குறைவாக இருந்தால் மாநில வாரியாக மொத்த விற்பனை மதிப்பு மட்டும் தெரிவித்தால் போதுமானது.
27. ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ. 10,000 வரையே cash,cheque, அல்லது DD மூலம் வரி செலுத்த முடியும். அதற்கு மேல் எதுவும் செலுத்த வேண்டி இருந்ததால் Internet banking, credit card, debit card, RTGS மற்றும் NEFT மூலம் செலுத்த வேண்டும். NEFT அல்லது RTGS மூலம் செலுத்துவதாக இருந்தால் சலானுடன் இணைந்து வரும் form உடன் பேங்கி ல் கொடுக்க வேண்டும்.
விற்பனையை அதிகரிக்க கொடுக்கும் இலவச பொருட்களுக்கு ம் வரி செலுத்த வேண்டும்.
28. GST slab rates are 5%,12%,18%,28%.
29. Job work "service " என்ற தலைப்பில் வரும். Job work செய்த இடத்தில் இருந்து நம் பார்ட்டிகளுக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் அவர் Unregistered job worker ஆக இருந்தால் அவருடைய முழு முகவரிநம் ரிஜிஸ்டரேசன் சர்டிபிகேட்டில் இடம் பெற வேண்டும்.
30. ஒரு unregistered jobworker - யிடம் jobwork கொடுக்கும் போது ஏற்படும் வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.
31. நாம் அனுப்பிய சரக்குகளை ஏதாவது ஒரு காரணத்துக்காக நம் பார்ட்டி திருப்பி அனுப்பினோலோ அல்லது விலை வித்தியாசம் கேட்டாலோ அல்லது அவராகவே குறிப்பிட்ட தொகையை ஒரு பில்லில் பிடித்துக்கொன்டு மீதி அனுப்பினாலோ நாம் அவருக்கு GST சட்டத்தின்படி credit note அனுப்ப வேண்டும். அதை அந்த மாத ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். நம் பார்ட்டியும் அவருடைய ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.
32.Registered taxable person அட்வான்ஸ் வாங்கினால் அதை பற்றிய தகவல்களுடன் receipt voucher கொடுக்க வேண்டும்.
33. வரியானது பைசா கணக்கில் வந்தால் nearest rupee கணக்குப்படி round off செய்து கொள்ளலாம்.
34. நாம் வாங்கிய Raw Material (taxable goods )நமக்கு வேண்டாம் என்று வாங்கியவர்களிடம் திருப்பி கொடுப்பதாக இருந்தால் 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விட வேண்டும். ITC reverse செய்ய வேண்டும்.
35. PAN number இல்லாமல் ஒரு வியாபாரி வேறு மாநில வியாபாரிக்கு பொருட்கள் அனுப்ப முடியாது
36. ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை turnover செய்பவர்கள் Invoice ல் HSN code குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து கோடி வரை turnover செய்பவர்கள் முதல் 2 degit HSN code குறிப்பிட வேண்டும்.
37. வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, வண்டியில் உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ ஐம்பதாயிரத்தை தாண்டினால் வண்டியில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.
38. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரியுள்ள பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வரியற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது.
39. 50 லட்சம் ரூபாய் வரை turnover உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்யும் உற்பத்தியாளர்கள் Composition scheme மூலம் வியாபாரம் செய்ய தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
40.GST கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருட்களை தயார் செய்யும் manufacturer மட்டுமே Composition scheme மூலம் வியாபாரம் செய்ய முடியும்.
41. அரசு சில சமயம் சில பொருட்களுக்கு "reverse charge "முறையில் வரி விதிக்கும். அப்போது வாங்குபவர்கள் தான் வரி செலுத்த வேண்டும்.
42. Aggregated turnover கணக்கிடும்போது value of supply கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது ஒரு பில்லில் உள்ள மொத்த மதிப்பு ஆகும். Commission,freight, packing charges சேர்த்து கணக்கிடபடும்.discount சேராது.
43. GST நம்பர் எடுத்திருந்தால், வரி விலக்கு பொருட்களை விற்பனை செய்தாலும் கண்டிப்பாக nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
44. GST நம்பர் எடுத்திருந்தாலே ஒவ்வொரு மாதமும் 3 முறை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். வியாபாரம் இல்லை என்றாலும் nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
45. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால், பொருளின் மதிப்பு ரூ 100 க்கு மேல் இருந்தால் அவர் Tax invoice க்கு பதிலாக வேறு பில் கொடுக்கலாம்.Section 28 .3 (b).
46. பில்லில் வரியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டால் அதை சரி செய்ய Credit note /debit note கொடுத்து சரி செய்ய வேண்டும்.
47. GST நம்பர் எடுத்தவர்கள் தான் விற்கும் பொருட்களுக்கு முன்பணம் வாங்கியிருந்தால் receipt voucher கொடுக்க வேண்டும். அதை ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். Section 33.
48. நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் ஏதாவது தவறு அல்லது விடுபட்டிருந்தாலோ, அதை சரி செய்யும் நாள் வரை உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.
49. முதன் முதலாக நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் உள்ள input credit amount (நம்மிடம் உள்ள stock பொருட்களுக்கு )provisional ஆக எடுத்துச் கொள்ளப்படும். வித்தியாசம் இருந்தால் உரிய நடைமுறை பின்பற்றப்படும். Section 36
50. GST சட்டத்தின்படி கணக்கு புத்தகங்களை, மற்ற ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வரும் 60 மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.
51. ரூபாய் ஒன்றறை கோடி வரை டர்ன்ஓவர் செய்யும் வியாபாரிகளில் 90 சதவீதம் மாநில அரசும் மீதி 10 சதவீதத்தை மத்திய அரசும் கண்காணிக்கும்.
52. 15 நாள் நோட்டிஸ் கொடுத்து நமது இடத்தில் ஆவணங்களை, பொருட்களை பார்த்து ஆடிட் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Section 63
53 GST வரி வசூலித்த பிறகு, அந்த வரியை அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
54. ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
55. GST சட்டத்தின்படி மற்ற அரசு அதிகாரிகளும் GST அதிகாரிகளுக்கு உதவ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
56. GST சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிக பட்சம் 25000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். Section 85
57. சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக என்ட்ரி செய்திருந்தாலும் அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு இருந்தால் திருத்திக்கொள்ள அபராதம் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது. Section 86
58. GST சட்டத்தின்படி முறையான ஆவணங்கள் இல்லாமல் பொருட்களை கொண்டு செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து வரி மற்றும் 100 சதவீதம் அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் செலுத்திய பிறகு வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். Section 89
59. Parnership வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒரு பார்ட்னர் விலகுவதாக இருந்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
60. Cenvat படி itc எடுக்க விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 90 நாட்களுக்கு முன்பு இருந்த பில்லில் உள்ள ITC யை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் .Section 167.
61. ஆர்டர், சம்மன் போன்றவற்றை வியாபாரியின்e-mail முகவரிக்கு அனுப்பினாலே அது பதிவு தபாலில் அனுப்பியதற்கு சமம் என்று Section 159 ல் கூறப்பட்டுள்ளது.
62. புட்டா கட்டிங் செய்வது, துணிகளுக்கு பிராசசிங் ,கேலண்டரிங்,பிரிண்டிங் செய்வது service என்ற தலைப்பில் வரும். Schudule-2
63. "Mutatis mutandis" means "the necessary changes having been made ".
Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில purchase செய்யலாம், வெளி மாநில sales செய்யக்கூடாது.
64. நாம் 30 ம் தேதி பொருட்களை அனுப்பி அது அடுத்த மாதம் 16ம் தேதி நமது பார்ட்டிக்கு கிடைத்தால் GST சட்டத்தின்படி 30ம்தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்த மாதம் நாம் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் 10 ம் தேதிக்குள் நமது பில் பார்ட்டிக்கு கிடைத்தால் மட்டுமே அவர் ITC எடுக்க முடியும். நமது பில்லும் ஏற்றுக் கொள்ளப்படும். இல்லாவிட்டால் mismatch என இருவருக்கும் notice வரும்.
65. வரி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் போது "time of supply "என்பது invoice தேதி அல்லது பணம் வந்த தேதி இதில் எந்த செயல் முதலில் நடந்ததோ அது ஏற்றுக் கொள்ளப்படும்.
66. நாம் நமது பார்ட்டிகளுக்கு தாமதமாக payment செய்து அதற்கு வட்டி, அபராதம் போன்றவற்றை செலுத்தி இருந்தால் அவையும் "Aggregated turnover "கணக்கிடும்போது சேர்த்துக் கொள்வர்.
67.Partnership firm ல் partner change நடந்தால் அதை தெரியப்படுத்தி புதிய registration செய்து கொள்ள வேண்டும்.
68.Original registration certificate கிடைத்த பிறகு, அந்த நாள் வரை ஏற்கனவே கொடுத்த invoiceகளுக்கு பதிலாக வேறு revised invoice பார்டிகளுக்கு கொடுக்கவேண்டும். Section 28
69. நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக கமிஷனர் கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கொடுத்து தணிக்கை செய்ய கமிஷனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டும். Section 68
70. Rawmaterial suppliers, manufacturers,(நாம் ),buyers ஆகிய மூவரும் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான படிவங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒவ்வொரு வரும் ITC CLAIM செய்ய முடியும். Section 64.
அனைவருக்கும் பகிர்வது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக