ர, ற பொருள் வேறுபாடுதொகு
அர - பாம்பு
அற - தெளிய, முற்றுமாக
அரவு - பாம்பு
அறவு -அறுதல்,தொலைதல்
அரம் - ஒரு கருவி
அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம்
அரி - திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன், சிங்கம்.
அறி - அறிந்துகொள்
அரிய - கிடைத்தற்கு அரிதான, கஷ்டமான
அறிய - அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள
அரன் - சிவன்
அறன் - தர்மம், அறக்கடவுள்
அரிவை - பெண்
(7 பருவத்துள் ஒன்று.
18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்)
அறிவை - அறிவாய்
அருகு - புல்வகை (அருகம்புல்), அண்மை
அறுகு - குறைந்து போதல்
அக்கரை - அந்தக் கரை
அக்கறை - ஈடுபாடு
அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்
அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை
அரைதல் - தேய்தல்
அறைதல் - அடித்தல், சொல்லுதல்
அப்புரம் - அந்தப் பக்கம்
அப்புறம் - பிறகு
அர்ப்பணம் - உரித்தாக்குதல்
அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
அரு - உருவமற்றது
அறு - துண்டித்துவிடு, அறுத்துவிடு
அருமை - சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது
அறுமை - நிலையின்மை,
ஆரு - குடம், நண்டு
ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
ஆர - நிறைய, அனுபவிக்க
ஆற - சூடு ஆற (குறைய)
ஆரல் - ஒருவகை மீன்ஆறல் - சூடு குறைதல்
இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - இறந்துபோதல், சாதல்
இரகு - சூரியன்
இறகு - சிறகு
இரக்கம் - கருணை
இறக்கம் - சரிவு, மரணம்
இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழிறங்கி வா
இரவம் - இரவு
இறவம் - இறால் மீன்
இரவி - சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில்
இறவி - இறத்தல்
இரவு - இரவு நேரம், யாசித்தல்
இறவு - மிகுதி, இறால்மீன்,
இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
இரை -ஒலி, உணவு
இறை - கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூல
இரு - இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள்
இறு - ஒடி, கெடு, சொல்லு
இரும்பு - கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம்
இறும்பு - வண்டு, சிறுமலை
இருப்பு - கையிருப்பு,
இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்
இறுப்பு - வடிப்பு
இருத்தல் - அமர்ந்திருத்தல், காத்திருத்தல்
இறுத்தல் - வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல்
இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
இரைத்தல் - ஒலித்தல், மூச்சுவாங்குதல்
இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம்
உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
உரவோர் - அறிஞர், முனிவர்
உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
உரி - தோல், மரப்பட்டை, அரைப்படியளவு,
உரிச்சொல்,கொத்துமல்லி
உறி - உறிவெண்ணெய், தூக்கு
உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை
உறு - மிகுதிஉருக்குதல் - இளக்குதல், மெலியச் செய்தல்
உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
உரை - புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல்
உறை - இடம்,
பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை
உரைப்பு - தங்குதல், தோய்தல்
உறைப்பு - காரம், கொடுமை
உரையல் - சொல்லல்
உறையல் - மாறுபாடு, பிணக்கு
உரிய - உரிமையான
உறிய - உறிஞ்ச
ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை
ஊறல் - தினவு,
ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு
ஊரு - அச்சம், தொடை
ஊறு - இடையூறு, துன்பம், காயம்
உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை
எரி - தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை, கந்தகம்
எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல்
ஏர - ஓர் உவமஉருபு
ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)
ஏரி - நீர்நிலை, குளம்
ஏறி - உயர்ந்த, மேலே ஏறிஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடுஒறு - தண்டி, அழி, இகழ்
ஒருத்தல் - ஆண் விலங்குகளின் பொதுப்பெயர்
ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல்
ஒருவு - நீங்கு
ஒறுவு - வருத்தம், துன்பம்கரடு - மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது
கறடு - தரமற்ற முத்துகரம் - கிரணம், விஷம், செயல், கை, கழுதை
கறம் - கொடுமை, வன்செய்கைகரவு - பொய், வஞ்சனை, மறைவு
கறவு - கப்பம்
கரவை - கம்மாளர் கருவி
கறவை - பாற்பசு
கரி - அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை
கறி - இறைச்சி, மிளகு
கரத்தல் - மறைத்தல்
கறத்தல் - கவர்தல், பால் கறத்தல்
கருத்து - எண்ணம்
கறுத்து - கருநிறங்கொண்டு
கரு - சினை, பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு, அடிப்படை
கறு - சினம், வைராக்கியம், கோபம், அகங்காரம்
கருப்பு - பஞ்சம்
கறுப்பு - கருநிறம், பேய், கோபம், குற்றம்,
கறை
கரை - எல்லை, தடுப்பு, ஓரம்
கறை - அழுக்கு, குற்றம், ரத்தம்
கரையான் - மீனவன்
கறையான் - செல் (ஓர் உயிரி)
கர்ப்பம் - கருவுறுதல், உள், சினை
கற்பம் - கஞ்சா, அற்பம், ஊழிக்காலம், தேவலோகம், திருநீறு, ஆயுள், மந்திர சாஸ்திரம், 432 கோடி, மூப்பு நீக்கும் மருந்து
கர்ப்பூரம் - சூடம், பொன், மருந்து, கூடம்
கற்பூரம் - பொன்னாங்கண்ணி
காரி - கரிக்குருவி. காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனி, விஷம், ஒரு வள்ளல், வாசுதேவன்
காறி - காறிஉமிழும் கழிவு
காரு - வண்ணான், தேவதச்சன்
காறு - காறுதல் (காறி உமிழ்), அளவு
காரை - ஒரு வகை செடி, ஒரு வகை மீன், சிமெண்ட் மணல் சேர்ந்த கலவை
காறை - ஒரு கழுத்தணி
கீரி - ஓர் உயிரினம் கீறி - பிளந்து, அரிந்து
குரங்கு - ஒரு விலங்கு
குறங்கு - தொடை, கொக்கி
குரவர் - கடவுள், குரு, பெரியோர், அரசர்
குறவர் - ஒரு ஜாதியினர்
குரவை - கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி
குறவை - ஒருவகை மீன்
குரத்தி - தலைவி, குருவின் மனைவி
குறத்தி - குறத்தி ஜாதிப் பெண்
குருகு - பறவை, குட்டி, கொக்கு, உலைத்துருத்தி, உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை
குறுகு - அண்மைப்படுத்து
குருகினம் - பறவை இனம்
குறுகினம் - நெருங்கினோம்
குரை - சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை
குறை - குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை
குரு - ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை, இரசம்
குறு - குறுகு
கூரல் - ஒரு மீன், பறவை இறகு
கூறல் - சொல்லுதல், விற்றல்
கூரை - சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில்
கூறை - புது ஆடை, சீலை
கூரிய - கூர்மையான
கூறிய - சொன்ன
கூர - குளிர்ச்சி மிக கூற - சொல்ல, வேண்டல்
கோரல் - கூறுதல்
கோறல் - கொல்லல்
கோரை - புல்வகை
கோறை - குவளை, பொந்து
கோரல் - சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம்
கோறல் - குளிர் காற்று, மழை
சிரை - சிரைத்தல், முடிநீக்கல்
சிறை - சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை
சீரிய - சினந்த, சிறந்த,
சீராய் சீறிய - சினந்த
சுரா - கள் சுறா - சுறா மீன்
சூரல் - மூங்கில், பிரம்பு
சூறல் - தோண்டல்
சுருக்கு - வலை, சுருக்கம், கட்டு, பூமாலை, வகை, குறைவு, நெய்த்துடுப்பு
சுறுக்கு - விரைவு
செரு - போர், ஊடல்
செறு - வயல், பாத்தி, குளம்
செருநர் - பகைவர், படைவீரர்
செறுநர் - பகைவர்
சொரி - தினவு, அரிப்பு, பொழி
சொறி - சிரங்கு, சொறிதல்
தரித்தல் - அணிதல், பொறுத்தல், தங்கல், தாமதித்தல், தாங்குதல்
தறித்தல் - வெட்டுதல்
தரி - அணி, அணிந்துகொள்
தறி - தூண், ஆப்பு, நெசவு இயந்திரம், முளைக்கோல்
தருதல் - கொடுத்தல்
தறுதல் - இறுகக்கட்டுதல்
தாரு - மரம், தேவதாரு, பித்தளை
தாறு - குலை, அங்குசம், முள், இரும்பு, முள்கோல்
திரம் - மலை, உறுதி, நிலை, பூமி
திறம் - உறுதி, நரம்புள்ள வீணை, கூறுபாடு, சுற்றம், குலம், பக்கம், வல்லமை, ஒழுக்கம், மேன்மை, வரலாறு, காரணம்
திரை - அலை, கடல், திரைச்சீலை
திறை - கப்பம்
துரவு - கிணறு
துறவு - துறத்தல், துறவறம்
துரை - பெரியோன், தலைவன்
துறை - நீர்த்துறை, வழி, இடம், நூல், கடற்கரை, உபாயம், பாவினம்
துரு - களிம்பு
துறு - கூட்டம், நெருக்கம்
தூரல் - தூருதல், வருத்தம்
தூறல் - மழைத்துளி, பழி சொல்லுதல்
தூரன் - குலத்தின் பெயர் தூறன் - மூர்க்கன்
துரு - வீதி துதறு - அழி
தேரார் - கல்லாதவர், கீழ்மக்கள், பகைவர்
தேறார் - அறிவிலார், பகைவர்
தேரி - மணல் திட்டை, மணல் குன்று
தேறி - தேர்ச்சி பெற்று, தெளிந்து
நரை - நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை
நறை - தேன், சாதிக்காய், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக்கொடி, குற்றம்
நாரி - பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன்,
நாறி - கற்றாழை
நிருத்தம் - கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை
நிறுத்தம் - நிறுத்தும் இடம்
நிரை - பசு, ஒழுங்கு, வரிசை
நிறை - கற்பு, அளவு, அழிவின்மை, நீதி, வரையறை, திண்மை, நிரப்பு
நூரல் - அவிதல், பதங்கெடுதல்
நூறல் - அவித்தல்
நேரி - அமுக்கு, நசுக்கு, அழுத்து
நேறி - வழி, கோயில், கற்பு
மரத்தல் - விறைத்தல் மறத்தல் - மறதி, நினைவின்மை
மரம் - தாவர வகை, மூலிகை, மரக்கலம்,பறைவகை
மறம் - வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம்.
மரி - விலங்குகளின் குட்டி
மறி - தடை செய்
மரித்தல் - இறத்தல், சாதல்
மறித்தல் - தடுத்தல்,திரும்புதல், அழித்தல்.
மரை - மான்
மறை - வேதம் (எ.கா:- அறம் பொருள், இன்பம் வீடு என்கிற நால் வேதங்கள்)
மரு - மலை, பாலைநிலம், மணவிருந்து, நீரில்லா இடம், மருக்கொழுந்து.
மறு - குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்
மருப்பு - கொம்பு, யானைத் தந்தம், யாழ்த்தண்டு.
மறுப்பு - எதிர்ப்பு
மருகு - வாசனை தாவரம்
மறுகு - சிறியதெரு
மாரன் - மன்மதன், காமன்
மாறன் - பாண்டியன், சடகோபாழ்வார்
முரி - பாலைநிலம், நொய், சிதைவு.
முறி - ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு
முருக்குதல் - அழித்தல், உருக்குதல்.
முறுக்குதல் - சுழற்றுதல், திரித்தல்.
வரம் - இறைவன் கொடுப்பது, வேண்டும் பொருள், தெய்வ ஈகை, மேன்மை, விருப்பம்.
வறம் - வற்றுதல், வறட்சி, பஞ்சம், நீரின்மை, வறுமை, வெம்மை.
வரவு - வருமானம், வழி வறவு - கஞ்சி
வரப்பு - எல்லை, வரம்பு
வறப்பு - வறட்சி, வறுமை, வற்றுதல்
விரகு - விவேகம், உபாயம், உற்சாகம், புத்தி, கபடம்.
விறகு - எரிகட்டை
விரலி - மஞ்சள்
விறலி - மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடும் பெண், 16 வயதினள்.
விரல் - மனித உடலில் உள்ள உறுப்பு
விறல் - பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி.
விராய் - விறகு
விறாய் - செருக்கு, இறுமாப்பு
வெரு - அச்சம்
வெறு - வெறுத்துவிடு
வெரல் - மூங்கில் வெறல் - வெல்லுதல், வெற்றி கொள்ளல்
விரை - விரைந்துசெல் விறை - மரத்துப்போ(தல்)
பரட்டை - பரட்டைத்தலை
பறட்டை - செழிப்பற்றது
பரதி - கூத்தாடுபவன்
பறதி - அவசரம், பறத்தல்
பரத்தல் - அலமறுதல், மிகுதல்
பறத்தல் - பறந்துசெல்லல்
பரம்பு - வயலை சமப்படுத்தும் பலகை
பறம்பு - பாரியின் மலை
பரல் - விதை, பருக்கைக்கல்
பறல் - பறவை
பரவை - கடல், ஆடல், பரப்பு
பறவை - பறப்பவை, ஒரு நோய்
பரி- குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி
பறி - பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு,ஓலைப்பாய்
பரித்தல் - காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல்,
பறித்தல் - பிடுங்குதல்
பரிவு - அன்பு, துன்பம், இரக்கம்
பறிவு - கழிவு, அதிர்தல்
பருகு - குடி, அருந்து
பறுகு - பறட்டை, அன்பு, பக்குவம்
பரை - சிவசக்தி
பறை - இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல்
பாரை - கடப்பாரை
பாறை - கற்பாறை
பிரை - உறைமோர், பயன்
பிறை - பிறைச்சந்திரன்
பீரு - புருவம்,அச்சமுள்ளோன் பீறு - கிழிவு
புரம் - மாடம், கோயில், இராஜதானி, ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம்
புறம் - இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி,பின்புறம், முதுகு
புரவு - கொடை, நிலம், செழுமை, காத்தல்,அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம்
புறவு - காடு, புறா,
பெருக்கல் - நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல்,மிகுவித்தல்
பெறுக்கல் - அரிசி, மிகுத்தல்
பொரி - நெற்பொரி, பொரிதல்
பொறி - தீப்பொறி, அறிவு, எழுந்து, வரிவண்டு
பொரித்தல் - வறுத்தல், குஞ்சு பொரித்தல்
பொறித்தல் - எழுதுதல், தீட்டுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல்
பொருப்பு - மலை, பக்கமலை
பொறுப்பு - பாரம், பொறுமை
பொரு - போர்
பொறு - பொறுத்திரு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக