வியாழன், 18 மே, 2017

200க்கும் மேற்பட்ட சொற்கள் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்தல்

200க்கும் மேற்பட்ட சொற்கள் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்தல் பகுதிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

சூகம் – தாமரை
சூலை – கொடிய வயிற்றுநோய்
சூழ்ந்துகொளல் – நட்பாக்கிக் கொள்ளுதல்
சூழ்வார் – அறிவுடையார்
சூழ்விதி – நல்வினை
சூருடை கானகம் – அச்சம் தரும் காடு
சூல்உளை – கருவைத்தாங்கும் துன்பம்
கூனல் – வளைந்த
கூகை – கோட்டான்
கூம்பும் – வாய்ப்பற்ற
கூவா முன்னர் – அழைக்கும் முன்னர்
கூர – மிக
கூற்று – எமன்
கூண்ட – சேர்ந்த
மூத்த – முதிர்ந்த
இடிக்கும் – கடிந்துரைக்கும்
இடிப்பார் – கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
இடித்தல் – கடிந்துரைத்தல்
இன்னா – தீய
இன்னா – தீங்கு
இன்னாச்சொல் – தீய சொல்
இன்னல் – துன்பம்
இன்புறூஉம் – இன்பம் தரும்
இன்மை – வறுமை
இன்சொல் – இனியசொல்
இன்சொலன் – இனிய சொற்களைப் பேசுபவன்
இன்சொலினிதே – இனிய சொற்களைப் பேசுதலே
இனிய – நன்மை
இனிதின் – இனிமையானது
இந்து – நிலவு
இந்து – சந்திரன்
இந்தனம் – விறகு
இகழ்வார் – இழிவுபடுத்துவோர்
இகுசு – மூங்கில்
இகல் – பகை
இயைந்தக்கால் – கிடைத்தபொழுது
இமையவர் – தேவர்
இடையல் – துகில்
இழைத்துணர்ந்து – நுட்பமாக ஆராய்ந்து
இசைபட – புகழுடன்
இசைபெறுதல் – புகழ்பெறுதல்
இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்
இறை – தலைவன்
இறைஞ்சி – பணிந்து
இறைஞ்சி – வணங்கி
இறைச்சி – வணங்கி
இதனி – வெற்றிலை
இம்மை – இப்பிறவி
இமயன் – கூற்றுவன்
இட்டீடு – விவாதம்
இடுக்கண் – துன்பம்
இடர் – இன்னல்
இடர் – துன்பம்
இடும்பை – துன்பம்
இடங்கர் – முதலை
இழுக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
இளிவன்று – இழிவானதன்று
இளவல் – தம்பி
இவுளி – குதிரை
இவண்நெறியில் – இவ்வழியில்
இரந்து செப்பினான் – பணிந்து வேண்டினான்
இருநிறம் – அகன்ற நெஞ்சு
இருநிலம் – பெரிய உலகம்
இருநிலம் – பெரிய நிலம்
இருநிலம் – பெரியழகு
இருப்பாணி – இரும்பு ஆணி
இருப்புமுளை – ஆணியின் நுனி
இருத்தி – இருப்பாயாக
இரும்பனை – பெரிய பனை
இரும்பொறை – பெரும்பொறுமை
இரட்சகர் – காப்பவர்
இரட்சித்தானா? – காப்பாற்றினானா?
இருள் – பகை
இரவி – சூரியன்
இறந்தார் – வரம்பு கடந்தவர்
இறப்பினை – பிறர் செய்த துன்பத்தை
இறுவரை – முடிவுக்காலம்
இல் – இல்லை
இல்லார் – ஏழை
இணக்கவரும்படி – அவர்கள் மனம் கனியும்படி
ஈயப்படும் – அளிக்கப்படும்
ஈயும் – அளிக்கும்
ஈன்றல் – தருதல், உண்டாக்குதல்
ஈனும் – தரும்
ஈனும் – தரும்
ஈனல் – கதிர்
ஈகம் – சந்தனமரம்
ஈர்கிலா – எடுக்க இயலாத
ஈர்த்து – அறுத்து
ஈதல் – கொடுத்தல்
ஈம் – தண்ணீர்
ஈட்டம் – கூட்டம்
ஈட்டம் – தொகுதி
ஈங்கதிர் – சந்திரன்
ஈஞ்சு – ஈச்சமரம்
ஈரிருவர் – நால்வர்
ஈறு – அழிவு
ஈறு – எல்லை
ஈறிலி – கடவுள்
ஈண்டிய – ஆய்ந்தறிந்த
ஈண்டு – இவ்விடம்
யாக்கை – உடம்பு
யார் மாட்டும் – எல்லாரிடமும்
யாணர் – புதுவருவாய்
உய்ய – பிழைக்க
உய்த்து – செலுத்தி
உய்ம்மின் – பிழைத்துக்கொள்ளுங்கள்
உயர்ந்தன்று – உயர்ந்தது
ஊன் – தசை
உன்னி – நினைத்து
உன்னேல் – நினைக்காதே
உகு – சொரிந்த
உகந்த – விரும்பிய
ஊகம் – பெண்குரங்கு
உபகாரத்தான் – பயன்கருதாது உதவுபவன்
உபாயம் – வழிவகை
உடையார் – செல்வர்
உழை – மீன்
உழை – ஒருவகை மான்
உறைதல் – தங்குதல்
உலையா உடம்பு – தளராத உடல்
உதயம் – கதிரவன்
ஊதம் – யானைக் கூட்டம்
உதிரம் – குருதி
உம்பரார் பதி -தேவர்தலைவன்
உடற்சி – கோபம்
உழுபடை – வேளாண்மை செய்யப் பயன்படும்;
உழுவை – புலி
உழுவை – ஆண்புலி
ஊழி – உலகம்
உசா – ஆராய்தல்
ஊசி – எழுத்தாணி
ஊசலாடுற்றாள் – மனம் தடுமாறினாள்
உள்வேர்ப்பர் – மனத்தினுள் மறைத்து வைத்திருப்பர்
உள்ளி – வெங்காயம்
உளவாக்கல் – உண்டாக்குதல்
உவந்து செய்வோம் – விரும்பிச் செய்வோம்
உவப்ப – மகிழ
உவணி – வாள்
உரு – வடிவம்
உரன் – திண்ணிய அறிவு
உருகுவார் – வருந்துவார்
உரும் – இடி
உரவோர் – மனவலிமையுடையோர்
ஊறு – புலன்களின் இயல்பு
ஊற்றுக்கோல் – ஊன்றுகோல்
உற்றுழி – தேவையான பொழுது
உறுதி – உளஉறுதி
உறுபொருள் – அரசு உரிமையால் வரும்பொருள்
உல்குபொருள் – வரியாகு வரும் பொருள்
உலகம் – உயர்ந்தோர்
உண்டனெம் – உண்டோம் என்பதற்குச் சமமானது
உண்பொழுது – உண்ணும்பொழுது
உணா – உணவு
உணர்வு – நல்லெண்ணம்
உணர்வு – அறிவியல் சிந்தனை
நூற்கழகங்கள் – நூலகங்கள்
நயன் – நேர்மை
நயன்ஈன்று – நல்ல பயன்களைத் தந்து
நயனம் – கண்கள்
நயம் – இன்பம்
நயம்இல – இனிமையற்ற
நன்னுதல் – அழகிய நெற்றி
நன்றி – உதவி
நன்றி – நன்மை
நனி – மிகுதி
நுந்தை – நும் தந்தை
நுகர்வு – இன்பதுன்ப நுகர்ச்சி
நகுதல் – சிரித்தல்
நகல்வல்லர் – சிரித்து மகிடிநபவர்
நாயகன் – தலைவன்
நாடி – விரும்பி
நாத்தொலைவில்லை – சொல் சோர்வின்மை
நாமம் – பெயர்
நாமம் – பெயர்
நாழி – அளவுப்பெயர்
நாளிகேரம் -தென்னை
நாவாய் – படகு
நாவாய் – படகு
நாவலன் – புலவர்
நாற்றம் – நறுமணம்
நாண் – நாணம்
நாணிடவும் – வெட்கப்படவும்
நகை- புன்னகை
நகையுள்ளும் – விளையாட்டாகவும்
நடை – சாலையில் செல்லும் வண்டிகள்
நுதல் – நெற்றி
நுதல்விழி – நெற்றிக்கண்
நம்பி – தருமி
நமன் – எமன்
நட்டல் – நட்புக்கொள்ளுதல்
நடுநாள் யாமம் – நள்ளிரவு
நடலை – துன்பம்
நடுவன் – எமன்
நீடிய – தீராத
நீக்கல் – அழித்தல்
நீர் – கடல்
நீர்வார்கண் – நீரொழுகும் கண்கள்
நிறை – சால்பு
நிறை – எடை
நிறை – ஒழுக்கம்
நிறை ஒழுக்கம் – மேலான ஒழுக்கம்
நிறைகோல் – துலாக்கோல்
நிலைபெறுத்தல் – காத்தல்
நித்தம் – நாள்தோறும்
நிதி – செல்வம்
நிவேதனம் – படையலமுது
நிழற்றிய – நிழல் செய்த
நீங்கலா – இடைவிடாது
நீரவர் – அறிவுடையோர்
நிற்க – கற்றவாறு நடக்க
நில்லாமை – நிலையாமை
நிணம் – கொழுப்பு(இறைச்சி)
நவ்வி – மான்
நவில்தொறும் – கற்கக்கற்க
நற்றிறம் – அறநெறி
நறவம் – தேன்
நல்கினார் – அளித்தார்
நல்லை – நல்லதாக இருக்கிறாய்;
நண்பு – நட்பு
நுணங்கிய – நுட்பமாகிய
நுணங்கிய நூல் – நுண்ணறிவு நூல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக