அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,663 ஆசிரியர் வேலை: டிஆர்பி வெளியீடு.
2016-2017-ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை மற்றும் இதர துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித்தெரிவிற்கு தகுதியானவர்களிடமிருந்து இன்று புதன்கிழமை (மே 10) முதல் 30.05.2017 பிற்பகல் 11.59 மணி வரை இணையவழியாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1663
நடப்புப் பணியிடங்கள் - 1636
பின்னடைவுப் பணியிடங்கள் - 27
பதவிக்குறியீடு: 17PG
பணி: முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1
பணித்தொகுதி: தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1.
தமிழ் - 218
2. English - 231
3. Mathematics - 180
4. Physics - 176
5. Chemistry - 168
6. Botany - 87
7. Zoology - 102
8. History - 146
9. Geography - 18
10. Economics - 139
11. Commerce - 125
12. Political Science - 24
13. Bio-Chemistry - 01
14. Micro Biology - 01
15. Home Science - 7
16. Telugu - 01
17. Physical Director Grade-I - 39
சம்பளம்:
மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800
தேர்வு கட்டணம்:
ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. இதனை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் ஆன்லைனிலேயே செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் https://trbonlineexams.in என்ற இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வில் தேர்வர்களின் முதன்மை பாடத்தில் இருந்து 110 கேள்விகள், கல்வியியல் தொடர்பாக 30 கேள்விகள், பொது அறிவு பகுதியில் 10 கேள்விகள் வீதம் மொத்தம் 150 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 150. தேர்வு நேரம் 3 மணி நேரம். எழுத்துத்தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் (வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு, பணி அனுபவம்) அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:
02.07.2017
ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கும் தேதி:
10.05.2017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
30.05.2017
மேலும் முழுமையான விவரங்களை தமிழில் அறிய
http://trb.tn.nic.in/PG2017/09052017/Notification-Tamil.pdf,
ஆங்கிலத்தில் அறிய http://trb.tn
.nic.in/PG2017/09052017/Notification-English.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக