செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

வீரமாமுனிவர்(1680--1746)

வீரமாமுனிவர்(1680--1746) 

1) இத்தாலி நாட்டு கத்தோலிக்க மதகுரு.
2) இயற்பெயர் – கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி
3) சுபிதீபக் கவிராயரிடம் தமிவ் கற்றார்
4) தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர்
5) எ,ஒ மீது புள்ளிவைத்தால் குறில் என்றும் புள்ளி இல்லை என்றால் நெடில் என்றும் இருந்ததை மாற்றியவர்
6) நிறுத்த புள்ளிகள் முற்றுப் புள்ளிகள் கண்டறிந்தவர்
7) வேதியர் ஒழுக்கம், வேதவிளக்கம் உரை நடை நூல்களை எழுதினார்.
8) திருச்சபை பேதகம் நூலுக்கு மறுப்பு நூல் பேதகம் மறுத்தல்
9) இதன் இறுதியில் பொருளகராதி உள்ளது.
10) தமிழ் நூல்களில் பொருளகராதி இடம் பெற்ற முதல் நூல்.
11) பரமார்த்த குருகதை நகைச்சுவை ததும்பும் சிறுகதை நூல்
12) சிறுகதை வளர்ச்சியில் முதலிடம் பெற்றது
13) அது பிரஞ்ச்,ஆங்கிலம்,ஜெர்மன், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது.
14) இவரை உரைநடை இலக்கியத்தின் முன்னோடி என்பர்.
15) ஞானக்கண்ணாடி,வாமன்கதை என்ற உரைநடை நூல்கள் இவரால் எழுதப்பட்டன
16) குட்டித் தொல்காப்பியம் எனப்படும் தொன்னூல் விளக்கம் இவர் இயற்றியது.
17) 370 நூற்பாவில் ஐந்திலக்கணம் கூறுவது.
18) பேச்சுத்தமிழ் வழக்காற்றை கொடுந்தமிழ் இலக்கணம் என்று இலத்தீன் மொழியில் இயற்றியுள்ளார்.
19) இதுவே கால்டுவெல் ஒப்பிலக்கணத்திற்குப் பெரிதும் துணைபுரிந்தது.
20) செந்தமிழ்த் தேசிகர் என்றபட்டம் இவருக்கு ன்நூலால் கிட்டியது.
21) முதல் இரண்டு குறள்களை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.
22) ஆகவே மொழிபெயர்ப்புத் துறையின் முன்னோடியாக விளங்குகிறார்
23) பெயர்,பொருள்,தொகை,தொடை என நான்காகப் பகுத்து சதுரகராதியை இயற்றினார்.
24) தமிழில் தோன்றிய முதல் அகராதி இதுவே.
25) 9000 சொற்கள் கொண்ட தமிழ்—இலத்தீன் அகராதி இவருடையது.
26) 4353 சொற்கள்கொண்ட போர்ச்சுகீசியம் அகராதி இவர் இயற்றியது.
27) அதனால் இவரைத் தமிழ் அகராதியின் தந்தை என்பர்
28) சுகிர்தமேரி சொன்ன வளவந் கதையைத் தேம்பாவணி என்னும்  காப்பியமாக  இயற்றினார்.
29) இயேசுவின் தந்தை வளவன் கதையைக் கூறுவது.
30) இது மூன்று காண்டம்,36 படங்கள் கொண்டது.
31) 3615 விருத்தப் பாக்களைக் கொண்டது.
32) அதனால் மதுரைத்தமிழ்ச் சங்கத்தார் வீரமாமுனிவர் என்ற பட்டத்தை வழங்கினர்.
33) கொள்ளிடத்தின் வடகரையில் ஏலாக்குரிச்சி என்னும் ஊரில்1717ல் மேரிமாதாவிற்கு கோவில் கட்டினார்
34) அவ்விடத்திற்கு திருக்காவலூர் எனப்பெயரிட்டார்.
35) அந்த அம்மன் மீது திருக்காவலூர் கலம்பகம் என்னும் பிரபந்தம் பாடினார்
36) மேலும் தேவமாதாமீது அடைக்கல நாயகி வெண்கலிப்பா. என்னும் பிரபந்தம் பாடினார்
37) தேவாரப்பாங்கில் கருணாம்பாப் பதிகம்,அன்னை அழுங்கல் அந்தாதியும் பாடினார்.
38) தமிழில் உள்ள நல்ல நீதிகளைத் தொகுத்து தமிழ் செய்யுட் தொகை என்ற நூலை வெளியிட்டார்.
39) இவர் இயற்ரிய கித்தேரியம்மாள் அம்மானை பாமரரும் படித்து இன்புறுவர்.
40) இவர் 66 ஆம் வயதில் அம்பலக்காட்டில் ஆவிதுறந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக