சனி, 25 பிப்ரவரி, 2017

ஓர் *ஆசிரியர்* என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று *மாணவர்கள்* நினைக்கின்ற கருத்து...

ஓர் *ஆசிரியர்* என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று *மாணவர்கள்* நினைக்கின்ற கருத்து...
******************

1. எங்களை *அடிக்க* கூடாது.

2. எங்களுக்கு *பாடம்* நன்றாக சொல்லித் தர வேண்டும்.

3. வகுப்பறையை *மகிழ்ச்சியாக* வைத்துக் கொள்ள வேண்டும்.

4. நல்ல *பண்புடைய* நபராக இருக்க வேண்டும்.

5. எங்கள் *வகுப்பறையிலேயே* இருக்க வேண்டும்.

6. புது புது நற்-*கதைகள்* சொல்ல வேண்டும்.

7. புது புது *பாட்டுகள்* சொல்லி தர வேண்டும்.

8. *அன்பாக* இருக்க வேண்டும்.

9. நண்பர்களோடு *விளையாட* அனுமதிக்க  வேண்டும்.

10. எங்கள் ஆசிரியர் எந்த *தவறும்* பண்ணக்கூடாது.

11. பிற ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்; பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும்.

12. எங்களோடு *மகிழ்ச்சியாக* கலந்துரையாட வேண்டும்.

13. வகுப்பறையில் *தொலைபேசியில்* பேசக் கூடாது.

14. எங்களை *சுற்றுலாவுக்கு* கூட்டிச் செல்ல வேண்டும்.

15. எங்கள் ஆசிரியர் எல்லாரிடமும் *பணிவுடன்* நடந்து கொள்ள வேண்டும்.

16. எங்களுக்கு நல்ல *பழக்க-வழக்கங்களை* சொல்லிக் கொடுக்க வேண்டும்.

17. எங்களை *தூய்மையாக* இருக்க பழக்கப்படுத்த வேண்டும்.

18. எங்கள் மேல் *அக்கரையுடன்* இருக்க வேண்டும்.

19. எங்களை *புரிந்து* கொள்ள வேண்டும்.

20. எங்களை *பாதுகாக்க* வேண்டும்.

21. எங்கள் ஆசிரியர் *எங்களைப்போல* (குழந்தையை போல) இருக்க வேண்டும்.

22. எங்களை *திட்ட* கூடாது.

23. எங்களை *அமைதிப்படுத்த*
வேண்டும்.

24. எங்கள் பெற்றோரிடம் *அன்பாக* பேச வேண்டும்.

25. பள்ளியில் *விளையாட்டு*  ஆசிரியராகவும் இருக்க வேண்டும்.

26. எங்கள் ஆசிரியருக்கு *கெட்ட-பழக்கம்* இருக்க கூடாது.

27. பாடம் நடத்தும் போது *செல்லில்* பேசிக் கொண்டே வெளியே போக கூடாது.

28. அவர் *நல்லாசிரியர்* என்ற பட்டம் வாங்க வேண்டும்

29. அவர் *நற்சிந்தனை* உடையவராக இருக்க வேண்டும்.

30. அவருக்கு *நாங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் தெரிந்தவராக* இருக்க வேண்டும்.

மாணவர்கள் விரும்பும் நல்லாசிரியர்களாக *நாம்* இருக்க முயற்சி மேற்கொள்வோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக