புதன், 8 பிப்ரவரி, 2017

Tet Tamil 001

Tet Tamil 001

பொதுத் தமிழ்

* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்

* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்

* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்

* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்

* மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி

* மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை

* மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

* கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை

* மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்

* திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை

* தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை

* தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்

* திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்

* குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்

* குமரகுருபரர் வாழ்ந்த காலம் - கி.பி.16

* நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்

* மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்

* வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்

* வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி

* தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்

* ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938

* திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18

* அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

* திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்

* முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்

* ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்

* திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.

* கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை

* இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்

* வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்

* வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6

* வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை

* சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்

* நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்

* வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல

* காராளர் என்பவர் - உழவர்

* ஆழி என்பதன் பொருள் - மோதிரம்

* வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்

* கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்

* தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்

* யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்

* விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு

* விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது

* பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி

* மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு

* திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி

* பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்

* மதுரை என்பது - இடப் பெயர்

* மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது - தெற்குகோபுரம்

* பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது - முத்து

* மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் - செல்லத்தம்மன் கோயில்

* நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை

* மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்

* மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்

* பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு

* மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி

* மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்

* மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891

* சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19

* முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30

* இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்

* நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் - பம்மல் சம்பந்தனார்

* மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்

* தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி

* தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி

* உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக