செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

TET: 6 TH Tamil வினா - விடை

TET: 6 TH Tamil வினா - விடை

1.இராமலிங்க அடிகளார் கடலுர் மாவட்டம் எந்த ஊரில் பிறந்தார்?-மருதூரில்

2. இராமலிங்க அடிகளார் சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த காரணம் என்ன?

 1.உணவளிக்க    2.அறிவுநெறியை வளங்க    3.மதங்களின்   நல்லிணக்கத்திற்காக

3. இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலம் என்ன?-1823-1874

4.தம் கொள்கைகு என தனிக்கொடி அமைத்தவர் யார்?- இராமலிங்க அடிகளார்

5. இராமலிங்க அடிகளார் தம் கொள்கைகு என தனிக்கொடி அமைத்தார் அதன் நிறம் என்ன?-வெள்ளை மற்றும் மஞ்சள்

6. இராமலிங்க அடிகளார் பாடலினை தொகுத்தவர் யார்?-தொழுவூர் வேலாயுத முதலியார்

7. இராமலிங்க அடிகளார் பாடல்கள் எத்தனை திருமுறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?-ஆறு

8.சித்தி வளாகம் என்ற நிறுவனத்தை நிறுவியவர்?-இராமலிங்க அடிகளார்

9.9ஆம் வயதில் பாடல் புனையும் திறன் பெற்றவர் யார்?- இராமலிங்க அடிகளார்

10.சென்னையில் கந்தகோட்டத்து  இறைவனை இராமலிங்க அடிகளார் வணங்கி பாடிய பாடலின் தொகுப்பு என்ன?-தெய்வமனி மாலை

11. இராமலிங்க அடிகளார் இயற்றிய நூல்களில் கற்போரை மனமுருகச் செய்யும் நூல் என்ன?-வடிவுடை மாணிக்க மாலை

12. இராமலிங்க அடிகளார் திருவொற்றியூர் சிவபெருமானின் மீது பாடிய நூல் என்ன?-எழுத்தறியும் பெருமான் மாலை

13.புரட்சி துறவி என்று அழைக்கப்பட்டவர்?-இராமலிங்க அடிகளார்

14.போரில்லா உலகைப் படைக்க விரும்பியவர்?-இராமலிங்க அடிகளார்

15.தமிழ்மொழி இறவாத நிலை தரும் என்று கருதியவர்?- இராமலிங்க அடிகளார்

16.தை பூச திருநாள் அன்று இறந்தவர்?- இராமலிங்க அடிகளார்

17.ஒரு நாளைக்கு இரண்டரை நாளிகை தூங்க பழ்கிக்கொண்டால் ஆயிரம் ஆண்டுகள் வாழலாம் என்று கூறியவர்?- இராமலிங்க அடிகளார்

18. இராமலிங்க அடிகளார் வடலூரில் எதை அமைத்தார்?-சத்திய தருமச்சாலை

19.தொல்காப்பியத்தில் தவறு உண்டு எனக்கூறியவர்?-இராமலிங்க அடிகளார்

20.தமிழ்நாட்டில் முதன்முதலில் மும்மொழிப்பாடச்சாலை அமைத்தவர்?- இராமலிங்க அடிகளார்(தமிழ்,வடமொழி,ஆங்கிலம்)

21.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் இவ்வரிகள் இடம் பெற்ற நூல்,ஆசிரியர் யார்?-திருவருட்பா, இராமலிங்க அடிகளார்

22.அன்போடு இயைந்த வழக்கென்ப---ஆருயிர்க்கு------

என்போடு----இயைந்த-----  ---தொடர்பு------.(குறளை நிறைவு செய்க)

23.கருணை,வீரம் இரண்டிற்கும் காரணம்---அன்பு-------(குறள்)

24.2014க்கு ஆன திருவள்ளுவர் ஆண்டு என்ன?2045

25.பைபிள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

26.திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?-107

27.திருக்குறளை ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிப்பெயர்த்தவர்?-கார்ல் கிராலின்,ஏரியல்

28.கடுகை துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்.     என்று திருக்குறளை கூறியவர்?-இடைக்காடர்

29.சுருங்க சொல்லி விளங்க வைப்பது திருக்குறள் என்று கூறியவர்?-அரசில் கிழார்

30.ஓதற்கு எளிதாய் உண்ர்தற்கு அரிதாகி என்று திருக்குறள் கூறியவர்?-மாங்குடி மருதனார்

31.திருக்குறளில் அதிக அதிகாரங்களை கொண்ட இயல் என்ன?-அங்கவியல்

32. திருக்குறளில் குறைந்த அதிகாரங்களை கொண்ட இயல் என்ன?-ஊழியல்

33. இராமலிங்க அடிகளார்க்கு அருட்பிரகாச வள்ளலார் என்று பெயரிட்டவர்?-தொழுவூர் வேலாயுத முதலியார்

34. இராமலிங்க அடிகளார் பாட்டை மருட்பா என்றவர்?-ஆறுமுக நாவலார்

35.அன்புடைமை என்ற அதிகாரம் எந்த இயலில் உள்ளது?-இல்லறவியல்

36.உ.வே.சா ஓலைச்சுவடியில் உள்ள ஈரத்தை எதை கொண்டு துடைத்தார்?-வேட்டியால்

37.சரஸ்வதி நூலகம் எங்கு உள்ளது?-தஞ்சையில்

38.உத்தமதானபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது?-திருவாரூர்

39.உ.வே.ச காலம்?-1855-1942

40. உ.வே.ச வை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் யார் யார்?-ஜி.யு.போப்,சூலியல் வின்சோன்

41. உ.வே.ச பதிபித்த வெண்பா நூல்கள் எத்தனை?-13

 1.10  2.9  3.13  4.6

42. உ.வே.ச பதிபித்த அந்தாதி நூல்கள் எத்தனை?3

 1.10  2.3  3.9  4.6

43. உ.வே.ச பதிபித்த உலா நூல்கள் எத்தனை?9

1.10  2.3  3.9  4.6

44. உ.வே.ச பதிபித்த புராண நூல்கள் எத்தனை?12

1.10  2.3  3.9  4.12

45. உ.வே.ச மொத்தம் எத்தனை நூல்களை பதிபித்தார்?87

1.107  2.80  3.87   4.90

46. உ.வே.ச மொத்தம் எத்தனை வருடங்கள் தமிழுக்கா உழைத்தார்?-87

47.டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்ட தினம்?செப்டம்பர் 15

48.”சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?-நாலடியார்

49.சங்கநூல்களுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு?

  1.பதினெண் மேல்கணக்கு நூல்கள்

  2. பதினெண் கீழ்கணக்கு நூல்கள்

50. பதினெண் கீழ்கணக்கு நூல்கள் பா வகை என்ன?-வெண்பா

51. பதினெண் மேல்கணக்கு நூல்கள் பா வகை என்ன?-ஆசிரியப்பா

52.திருக்குறளுக்கு அடுத்தாக போற்றப்படும் நீதி நூல் என்ன?-நாலடியார்

53. திருக்குறள்,நாலடியாருக்கு அடுத்தாக போற்றப்படும் நீதி நூல் என்ன?-பழமொழி நானுறு

54. பதினெண் கீழ்கணக்கு நூல்களில் தொகைநூல் என பெயர் பெற்றநூல் என்ன?-நாலடியார்

55.முப்பெறு அறநூல்கள் என்ன என்ன?-திருக்குறள்,நாலடியார்,பழமொழி நானூறு

56.நாலடியார் எத்தனை அதிகாரம் மற்றும் எத்தனை இயல்கள் கொண்ட்து?-40,12

57.முத்திரையரைப் பற்றி கூறும் நூல்?-நாலடியார்

58. நாலடியாரில் முதலில் எந்த இயல் இடம்பெற்றுள்ளது?

  1.துறவறயியல்  2.கற்ப்பியல்  3.இல்லறவியல்  4.பொருளியல்

59. நாலடியாரை முப்பாலாய் பகுத்தவர்?-தருமர்

60. நாலடியாரை அதிகாரமாய் வகுத்தவர்?-பதுமனார்

61.உ.வே.சா பதிபித்த குறிஞ்சிபாட்டில் தெளிவாக இல்லாத பூக்கள் எத்தனை அவைகளின் பெயர் என்ன?-மூன்று(தேமா பூ,செம்ம்ணிப்பூ,பெருமூங்கிற்பூ)

62.நாமக்கல் கவிஞரின் சுயசரிதை நூல் என்ன?-என் கதை

63.நெல்சன் மண்டேலாவின் சுயசரிதை நூல் என்ன?-LONG WALK TO FREEDOM

64.ஏ.பி.ஜெ .அப்துல்கலாமின் சுயசரிதை நூல் என்ன?-WING OF FIRE

65.”சாதி இரண்டொழிய வேறில்லை யொன்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்”-இவ்வரிகளை பாடியவர் யார்?-பாரதியார்

66.”வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்”-இவ்வரிகளில் இடம் பெற்ற கவிஞர் யார்?-பாரதியார்

67.சமீபத்தில் யாருடைய நினைவு தினத்தினை தமிழக அரசு மாற்றியமைத்தது தேதி என்ன?-பாரதியார்(12.09.1921)

68.பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று கூறியவர்?-கவிமணி

69.தமிழின் முதல் உரைநடைக்காவியம்?-ஞானரதம்

70.ஜெகசித்திரம் என்ற நாடகம் யாருடைய தொகுப்பு?-பாரதியார்

71.தம் பாடலுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர் யார்?-பாரதியார்

72.யாரை  சந்தித்தபின் பாரதி தீவிரவாதி ஆனார்?-நிவேதிதா தேவியை

73.பாரதிபாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர்?-கிருஷ்ணசாமி ஐயர்

74.பாரதிக்கு மாகாகவி என்ற பட்டத்தினை கொடுத்தவர்?-வா.ரா

75.பாரதி சங்கத்தினை தொடங்கியவர்?-கல்கி

76.பாரதியின் முதல் பாடல் வெளிவந்த இதழ்?-விவேக பானு(1904-தனிமை இரக்கம்)

77.கவிதையில் சுயசரிதம் எழுதிய கவிஞர் யார்?-பாரதியார்

78.பாரதியின் பாப்பா பாட்டில் நெஞ்சை பறிகொடுத்தேன் என்று கூறியவர்?-கவிமணி

79.பாரதியின் சுயசரிதம் நூல் என்ன?

80. ”சாதி இரண்டொழிய வேறில்லை யொன்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்”இவ்வரிகளில் தமிழ்மகள் என்று குறிப்பிடப்படுபவள் யார்?-ஒளவையார்

81.கடும் வெப்பத்தினை எதிர்கொள்ளும் தன்மை உடைய பறவை?-பூநாரை

82.நம் நாட்டில் ஏறத்தாழ எத்தனை பறவைகள் வாழ்கின்றன?-2400

83.பறவைகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?-ஐந்து

84.பொருந்தாத்தை தேர்ந்தேடு?

 1.மஞ்சள் சிட்டு  2.மின்சிட்டு   3.இருவாச்சி  4.பூமன் ஆந்தை

85. பொருந்தாத்தை தேர்ந்தேடு?

 1.கொக்கு  2.கரண்டிவாயன்  3.ஊசிவால் வாத்து  4.சின்னக்குறுவான்

86. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது?-சிவகங்கை

87. கரிக்கிரி பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது?-காஞ்சிபுரம்

88. உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது?-திருவாரூர்

89.பழவேற்காடு பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது?-திருவள்ளுர்

90.பாம்பு ஏன் நாக்கினை வெளியே நீட்டுகிறது?-வாசனையை அறிந்துக்கொள்ள

91.வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?-1972

92.உடனிலை மெய்ம்மயக்கம் என்றால் என்ன?-தன் எழுத்துடன் மட்டும் சேரும்(க்,ச்,த்,ப்)பக்கம்,அச்சம்

93.வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்றால் என்ன?தன் எழுத்துடன் சேர்ந்து வராது(ர்,ழ்)சார்பு,வாழ்க்கை

94.”மனைக்கு விளக்கம் மடவார்” என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்?-நாண்மணிக்கடிகை,விளம்பி நாகனார்

95.”கல்விக்கும் ஓதின் புகழ்சால் உணர்வு” என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்? நாண்மணிக்கடிகை, விளம்பி நாகனார்

96.”மனக்கினிய காதல் புதல்வர்க்குக் கல்வியே” இவ்வரிகள் என்ன கூறுகிறது?-பிள்ளைகளுக்கு விளக்கினை போன்றது கல்வி

97.”யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”-இவ்வடிகள் இடம் பெற்ற நூல்?-நாண்மனிக்கடிகை

98. நாண்மணிக்கடிகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?104

99.”இளமை பருவத்தில் கல்லாமை குற்றம்” எனக்கூறும் நூல்?- நாண்மணிக்கடிகை

100.அம்மை என்ற வனப்பின் பாற்ப்படும் நூல்?

  1.திருக்குறள்   2.நாண்மணிக்கடிகை  3.நாலடியார்  4.இனியவை நாற்பது

101. நாண்மனிக்கடிகையின் கடவுள் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள கடவுள்?-திருமால்

102.எக்குடியிலும் நன்மக்கள் பிறத்தல் கூடும் இது யாருடைய கருத்து?- விளம்பி நாகனார்

103.”வெல்வடு வேண்டின் வெகுளிவிடல் “இக்கூற்று இடம்பெற்றுள்ள நூல்?- நாண்மனிக்கடிகை

104.வாய்மொழி இலக்கியம்?

  1. நாண்மணிக்கடிகை 2.திருக்குறள்  3.நாட்டுப்புறப்பாடல்  4.நாலடியார்

105.நாட்டுப்புறப்படலை பற்றிய கூற்று?

   1.ஒருவர் பாடியதை அப்படியே பாடுவது இதன் சிறப்பு

   2.இது ஓர் எழுதப்பட்ட இலக்கியம்

   3.ஓருவர் பாடியதை அப்படியே பாடாமல் சில வரிகள் சேர்த்து பாடுவது இதன் சிறப்பு

  4.நாட்டுப்புற பாடல் 7 வகைப்படும்

அ)1&4இரண்டும் சரி   ஆ)3&1இரண்டும் தவறு  இ)1&2 இரண்டும் தவறு     ஈ)3 மட்டும் சரி

106.அறிவை வளர்க்கும் அற்புத கதைகள் என்ற சிறுகதையை எழுதியவர்?-ஜானகிமணாள்ன்

107.ஏழையென்றும் அடிமை என்றும் யாருமில்லை இது யாருடைய கூற்று?-பாரதியார்

108.பாரதியின் பெற்றோர் பெயர் என்ன?-சின்னசாமி,இலக்குமி அம்மாள்

109.பாரதிதாசனின் பெற்றோர் பெயர் என்ன?-கனகசபை,இலக்குமி அம்மாள்

110.”நகரப்பெண்கள் செப்பு குடங்கள்” இவ்வரிகள் யாருடைய கூற்று?-பாரதிதாசன்

111.”தழையா வெப்பம் தழைக்கவும் மெய்

     தாங்கா வெப்பம் நீங்கவும்” இவ்வரிகள் யாருடைய கூற்று?-பாரதிதாசன்

112. ”தழையா வெப்பம் தழைக்கவும்” இதில் தழைக்கவும் என்பதின் பொருள்?-குறையவும்

113.பாரதியார் மற்றும் பாரதிதாசனின் இயற்பெயரை கூறு?-சுப்பிரமணியம்,சுப்புரத்தினம்

114.பாரதிதசனின் காலம்?-1891-1964

115.பாரதிதாசனை புரட்சிகவிஞர் என்று கூறியவர் யார்?-அறிஞர் அண்ணா

116.எதிர்பாரத முத்தம் இது யாருடைய நூல்?-பாரதிதாசன்

117.புதுவையில் பாரதியின் கட்டளைக்கு இணங்க பாரதிதான் பாடிய பாடல் ?

  அ)சங்கே முழங்கு

  ஆ)எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி

     ஏழுகடல் அவள் வண்ணமடா

  இ)தமிழுக்கு அமுதென்று பேர்

  ஈ)கன்னல் பொருள் தரும் தமிழே   

    நீ ஓர் பூக்காடு:நானோர் தும்பி

118.காதலா கடமையா? இது யாருடைய நூல்?-பாரதிதாசன்

119.உங்களுக்கு தெரிந்த பாரதிதாசனின் நூல்களை குறிப்பிடுக?-

120.பாரதிதாசன் நடத்திய இதழ்?-குயில்

121.சூரியோதயம் என்ற இதழின் ஆசிரியராக பணியாற்றியவர்?-பாரதியார்

122.”என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என்று கூறியவர்?-பாரதியார்

123.”தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் பற்றி என்னவென்று சொல்வது” இவ்வரிகள் யாருடைய கூற்று?-பாரதிதாசன்

124.பாரதியார் ஓர் உலக்கவி என்று கூறியவர்?-பாரதிதாசன்

125.பாரதிதாசன் தமிழ் இலக்கண இலக்கியங்களை யாரிடம் கற்றார்?

  1.பாரதியார்  2.பெரியசாமி  3.அப்பாதுரை  4.சந்திரன் சுவர்க்கி

126.தமிழச்சி என்ற நூலின் அசிரியர்?-வாணிதாசன்

127.தமிழியக்கம் என்ற நூலின் அசிரியர்?-பாரதிதாசன்

128.பொன்னி என்ற இதழை நட்த்தியவர்?-பாரதிதாசன்

129.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று கூறியவர்?-பாரதிதாசன்

130.பாரதிதாசனின் பரம்பரை அல்லாதவர் எவெர்?

  1.சுரதா  2.பாவலர்மணி   3.கம்பதாசன்  4.பிச்சமூர்த்தி

131.”வாழ்வில் செம்மை செய்பவள் நீயே”இவ்வரிகள் யாருடையது இதன் சிறப்பு என்ன?-பாரதிதாசன்,புதுவை அரசின் பாடல்

132.பாரதிதாசனின் பிசிராந்தையார் நாடகம் எந்த  வருடம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?-1969

133.தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ்?-பாரதிதாசன்

134.பாரதியின் குயில்பாட்டு எந்த பா வகையை சேர்ந்த்து?-கலிவெண்பா

135.பாவேந்தர் எந்த ஆண்டு புரட்சிகவிஞர் விருது பெற்றார்?-1946

136.”அற்றவும் கற்றார் அறிவுடையார்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?மற்றும் ஆசிரியர்? –பழமொழி நானூறு

137.அறையன் என்பது என்ன பெயர்?-குடிப்பெயர்

138.”ஆற்றுணா வேண்டுவது இல்”  இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?இதன் பொருள் என்ன?-பழமொழி நானூறு

139.பழமொழியை முதுமொழி என்று கூறியவர்?-தொல்காப்பியர்

140.சங்ககால மன்னர்கள்,புலவர்கள்,மூவேந்தர்களை பற்றி குறிப்புகளை கொண்ட நூல்?-பழமொழி நனூறு

141.பதினென் கீழ்கணக்கு நூல்களுள் வரலாற்றை மிகுதியாக கூறும் நூல்? பழமொழி நனூறு

142.உலக வசணம் என அழைக்கப்படும் நூல்?

  1.திருக்குறள்  2.நாலடியார்  3.பழமொழி நானூறு  4.இனியவை நாற்பது

143.நேரு தன் மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார்?-1922-1964

144. நேரு தன் மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு கடிதம் எழுதியது நமக்கு பாடமாக அமைந்துள்ளது?இது எங்கு இருந்து எழுதப்பட்டது-1935 பிப்ரவரி 22

145. நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் யாருடைய கவிதை சுவையானவை என்று கூறினார்?-பிளேட்டோவின் கவிதை

146.போரும் அமைதியும் யாருடைய நூல் அதை எந்த வருடம் இந்திரா வாசிப்பதாக நேருவிடம் கூறினாள்?-1934

147. நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் சுருக்கமாகவும், வாசிக்க எழுமையாகவும் இருக்கும் என்று எந்த நாடகத்தை குறிப்பிட்டார்?-கிரேக்க நாடகங்கள்

148. நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் யாருடைய நூல்களை வாசிக்க தகுந்தவை என்று குறிப்பிட்டார்?-பெர்னாட்ஷா

149. நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் நேரு எனக்கு மிகவும் பிடித்தமானவர் என்று யாரை குறிப்பிட்டார்?-பெட்ரண்ட் ரஸ்ஸல்

சேக்ஸ்பியர்-  ஆங்கில நாடக ஆசிரியர்

 டால்ஸ்டாய்- இரஸ்ய நாட்டு எழுத்தாளர்

பெட்ரண்ட் ரஸ்ஸல்- கல்வியாளர்

 பிளேட்டோ- கிரேக்க சிந்தனையாளர்

151.வடமொழி உயர்வுக்காக தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல்?-இலக்கணக் கொத்து

152.தமிழுக்கு எ,ஒ,ழ,ற,ன என 5 எழுத்துக்கள் மட்டுமே உள்ளது என்று கூறியவர்?-சுவாமிநாத தேசிகர்

153.பள்ளி மாணவர்கள் பயிலும் இலக்கண நூல்கள் யாருடையது?-பவணந்தி முனிவர்

154.சம்பந்த பாட்டியல் நூலின் வேறுபெயர்?-வரையறுத்தப்பாட்டியல்

155.மிண்டும் அவர்கள் பிரச்சனை இது யாருடைய முதல் கவிதை-ஞானக்கூத்தன்

156.அன்னை நீ ஆடவேண்டும் இது யாருடைய படைப்பு?-சாலை இளந்திரையன்

157.புதுச்செருப்பு கடிக்கும் இது யாருடைய படைப்பு?-ஜெயகாந்தன்

158.உண்மை சுடும் இது யாருடைய படைப்பு?-ஜெயகாந்தன்

159.இனிப்பும் கரிப்பும் இது யாருடைய படைப்பு?-ஜெயகாந்தன்

160.அங்கே கல்யானம்  இங்கே கலாட்டா இது யாருடைய முதல் சிறுகதை?-சு.சமுத்திரம்

161.இறுதிவெளிச்சம் இது யாருடைய படைப்பு?-கு.ப.இராஜகோபாலன்

162. ”மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை” இவ்வரிகளில் விதிர்விதிர்த்து என்பதின் பொருள்?-உடல் சிலிர்த்து

163.மாணிக்கவாசகர் அரிமர்த்தப்பாண்டியனிடம் என்னவாக பணியாற்றினார்?-தலைமையமைச்சர்

164.658 பாடல்கள் இடம் பெற்றுள்ள நூல்?-திருவாசகம்

165.திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் இக்கூற்று யாருடையது?-ஜி.யு.போப்

166.ஒழுக்கம் உடைமை குடிமை இவ்வரிகளில் குடிமை என்பதன் பொருள்?-உயர்குடி

167.திருவள்ளுவர் காலம் கி.மு 31 ஆம் நூற்றாண்டு என உறுதிசெய்தவர்?-மறைமலையடிகள்

168.”வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்” இக்கூற்று யாருடையது?-பாரதிதாசன்

169.திருக்குறள் ஒழிபு எனக்கூறப்படும் நூல்?-திருவருட்பயன்(உமாபதிசிவம்)

170 திருக்குறள் சாரம் எனக்கூறப்படும் நூல்?-நீதிநெறிவிள்க்கம்

171.திருக்குறளை திருவருட்பயன் என்று கூறியவர்?-நச்சினார்கினியர்

172. திருவள்ளுவருக்கு தேவர் பட்டம் கொடுத்தவர் யார்?- நச்சினார்கினியர்

172.”எம்மதம் எவ்வினமும் எந்நாளும்

    சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம்” இக்கூற்று யாருடையது?-சுத்தான்ந்தபாரதி

173.”பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்”-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?-ஏலாதி

174.எந்நூலின் நற்கருத்துக்கள் கற்போறின் அறியாமையை போக்கும்?

அ)ஏலாதி  ஆ)முதுமொழிகாஞ்சி  இ)திரிகடுகம்  ஈ) திருக்குறள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக