Pammal Sambanda Mudaliyar....
பம்மல் சம்பந்த முதலியார் பற்றிய குறிப்புகள்
வாழ்க்கை குறிப்புகள்:
🌀 பம்மல் சம்பந்தம் 1873ம் வருடம் பிப்ரவரி 9ம் தேதி சென்னையில் பிறந்தவர். இவரது பெற்றோர் பம்மல் விஜயரங்க முதலியார், மாணிக்கவேலம்மாள் என்பவர்கள்.
🌀 வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல அவதாரங்களில் திளைத்தவர் பம்மல் சம்பந்தம் முதலியார்.
🌀 இவர் நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டு என்றும் நினைவில் வைக்கத் தக்கது. நாடக மேடை நடிகர்களைக் கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட பழக்கத்தை மாற்றி அவர்களைக் கலைஞர்கள் என்ற சிறப்பான நிலைக்கு உயர்த்தியவர்.
🌀 சம்பந்தம் தனது நாடக மேடை நினைவுகள் என்ற புத்தகத்தில் மாநிலக்கல்லூரியிலும், பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றார். சில காலம் வழக்கறிஞராகவும், நீதியரசராகவும் பணியாற்றினார்.
🌀 உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார்.
🌀 ஆங்கில நாடகங்கள், வடமொழி நாடகங்கள் முதலியவற்றை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து மேடையேற்றினார்.
🌀 1891ம் வருடம் ஜூலை ஒன்றாம் தேதி, சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
🌀 சம்பந்தம் 529 முறை நாடக மேடையில் தோன்றியிருக்கிறார். 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் பூண்டுள்ளார்.
🌀 அவர் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களின் தொகை 68. அவரது அனுமதியுடன் 1891லிருந்து, 1934ம் வருடம் வரை சுகுண விலாச சபையாராலும், நகரிலும், வெளியூர்களிலும் உள்ள மற்ற சபைகளாலும், அவரது நாடகங்கள் 4070 முறை மேடையேறியுள்ளன.
🌀 பம்மல் சம்பந்தம் முதலியார் 1967ம் வருஷம் செப்டம்பர் மாதம் 24ம் தேதி மறைந்தார். அவர் மறைந்தாரே தவிர அவரது நாடகத் தொண்டு இன்னமும் எல்லாருடைய நினைவிலும் பசுமையாகவே உள்ளது.
பம்மல் சம்பந்தம் 94 நாடகங்கள் எழுதியுள்ளார் - அவற்றுள் முக்கியமானவை கீழே:
☘ மனோஹரா (1895 - சுகுணவிலாச சபையிலும், மற்ற இடங்களிலும் 859 முறை நடிக்கப்பட்டது)
☘ லீலாவதி சுலோசனா - (50 தடவை சபையிலும், மற்ற இடங்களில் 286 முறையும்)
☘ புஷ்பவல்லி (சம்பந்தத்தினுடைய முதல் நாடகம்)
☘ சுந்தரி - (சுகுண விலாச சபையின் முதல் நாடகம்)
☘ சாரங்கதரா (198 முறை - மேடையில் முதல் முத்தக் காட்சி)
☘ கள்வர் தலைவன்
☘ காலவ ரிஷி (1899 - 307 முறை மேடையேறியது)
☘ காதலர் கண்கள் (1902 - 190 முறை மேடையேற்றம்)
☘ ம்ருச்சகடிகம்
☘ யயாதி
☘ சர்ஜன் ஜெனரலின் பிரஸ்கிரிப்ஷன்
☘ சதி சுலோசனா
☘ நல்ல தங்காள்
☘ ஸ்த்ரீ சாஹசம்
☘ விருப்பும் வெறுப்பும்
வெள்ளித் திரையில் வெளிவந்த நாடகங்கள்:
☘ காலவ ரிஷி (1932)
☘ ரத்னாவளி (1935)
☘ மனோஹரா (1936, 1954)
☘ லீலாவதி சுலோசனா (1936)
☘ சபாபதி (1941)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக