கிராமி விருது 2017': வெற்றியாளர்கள் பட்டியல் ...
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகின் மிக உயரிய இசை விருதாக கருதப்படும் 'கிராமி விருது' சிறந்த இசைக்கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டாபில்ஸ் மையத்தில் நேற்று நடைபெற்ற 59வது கிராமி விருது வழங்கும் விழாவில், அதிக பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பெயான்ஸ் விழாவை சிறப்பித்தார். இவ்விழாவினை ஜேம்ஸ் கார்டென் தொகுத்து வழங்கினார்.
புகழ்பெற்ற டேவிட் போவியின் 'பிளாக்ஸ்டார்' ஆல்பம் பரிந்துரைக்கப்பட்ட 4 பிரிவுகளிலும் கிராமி விருதினை தட்டிச் சென்றது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போவி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'கிராமி விருது 2017' விழா மேடையை கர்ப்பிணியான பெயான்ஸ் அலங்கரித்தார்.
'கிராமி விருது' வெற்றியாளர்களின் பட்டியல் :
சிறந்த பாடல் - 'ஹலோ' பாடலுக்காக அடெல் மற்றும் கிரேக் கர்ஸ்டின்
சிறந்த ராப் ஆல்பம் - 'கலரிங் புக்' சான்ஸ் தி ராப்பர்
சிறந்த நகர்ப்புற ஆல்பம் - பெயான்ஸின் 'லெமோநெட்'
சிறந்த நாட்டுப்புற தனிப்பாடல் - 'மை சர்ச்' பாடலுக்காக மரேன் மொரிஸ்
சிறந்த ராக் பாடல் - டேவிட் போவியின் 'பிளாக்ஸ்டார்'
சிறந்த பாப் இரட்டையர் / குரூப் பெர்ஃபார்மென்ஸ் - டுவென்டி ஒன் பைலட்ஸின் 'ஸ்ட்ரெஸ்ட் அவுட்'
சிறந்த பாப் ஆல்பம் - அடெல் பாடிய '25'
சிறந்த பாரம்பரிய பாப் ஆல்பம் - வில்லி நெல்சனின் 'சம்மர்டைம்: வில்லி நெல்சன் சிங்க்ஸ் கெர்ஷ்வின்'
சிறந்த பாப் பாடல் - 'ஹலோ' பாடலுக்காக அடெல்
சிறந்த மாற்று இசைத்தொகுப்பு - டேவிட் பேவியின் 'பிளாக்ஸ்டார்'
சிறந்த ராக் ஆல்பம் - 'டெல் மீ ஐ அம் பிரெட்டி' - கேஜ் தி எலிஃபன்ட்
சிறந்த ராக் பெர்ஃபார்மான்ஸ் - டேவிட் பேவியின் 'பிளாக்ஸ்டார்'
சிறந்த மெட்டல் பெர்ஃபார்மான்ஸ் - மேகாதெத்தின் 'டிஸ்டோபியா'
சிறந்த புதுமுக நடிகர் - சான்ஸ் தி ராப்பர்
சிறந்த ராப் பெர்ஃபார்மான்ஸ் - சான்ஸ் தி ராப்பர் ஆல்பத்திற்கு ஆடிய லில் வாய்ன் மற்றும் 'நோ பிராப்ளம்' பாடலுக்காக 2 சாய்ன்ஸ்
சிறந்த ராப் பாடல் பெர்ஃபார்மான்ஸ் - 'ஹாட்லைன் ப்ளிங்' பாடலுக்காக டிரேக்
சிறந்த ராப் பாடல் - 'ஹாட்லைன் ப்ளிங்' பாடலுக்காக டிரேக்
சிறந்த ஆர் &பி பெர்ஃபார்மான்ஸ் - 'கிரேன்ஸ் இன் தி ஸ்கை' - சோலாஞ்
சிறந்த பாரம்பரிய ஆர்&பி பெர்ஃபார்மான்ஸ் - லாலா ஹதாவே - 'ஏஞ்சல்'
சிறந்த ஆர்&பி பாடல் - மாக்ஸ்வெல் 'லேக் பை தி ஓசன்'
சிறந்த ஆர்&பி ஆல்பம் - லாலா ஹதாவே - 'லாலா ஹதாவே லைவ்'
சிறந்த நாட்டுப்புற ஆல்பம் - ஸ்டர்கில் சிம்ப்சன் - 'எ செய்லர்'ஸ் கைடு டூ இயர்த்'
சிறந்த நாட்டுப்புற பாடல் - 'ஹம்பில் அண்ட் கைண்ட்' - டிம் மேக்ரோவ்
சிறந்த நாட்டுப்புற இரட்டையர் / குரூப் பெர்ஃபார்மென்ஸ் - பென்டாடோனிக்ஸ் ஃபீட். 'ஜோலின்' பாடலுக்காக டாலி பார்தான்
சிறந்த ஜாஸ் இசைக்கருவி ஆல்பம் - ஜான் ஸ்கோஃபீல்ட்டின் 'கண்ட்ரி ஃபார் ஓல்ட் மேன்'
சிறந்த ஜாஸ் பாடல் ஆல்பம் - 'டேக் மீ டூ தி அல்லே' பாடலுக்காக கிரெகரி போர்டர்
சிறந்த மாற்று இசைக்கருவி ஆல்பம் - ஸ்நார்கி பப்பியின் 'குல்ச்சா வல்ச்சா'
சிறந்த நடன ஆல்பம் - ஃப்லமி - 'ஸ்கின்'
சிறந்த நடன ரெக்கார்டிங் - 'டோன்ட் லெட் மீ டவுன்' - தி செயின்ஸ்மோக்கர்ஸ்
சிறந்த இசைப்படம் - தி பீட்டில்ஸின் 'தி பீட்டில்ஸ்: எயிட் டேஸ் எ வீக் தி டூரிங் இயர்ஸ்'
சிறந்த இசை வீடியோ - 'ஃபார்மேஷன்' பாடலுக்காக பெயான்ஸ்
சிறந்த கிறிஸ்தவ இசை ஆல்பம் - ஹிலாரி ஸ்காட் மற்றும் அவரது குடும்பத்தினரின் 'லவ் ரிமெயின்ஸ்'
சிறந்த காஸ்பெல் ஆல்பம் - கிரிக் ஃபிராங்க்ளினின் 'லாசிங் மை ரிலிஜியன்'
சிறந்த மின்னணு ஊடகத்துக்கான பாடல் எழுத்து - ஜஸ்டின் டிம்பர்லேக்கின் 'கான்ட் ஸ்டாப் தி ஃபீலிங்
சிறந்த மின்னணு ஊடகத்துக்கான பின்னணி இசை - ஜான் வில்லியம்ஸின் 'ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்'
சிறந்த இசை தொகுப்பு - 'மைல்ஸ் அஹெட்'
சிறந்த இசை தியேட்டர் ஆல்பம் - 'தி கலர் பர்ப்பிள்'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக