தமிழக விவசாயத்துறையில் உதவி பொறியாளர் வேலை..
தமிழக அரசின் விவசாயப் பொறியியல் துறையில் நிரப்பப்பட உள்ள 21 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 16/2017
பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.5100
தகுதி: Agricultural Engineering, Mechanical, Civil, Automobile, Production, Industrial Engineering போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை
விண்ணப்பக்கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.08.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_16_asst_engr_agri_backlog.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தேர்ந்துகொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக