வெள்ளி, 21 ஜூலை, 2017

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு



தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

மத்திய தகவல்தொடர்பு துறை அமைச்சக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் தமிழக அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 11

பணியிடம்: தமிழ்நாடு

பணி: Staff Car Driver

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமமும் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Manager, Mail Motor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai - 600 006”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.08.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர், 2017 அக்டோபர் மாதங்களில் நடைபெறலாம்.

 மேலும் கூடுதல் விவரங்கள் அறிய http://www.tamilnadupost.nic.in/rec/staffcardriverjuly2017.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக