புதன், 12 ஜூலை, 2017

டாலர் என்றால் என்ன அர்த்தம்?



டாலர் என்றால் என்ன அர்த்தம்?

உலகிலேயே முக்கியமான பணம் என்றால் அது டாலர்தான். பல நாடுகளில் இந்த பணப்புழக்கம் இருந்தாலும் ஐக்கிய அமெரிக்க நாடே டாலர் தேசம் என்று அழைக்கப்படுகிறது. அதன் வரலாற்றையும் முக்கிய தகவல்களையும் தான் இங்கு பார்க்கவிருக்கிறோம். டச்சு, ஸ்பெயின், பிரிட்டன் நாட்டு வியாபாரிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்பு வரை அமெரிக்க பழங்குடி மக்களிடம் இந்த நாணய முறையே இல்லை. அமெரிக்காவுக்கு வந்த டச்சு வணிகர்களால்தான் முதன்முதலில் பணம் புழங்க தொடங்கியது. 16-ம் நூற்றாண்டில் டச்சு நாணயங்கள் அமெரிக்காவிலேயே அச்சடிக்கப்பட்டது. ஆம், அமெரிக்காவின் பொஹீமியா என்ற பகுதியில் உள்ள செயின்ட் ஜோஹிம்ஸ் தால் என்ற பகுதியில் தான் டச்சு நாட்டு வெள்ளி நாணயங்கள் அச்சாகின. தால் என்றால் ஜெர்மன் மொழியில் பள்ளத்தாக்கு என்றே அர்த்தம். தால் பகுதியில் அச்சானதால் இந்த நாணயங்கள் ஜோஹிம்ஸ் தாலர் என்றே அழைக்கப்பட்டு பின்னர் நாளடைவில் சுருங்கி டாலர் என்றானது.

பின்னர் ஏறக்குறைய வட அமெரிக்கா முழுவதும் பிரிட்டன் வசம் ஆனதும் பிரிட்டன்நாணயம்புழக்கத்துக்கு வந்தது. பிரிட்டனிடம் இருந்து அமெரிக்கா விடுதலை பெற்றதும் சீரமைக்கப்பட்ட நாணயம் 1785-ம் ஆண்டு ஜூலை 6-ம் நாள் வெளியானது. 100 சென்ட் ஒரு டாலர் என்ற அளவில் இது புழக்கத்துக்கு வந்தது. சிம்பாபிவே, ஈக்குவேடார், பனாமா உள்ளிட்ட 10 நாடுகளின் புழக்கத்தில் புழக்கத்தில் இருந்து உலகையே ஆட்டிப்படைக்கிறது இந்த நாணயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக