TNPSC-TET பொதுத்தமிழ் - அகநானூறு தொடர்பான செய்திகள்
1. சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள நூல் எது - அகநானூறு
2. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து அகநானூற்றில் எத்தனைப் பாடல்கள் உள்ளன - 400 பாடல்கள்
3. நெடுந்தொகை என்று கூறப்படும் நூல் எது - அகநானூறு
4. அகநானூறு என்னும் நூல் எத்தனைப் பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன - மூன்று
5. அகநானூறு என்னும் தொகைநூலைத் தொகுத்தவர் யார் - உருத்திரசன்மர்
6. அகநானூறு என்னும் தொகைநூலைத் தொகுப்பித்த மன்னன் யார் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார்
7. அகநானூறு என்னும் தொகைநூலை பாடிய புலவர்கள் எத்தனைப் பேர் - 146
8. அகநானூற்றில் 1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் --------------- தொகுப்பில் உள்ளன - களிற்றியானை நிரை
9. அகநானூற்றில் மணிமிடை பவளம் என்ற தொகுப்பில் எத்தனைப் பாடல்கள் உள்ளன - 180 பாடல்கள்
10. அகநானூற்றில் பாட்டு வரிசை எண்களில் 6 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (6, 16, 26, ...........) --------------- திணை ஆகும் - மருதத் திணை
11. அகநானூற்றில் பாட்டு வரிசை எண்களில் 1,3, 5, 7, 9 என்னும் ஒற்றைப்படை எண்ணில் முடியும் பாடல்கள் --------------------- திணை ஆகும் - பாலைத் திணை
12. அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தி அகநானூற்றில் ------------------ ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது - 20, 25
13. அகநானூறு உரையுடன் முதற்பகுதி மெட்ராஸ் கம்பர் விலாஸ் புக் டிப்போட் மயிலாபூர் என்பவர்களால் முதலில் எந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்டது - 1918
14. அகநானூற்றின் முழு பதிப்பானது 1923-ல் அகநானூறு மூலமும் பழைய உரையும் என்னும் பெயரில் பதிப்பித்தவர் யார் - ரா.இராகவையங்கார்
15. அகநானூறு -------------------- பாவகையைச் சார்ந்தது - வெண்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக