சனி, 17 செப்டம்பர், 2016

தெரிஞ்சிக்கோங்க ...

*தெரிஞ்சிக்கோங்க ...*

* சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.

* உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.

* தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.

* செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.

* இந்திய நாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது; ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.

* 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.

* அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.

* முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர் ராதாகிருஷ்ணன்.

* ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர்.

* உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன் ஜங்கா.

* கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ.

* சர் ஐசக் நியூட்டன் உருவாக்கிய கணித வகை, கால்குலஸ்.

* செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.

* அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங்.

* ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய்.

* நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.

*மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின்.

*புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம்.

*ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.

*துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.

*நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.

* பச்சையம் இல்லாத தாவரம், காளான்.

* காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து.

* பாம்பு இல்லாத தீவு, ஹவாய்.

* திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான்.

* எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.

* தலை இல்லாத உயிரினம், நண்டு.

* அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.

* உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.

* சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது.

* உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய்.

* புனிதபூமி என்று அழைக்கப்படுவது, பாலஸ்தீனம்.

* அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு, 1958.

* `குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும்.

* `நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர், ராஜாராம் மோகன்ராய்.

* தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர், லேண்ட் ஸ்டார்ம்.

* குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு, அம்மோனியா.

* உலகின் முதல் மின்னணு கம்ப்யூட்டர், எனியாக்.

* எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம்.

* `இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர், லீவிஸ் வாட்டர்மேன்.

* இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு, 1948.

* மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.

* காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.

* `அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி.

* நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.

* நாட்டின் பெயரில் அமைந்துள்ள தனிமங்கள் அமெரீஷியம், பிரான்சிஷியம், ஜெர்மேனியம், பொலோனியம்.

* மார்ச் 21-ந் தேதியிலும், செப்டம்பர் 23-ந் தேதியிலும் பகலும், இரவும் சமமாக இருக்கும்.

* முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள், கால்சியம் கார்பனேட்.

* மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம், லாக்டிக் அமிலம்.

* வைட்டமின் பி மற்றும் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை.

* இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி.

* சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.

* முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே.

* தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.

* ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்.

*ஏப்ரல் முதல் தேதியை அனைவரும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

* 1793 - ஜப்பானில் உள்ள உன்சென் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் இறந்தனர்.

* பறக்கத் தெரியாத பறவை, பெங்குவின்.

* கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு, ஜப்பான்.

* ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உருவாக்கியவர், நேதாஜி.

* கரையான் அரிக்காத மரம், தேக்கு.

* ஏலக்காய்ச்செடி, சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.

* அறிவு வளர்ச்சி அதிகமுள்ள கடல் பிராணி, டால்பின்.

* `திரவத்தங்கம்' என்று அழைக்கப்படுவது, பெட்ரோல்.

* உலகின் முதல் கண்வங்கி, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் தொடங்கப்பட்டது.

* கண்ணீர்ச் சுரப்பின் பெயர், லாக்ரிமல் கிளாண்ட்ஸ்.

* ரஷிய நாட்டு நாணயத்தின் பெயர், ரூபிள்.

* கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர், ஆரியபட்டர்.

* 24 மணி நேரத்தில் (ஒருநாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு.

* ஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உள்ளன.

* பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப் படுகின்றன.

* அட்டைப்பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன.

* நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை, ஆந்தை.

* கால் நகங்களைவிட, கை நகங்கள் 4 மடங்கு வேகத்தில் வளர்கின்றன.

* மனிதனின் தொடை எலும்புகள், கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை.

* நெருப்புக்கோழியின் கண்கள், அதன் மூளையைவிடப் பெரியதாக இருக்கும்.

* டால்பின்கள், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.

* 13-ம் நூற்றாண்டில், ஞானதேவ் என்ற கவிஞர் தான் `பரமபத' விளையாட்டைக் கண்டுபிடித்தார்.

* நத்தைகள், 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை.

* ராணி எறும்புகள், 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

* மனிதர்களின் தோலுக்கும், தசைக்கும் இடையிலான ஒட்டுதல் தான் கன்னத்தில் விழும் குழிக்கு காரணம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக