வெள்ளி, 30 செப்டம்பர், 2016

வடமொழி சொற்களும் அதற்கான தமிழ்ச் சொற்களும்.

தூயத்தமிழ்ச் சொற்கள்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வடமொழி சொற்களும் அதற்கான தமிழ்ச் சொற்களும்..

அக்கினி - தீ
அநியாயம் - முறைகேடு
அன்னியதேசம் - பிறநாடு
அபராதம் - குற்றம்
அபிஷேகம் - முழுக்கு, நீராட்டு
அர்ச்சனை - வழிபாடு
அற்பம் - சிறுமை
ஆகாயம் - வான், விண்
ஆச்சாரம் - நடத்தை,ஒழுக்கம்
ஆடம்பரம் - பெருமிதம்
ஆத்மா - உயிர்
ஆபத்து - இடுக்கண்
ஆசனம் - இருக்கை
ஆபரணம் - அணிகலன்
ஆரம்பம் - தொடக்கம், கால்கோள்
ஆயுதம் - படை
இச்சை - விருப்பம்
இயந்திரம் - பொறி
இரகசியம் - மறை
இரசிகன் - சுவைஞன்
இராசா - வேந்தன், மன்னன்
இலகு - எளிமை
இலாபம் - ஊதியம்
உத்தியோகம் - வினை, தொழில்
உபதேசம் - அறிவுரை
உபத்தியாயன் - ஆசிரியன்
உபமானம் - ஒப்புப்பொருள்
ஐசுவரியம் - செல்வம்
கதி - நிலை
கல்யாணம் - திருமணம்
கவி - பா. செய்யுள்
கவிஞன் - பாவலன், புலவன்
களங்கம் - மறு
காகம் - காக்கை
கிரகம்-கோள்
கிரமம் - ஒழுங்கு
கிராமச்சங்கம் - ஊர்மன்றம்
கீர்த்தி - மிகுபுகழ்
கும்பாபிஷேகம் - குடமுழக்கு
கோபம் - வெகுளி
இந்திரன் - வேந்தன்
சக்தி - ஆற்றல்
சத்தம் - ஒலி
சத்தியம் - உண்மை
சந்திரன் - திங்கள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்நியாசி - துறவி
சமயம் - நெறி
சமீபம் - அண்மை
சம்பவம் - நிகழ்ச்சி
சங்கம் - அவை
சர்வகலாசாலை - பல்கலைக்கழகம்.
சாட்சி - கரி
சாதம் - சோறு
சாமர்த்தியம் - திறமை
சினேகம் - நட்பு
சிந்தை - எண்ணம்
சிரத்தை - ஊற்றம், நாட்டம்
சுகம் - நலம்
சுத்தம் - தூய்மை.
சுயதேசம் - தன்னாடு
சூரியன் - ஞாயிறு
சொப்பனம்  - கனவு
சோதி - ஒளி
ஞானம் - அறிவு
தண்டித்தல் - ஒற்றுதல்
தத்துவம் - உண்மை
தரித்திரம் - வறுமை
தர்க்கம் - சொற்போர்
தவம் - நோம்பு
தானதிகாரி - பொருளாளர்
தாகம் - வேட்க்கை
தாசன் - அடியான்
தாரம் - மனைவி
தானியம் - கூலம்
தினம் - நாள்
தேசம் - நாடு
நட்சத்திரம் - நாள், நாள் மீன்(விண்மீன்).
நாசம் - அழிவு
நியாயவாதி - வழக்குரைப்போன்
நிர்வாகசபை  - ஆட்ச்சிக்குழு
நித்திரை - உறக்கம்
நீதிபதி - முறைவேந்தன்
பக்தி - அன்பு
பரீட்சை - தேர்வு
பத்திரம் - ஆவணம்
பத்திரிகை - இதழ்
பத்திராதிபர் - இதழாசிரியர்
பாகம் - கூறு
பாத்திரம் - கலம், தகுதி
பிரகாசம் - ஒளி
பிரசங்கம் - சொற்ப்பொழிவு
பிரமசாரி - மாணி
புராணம் - பழமை, பழங்கதை
புதினப்பத்திரிக்கை - செய்தித்தாள்
பூசை - வழிபாடு
மந்திரி - அமைச்சன்
மந்திரம் - மறைமொழி
மாதம் - திங்கள்
மாமிசம் - ஊன்
முகூர்த்தம் - ஓரை
முத்தி - வீடு
மேகம் - முகில்
மோட்சம் - வீடு
வசனம் - உரை.
வருஷம் - ஆண்டு
வாகனம் - ஊர்தி
வாதி - வழக்காளி
வாரம் - ஏழல்(ஏழு நாள் கொண்டது)
விசனம் - கவலை
விதி - ஊழ்
விஞ்ஞானம் - அறிவியல்
விஷேசம் - சிறப்பு
வித்தியாசம் - வேறுபாடு
விமர்சனம் - திறனாய்வு
வியாசம் - கட்டுரை
வைத்தியர் - மருத்துவர்
ஸ்ரீமான் - திருவாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக