தனிமை வரிசை ஆவர்தன அட்டவணை பற்றிய சில தகவல்கள் :-
⌛தனிம வரிசை அட்டவணை கண்டறிந்தவர் - லோதர் மேயர், மெண்டலீப்
⌛ தனிமங்கள் அவற்றின் அணு நிறைகளின் ஏறுவரிசையில் அமைக்கப்பட்டது
⌛ தனிமை வரிசை அட்டவணையில் செங்குத்தாக அமைந்துள்ளது - தொகுதிகள்
⌛ தனிமை வரிசை அட்டவணையில் கிடைமட்டமாக அமைந்துள்ளது - தொடர்கள்
⌛ மொத்த தொகுதிகள் - I முதல் VIII வரையும், பூஜ்யம் தொகுதி எனவும் பிரிக்கப்பட்டு உள்ளது
⌛ I முதல் VIII வரை உள்ள ஒவ்வொரு தொகுதியும் A, B என உட் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
⌛IA முதல் VIIA வரை உள்ள தொகுதிகள் - பிரதிதித் துவத் தனிமங்கள்
⌛1A தொகுதித் தனிமங்கள் - கார உலோகங்கள்
⌛IIA தொகுதித் தனிமங்கள் - கார மண் உலோகங்கள்
⌛VIIA - ஹாலஜன்கள்
⌛IB முதல் VIIB வரை தொகுதிகள் மற்றும் VIII தொகுதி தனிமங்கள் - இடைநிலை தனிமங்கள்
⌛தொடர்கள் மொத்தம் - 7
⌛ முதல் தொடர் பெயர் - மிக குறுகிய தொடர்
⌛ 2 மற்றும் 3 பெயர் - குறுகிய தொடர்
⌛ 4 மற்றும் 5 பெயர் - நீண்ட தொடர்
⌛ 6 ம் தொடரின் பெயர் - மிக நீண்ட தொடர்
7 ம் தொடர் - முற்று பெறாத தொடர்
⌛ முதல் தொடரில் உள்ள தனிமம் - 2
⌛ 2 மற்றும் 3 ல் தொடரில் உள்ள தனிமம் - 8
⌛4 மற்றும் 5 ல் தொடரில் உள்ள தனிமம் - 18
⌛6 ம் தொடரில் உள்ள தனிமம் - 32 ( லாந்தனைடு உட்பட)
⌛ 7ம் தொடரில் உள்ள தனிமங்கள் - நிறைவுறா தொடர் (ஆக்டினைடு உட்பட)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக