விலங்குகளின் வகைகள் பற்றிய சில தகவல்கள்:-
🐼 விலங்குகளின் வகைகள் - 2
1. முதுகுநாண் அற்றவை
2. முதுகுநாண் உடையவை
🐰 முதுகு நாண் அற்றவை தொகுதிகள் - 9
1. துளையுடலிகள்: (பொரிபெரா)
எ.கா. கடற்பஞ்சு
2. குழியுடலிகள்: (சீலென்டிரேட்டா)
எ.கா. ஹைட்ரா, பவளங்கள், கடல் அனிமோன்கள், ஜெல்லி மீன்
3. தட்டைப்புழுகள்: (பிளாட்டி ஹெல்மின்தஸ்)
எ.கா. நாடப்புழு,
4. உருளைப்புழுக்கள் (நிமட்டோடா)
எ.கா. அஸ்காரிஸ், கொக்கிப் புழு
5. வளைதசைப் புழு: (அன்னலிடா)
எ.கா. மண்புழு, அட்டை, நீரிஸ்
6. கணுக்காலிகள்: (ஆர்த்ரோபோடா)
எ.கா. கரப்பான் பூச்சி, மரவட்டை, தேள், பூரான்
7. மெல்லுடலிகள்: ( மொலஸ்கா)
எ.கா. ஆக்டோபஸ், நத்தை, நன்னீர் மட்டி, முத்துச் சிப்பி
8. முட்தோலிகள்: (எக்கைனோடெர்மேட்டா)
எ.கா. நட்சத்திர மீன், கடல் வெள்ளரி, கடல் லில்லிகள்
9. ஒரு செல் உயிரிகள்: (புரோட்டோசோவா)
எ.கா. அமிபா, பாரமீசியம், பிளாஸ்மோடியம்
🐰முதுநாண் உடையவை உள்ள தொகுதிகள் - 5
1. மீன்கள்
2. இருவாழ்வன
3. ஊர்வன
4. பறவைகள்
5. பாலூட்டிகள்
1. மீன்கள்:-
🐠 மீன்களின் இதய அறைகள் - 2
🐠 இரத்த சிவப்பணு உட்கரு உடையது
🐠 செனஸ் வீனோசஸ் அமைப்பும் சிறுநீரக போர்ட்டல் சிரையும் கொண்டவை
🐠 சிறுநீரகம் மீசோ நெப்ரிக் வகையைச் சேர்ந்தது
🐠 சுவாசிக்க 5-7 இணை செவுள் பிளவுகள் உண்டு
2. இருவாழ்வன:-
🐢 சுவாச பகுதி செவுள்கள், நுரையீரல், தோல்
🐢 இதய அறைகள் - 3
🐢 எ.கா. தவளை, சலமாண்டர், சிசிலியன்
3. ஊர்வன:-
🐍 உடலின் மேல் செதில்கள் உண்டு. தோல் சுரப்பிகள் இல்லை
🐍 சுவாச முறை - நுரையீரல் சுவாசம்
🐍 இதய அறைகள் - 3
🐍 நான்கு இதய அறைகள் கொண்ட ஊர்வன - முதலை
🐍 சிறுநீரகம் மெட்டா நெப்ரஸ் வகையினது.
4. பறவைகள்:-
🐧 மாறா வெப்ப நிலை கொண்ட உயிரி
🐧 இறகுகள் உடலின் வெப்பத்தை பாதுகாக்கும்
🐧 இதய அறைகள் - 4
🐧 சிறுநீரகம் உள்ள கதுப்புகள் - 3
🐧 சிறுநீரகத்தில் உள்ள அமிலம் - யூரிக்
5. பாலூட்டிகள்:-
🐄 உடலில் ரோமங்கள் உண்டு
🐄 வியர்வை சுரப்பிகள் உண்டு
🐄 எண்ணெய் சுரப்பிகள் உண்டு
🐄 சிவப்பணுக்களில் உட்கரு கிடையாது
🐄 இதய அறைகள் - 4
🐄 மார்பு, வயிற்றைப் பிரிப்பது - உதரவிதானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக