வெள்ளி, 28 ஜூலை, 2017

முக்கிய அரசியல் சட்டத் திருத்தங்கள்..



முக்கிய அரசியல் சட்டத் திருத்தங்கள்..

📑முதல் திருத்தம் (1951)-  ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.

📑வெளிநாடுகளுடன் பேச்சுரிமை, கருத்து பரிமாற்றம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளை விதித்தது, சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க சட்டமியற்றும் வகையில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளித்தல்.

📑 ஏழாவது திருத்தம் (1956) - மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம். (14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கத்தை அங்கீகரித்தது)

📑இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கான பொதுவான உயர் நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்தது.

📑14-வது திருத்தம் (1962) – பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

📑16-வது திருத்தம் (1963) – பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் இந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்கும், பிரிவினைக்கான பிரசாரம் எதையும் செய்யாமல் இருப்பதற்கும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த திருத்தத்தின் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாடு கோரிக்கையை கைவிட நேரிட்டது.

📑21-வது திருத்தம் (1967) - எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.

📑24-வது திருத்தம் (1971) – பாராளுமன்றத்திற்கு இந்திய அரசமைப்பின் எந்த பகுதியையும் திருத்தும் அதிகாரத்தை வழங்கியது.

📑26-வது திருத்தம் (1971) – முன்னாள் மன்னர்களுக்கான மானியங்களும், சிறப்புரிமைகளும் ஒழிக்கப்பட்டன.

📑42-வது திருத்தம் (1976) - சிறிய அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்படுகிறது.  அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டன.

📑 44-வது திருத்தம் (1978) - சொத்துரிமை, அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது.

📑52-வது திருத்தம் (1985) - பத்தாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.

📑 58-வது திருத்தம் (1987)  - ஹிந்தியில் அமைந்த அரசமைப்புச் சட்டமும் அதிகாரபூர்வமான பனுவலாக ஏற்கப்பட்டது.

📑 61-வது திருத்தம் (1989) - வாக்களிப்பதற்கான வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தது.

📑69-வது திருத்தம் (1991) - டெல்லி இந்தியாவின் தலைநகர் பகுதி (National Capital Territory) ஆனது.

📑 71-வது திருத்தம் (1992)  - கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

📑73-வது திருத்தம் (1992) - பஞ்சாயத்து ராஜ்.

📑74-வது திருத்தம் (1994) - நகராட்சி நிர்வாகம் தொடர்பானது.

📑76-வது திருத்தம் (1996) - தமிழக இடஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

📑82-வது திருத்தம் (2000) - பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு.

📑 84-வது திருத்தம் (2001) - லோக்சபா சீட் எண்ணிக்கையை 2026 வரை நிரந்தரப்படுத்தியது.

 📑86வது திருத்தம் (2002) - கல்வி அடிப்படை உரிமையானது. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அளிப்பது என்ற பொருள் உறுப்பு 45-ல் இருந்து, உறுப்பு 21A க்கு மாற்றப்பட்டது. மேலும் 6 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார் பாதுகாப்பு என்ற புதிய பொருளைக் கொண்டதாக உறுப்பு 45 மாற்றி அமைக்கப்பட்டது.
பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதை வலியுறுத்தும் 51 A என்ற உறுப்பு சேர்க்கப்பட்டது.

📑 87-வது திருத்தம் (2003)  மக்களவை, மாநில சட்டமன்ற சீட்டுகளை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாற்றியமைத்தது.

📑 91-வது திருத்தம் (2003)  மத்திய, மாநில அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை, லோக்சபா, மாநில சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 15%க்கு மேம்படக் கூடாது என உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது.

📑92-வது திருத்தம் (2003)  போடோ, மைதிலி, சந்தாலி, டோக்ரி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

📑93-வது திருத்தம் (2005)  பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு.

📑 94-வது திருத்தம் (2006)  மலைவாழ் மக்களின் நலனுக்கு தனி அமைச்சர் நியமனத்தை (ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்) வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.

📑96-வது திருத்தம் (2011)  இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 15-வதாக இடம்பெறும் 'ஒரியா’ மொழியின் பெயர் 'ஒடியா’ எனப் பெயர்மாற்றம் செய்ய வழிவகுத்தது.

📑 *97-வது திருத்தம் (2012) – உறுப்பு 19 (1) Cல் கூட்டுறவு சங்கங்கள் (Co Operative Societies* ) என்னும் சொல்லை சேர்ப்பது தொடர்பானது. மேலும் உறுப்பு *43 Bயை சேர்த்ததுடன், பகுதி IX  B-யை (கூட்டுறவு சங்கங்கள* ்) சேர்க்க வழிவகை செய்ததது. இந்திய கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிப்பது இந்த திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

📑 *98-வது திருத்தம் (2013)* – ஹைதராபாத் – கர்நாடகா பகுதியில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கர்நாடக ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உறுப்பு *371E* யை புதிதாக சேர்த்தத

📑 *8, 23, 45, 65, 79, 95* -வது திருத்தங்கள் – பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் மக்களவை மாநில சட்டமன்றங்களில் ஆங்கிலோ – இந்தியர்களுக்கான நியமனம் ஆகியவற்றை பத்து பத்து ஆண்டுகளாக நீட்டித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக