திங்கள், 30 ஏப்ரல், 2018

குறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்


குறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்

லட்ச கணக்கான ரூபாய்களை கல்வி கட்டணமாக செலுத்தி படித்தால் தான் சிறந்த கல்வி , உடனடி வேலை கிடைக்கும் என்ற மாயை தற்போது நிலவி வருகின்றது. இது உண்மையில்லை, குறைந்த செலவில் படிக்கும் பல சிறந்த படிப்புகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

அறிவியல் படிப்புகள் :

B.Sc ( physics)  : இந்த படிப்பை அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். வெறும் B.Sc ( physics) மட்டும் படிக்காமல்  M.Sc சேர்த்து படித்தால், இஸ்ரோ, DRDO போன்ற அரசு நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக பணியாற்றலாம். ஆராய்ச்சி துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. M.Sc படிக்க கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.

B.Sc ( Chemistry) : மருந்து மாத்திரைகள் தயாரிப்பு துறை, பிளாஸ்டிக் தயாரிப்பு துறை உட்பட பல துறைகளில் வேலை வாய்ப்புள்ள படிப்பு இது. வெறும் B.Sc(Chemistry) மட்டும் படிக்காமல், M.Sc படித்தால் எளிதில் வேலை கிடைக்கும். CSIR தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஆராய்ச்சி துறையில் நல்ல ஊதியத்துடன் பணியாற்ற முடியும்.

B.Sc (Mathematics) : புள்ளியியல் துறை(Statistics), தகவல் பகுப்பாய்வு (Data analytics) , செயற்க்கை நுண்ணறிவு (Artificial Intelligence)  துறைகளில் சிறந்த வேலை வாய்புகள் உள்ளன. வெறும் B.Sc மட்டும் படிக்காமல், M.Sc Mathematics, M.Sc Statistics படிப்புகள் படித்தால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு உடனே கிடைக்கும்.

IIT-ல் M.Sc (physics, Chemistry, Mathematics)  படிப்பதற்கு  JAM என்ற தேர்வும், சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் M.Sc (physics, Chemistry, Mathematics)  படிக்க தனியாக நுழைவு தேர்வும் உள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று M.Sc படிப்பை  ஐஐடியிலோ அல்லது  அண்ணா பல்கலை கழகத்திலோ படிதால் உள்நாட்டில் பொறியாளருக்கு (Engineer) நிகரான வேலை கிடைக்கும். வெளிநாட்டில் மாத மாதம் ஊக்க தொகை வாங்கி கொண்டு phd படிக்கலாம். phd முடித்ததும் உள்நாடு/வெளிநாட்டிலோ பேராசிரியராக பணியாற்றலாம்.

M.Sc (physics, Chemistry, Mathematics)  முடித்தவர்கள் GATE மற்றும் TANCET தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று M.E/M.Tech படிக்கலாம். இதன் மூலம் தகவல் தொழில் நுட்ப துறை (IT) உட்பட  பெரும்பாலான துறையில் பணியாற்றலாம்.

வேலை வாய்ப்பை இலக்காக கொண்ட மாணவர்கள் B.Sc (chemistry, mathematics) படிக்கலாம், ஆராய்ச்சியை இலக்காக கொண்ட மாணவர்கள் B.Sc (physics, chemistry) படிக்கலாம், கல்வி துறை (Teaching) , ஆராய்ச்சி துறை (Research) , தகவல் தொழில் நுட்பம் (IT) , உற்பத்தி துறை  (Manufacturing) என பெரும்பாலான துறைகளில் வேலை வாய்ப்புள்ள சிறந்த படிப்புகள் இவை.

கலை படிப்புகள்  :

B.A (Economics) : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.4 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். பொருளாதார துறையில் அதிக வேலைவாய்ப்புள்ள படிப்பு (வங்கி /வட்டி  துறையை தவிர்க்கவும்). M.A (Economics) படிப்பதன் மூலம் விற்பனை துறை, பொருளாதார திட்டமிடல் துறை, வர்த்தக துறை போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்பை பெறலாம். M.A படிப்பதற்க்கு கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.

B.A (English) : மொழிபெயற்பாளர் (Translator), கல்வி துறை (Teaching) போன்ற துறைகளில் அதிக வேலை வாய்புள்ள படிப்பு.

B.A (Journalism, Mass media) ஊடக துறைபடிப்புகள் : குறைந்த செலவில் படிக்கும் சமூககதிற்க்கு பயனளிக்கும் சிறந்த படிப்புகள் ஊடக துறைபடிப்புகள். மேற்கொண்டு M.A படித்து ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டால் நல்ல ஊடகத்தில் சிறந்த வேலை எளிதில் கிடைக்கும்.

B.Com : பொறியாளர், மருத்துவருக்கு இணையான துறையாக பார்க்கப்படுவது கணக்காளர் (Accountant) துறை. B.Com படித்து CA (charted  accountant) , CMA ( cost management accounting) , ICS போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுவன் மூலம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்க முடியும். இப்படி பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டாலும் நல்ல சம்பளத்துடம் கூடிய அதிக வேலைவாய்ப்புகள் B.Com படிப்புகளுக்கு உள்ளன.

மேலாண்மை படிப்பு :

B.B.A : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். B.B.A படிப்போடு, ஜெர்மன், பிரன்சு, ஜாபனீஸ் மொழிகளில் ஏதேவது ஒன்று தெரிந்தால் விற்பனை துறையில் (sales, marketing) அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆங்கில மொழி திறனும், நல்ல தொடர்பு திறனும் (communication skill)  இருந்தால் பொறியாளருக்கு இணையான சம்பளத்துடன் அதிக வேலைவாய்ப்புகள் உள்ள படிப்பு இது.

தகவல் தொழில் நுட்ப துறை (IT) :

மாதம் லட்ச கணக்கில் சம்பளத்தை அள்ளி தரும் துறை IT filed என சொல்லப்படும் தகவல் தொழில் நுட்ப துறை. B.C.A மற்றும் B.Sc (computer science) படித்து,  Python, R, Go போன்ற கணிணி மொழியில் (programing language) ஆழ்ந்த அறிவு இருந்தால் Automation துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், தனியார் கல்லூரியில் வருடத்திற்க்கு ரூ.20 ஆயிரம் வரையிலும் செலவாகும். கூடுதலாக MCA அல்லது M.Sc (IT) படித்தால் பொறியாளருக்கும் இணையான ஊதியம் பெற முடியும். தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாய்ப்பை பெற மிக முக்கியமானது ஆங்கில பேச்சாற்றல், தொடர்பு திறன் மற்றும் ஏதாவது ஒரு கணிணி மொழியில் ஆழந்த அறிவு இருக்க வேண்டும். MCA, M.Sc (IT) படிக்க கல்லூரிக்க ஏற்றவாரு வருடத்திற்க்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும்.

குறைந்த செலவில் பொறியியல் (Engineering) , மருத்துவம் (MBBS) படிக்க :

தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் (B.E) படிக்க வருடத்திற்க்கு ஆகும் செலவு ரூ.20 ஆயிரம் தான். இதற்க்கு +2 ல் 195 -க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரியில் MBBS படிக்க வருடத்திற்க்கான கல்வி கட்டணம் ரூ.25 ஆயிரம் தான். இதற்க்கு  NEET தேர்வில் குறைந்தது 400 மார்க் எடுக்க வேண்டும் (அதாவது மொத்தம் 720 மதிப்பெணிற்க்கு 400 மதிப்பெண் எடுக்க வேண்டும்).

படிப்பிற்க்கு மிக அதிக பணம் செலவாகும் என்பது நமது அறியாமைதான், நமது அறியாமையைதான் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி லட்ச கணக்கில் கல்வி கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றன. மாணவர்களை நன்றாக படிக்க வைத்தால் எந்த படிப்பிற்க்கும் சில ஆயிரங்கள் தான் செலவாகும்.

எனவே பெற்றோர்களே! மாணவர்களே!, கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி, சொத்தை விற்று லட்ச கணக்கில் கல்வி கட்டணம் கட்டி படிப்பதை விட குடும்பத்தின் பொருளாதார சூழலுக்கு ஏற்றார்போல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இறைவன் நாடினால் நமது எதிர்காலம் சிறப்பாகவே அமையும், இறைவன் மீது நம்பிக்கை இழக்காதீர்கள்

சனி, 28 ஏப்ரல், 2018

இந்திய அரசியலமைப்பின் மூலங்கள்


இந்திய அரசியலமைப்பின் மூலங்கள்

நமது இந்திய அரசுச்சட்டம் 1935-ல் இடம்பெற்றுள்ள சட்டங்கள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டவை என்ற குறிப்புகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு மிகவும் முக்கியமான தொகுதி. இதிலிருந்து UPSC, மற்றும் எல்லா மாநில போட்டி தேர்வுகளிலும் வினாக்கள் கேட்கப்படும்.

இங்கிலாந்து (England):

♨நாடாளுமன்றம்
♨குடியுரிமை
♨சட்டம் இயற்றும் முறை
♨கீழ் சபைக்கு அதிக அதிகாரம்
♨அமைச்சரவை & அதன் தலைவர் பிரதமராக செயல்படுதல்.
♨குடியரசு தலைவர் பெயரளவு தலைவர்.

அமெரிக்கா (America)

💈அடிப்படை உரிமைகள்
💈முகப்புரை
💈சுதந்திரமான நீதித்துறை
💈நீதிபதிகள் பதிவு நியமனம் & நீக்கம்.
💈நீதிபுனராய்வு
💈குடியரசு தலைவர் பதவி
💈குடியரசு தலைவர் முப்படை தலைவராக செயல்படுதல்
💈குடியரசு தலைவர் நிர்வாகத்துறை தலைவர்


🌺 அதிக தகவல்களுக்கு  TNPSC - நண்பர்கள்  Fb குரூப்பை பாருங்க 🍁

அயர்லாந்து (Ireland):

🔰அரசுக்கு வழிகாட்டும் 🔰நெறிமுறைக் கோட்பாடு
🔰ராஜ்ய சபா (12) உறுப்பினர் குடியரசு தலைவரால் நியமனம்.
🔰குடியரசு தலைவர் தேர்தல் முறை.

ஜெர்மணி (Germany):

📡நெருக்கடி நிலையின்பொது அடிப்படை உரிமைகள் இடை நீக்கம்.

கனடா (Canada):

💡கூட்டாட்சி முறை
💡வலிமையான மத்திய அரசு
மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகார பகிர்வு.

🇺ரஷ்யா (Russia)

🔱அடிப்படை கடமைகள்
5 ஆண்டுத்திட்டம்.

ஆஸ்திரேலியா (Australia):

🎯பொதுப்பட்டியல்
🎯வாணிபம்
🎯மத்திய – மாநில அரசு உறவுகள்.
முகப்புரையின் மொழி.

தென் ஆப்பிரிக்கா (South Africa):

🎯அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்

🇷பிரான்ஸ் (France):

🏆குடியரசு அரசாங்கம்

🇵ஜப்பான் (Japan :

🎯உச்சநீதிமன்றம்

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள்



இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 325,335,337,338,343,344,346,354,357,379,381,403,406,407,408,411,414,417,418,419,420,421,422,423,424,428,429,430,451,482,486,494,500,509 ஆகியவற்றின் கீழ் அடங்கிய குற்றங்களை நீதிமன்றத்தின் முன் அனுமதியை பெற்று சமரசம் செய்து கொள்ளலாம்.

நீதிமன்றத்தின் முன் அனுமதியை பெற்று சமரசம் செய்து கொள்ளும் குற்றங்களில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

325- கொடுங்காயம் விளைவித்தல்

335- திடீரென ஆத்திரமூட்டப்பட்டதன் பேரில் கொடுங்காயம் விளைவித்தல்

337-  மற்றவர்களின் உயிருக்கோ, உடலுக்கோ அபாயம் விளைவிக்கும் வகையில் முரட்டுத்தனமான அல்லது கவனமின்மை செயல் ஒன்றால் கொடுங்காயம் விளைவித்தல்

343-  3 நாட்களுக்கு மேற்பட்ட அளவில் ஒருவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்

346-  இரகசியமான முறையில் ஒருவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்

354-  ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தும் கருத்துடன் தாக்குதல் அல்லது வன்முறை தாக்குதல்

357-  ஒருவரை சட்ட விரோதமாக அடைத்து வைக்க முயலும் போது தாக்குதல்

381- முதலாளியின் பொருளை வேலைக்காரன் திருடுவது

403-  கையாடல்

406-  நம்பிக்கை மோசடி

407-  கொண்டு செல்வோர் அல்லது துறைமுக சரக்கு மேடைக்குரியவர் முதலியவர்களால் செய்யப்பட்ட நம்பிக்கை மோசடி குற்றம்.

411-  திருட்டு பொருளை வாங்குதல்

414-  திருட்டு பொருளை மறைத்து வைத்தல்

415- ஏமாற்றுதல்

418-  சட்டத்தின் மூலம் நபர் ஒருவரை காப்பாற்றக் கடமைபட்டவரை ஏமாற்றுதல்

419-  ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்

420-  ஏமாற்றி நேர்மையற்ற வகையில் பொருளை ஒப்படைக்க தூண்டுதல் அல்லது ஆவணமொன்றை உருவாக்குதல் அல்லது மறைத்தல்

421-  கடன் கொடுத்தவர்களிடையே பகிர்ந்து கொள்வதை தடுப்பதற்காக பொருள் முதலியவற்றை மோசடியாக அகற்றுதல் அல்லது மறைத்தல்

422-  குற்றவாளிக்கு வந்து சேர வேண்டிய கடன் அல்லது உரிமை பணத்தை குற்றவாளிக்கு கடன் கொடுத்தவர்கள் அடையாதிருக்கும் வகையில் மோசடியாக தடுத்தல்

423-  மறுபயன் குறித்து பொய்யான உரை அடங்கியுள்ள மாற்றல் பத்திரத்தை மோசடியாக எழுதி கொடுத்தல்

424-  பொருளை மோசடியாக அகற்றுதல் அல்லது மறைத்தல்

428-  10 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பு வாய்ந்த விலங்கினை கொல்லுதல் அல்லது ஊனமாக்குதல்

429-  எத்தகு மதிப்பு வாய்ந்ததாக இருந்தாலும் கால்நடை முதலியவற்றை, 50 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பு வாய்ந்த விலங்குகளை கொல்லுதல் அல்லது ஊனமாக்குதல்

430-  சட்ட விரோதமாக நீரோட்டத்தை திருப்பி விட்டு நீர் பாசனத்துக்கு கேடு விளைவித்தல், இக்குற்றம் தனிப்பட்ட நபர் ஒருவருக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும் போது மட்டுமே சமரசம் செய்து கொள்ள முடியும்.

451-  சிறை தண்டனை விதிப்பதற்குரிய (திருட்டு அல்லாத) குற்றம் ஒன்றை செய்வதற்காக வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல்

482-  போலி வணிக அல்லது சொத்து அடையாளத்தை பயன்படுத்துதல்

483-  வணிக அல்லது சொத்து அடையாளத்தை கள்ளத்தனமாக தயாரித்தல்

494-  இரண்டாம் திருமணம் செய்து கொள்ளல்

500- குடியரசுத் தலைவர், குடியரசுதய துணைத் தலைவர், மாநில ஆளுநர், மண்டலம் ஒன்றின் ஆட்சியாளர், அமைச்சர் ஆகியோர்களுக்கு எதிரான அவதூறு

509-  பெண் ஒருவரின் மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் உட்கருத்துடன் சொற்களை சொல்லுதல், ஒலிகளை எழுப்புதல், சைகை காட்டுதல், பொருள் எதையும் தெரியும்படி காட்டுதல், பெண்ணின் அந்தரங்கத்தில் தகாத முறையில் தலையிடுதல்

புதன், 25 ஏப்ரல், 2018

அனைத்து துறைகளுக்கும் தமிழ் நூல்கள்

தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.

1.அகச்சுரப்பியியல் – Endocrinology
2.அடிசிலியல் – Aristology
3.அடையாளவியல் – Symbology
4.அண்டவியல் – Universology
5.அண்டவியல் – Cosmology
6.அணலியல் – Pogonology
7.அருங்காட்சியியல் – Museology
8.அருளரியல் – Hagiology
9.அளவீட்டியல் – Metrology
10.அற்புதவியல் – Aretalogy
11.ஆடவர் நோயியல் – Andrology
12.ஆய்வு வினையியல் – Sakanology
13.ஆவணவியல் – Anagraphy
14.ஆவியியல் – Spectrology
15.ஆறுகளியல் – Potamology
16.இசையியல் – Musicology
17.இந்தியவியல் – Indology
18.இயற்பியல் – Physics
19.இரைப்பையியல் – Gastrology
20.இலக்கிலி இயல் – Dysteleology
21.இறை எதிர் இயல் – Atheology
22.இறைமையியல் – Pistology
23.இறைமையியல் – Theology
24.இன உறுப்பியல் – Aedoeology
25.இன்ப துன்பவியல் – Algedonics
26.இனப் பண்பாட்டியல் – Ethnology
27.இனவியல் – Raciology
28.ஈரிடவாழ்வி இயல் – Herpetology
29.உடலியல் – Physiology
30.உடற் பண்டுவஇயல் – Phytogeography
31.உடற்பண்பியல் – Somatology
32.உடுவியக்கவியல் – Asteroseismology
33.உணர்வகற்றியல் – Anesthesiology
34.உயிர் மின்னியல் – electro biology
35.உயிர்ப்படிமவியல் – Paleontology
36.உயிர்ப்பொருளியல் – Physiology
37.உயிர்மியியல் – Cytology
38.உயிரித் தொகை மரபியல் – Population Genetics
39.உயிரித்தொகை இயக்க இயல் – Population Dynamics
40.உயிரிய இயற்பியல் – Biophysics
41.உயிரிய மின்னணுவியல் – Bioelectronics
42.உயிரிய வேதியியல் – Biochemistry
43.உயிரிய வேதிவகைப்பாட்டியல் – Biochemical taxonomy
44.உயிரியத்தொழில் நுட்ப இயல் – Biotechnology
45.உயிரியப் பொறியியல் – Bioengineering
46.உயிரியல் – Biology
47.உயிரினக் காலவியல் – Bioclimatology
48.உயிரினச் சூழ்வியல் – Bioecology
49.உருவகவியல் – Tropology
50.உருள்புழுவியல் – Nematology
51.உரைவிளக்கியல் – Dittology
52.உளவியல் – Psychology
53.ஊட்டவியல் – Trophology
54.எகிப்தியல் – Egyptology
55.எண்கணியியல் – Numerology
56.எரிமலையியல் – Volconology
57.எலும்பியல் – Osteology
58.எலும்பு நோய் இயல் – Osteo pathology
59.எறும்பியல் – Myrmecology
60.ஒட்பவியல் – Pantology
61.ஒப்பனையியல் – Cosmetology
62.ஒலியியல் – Phonology
63.ஒவ்வாமை இயல் – Allergology
64.ஒழுக்கவியல் – Ethics
65.ஒளி அளவை இயல் – Photometry
66.ஒளி இயல் – Photology
67.ஒளி உயிரியல் – Photobiology
68.ஒளி விளைவியல் – Actinology
69.ஒளி வேதியியல் – Photo Chemistry
70.ஒளித்துத்த வரைவியல் – Photozincography
71.ஓசையியல் – Acoustics
72.கசிவியல் – Eccrinology
73.கட்டடச்சூழலியல் – Arcology
74.கடப்பாட்டியல் – Deontology
75.கடல் உயிரியல் – Marine biology
76.கடற் பாசியியல் – Algology
77.கண்ணியல் – Opthalmology
78.கணிப்பியல் – Astrology
79.கதிர் மண்டிலவியல் – Astrogeology
80.கதிர் விளைவியல் – Actinobiology
81.கரிசியல் – Hamartiology
82.கரிம வேதியியல் – Organic Chemistry
83.கருத்தியல் – Ideology
84.கருதுகை விலங்கியல் – Cryptozoology
85.கருவியல் – Embryology
86.கருவியல் – Embryology
87.கல்வி உளவியல் – Educational Psychology
88.கலைச்சொல்லியல் – Terminology
89.கழிவியல் – Garbology
90.கனி வளர்ப்பியல் – Pomology
91.கனிம வேதியியல் – inorganic chemistry
92.கனியியல் – Carpology
93.கனியியல் – Pomology
94.காளானியல் – Mycology
95.காற்றழுத்தவியல் – Aerostatics
96.காற்றியக்கவியல் – Aerodynamics
97.காற்றியல் – Anemology
98.கிறித்துவியல் – Christology
99.குடல் புழுவியல் – Helminthology
100.குருட்டியல் -Typhology
101.குருதி இயல் – Haematology / Hematology
102.குளுமையியல் – Cryology
103.குற்றவியல் – Criminology
104.குறிசொல்லியல் – Parapsychology
105.குறிப்பியல் – Cryptology
106.குறியீட்டியல் – Iconology
107.கெல்டிக் சடங்கியல் – Druidology
108.கேட்பியல் – Audiology
109.கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)-Pasimology
110.கையெழுத்தியல் – Graphology
111.கொள்ளை நோயியல்- Epidomology
112.கோட்பாட்டியல் – Archology
113.கோளியல் – Uranology
114.சங்குஇயல் – Conchology
115.சமயவிழாவியல் – Heortology
116.சரி தவறு ஆய்வியல் – Alethiology
117.சாணவியல் – Scatology
118.சிலந்தி இயல் – Araneology
119.சிலந்தியியல் – Arachnology
120.சிறப்புச் சொல் தோற்றவியல் – Onomatology
121.சீனவியல் – Sinology
122.சுரப்பியியல் – Adenology
123.சூழ் வளர் பூவியல் – Anthoecology
124.சூழ்நிலையியல் – Ecology
125.செதுக்கியல் – Anaglyptics
126.செய்கை இயல் – Dactylology
127.செல்வ வியல் – Aphnology
128.செல்வவியல் – Plutology
129.செவ்வாயியல் – Areology
130.செவியியல் – Otology
131.சொல்லியல் – Lexicology
132.சொல்லியல் – Accidence
133.சொற்பொருளியல் – Semasiology
134.தசையியல் – Myology
135.தண்டனையியல் – Penology
136.தமிழியல் – Tamilology
137.தன்மையியல் – Axiology
138.தன்னியல் – Autology
139.தாவர உள்ளியல் – Phytotomy
140.தாவர நோய் இயல் – Phytopathology
141.தாவர வரைவியல் – Phytography
142.தாவரஊட்டவியல் – Agrobiology
143.தாவரவியல் – Botany
144.திணைத் தாவர இயல் – Floristics
145.திணையியல் – Geomorphology
146.திமிங்கில இயல் – Cetology
147.திருமறைக் குறியீட்டியல் – Typology
148.திருமனையியல் – Naology
149.திரைப்படவியல் – Cinimatography
150.தீவினையியல் -Ponerology
151.துகள் இயற்பியல் – Particle physics
152.துகளியல் – Koniology
153.துதிப்பாவியல் – Hymnology
154.துயிலியல் – Hypnology
155.தூய இலக்கியல் – Heirology
156.தூள்மாழை இயல் – Powder Metallurgy
157.தேர்தலியல் -Psephology
158.தேவதை இயல் – Angelology
159.தேவாலயவியல் – Ecclesiology
160.தேனீ இயல் – Apiology
161.தொடர்பிலியியல் – Phenomenology
162.தொண்டை இயல் – Pharyngology
163.தொல் அசீரியர் இயல் – Assyriology
164.தொல் உயிரியல் – Palaeontology
165.தொல் சூழ்நிலையியல் – Paleo ecology
166.தொல் பயிரியல் – Paleobotany
167.தொல் மாந்தவியல் – Paleoethnology
168.தொல் மீனியல் – Paleoichthylogy
169.தொல் விலங்கியல் – Palaeozoology
170.தொல்தோற்ற இனவியல் (மாந்த – மாந்தக்குரங்கினவியல்) – Anthropobiology
171.தொல்லிசையியல் – Ethnomusicology
172.தொல்லியல் – Archaeology
173.தொல்லினவியல் – Paleethnology
174.தொல்லெச்சவியல் – Archaeozoology
175.தொழில் நுட்பச் சொல்லியல் – Orismology
176.தொழில் நுட்பவியல் – Technlogy
177.தொழிற்சாலை வேதியியல் – industrial chemistry
178.தொழு நோயியல் – Leprology
179.தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் – Pestology
180.தொன்மவியல் – Mythology
181.தோட்டுயிரியியல் – Astacology
182.தோல்நோயியல் – Dermatology
183.நச்சியியல் – Virology
184.நடத்தையியல் – Praxeology
185.நரம்பியல் – Neurology
186.நல்லுயிரியல் – Pneumatology
187.நலிவியல் – Astheniology
188.நன்னியல் – Agathology
189.நாடி இயல் – Arteriology
190.நாணயவியல் – Numismatology
191.நாளவியல் – Angiology
192.நிகழ்வியல்- Chronology
193.நிலத்தடி நீரியல் – Hydrogeology
194.நிலநடுக்கவியல் – Seismology
195.நிலாவியல் – Selenology
196.நிலை நீரியல் – Hydrostatics
197.நீத்தாரியல் – Martyrology
198.நீர் வளர்ப்பியல் – Hydroponics
199.நீர்நிலைகளியல் – Limnology
200.நீராடல் இயல் – Balneology
201.நுண் உயிரியல் – Microbiology
202.நுண் வேதியியல் – Microchemistry
203.நுண்பொருளியல் – Micrology
204.நுண்மி இயல் – Bacteriology
205.நுண்மின் அணுவியல் – Micro-electronics
206.நூல் வகை இயல் – Bibliology
207.நெஞ்சக வியல் – Cardiology
208.நெடுங்கணக்கியல் – Alphabetology
209.நெறிமுறையியல் – Aretaics
210.நொதி இயல் – Enzymology
211.நொதித் தொழில் நுட்பவியல் – Enzyme tecnology
212.நோய் இயல் – Pathology
213.நோய்க்காரணவியல் – Aetiology
214.நோய்க்குறியியல் – Symptomatology
215.நோய்த்தடுப்பியல் – Immunology
216.நோய்த்தீர்வியல் – acology
217.நோய்நீக்கியல் – Aceology
218.நோய்வகையியல் – Nosology
219.நோயாய்வியல் – Etiology
220.நோயியல் – Pathology
221.படஎழுத்தியல் – Hieroglyphology
222.படிகவியல் – crystallography
223.பணிச்சூழ் இயல் – Ergonomics
224.பத்தியவியல் – Sitology
225.பயிர் மண்ணியல் – Agrology
226.பயிரியல்-Phytology
227.பரியியல் – Hippology
228.பருப் பொருள் இயக்கவியல் – kinematics
229.பருவ இயல் – Phenology
230.பருவப் பெயர்வியல் – Phenology
231.பல்லியல் – Odontology
232.பழங்குடி வழக்கியல் – Agriology
233.பழம்பொருளியல் – Paleology
234.பற் கட்டுப்பாட்டியல் – Contrology
235.பறவை நோக்கியல் – Ornithoscopy
236.பறவையியல் – Paleornithology
237.பனிப்பாளவியல் – Glaciology
238.பாசி இயல் – Phycology
239.பாப்பிரசு சுவடியியல் – Panyrology
240.பாம்பியல் – Ophiology
241.பார்ப்பியல் Neossology
242.பாலூட்டியல் – Mammalogy
243.பாறைக் காந்தவியல் – Palaeo Magnetism
244.பாறையியல் – Lithology
245.பாறை அமைவியல் – Petrology
246.பிசாசியல் – Diabology
247.பிளவையியல் – Oncology
248.புத்த இயல் – Buddhology
249.புத்தியற்பியல் – New physics
250.புதிரியல் – Enigmatology
251.புதைபடிவ இயல் – Ichnology
252.புல உளவியல் – Faculty Psychology
253.புல்லியல் – Agrostology
254.புவி இயற்பியல் – Geo physics
255.புவி உயிர்ப் பரவியல் – Biogeography
256.புவி வடிவ இயல் – Geodesy
257.புவி வளர் இயல் – Geology
258.புவி வேதியியல்- Geo-chemistry
259.புவியியல் – Geography
260.புவிவெளியியல் – Meteorology
261.புள்ளியல் – Ornithology
262.புறமண்டிலவியல் – Exobiology
263.புற்று நோய் இயல் – Cancerology
264.பூச்சி பொட்டு இயல் – Acarology
265.பூச்சியியல் – Entomology
266.பூச்சியியல் – Entomology
267.பூச்சியியல் – Insectology
268.பெயர்வன இயல் – Acridology
269.பெரு வாழ்வியல் – macrobiotics
270.பேயியல் – Demonology
271.பொதுஅறிவு இயல் – Epistemology
272.பொருள்சார் வேதியியல் – Physical Chemistry
273.போட்டியியல் – Agonistics
274.போதனையியல் – Patrology
275.மகளிர் நோய் இயல் – Gynaecology/ Gynecology
276.மண்டையோட்டியல் – Craniology
277.மண்ணியல் – Pedology
278.மண்புழையியல் – Aerology
279.மணி இயல் – Campanology
280.மணிவியல் – Gemology
281.மதுவியல் – Enology (or Oenology)
282.மர ஒளி வரைவியல் – Photoxylography
283.மரபு இயைபியல் – Genecology
284.மரபு வழியியல் – Geneology
285.மரவரியியல் – Dendrochronology
286.மரவியல் – Dendrology
287.மருத்துவ அளவீட்டியல் – Posology
288.மருத்துவ நோயியல் – Clinical pathology
289.மருத்துவ மரபணுவியல் – Clinical genetics
290.மருந்தாளுமியல் – Pharmacy
291.மருந்தியல் – Pharmacology
292.மருந்து வேதியியல் – Medicinal chemistry
293.மலையியல் – Orology
294.மழையியல் – Ombrology
295.மனக்காட்சியியல் – Noology
296.மனநடையியல் – Nomology
297.மன்பதை உளவியல் – Social Psychology
298.மன்பதையியல் – Sociology
299.மனைவளர்உயிரியல் – Thremmatology
300.மாந்த இனவியல் – Ethnology
301.மாவியல் – Morphology
302.மானிடவியல் – Anthropology
303.மின் ஒலியியல் – Electro-acoustics
304.மின்வேதியியல் – Electrochemistry
305.மின்னணுவியல் – Electronics
306.மீனியல் – Ichthyology.
307.முகிலியல் – Nephology
308.முட்டையியல் – Oology
309.முடியியல் – Trichology
310.முதற்கோட்பாட்டியல் – Archelogy / Archology
311.முதியோர் கல்வியியல் – Andragogy
312.முதுமையியல் – Gerontology
313.முரண் உயிரியல் – Teratology
314.முரணியல் – Heresiology
315.முறையியல் – Systomatology
316.முனைப்படு வரைவியல் – Polarography
317.மூக்கியல் – Rhinology
318.மூதுரையியல் – Gnomology
319.மூப்பியல் – Gerontology
320.மூலக் கூறு உயிரியல் – Molecular biology
321.மெய் அறிவியல் – Philosophy
322.மெய்ம்மி நோயியல் – Histopathology
323.மெய்ம்மியியல் – Histology
324.மேகநோயியல் – Syphilology
325.மொழியியல் – Philology
326.மோப்பவியல் – Olfactology
327.ரூனிக்கியல் – Runology
328.வகையியல் – Taxology
329.வண்ணவியல் – Chromatology
330.வழக்குப் பேச்சியல் – Dialectology
331.வழிபாட்டியல் – Liturgiology
332.வளி நுண்மியல்- Aerobiology
333.வளிநுகரியியல் – Aerobiology
334.வாந்தியியல் – Emetology
335.வாய்நோயியல் – Stomatology
336.வாலில்லாக் குரங்கியல் – Pithecology
337.வான இயற்பியல் – Astrophysics
338.வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) – Aerophilately
339.வானியல் – Astronomy
340.வானிலை இயல் – Neteorology/ Astrometeorology
341.வானோடவியல் – Aerodonetics
342.விசை இயக்க இயல் – Kinetics
343.விண்கற்களியல் – Aerolithology
344.விண்ணுயிரியியல் – Astrobiology
345.விண்பொருளியல் – Astrogeology
346.விந்தையியல் – Thaumatology
347.விலங்கியல் – Zoology
348.விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) – Agronomics
349.வெளிற்றியல் – Agnoiology
350.வேதியியல் – Chemistry
351.வேதிவகைப்பாட்டியல் – Chemotaxonomy
352.வேர்ச்சொல்லியல் – Etymology

நன்றி முனைவர் இர.வாசுதேவன், ‘தமிழ் மன்றம்’

TNPSC ONLINE- சான்றிதழ் சரிபார்ப்பு

TNPSC ONLINE- சான்றிதழ் சரிபார்ப்பு
---------------------------------------------------------

(கேள்வியும் நானே-பதிலும் நானே by Aji.)

Q1: சான்றிதழ் சரிபார்ப்பு என்பது என்ன?

A1: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் செல்லும் அடுத்த கட்ட நகர்வே சான்றிதழ் சரிபார்ப்பு ஆகும். அதாவது, விண்ணப்பதாரர்கள் தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து மூலச் சான்றிதழ்களையும் சரியாக முறைப்படி வைத்து உள்ளார்களா என்று உறுதி செய்வதே சான்றிதழ் சரிபார்ப்பு.
--------------------------------------------------------------------------------
Q2: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு எவ்வாறு போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்கள்?

A2: முன்னர் மொத்த காலியிடங்களில் ஒரு காலியிடத்திற்கு இரண்டு பேர் (அதாவது 1:2 விகிதம்) என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டனர், பின்னர் 1: 1.5 அல்லது சமீபத்தில் 1: 1.2 என்ற அளவில் கூட அழைக்கப்படுகிறார்கள். இந்த குரூப் 2A தேர்வில் 1:3 என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.
--------------------------------------------------------------------------------
Q3: சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலே அவர்களுக்கு வேலை நிச்சயம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

A3: அப்படி சொல்ல முடியாது. நிர்ணயிக்கப்பட்ட காலியிடங்களுக்குத்  தேவையான போட்டியாளர்களை விட அதிகமான அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்படுவதால் சான்றிதழ் சரிபார்ப்பிற்குச் சென்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று சொல்ல முடியாது. அவர்களில் சிலருக்கு அடுத்தகட்ட கலந்தாய்வில் கூட அழைப்பு இல்லாமல் போகலாம்.
--------------------------------------------------------------------------------
Q4: எதற்க்காக தேவைக்கும் அதிகமானோரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு TNPSC அழைத்து அதில் சிலரை திரும்ப அனுப்புகிறது?

A4: சரியான நபர்களை அழைக்கும் பட்சத்தில் அவர்களில் பலர் ஏற்கனவே வேலையில் இருந்து இந்த வாய்ப்பை புறக்கணித்தல் அல்லது தகுதி இல்லாத போட்டியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளியேற்றப் படல் போன்ற நிகழ்வுகளால் TNPSC-க்கு மீண்டும் மீண்டும் அனைவரையும் அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த கால விரயம் மற்றும் வேலைப் பளுவை குறைக்கவே தேவைக்கும் அதிகமானோர் அழைக்கப் படுகிறார்கள்.
--------------------------------------------------------------------------------
Q5: இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு எங்கு நடந்து வந்தது?

A5: சென்னை TNPSC அலுவலகத்தில் நடந்து வந்தது. தமிழ் நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னை வரவேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q6: இனி சான்றிதழ் சரிபார்ப்பு எங்கு நடை பெரும்?

A6: இனி சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்ந்து எடுக்கப் பட்ட போட்டியாளர்கள் சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது மூலச் சான்றிதழ்களை (ஒரிஜினல்) ஆன்லைனில் பதிவேற்றம் செய்து  முடித்துக் கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------
Q7: அப்படியானால் நானே அருகில் உள்ள எனது நண்பன் நடத்தி வரும் கணினி மையத்திற்குச் (Computer center) சென்று எனது சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யலாமா?

A7: கூடாது. இதற்க்கான வாய்ப்பு, மாவட்டங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும்  E-சேவா மையங்களுக்கு மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே  E-சேவா மையம் மூலம் அல்லாமல் தன்னிச்சையாக உங்களால்  உங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பொது சேவை மையம் மூலமாக மட்டுமே பண்ண முடியும்.
--------------------------------------------------------------------------------
Q8: நான் இப்பொழுது வேலை காரணமாக வெளியூரில் வசித்து வருகிறேன். அந்த மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பண்ணலாமா?

A8: உங்கள் சொந்த மாவட்டத்தில்தான் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, தமிழ் நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
Q9: பொது சேவை மையங்கள் எனது மாவட்டத்தில் எங்குள்ளது என்பதனை எப்படித் தெரிந்து கொள்வது?

A9: TNPSC வெளியிட்டுள்ள பொது சேவை மையங்களின் பட்டியல் மற்றும் அதன் முகவரிகள் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது.

http://www.tnpsc.gov.in/docu/List_of_new_esevai_address_details.pdf
--------------------------------------------------------------------------------
Q10: பொது சேவை மையங்கள் செயல் படும் நேரம் எது?

A10: காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.
--------------------------------------------------------------------------------
Q11: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என TNPSC நிர்ணயித்துள்ள நாட்கள் எவை?

A11: ஏப்ரல் 23 , 2018, திங்கள் கிழமை முதல் மே 4, 2018, வெள்ளிக்கிழமை வரை. மே 4 க்கு பிறகு உங்களால் உங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியாது. TNPSC-யால் இதற்குண்டான இணையதளம் முடக்கப்பட்டு விடும்.
--------------------------------------------------------------------------------
Q12: ஏப்ரல் 23--மே 4, இந்த நாட்களில் நான் எந்த நாளில் செல்ல வேண்டும் என்று TNPSCஅறிவுறுத்தி உள்ளதா? நான் அந்த குறிப்பிட்ட நாளில்தான்  சென்று எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா?

A12: இல்லை. இந்த நாட்களில் அரசு விடுமுறை நாட்கள் தவிர உங்களுக்கு தோதான எந்த நாளிலும் சென்று உங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு தனியரும் இந்த நாளில் தான் செல்ல வேண்டும் என TNPSC குறிப்பிடவில்லை.
--------------------------------------------------------------------------------
Q13: TNPSC குறிப்பிட்டுள்ள நாட்களில் எனது சான்றிதழ்களை  நான் பதிவேற்றம் செய்யாவிட்டால் என்ன ஆகும்?

A13: நீங்கள் Gr-2A வேலைக்கான போட்டியில் இருந்து நிரந்தரமாக விலக்கப் படுவீர்கள். மறு வாய்ப்பும் அளிக்கப் படாது.
--------------------------------------------------------------------------------
Q14: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலில் எனது பதிவு எண் உள்ளது. இது தவிர எனக்கு தனிப்பட்ட கடிதத்தினை TNPSC அளிக்குமா?

A14: ஆம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வான போட்டியாளர்களுக்கு TNPSC-யால் வழங்கப்பட்டுள்ள  தனிப்பட்ட கடிதத்தினை கீழ்கண்ட இணைப்பில் சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் போட்டுக் கொள்ளலாம்.

http://www.tnpsc.gov.in/Resultget-g2a_cv_call2k17.html
--------------------------------------------------------------------------------
Q15: என்ன என்ன சான்றிதழ்களை நான் கொண்டு போக வேண்டும்?

1. உங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
2. SSLC மதிப்பெண் சான்றிதழ்
3. HSC / DIPLOMO/ITI / Teacher Training மதிப் பெண் சான்றிதழ்.
4. இளநிலைப் பட்டத்திற்க்கான (UG) சான்றிதழ்.
5. முதுநிலைப் பட்டத்திற்க்கான (PG) சான்றிதழ்.
6. சாதிச் சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 15Fல்  தெரிவித்துள்ளபடி)
7. முன்னாள் ராணுவத்தினர் என்பதற்கான  சான்றிதழ்  (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 13 ல் தெரிவித்துள்ளபடி).
8. ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்  (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 5ல் தெரிவித்துள்ளபடி).
9. மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 12 ல் குறிப்பு 1 ல் தெரிவித்துள்ளபடி).
10. இறுதியாகப் பயின்ற கல்வி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ்.
11. இளநிலை பட்டம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்.  
12. தொழில்நுட்பத் தகுதி. (தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் சான்றிதழ்கள்).
--------------------------------------------------------------------------------
Q16: சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு மேற்கண்ட சான்றிதழ்களைத் தவிர வேறு என்ன வேண்டும்?

A16: உங்களது நிரந்தர பதிவின் (One Time Registration) பயனாளர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Pass word) தேவை.
--------------------------------------------------------------------------------
Q17: எனது மாற்றுச் சான்றிதழில் (Transfer Certificate) நன்னடத்தை உள்ளது. நான் தனியாக வாங்க வேண்டுமா?

A17: உங்கள் மாற்றுச் சான்றிதழில் (TC) உங்களது நன்னடத்தை இருப்பின், அதனையே பயன்படுத்தலாம்.
ஆனால், மாற்றுச் சான்றிதழில் "His/Her Conduct and Character is Good" என்ற வார்த்தை முழுவதுமாக இருக்க வேண்டும். His/Her Conduct is Good என்று மட்டும் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மாற்றுச் சான்றிதழில் உங்களது நன்னடத்தை கொடுக்கப்பட்டு இருந்தாலும், இறுதியாகப் பயின்ற கல்வி நிலையத்தில் சென்று சான்றிதழ் வாங்குவது சிறப்பு. இதனை ஒரு முறை மட்டும் வாங்கினால் போதும், அனைத்துத் தேர்வுக்கும் பயன்படுத்தலாம்.
--------------------------------------------------------------------------------
Q18: நான் இறுதியாக தொலை தூரக் கல்வியில் பயின்றேன். அப்படியானால் நான் எங்கு எனது நன்னடத்தைச் சான்றிதழ் வாங்க வேண்டும்?

A18: நீங்கள் அதற்க்கு முன்னதாக எந்த கல்வி நிறுவனத்தில் ரெகுலரில் படித்தீர்களோ அங்கு இந்த நன்னடத்தைச் சான்றிதழை வாங்க வேண்டும். அதாவது குறைந்தது ஒருவருட கோர்ஸில் படித்து இருக்க வேண்டும். ஆறு மாதம் அல்லது மூன்று மாதம்  டிப்ளமோ கோர்ஸ் படித்த நிறுவனங்களில் வாங்கக் கூடாது.

உதாரணமாக நீங்கள் முதுகலை தொலைதூரக் கல்வி முறையில் படித்து இருந்தால், இளநிலை ரெகுலரில் படித்து இருந்தால் அங்கு வாங்கலாம். அல்லது முதுகலைக்கு முன்பு இளங்கலை கல்வியியல் (B.Ed) படித்து இருந்தால் அங்கு வாங்கலாம்.

நீங்கள் இளங்கலை தொலை தூரக் கல்வியில் படித்து இருந்தால், +2 எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அங்கு வாங்கலாம்.
--------------------------------------------------------------------------------
Q19: இளங்கலை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் எங்கு வாங்க வேண்டும்?

A19: ரெகுலரில் படித்தவர்கள் அவர்கள் கல்லூரி முதல்வரிடமும், தொலை தூரக் கல்வியில் படித்தவர்கள் அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடமும் வாங்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q20:   தமிழ் வழி சான்றிதழ் கொடுத்துள்ள ஆங்கிலப் படிவத்தில் தான் வாங்க வேண்டுமா?

A20: TNPSC ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் படிவம் கொடுத்துள்ளது. இருப்பினும், ஆங்கிலத்தில் வாங்குவது நலம். தமிழில் வாங்கி வைத்து இருப்பவர்கள் அதனை பதிவேற்றம் செய்து விட்டு, முடிந்தால் ஆங்கிலத்தில் ஒன்று வாங்கி கலந்தாய்வின்போது கொண்டு செல்லலாம். இரு சான்றிதழ்களும், தேதி மாறுபட்டு இருந்தாலும் பரவாயில்லை.
--------------------------------------------------------------------------------
Q21: என்னிடம் தமிழ் வழி  சான்றிதழ் மற்றும் இறுதியாகப் பயின்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கக் கூடிய நன்னடத்தைச் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்கள் இல்லை. கிடைக்குமா?

A21. கீழ்க் கண்ட இணைப்பின் மூலம், எனது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uRmRYQmNzUy1oTzBQV0dkbUNRMlNVLUNZbXlF
--------------------------------------------------------------------------------
Q22: இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. இதற்க்கு முன்பு குரூப் A அதிகாரி அல்லது குரூப் B அதிகாரியிடமிருந்து  பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழை கேட்டர்களே, அது மேற்கண்ட வரிசையில் இல்லையே?

A22: ஆமாம்,  குரூப் A அதிகாரி அல்லது குரூப் B அதிகாரியிடமிருந்து  பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் இப்போது பதிவேற்றம் செய்யத் தேவை இல்லை. அதனை கலந்தாய்வின் பொழுது கொண்டு செல்ல வேண்டும். இதற்க்கான அறிவுரை கலந்தாய்விற்க்கான அழைப்புக்கு கடிதத்தில் இருக்கும். அதனை பின்பற்றி நடக்கவும்.
--------------------------------------------------------------------------------
Q23: நான் தற்சமயம் அரசு அலுவலராக உள்ளேன். நான் எப்பொழுது தடையின்மைச் சான்றிதழ் (NOC) கொடுக்க வேண்டும்? இப்பொழுது அதனை பதிவேற்றம் செய்யலாமா?

A23. அரசு ஊழியர்களுக்கான தடையின்மைச் சான்றிதழை தற்சமயம் பதிவேற்றம் செய்ய சொல்லவில்லை. எனவே இதனையும் கலந்தாய்வின் பொழுது கொண்டு செல்ல வேண்டும். இதற்க்கான அறிவுரை கலந்தாய்விற்க்கான அழைப்புக்கு கடிதத்தில் இருக்கும். அதனை பின்பற்றி நடக்கவும்.  

ஆனால், தடையின்மைச் சான்றிதழ் தற்சமயம் இருக்கும் பட்சத்தில், அதனையும் பதிவேற்றம் செய்யலாம், தவறில்லை என TNPSC-யில் தெரிவித்தார்கள்.
--------------------------------------------------------------------------------
Q24: நான் பட்டப் படிப்பிற்க்கான தகுதிக்கு (Degree Qualification) எனது மதிப்பெண் பட்டியல் (Cumulative Mark Sheet) சான்றிதழ் எண்ணையும், தேதியையும் கொடுத்து விட்டேன். அப்படியானால், நான் எதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்?

A24: நீங்கள், பட்டச் சான்றிதழை (Convocation) பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்த, மதிப் பெண் பட்டியலை (Cumulative Mark Sheet) பதிவேற்றம் செய்ய தேவை இல்லை.
--------------------------------------------------------------------------------
Q25: எனது சாதிச் சான்றிதழில் தவறு இருப்பதனை நான் தற்போதுதான் கவனித்தேன். அதனைப் பதிவேற்றம் செய்யலாமா?

A25: உங்கள் பெயர், அல்லது தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு போன்றவற்றில் தவறு இருப்பின் அது பெரும் பிழையாகக் கருதப்படும். நீங்கள் புதிதாக ஒரு சாதி சான்றிதழை வாங்கி அதனைப் பதிவேற்றம் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
Q26: அப்படியானால், நான் ஏற்கனவே விண்ணப்பத்தில் கொடுத்து இருக்கும் பழைய சாதி சான்றிதழுக்கும், தற்போதைய புதிய சான்றிதழுக்கும், சான்றிதழ் எண் (Certificate Number) வேறுபடுமே?

A26: சான்றிதழ் எண் வேறுபாட்டால் பரவாயில்லை. அது ஏற்றுக் கொள்ளப்படும். சாதி சான்றிதழைப் பொறுத்தவரை உங்கள் பெயர், அல்லது தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு மிகச் சரியாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
--------------------------------------------------------------------------------
Q27: நான் பொதுச் சேவை மையத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்யும் பொழுது ஒரு சான்றிதழ் பதிவேற்றம் செய்யப் படமால் விடுபட்டு விட்டது. அதனை மறு நாள் சென்று பதிவேற்றம் செய்யலாமா?

A27: செய்யலாம். பொது சேவை அலுவலருக்கு தணிக்கை வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரால், மே 4 வரை உங்கள் கணக்கில் உள்ள, எந்த ஒரு சான்றிதழையும் சேர்க்க முடியும், நீக்க முடியும்.

இருப்பினும், முதல் முறை பதிவேற்றம் செய்யும் பொழுதே கவனமாக செயல்படுதல் நலம்.
--------------------------------------------------------------------------------
Q28: நான் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களில் என்னையறியாமல் பெரிய தவறுகள் ஏதும் இருப்பின், அது எப்போது எனக்குத் தெரியப்படுத்தப் படும்?. கலந்தாய்வில் போதுதான் தெரிய படுத்துவார்களா?

A28: இல்லை. நான் இன்று அலுவலகத்தில் நேரில் சென்று கேட்ட பொழுது, பெரிய தவறுகள் உள்ள போட்டியாளர்களுக்கு, கலந்தாய்விற்கு முன்னனதாக தெரியப்படுத்தப் படும் என்று கூறினார்கள்.
--------------------------------------------------------------------------------
Q29: சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக மேலும் எனக்கு ஏதும், குறுந்செய்தி அல்லது  மின் அஞ்சல் யிலிருந்து வருமா?

A29: உங்களது சான்றிதழ்களில் எந்த பிரச்சினையும் இல்லாத வரை எதுவும் வராது.
--------------------------------------------------------------------------------
Q30: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யப்படும்  பொழுது, எனது இளங்கலை சான்றிதழ் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டு விட்டது. சான்றிதழ் பதிவேற்றத்திற்கு என்று கொடுக்கப்பட்ட நாளும் முடிந்து விட்டது. இப்போது என் நிலை என்ன?

A30: அப்படி விடுபட்டுப் போனால், நீங்கள் இளங்கலை பட்டதாரியாக கருதப்பட மாட்டீர்கள். உங்களது கல்வித் தகுதி என்ற +2 அளவிலேயே TNPSC-யால் கணக்கில் கொள்ளப்படும். மேலும், Gr 2A தேர்விற்கு இளங்கலை பட்டம் என்பதே அடிப்படைத் தகுதி என்பதனால் நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள். கலந்தாய்விற்கு அழைக்கப்பட மாட்டீர்கள். எனவே, ஒவ்வொரு சான்றிதழையும் பதிவேற்றம் செய்யும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q31:   நான் விண்ணப்பத்தில் முதுகலை என குறிப்பிடவில்லை. ஆனால் இப்பொழுது முதுகலை பட்ட சான்றிதழை பதிவேற்றம் செய்தால் நான் முதுநிலை பட்டதாரியாக கருதப் பட வாய்ப்பு உண்டா?

A31: நிச்சயமாக இல்லை. நீங்கள் விண்ணப்பத்தில் கூடுதல் தகுதிகளைக் குறிப்பிடாமல் சான்றிதழை மட்டும் பதிவேற்றம் செய்தால் அதனை TNPSC ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது.
--------------------------------------------------------------------------------
Q32: கொஞ்சம் புரியும்படி விளக்கமாக சொல்ல முடியுமா?

A32: கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதற்க்கு உண்டான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இரண்டில் ஒன்று தவறினாலும் நீங்கள் உங்கள் கல்வித் தகுதியை இழப்பீர்கள்.
--------------------------------------------------------------------------------
Q33:   பல்வேறு வேலைப் பளுவின் காரணமாக, குறிப்பிட்டுள்ள நாட்களில் (Apr 23 - May 04)  என்னால் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இயலவில்லை. எனவே கொடுக்கப்பட்ட தேதி முடிந்த பின்னர் நான் அஞ்சலிலோ அல்லது அலுவலகத்திற்கு நேரிலோ எனது சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் பதிவேற்றம் செய்ய இயலுமா?

A33: கண்டிப்பாக முடியாது. பொது சேவை மையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் பதிவேற்றம் செய்யமால் அதன் பின்னர் அஞ்சலில் அல்லது நேரில் பதிவேற்றம் செய்ய முடியாது. நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள்.
--------------------------------------------------------------------------------
Q34: நான் இந்த தேர்விற்க்காக TNPSC அறிவுறுத்தியுள்ள அனைத்து சான்றிதழ்களையும் பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து விட்டேன். நான் அடுத்து வரும் வேறு ஒரு தேர்வில் இதே போன்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் இதே போன்று மீண்டும் எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமா?

A34: ஆமாம். ஒவ்வொரு தேர்விற்கும் நீங்கள் இதே போன்று ஒவ்வொரு முறையும் பொது சேவை மையத்திற்குச் சென்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q35: நான் கொஞ்சம் பிசியாக உள்ளேன். எனவே, எனது உறவினர் அல்லது நண்பர்களிடம் கொண்டு எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாமா?

A35: உங்களது சான்றிதழ்களை நீங்களே செய்வது தான் சிறப்பு. ஏனெனில் உங்களது விபரங்கள் உங்களுக்கே நன்றாகத் தெரியும். தவறு நடந்த பின் மனம் உடைவைத்தாய் விட, என்றும் வருமுன் காப்பது சிறந்தது.
--------------------------------------------------------------------------------
Q36: நான் சான்றிதழை பதிவேற்றம் செய்தமைக்கு பொது சேவை மையத்திலிருந்து, எனக்கு ஒப்புதல் சீட்டு எதுவும் கொடுக்கப்படுமா?

A36: ஆமாம், புகைப்படத்தில் உள்ளவாறு எந்த எந்த சான்றிதழ்களை நீங்கள் பதிவேற்றம் செய்து உள்ளீர்கள் என்று பொது சேவை மையத்தினால்  ஒப்புதல் சீட்டு தரப்படும்.
--------------------------------------------------------------------------------
Q37. இந்த புதிய வகை ஆன்லைன் சான்றிதழ் பதிவேற்றத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்?

A37: .ஒரு சான்றிதழுக்கு ரூ.வீதம் வசூலிக்கப்படும்.
--------------------------------------------------------------------------------
Q38: இதனை முழுவதுமாகப் படித்த பின்னரும் எனக்கு ஐயம் தீரவில்லை. நான் என்ன செய்வது?

A38: பின் வரும் தொலைபேசி எங்களுக்கு அழைத்து நீங்களே உங்களது சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம். அல்லது, சென்னைக்கு அருகில் இருப்பின் நேரில் சென்று விபரம் கேட்கலாம்.

044-2533 2855
1800 4251 002
--------------------------------------------------------------------------------
Q39: எனக்கு மேற்கண்ட அனைத்தும் நன்றாக புரிந்து விட்டது. நான் என்ன செய்ய வேண்டும்?.

A39: கூறி இருப்பவற்றை பயன்படுத்தி நல்ல விதமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து ஒப்புதல் சீட்டு வாங்கவும். மேலும், அனைவருக்கும் பயன்படும் முறையில் இந்த விபரத்தினைப் பகிரவும் (Share).

மேலும் இதில் சொல்லப் படாத கூடுதல் விபரங்கள் தெரிந்தால் கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும்.
--------------------------------------------------------------------------------

நன்றி.

திங்கள், 23 ஏப்ரல், 2018

முக்கிய வாரங்கள்


முக்கிய வாரங்கள் 

1. டிஜிட்டல் இந்தியா வாரம் = ஜுலை முதல் வாரம்
2. ரிசர்வ் வங்கி “நிதி கல்வியறிவு வாரம்” = ஜீன்  5 முதல் 9 வரை
3. தேசிய ஊட்டச்சத்து வாரம் = செப்டம்பர் 1 முதல் 7 வரை 
4. வன மஹோத்சவ் வாரம் = ஜுலை முதல் வாரம்
5. உலக தாய்ப்பால் வாரம் = ஆகஸ்ட் முதல் வாரம்
6. வனவிலங்கு வாரம் = அக்டோபர் முதல் வாரம்
7. மேக் இன்  இந்தியா வாரம் எப்போ தொடங்கப்பட்டது =2016 மும்பை - கிர்காவ் கடற்கரை - பிப்ரவரி 13 - 18
8. சாலை பாதுகாப்பு வாரம் =  ஜனவரி முதல் வாரம்
9. தூய்மை இந்தியா வாரம்(ஸ்வச் பாரத் வாரம்) = செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை 
10. உலக நோய் தடுப்பு வாரம் = ஏப்ரல் 24-30
11. தேசிய ஃபில்லேரியா வாரம் = டிசம்பர்-14 தொடங்கி 20-ம் 
12. உலக விண்வெளி வாரம் = அக்டோபர் 04 முதல்  10 வரை 
13. இந்தியா நீர் வாரம் = அக்டோபர் 10 முதல் 14ம் தேதி வரை
1. டிஜிட்டல் இந்தியா வாரம் = ஜுலை முதல் வாரம்
2. ரிசர்வ் வங்கி “நிதி கல்வியறிவு வாரம்” = ஜீன்  5 முதல் 9 வரை
3. தேசிய ஊட்டச்சத்து வாரம் = செப்டம்பர் 1 முதல் 7 வரை 
4. வன மஹோத்சவ் வாரம் = ஜுலை முதல் வாரம்
5. உலக தாய்ப்பால் வாரம் = ஆகஸ்ட் முதல் வாரம்
6. வனவிலங்கு வாரம் = அக்டோபர் முதல் வாரம்
7. மேக் இன்  இந்தியா வாரம் எப்போ தொடங்கப்பட்டது =2016 மும்பை - கிர்காவ் கடற்கரை - பிப்ரவரி 13 - 18
8. சாலை பாதுகாப்பு வாரம் =  ஜனவரி முதல் வாரம்
9. தூய்மை இந்தியா வாரம்(ஸ்வச் பாரத் வாரம்) = செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை 
10. உலக நோய் தடுப்பு வாரம் = ஏப்ரல் 24-30
11. தேசிய ஃபில்லேரியா வாரம் = டிசம்பர்-14 தொடங்கி 20-ம் 
12. உலக விண்வெளி வாரம் = அக்டோபர் 04 முதல்  10 வரை 
13. இந்தியா நீர் வாரம் = அக்டோபர் 10 முதல் 14ம் தேதி வரை

சனி, 21 ஏப்ரல், 2018

கேந்திரிய வித்யாலயா சங்கத்தன் 5193 பணிகள்


கேந்திரிய வித்யாலயா சங்கத்தன் 5193 பணிகள்

Kendriya Vidyalaya Sangathan பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 5193 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:

1. Vice-Principal - 146 Posts

2. Post Graduate Teacher (PGT) Hindi - 218

3. Post Graduate Teacher (PGT) English - 226  

4. Post Graduate Teacher (PGT) Physics - 257

5. Post Graduate Teacher (PGT) Chemistry - 267

6. Post Graduate Teacher (PGT) Mathematics - 218

7. Post Graduate Teacher (PGT) Biology - 208

8. Post Graduate Teacher (PGT) History - 76

9. Post Graduate Teacher (PGT) Geography - 72

10. Post Graduate Teacher (PGT) Economics - 489

11. Trained Graduate Teacher (TGT) Hindi - 584

12. Trained Graduate Teacher (TGT) English - 594

13. Trained Graduate Teacher (TGT) Sanskrit - 347

14. Trained Graduate Teacher (TGT) Science/ Biology - 487

15. Trained Graduate Teacher (TGT) Mathematics - 566

16. Trained Graduate Teacher (TGT) Social Science - 575

17. Head Master (HM) - 163

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.kvsangathan.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது “APPLICATION FOR THE POST OF..........” என்று குறிப்பிடவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2018

கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(1)-10-04-2018.PDF

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

1952 பணியிடங்களுக்கான Group II A தேர்வு முடிவு வெளியாகி தற்போது 6263 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வாகி உள்ளனர் மாவட்டம் வாரியாக தேர்வானவர்கள் விவரம்,

1952 பணியிடங்களுக்கான Group II A தேர்வு முடிவு வெளியாகி   தற்போது 6263 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வாகி உள்ளனர் மாவட்டம் வாரியாக தேர்வானவர்கள் விவரம், நீலகிரி மாவட்டத்தில் எத்தனை பேர் தேர்வாகி உள்ளனர் என பார்க்கவும் .
சென்னை        -   417
கோவை           _  129
கடலூர்             -   2 11
தர்மபுரி            -  276
திண்டுக்கல்    _  180
ஈரோடு              -  272
காஞ்சிபுரம்       _ 350
கன்னியாகுமரி  _ 79
கரூர்                     – 106
மதுரை                  – 467
நாகை                   –   67
நாமக்கல்               – 453
 *நீலகிரி                –  8*
பெரம்பலூர்           –  57
புதுக்கோட்டை        – 121
ராமநாதபுரம்         – I 54
சேலம்                     – 393
சிவகங்கை            –  72
தஞ்சை                    – 174
தேனி                       – 14 6
திருவள்ளுர்           – 141
திருவண்ணாமலை -181
திருவாரூர்              – 73
தூத்துக்குடி             _ 176
திருச்சி                    – 315
நெல்லை                – 282
வேலூர்                   – 227
விழுப்புரம்              _ 261
விருதுநகர்             – 205
அரியலூர்              –  80
கிருஷ்ணகிரி       –  73
திருப்பூர்                – 117
                                 _______

மொத்தம்           _ 6263

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

Commonwealth Games 2018


Commonwealth Games 2018
========================
- நடைபெறும் இடம்- கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா
- பதிப்பு- 21வது
- இலச்சினை(Mascot)- "Borobi"
- Motto- "Share the dream"
- தொடக்க விழாவில் இந்திய கொடிய ஏந்தி சென்றவர்(Flag bearer)- பி.வி.சிந்து (Badminton)
- நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்தி சென்றவர்- "மேரி கோம்"(Mary Kom)

சிறப்புகள்

- கலந்து கொள்ளும் இந்திய வீரர்களில் இளம் வயது வீரர்- Anish Bhanwala(15), Shooting
- கலந்து கொள்ளும் இந்திய வீரர்களில் மூத்த வீரர்- Farman Basha(44), பாரா பளு தூக்குதல்
- முதல் பதக்கம்- குரு ராஜா (பளுதூக்குதல்)
- முதல் தங்கம்- மீராபாய் சானு (பளுத்தூக்குதல்)
- காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய போட்டிகள் இரண்டிலும் தங்கம் வெல்லும் ஒரே ஆடவர் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை "விகாஷ் கிருஷ்ணன்" (Vikas Krishnan) பெற்றுள்ளார்
- காமன்லெல்த் கேம்ஸ் போட்டி வரலாற்றில் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை "நீரஜ் சோப்ரா"(Neeraj Chopra) பெற்றுள்ளார்
- காமன்வெல்த் கேம்ஸ் வரலாற்றில் ஆடவர் 400m ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை "முகமது அனாஸ்" (Mohammed Anas) பெற்றுள்ளார்
- - காமன்வெல்த் கேம்ஸ் வரலாற்றில் 400m ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை "ஹீமா தாஸ்"(Hima Das) பெற்றுள்ளார்
- 2018 காமன்வெல்த் போட்டிகொளில், இந்தியாவிற்காக இளம் வயதில் தங்க பதக்கம் வாங்கிய வீரர் என்ற பெருமையை, 15 வயது துப்பாக்கி சுடுதல் வீரர் "அனிஷ் பன்வாலா"(Ansih Bhanwala) பெற்றுள்ளார்
- காமன்வெல்த் கேம்ஸ் வரலாற்றில் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டிகளின் தனிநபர் பிரிவில் தங்கம் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை "மணிக்கா பத்ரா"(Manika Batra) பெற்றுள்ளார்
- காமன்வெல்த் கேம்ஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்திய பாட்மின்டன் கலப்பு அணி(Mixed Team Badminton) மலேசியாவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது
- காமன்வெல்த் கேம்ஸ் வரலாற்றில் முதல் முறையாக, இந்திய மகளிர் அணி 'டேபிள் டென்னிஸ்' (Table Tennis) போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது
- 2018 காமன்வெல்த் போட்டிகளில் para powerlifting பிரிவில் பதக்கம் பெறும் ஒரே இந்தியர் என்ற பெருமையை "சச்சின் சௌத்ரி" பெற்றுள்ளார்
-  26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் உட்பட மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா மொத்த பதக்கப் பட்டியலில் 3ம் இடம் பிடித்துள்ளது
- ஆஸ்திரேலியா 197 பதக்கங்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 136 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது

இந்தியாவிற்காக பதக்கம் வென்றவர்கள் விவரம் பின்வருமாறு

Shooting

Gold🥇
- Jitu Rai (10m air pistol men)
- Anish Bhanwala(25m air pistol men)
- Manu Bhaker(10m air pistol women)
- Heena Sidhu (25m air pistol women)
- Sanjeev Rajput (50m rifle 3 pos men)
- Tejaswini Sawant (50m rifle 3 pos Women)
- Shreyasi Singh (Women's Double Trap)

Silver🥈
- Mehuli Ghosh (10m air rifle)
- Heena Sidhu (10m air pistol)
- Anjum Moudgil (Women 50m rifle 3 pos)
- Tejaswin Sawant (Women's 50m rifle)

Bronze🥉
- Om Prakash Mitarva(10m air pistol Men)
- Om Prakash Mitarva (50m air pistol Men)
- Apurvi Chandela(10m air rifle Women)
- Ravi Kumar(50m air rifle Men)
- Ankur Mittal (Double trap men)

Wrestling

Gold 🥇
- Vinesh Phogat (Women's 50 kg)
- Rahul Aware (Men's 57 kg)
- Bajrang Punia (Men's 65 kg)
- Sushil Kumar (Men's 74 kg)
- Sumit (Men's 125 kg)

Silver 🥈
- Babita Kumari (Women's 53 kg)
- Pooja Dhanda (Women's 57 kg)
- Mausam Khatri (Men's 97 kg)

Bronze 🥉
- Sakshi Malik (Women's 62 kg)
- Divya Kakran (Women's 68 kg)
- Kiran (Women's 86 kg)
- Somveer (Men's 86 kg)

Weightlifting
Gold🥇
- Mirabai Chanu (Women's 48 kg)
- Sanjitha Chanu (Women's 53 kg)
- Punam Yadav (Women's 69 kg)
- Satish Kumar Sivalingam(Men's 77 kg)
- Venkat Rahul Ragala (Men's 85 kg)

Silver🥈
- Gururaja (Men's 56 kg)
- Pardeep singh (Men's 105 kg)

Bronze 🥉
- Deepak Lather (Men's 69 kg)
- Vikas Thakur (Men's 94 kg)

Boxing

Gold 🥇
- Mary Kom (Women's 45-48 kg)
- Gaurav Solanki (Men's 52 kg)
- Vikas Krishan (Men's 75 kg)

Silver 🥈
- Amit (Men's 46-49 kg)
- Manish Kaushik (Men's 60 kg)
- Satish Kumar (Men's 91kg)

Bronze 🥉
-Hussamuddin MOHAMMED (Men's 56 kg)
- Manoj Kumar (Men's 69 kg)
- Naman Tanwar (Men's 91 kg)

Table Tennis

Gold🥇
- Women’s Team
- Men's Tean
- Manika Batra(Women's Singles)

Silver🥈
- Women's Doubles(Manika Batra and Mouma Das)
- Men's Doubles(Sharth kamal and Sathyan Ganasekaran)

Bronze🥉
- Sharath Kamal(Men's Singles)
- Mixed Doubles(Manika Batra and Sathyan Ganasekaran)
- Men's Doubles (Harmeet Desai and Sanil Shetty)

Badminton

Gold🥇
- Mixed Team Event
- Saina Nehwal(Women's Singles)

Silver🥈
- PV Sindhu(Women's Singles)
- Kidambi Srikanth(Men's Singles)
- Chirag Shetty and Satwij Sairaj Ranki Reddy (Men's Doubles)

Bronze 🥉
- Women's Doubles

Atheletics
Gold🥇
- Neeraj Chopra(Men's Javelin Throw)

Silver🥈
- Seema Punia(Women's Discuss Throw)

Bronze🥉
- Navjeet Dhillon Kaur(Women's Discuss Throw)

Squash

Silver🥈
- Dipika Pallikal and Joshna Chinappa (Women's Doubles)
- Dipika Pallikak and Saurav Ghosal (Mixed Doubles)

Para Powerlifting

Bronze🥉
- Sachin CHAUDHARY


ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

60 ஆண்டுகளின் பெயர்களும் அதற்கான தமிழ்ப்பெயர்களும்..



60 ஆண்டுகளின் பெயர்களும் அதற்கான தமிழ்ப்பெயர்களும்..

01. பிரபவ - நற்றோன்றல்
Prabhava1987-1988

02. விபவ - உயர்தோன்றல்
Vibhava 1988–1989

03. சுக்ல - வெள்ளொளி
Sukla 1989–1990

04. பிரமோதூத - பேருவகை
Pramodoota 1990–1991

05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
Prachorpaththi 1991–1992

06. ஆங்கீரச - அயல்முனி
Aangirasa 1992–1993

07. ஸ்ரீமுக - திருமுகம்
Srimukha 1993–1994

08. பவ - தோற்றம்
Bhava 1994–1995

09. யுவ - இளமை
Yuva 1995–1996

10. தாது - மாழை
Dhaatu 1996–1997

11. ஈஸ்வர - ஈச்சுரம்
Eesvara 1997–1998

12. வெகுதானிய - கூலவளம்
Bahudhanya 1998–1999

13. பிரமாதி - முன்மை
Pramathi 1999–2000

14. விக்கிரம - நேர்நிரல்
Vikrama 2000–2001

15. விஷு - விளைபயன்
Vishu 2001–2002

16. சித்திரபானு - ஓவியக்கதிர்
Chitrabaanu 2002–2003

17. சுபானு - நற்கதிர்
Subhaanu 2003–2004

18. தாரண - தாங்கெழில்
Dhaarana 2004–2005

19. பார்த்திப - நிலவரையன்
Paarthiba 2005–2006

20. விய - விரிமாண்பு
Viya 2006–2007

21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
Sarvajith 2007–2008

22. சர்வதாரி - முழுநிறைவு
Sarvadhari 2008–2009

23. விரோதி - தீர்பகை
Virodhi 2009–2010KKM

24. விக்ருதி - வளமாற்றம்
Vikruthi 2010–2011

25. கர - செய்நேர்த்தி
Kara 2011–2012

26. நந்தன - நற்குழவி
Nandhana 2012–2013

27. விஜய - உயர்வாகை
Vijaya 2013–2014

28. ஜய - வாகை
Jaya 2014–2015

29. மன்மத - காதன்மை
Manmatha 2015–2016

30. துன்முகி - வெம்முகம்
Dhunmuki 2016–2017

*31. ஹேவிளம்பி - "பொற்றடை"*
*Hevilambi 2017–2018*
*(இவ்வருடம் "பொற்றடை" தமிழ் புத்தாண்டு)*

32. விளம்பி - அட்டி
Vilambi 2018–2019

33. விகாரி - எழில்மாறல்
Vikari 2019–2020

34. சார்வரி - வீறியெழல்
Sarvari 2020–2021

35. பிலவ - கீழறை
Plava 2021–2022

36. சுபகிருது - நற்செய்கை
Subakrith 2022–2023

37. சோபகிருது - மங்கலம்
Sobakrith 2023–2024

38. குரோதி - பகைக்கேடு
Krodhi 2024–2025

39. விசுவாசுவ - உலகநிறைவு
Visuvaasuva 2025–2026

40. பரபாவ - அருட்டோற்றம்
Parabhaava 2026–2027

41. பிலவங்க - நச்சுப்புழை
Plavanga 2027–2028

42. கீலக - பிணைவிரகு
Keelaka 2028–2029

43. சௌமிய - அழகு
Saumya 2029–2030

44. சாதாரண - பொதுநிலை
Sadharana 2030–2031

45. விரோதகிருது - இகல்வீறு
Virodhikrithu 2031–2032

46. பரிதாபி கழிவிரக்கம்
Paridhaabi 2032–2033

47. பிரமாதீச - நற்றலைமை
Pramaadhisa 2033–2034KKM

48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
Aanandha 2034–2035

49. ராட்சச - பெருமறம்
Rakshasa 2035–2036

50. நள - தாமரை
Nala 2036–2037

51. பிங்கள - பொன்மை
Pingala 2037–2038

52. காளயுக்தி - கருமைவீச்சு
Kalayukthi 2038–2039

53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
Siddharthi 2039–2040

54. ரௌத்திரி - அழலி
Raudhri 2040–2041

55. துன்மதி - கொடுமதி
Dunmathi 2041–2042

56. துந்துபி - பேரிகை
Dhundubhi 2042–2043

57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
Rudhrodhgaari 2043–2044

58. ரக்தாட்சி - செம்மை
Raktakshi 2044–2045

59. குரோதன - எதிரேற்றம்
Krodhana 2045–2046

60. அட்சய - வளங்கலன்
Akshaya 2046–2047

ஆண்டின் தமிழ்ப் பெயர்களை இங்கு வழங்கியுள்ளோம்...
இனி எந்த தங்குத்தடையும் இன்றி, 60 தமிழ் வருடங்களை தமிழ்ப்பெயரோடும் தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்துவோம்...!

அனைத்து நல் உள்ளங்களுக்கும் *"பொற்றடை"  ( ஹே விளம்பி) தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்......*

பல்வேறு வகையான சாட்சிகள்.(DIFFERENT TYPES OF WITNESS).


பல்வேறு வகையான சாட்சிகள்.(DIFFERENT TYPES OF WITNESS).
********************************************************************
 
  சாட்சி (Witness) என்பதற்குப் பொருள் என்ன என்பதை பற்றி இந்திய சாட்சியச் சட்டம் கூறவில்லை.ஆனால் ஊமை சாட்சிகளைப் பற்றியும் பிறழ் சாட்சிகளைப் பற்றியும் கூறுகிறது.

நீதிமன்றத்தில் குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரையிலும் யார் வேண்டுமானாலும் சாட்சியம் அளிக்கலாம்.

சாட்சிகளின் வகைகள்.- சட்டம் தெளிவோம்.
*********************************************************************

1. பொய் சாட்சி (Lying Witness) .

2. அதிகம் பேசும் சாட்சி ( Flippant Witness).

3. பிடிவாதம் பிடிக்கும் சாட்சி (Dogged Witness).

4. தயக்கம் காட்டும் சாட்சி ( Hesitation Witness).

5. பயத்தால் உடல் நடுங்கும் சாட்சி( Nervous Witness) .

6.சிரிப்பூட்டுகின்ற சாட்சி ( Humorous Witness).

7. வஞ்சகச் சாட்சி ( Cunning Witness).

8. கபட சாட்சி ( Canting hypocrite).

9. பாதி உண்மையும் பாதி பொய்யும் சொல்லும் சாட்சி (The Witness Who Speaks partly true and partly false).

10. தொழில் வழியதான சாட்சி.( Professional Witness).

11.அலுவல் சார்ந்த சாட்சி . (Official Witness).

12. காவல்துறை சாட்சி. (Police Witness).

13. மருத்துவ சாட்சி.( Medical Witness).

14. நாகரீகமான சாட்சி ( Cultural Witness).

15. நேர்மையான சாட்சி. ( Honest Witness).

16. தனிப்பட்ட சாட்சி.(Independent Witness).

17. பெண் சாட்சி.(Women Witness).

18. குழந்தை சாட்சி. (Child Witness).

19. அயலிடவாத சாட்சி.(Alibi Witness).

20.நேரில் பார்த்த சாட்சி.( Eye Witness).

21. கல்வி அறிவில்லாத சாட்சி.(illiterate Witness).

22. உறவு நிலை சாட்சி ( Relation Witness)

23. தற்செயலாக பார்த்த சாட்சி . (Chance Witness).

24. பிறழ் சாட்சி . (Hostile Witness).

25. குற்றமேற்ற சாட்சி.(Approver Witness).

26. காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட சாட்சி . (Trap Witness).

என  பல்வேறு வகையான சாட்சிகள் உள்ளன.

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

65-வது தேசிய திரைப்பட விருதுகள்: முழுப்பட்டியல்!


65-வது தேசிய திரைப்பட விருதுகள்: முழுப்பட்டியல்!

65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'டூலெட்' தேர்வாகியுள்ளது.
இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான தேசியத் திரைப்படத் தேர்வுக் குழுவினர், செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தேசிய விருதுகளுக்குத் தேர்வானவையின் பட்டியலை அவர்கள் அப்போது வெளியிட்டனர்.
சிறந்த படம்: Village Rockstars (இயக்குநர் - ரிமா தாஸ்)
சிறந்த இயக்குநர்: ஜெயராஜ் (BHAYANAKAM)
சிறந்த தமிழ்ப் படம்: டூலெட் (இயக்குநர் - செழியன்)
சிறந்த நடிகை: ஸ்ரீதேவி (மாம்)
சிறந்த நடிகர்: ரித்தி சென் (NAGARKIRTAN)
சிறந்த துணை நடிகர்: ஃபஹத் ஃபாசில் (Thondimuthalum Driksakshiyum)
சிறந்த துணை நடிகை: திவ்யா தத்தா (IRADA)
சிறந்த ஒளிப்பதிவு: நிகில் எஸ்.
பிரவீன் (Bhayanakam Cameraman)
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (காற்று வெளியிடை)
சிறந்த பின்னணி இசை: ஏ.ஆர். ரஹ்மான் (மாம்)
சிறந்த பாடலாசிரியர்: ஜேஎம் பிரஹலாத் (Muthuratna)
சிறந்த பின்னணி பாடகர்: கே.ஜே. யேசுதாஸ் (Viswasapoorvam Mansoor - Poy Maranja Kalam)
சிறந்த பின்னணி பாடகி: சாஷா திருபதி (காற்று வெளியிடை - வான் வருவான்)
சிறந்த சண்டை வடிவமைப்பு: அப்பாஸ் அலி மொகுல் (பாகுபலி 2)
சிறந்த எடிட்டிங்: ரீமா தாஸ் (அஸ்ஸாமியப் படம்)
சிறந்த ஒப்பனை: ராம் ராஜக் (Nagarkirtan)
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - பாகுபலி 2
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படம் - Dhappa
சிறந்த குழந்தைகள் திரைப்படம் - MHORKYA
சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் - IRADA
சமூக பிரச்னைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் - AALORUKKAM
சிறப்பு விருதுகள்: மராத்திப் படம் - Murakhiya; ஒடியா படம் : Hello RC; Take Off - மலையாளம்; பங்கஜ் திரிபாதி (நியூட்டன்); பார்வதி (மலையாளம்)
அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: Sinjar (இயக்குநர் - பம்பள்ளி)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: சந்தோஷ் ராமன் (Take Off)
சிறந்த திரைக்கதை (அசல்): சஞ்சீவ் பழூர் (Thondimuthalum Driksakshiyum)
சிறந்த திரைக்கதை (தழுவல்): ஜெயராஜ் (Bhayanakam)
சிறந்த திரைப்பட எழுத்தாளர்: சம்பிட் மொஹந்தி (ஹலோ அர்ஸி)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: பனிதா தாஸ் (Village Rockstars)
சிறந்த நடனம்: கணேஷ் ஆச்சார்யா (Toilet Ek Prem Katha - Gori Tu Latth Maar)
சிறந்த அனிமேஷன்: பாகுபலி 2


தமிழக அரசு இலக்கிய விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசு இலக்கிய  விருதுகள் அறிவிப்பு 


tn_govt_logo

தமிழக அரசின் சார்பில் மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ் சமுதாயத்துக்கு தொண்டாட்றியவர்களுக்கான விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாட்றிப் பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் உள்ளிட்ட கீழ்க்காணும் விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
கீழ்காணும் விருதுகளை ஜனவரி 16-ந் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை கலைவானர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிழழ் ஆகிய வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும்.

விருதுகள் பெறுவோர் பட்டியல் பின்வருமாறு:
  • திருவள்ளுவர் விருது 2018 - முனைவர் கோ.பெரியண்ணன்
  • தந்தை பெரியார் விருது 2017 - திருமதி பா.வளர்மதி
  • அண்ணல் அம்பேத்கர் விருது 2017 - டாக்டர் சகோ.ஜார்ஜ், கே.ஜே
  • பேரறிஞர் அண்ணா விருது 2017 - திரு அ. சுப்ரமணியன்
  • பெருந்தலைவர் காமராசர் விருது 2017 - திரு. தா.ரா.தினகரன்
  • மகாகவி பாரதியார் விருது 2017 - முனைவர் க.பாலசுப்ரமணியன் (எ) பாரதிபாலன்
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது 2017 - திரு கே.ஜீவபாரதி
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது 2017 - எழுத்தாளர் திரு வை.பாலகுமாரன்
  • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது 2017 - முனைவர் ப.மருதநாயகம்

இவ்விழாவில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 50 பேருக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.100 பெறுவதற்கான அரசாணை வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன ?


#தனியார்பள்ளிகளில் #கல்விக்கட்டணம் #செலுத்தாமல் #இலவசமாக
#கல்வி #பயில்வதுஎப்படி*?

 *இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன*?

*RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION. ACT -2009*

*தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம்  இல்லாமல் நமது குழந்தைகளை  இலவசமாக படிக்க வைக்க முடியுமா*?

முடியும்!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்.

*பள்ளிக்கல்வி -குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1)  (C)  மற்றும் பிரிவு  13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.012011 நாளிட்ட அரசாணை (நிலை) எண் :9 ன் படியும்  இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்  அதற்கு வழி வகை செய்கிறது* LAACO /2018

*இந்த சட்டம்  ஆறு வயது முதல்  பதினான்கு  வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம்* (சர்வ சிக்ஷா அபியான் SSA )
*கொண்டு வரப்பட்டது*

*இந்த சட்டத்தின் கீழ் யார் யார் குழந்தைகள் பயன் பெறலாமா?

★ வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்,

★ தாழ்த்தப்பட்டவர்கள்,

★ மலை ஜாதியினர்,

★ பிற்படுத்தப் பட்டவர்கள்,

★ மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,

★ கல்வி உரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.

★ எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள்,

★மாற்றுத்திறனாளிகள்

★துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்

★ மூன்றாம் பாலினத்தவர்  (திருநங்கைகள்)

★ ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு  கீழ் உள்ள முற்பட்ட வகுப்பினர்கள்.

நீங்கள் வசிக்கும் பகுதியில்  இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில்
இருக்கும் தனியார் பள்ளிகளில்  உங்களது  குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009)  R T E. ன்  கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்

குழந்தைகளுக்கு தேர்வுகள் (Test) அல்லது வாய்மொழி வினாக்கள் (Interview) கேட்க கூடாது.

குழந்தைகளின் இதர தகுதியினையோ, பெற்றோருடைய கல்வித்தகுதியினையோ கருத்தில் கொள்ளக் கூடாது.

அந்தந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை மத்திய அரசு செலுத்தும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

*ஆரம்ப நிலை வகுப்பான L K G வகுப்பில் மட்டுமே சேர்ந்து கல்வி பயில முடியும்*

*மற்றும் முதல்  வகுப்பில் இருந்து செயல் படும் பள்ளிகளில் மட்டும் முதல் வகுப்பில்  சேர்ந்து கல்வி பயில அனுமதி உண்டு*

*L.K.G வகுப்பில் சேரும் குழந்தைகள்  8 -ஆவது வகுப்பு வரையிலும் இலவச கல்வி பயிலலாம்*

இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு வரையிலும் உள்ள  தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைதள் ஆறாம் வகுப்பிற்கு எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்ந்து  கல்வி பயிலலாம்.

*இடையில் எந்த ஒரு வகுப்புகளிலும் சேர்ந்து இலவச கல்வி பயில முடியாது*
*இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்*

பெற்றோர்கள் ஊர் விட்டு ஊர் சென்றாலும் அந்த பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வியை தொடரலாம்.

*அனைத்து தனியார் பள்ளிகளும்  25 சதவீதம்  இடங்களை  கட்டாய கல்வி  உரிமைச் சட்டத்தின் கீழ்  சேரும்* *குழந்தைகளுக்கு*
*கண்டிப்பாக  ஒதுக்கீடு செய்ய  வேண்டும்*

அதாவது ஒரு பள்ளியில் மொத்தம் 150 குழந்தைகள் சேர்ந்து கல்வி பயில அனுமதி இருக்கும் பட்சத்தில் அந்த 150 மாணவர்களின் எண்ணிக்கையில் இருந்து 25 சதவீதம்  அதாவது 37 குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும்.

*ஆனால் சிறுபான்மை பிரிவினை சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நடத்தும் தனியார்  பள்ளிகள் சிறுபான்மையினர்  பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டு அந்த பள்ளிகளில் இலவச கல்வி பயில அனுமதி இல்லை*

எனவே இந்த பள்ளிகளை நாடி செல்லாதீர்கள்.

*இலவசக்கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கல்வி கட்டணங்களையும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க கூடாது*

*ஒரு சில பள்ளிகள் அரசிடம் இருந்து பணம் வரவில்லை.  கட்டணம் செலுத்துங்கள்  பணம் வந்ததும் திருப்பி வழங்குவதாக கூறுவார்கள்*

*அவ்வாறு நீங்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை*

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

உங்கள்  குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க மறுத்தால்  உங்கள் மாவட்டத்தில் இருக்கும்  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்,  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர்,  மெட்ரிக்பள்ளி இயக்குநர்,  இவர்களுக்கு புகார் செய்யுங்கள்.

சில பள்ளிகள் அனுமதி முடிந்து விட்டது என பொய்யான தகவல் வழங்குவார்கள்!

*கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விபரங்களை அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில்  தகவல் பலகை வைக்க வேண்டும்*

★எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் கல்வி  கனவினையும் நிறைவேற்றுங்கள்.

★கல்வி உங்கள் மிக அருகாமையில்!

★பெயர் தான் இலவசக்கல்வி !

★இது கேவலம் அல்ல!

★மத்திய அரசு கட்டணம் செலுத்துகிறது!

★கவலை வேண்டாம்!

★இது கனவல்ல!  நிஜம் !

★ *எப்படி எங்கு விண்ணப்பிக்க வேண்டும்*

*2018-2019 ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி சேர்க்கை ஏப்ரல் மாதம் 20 ம் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரையிலும் நடை பெற இருக்கிறது*

தமிழகம் முழுவதும் சிறுபான்மை பள்ளிகளை தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் L.K.G வகுப்பில் உங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.

★ *விண்ணப்பம் செய்வது எப்படி*?

★சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in. என்ற இணைய தளத்தின் மூலமாக நீங்களே  விண்ணப்பிக்கலாம் .

1.மாவட்ட கல்வி அலுவலகம்

2.மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலகம்

3.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்

4.அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள மையம்

5.மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம்

6.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.

7.அனைத்து தனியார் பள்ளிகள்

*ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 சதவீதத்திற்கு  மேல் விண்ணப்பம் பெறபட்டால்* (Randam Selection) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்

★ *விண்ணப்பத்தின் போது வழங்க வேண்டிய ஆவணங்கள்*

1. பிறப்பு சான்று
2..குழந்தையின் புகைப்படம்
3.ஜாதி சான்று
4. வருமான சான்று
5.இருப்பிட சான்று
6.முகவரி ஆதாரம்

*இந்த ஆவணங்களை பெறுவது எப்படி*?

★ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று  இந்த மூன்று சான்றுகளையும் உங்கள் பகுதிகளில் செயல் படும் அரசு இ- சேவை மையம், மாநகராட்சி இ-சேவை மையங்களில்  ஒவ்வொரு சான்றுக்கும் ₹50 ரூபாய் கட்டணம் செலுத்தி  வாங்கி தயாராக வைத்து கொள்ளுங்கள்.

★இடை தரகர்களிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.

★தனியார்  பள்ளிகளில்  L.K.G வகுப்பிற்கான  சேர்க்கை 02.04.2018 முதல் தான் விண்ணப்பம் பெறப்பட வேண்டும். அன்றைய தினம் மொத்த இடங்கள் எவ்வளவு என்பதினை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

★ஆனால் பல பள்ளிகளில் அரசு உத்தரவு நாட்களுக்கு முன்பாகவே LKG வகுப்பிற்கான. அட்மிஷன் வழங்கி விடுகிறார்கள்.
இது சட்ட விரோதமான செயலாகும்.

★இலவச அனுமதிக்கான மொத்த இடங்களின் விபரங்களை 10.04.2018 அன்று பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

 *இலவசக்கல்விக்கான விண்ணப்பங்கள் மற்றும் மொத்த இடங்கள்  குறிப்பிட்டு 16.04.2018 அன்று*
*பள்ளியின் பிரதான வாயில் அருகில் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும் வண்ணம் 10×8 அளவுள்ள பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும்*

★ *20.04.2018 முதல் 18.05.2018 வரை இணைய தளம் வாயிலாகவும் மேற் குறிப்பிட்டுள்ள கல்வி அலுவலகங்கள் வாயிலாகவும் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலமாகவும் எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்*

*தேர்வு செய்த குழந்தைகளின் விபரங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்கள் 21.05.2018 அன்று மாலை 5.00 மணிக்கு பள்ளிகள் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்*

*கூடுதலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 23.05.2018 அன்று கல்வி அலுவலர் மற்றும் இரண்டு பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும்*

★ *இலவசக்கல்வி என்பதினை பல பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்*.

★இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இன்மையே!

★இது தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் தான் முழுமையாக செயல் படுத்தப்பட்டது.

★ஆனால் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் இப்படி ஒரு சட்டம் இருப்பதினை வெளி காட்டி கொள்ளவில்லை.

*இவர்கள் பள்ளிகளில் கட்டணம் கட்டி சேர்ந்த ஒரு சில குழந்தைகளை மட்டும் தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு அரசிடம் இருந்து ₹5000 ரூபாய் உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் ஆவணங்களை கொடுங்கள் என கேட்டு வாங்கி கொண்டு  அதனை பெற்றோர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்தனர்*

★ஏதோ இலவசக்கல்வி குறித்து அறிந்த ஒரு சில பெற்றோர்கள் கேட்டால் அனுமதி முடிந்து விட்டது என பொய் சொல்லி வந்தனர்.

★இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்தினால் அரசு 2017-2018 கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் முறையினை கொண்டு வந்தனர்.

★2016-2017 கல்வி ஆண்டில் ஒரு லட்சம் இலவச இடங்கள் நிரம்பி உள்ளது.

★2017-2018 ஆம் கல்விஆண்டில்
2,36000.இரண்டு இலட்சத்து முப்பத்தாராயிரம்  காலி இடங்கள் உள்ள நிலையில் வெறும் 40 000 நாற்பதாயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியது.

★எனவே அரசு இலவச சேர்க்கைக்காக கால நீட்டிட்பு செய்தனர்.

*2018 -2019 ஆம் கல்வி ஆண்டில்  100 சதவீதம் இலவச சேரக்கை  நடை பெற வேண்டும் என அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது*

*ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கல்வி ஆய்வு குழுவினர் இலவச கல்வி பயிலும் பெற்றோர்களை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்*

★ஆனால் இந்த ஆய்வு கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காக மட்டும் நடத்துகிறார்கள் .

★இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு பல உத்தரவுகளையும் அரசாணைகளையும் அறிவித்துள்ளது.

★ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் இந்த உத்தரவுகள் முழுமையாக கடை பிடிக்க படுவதில்லை.

★ *தனியார் பள்ளி நிர்வாகிகளான கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்சத்தினை பெற்றுக்கொண்டு கடமை தவறிய கல்வி அலுவலர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை*

*மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் தான் இந்த கல்வி கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம்*

*இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ள  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண் இருந்தும் குருடர்களாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர்*!

பெற்றோர்களே!
நண்பர்களே !
சமூக ஆர்வலர்களே!
சமூக அமைப்பினை சார்ந்தவர்களே !

*தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயில்வது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்*

*உங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டாலோ*
*கல்விக் கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்பட்டாலோ அல்லது பள்ளி நிர்வாகிகளினாலோ* *கல்வி அதிகாரிகளினாலோ  நீங்கள் மிரட்டப்பட்டாலோ மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவல் தேவை பட்டாலோ உங்களுக்கு வழி காட்ட. எங்களை தொடர்பு கொள்ளுங்கள்*

*மேலும்  இலவச கல்விக்கு நீங்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அதனை திரும்ப. பெற்று தருவதற்கும்*  *தனியார்  பள்ளிகளுக்கு .கல்விக்கட்டண நிர்ணய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட அரசு கல்விக்கட்டணங்களை செலுத்திடவும்  .ரசீது இல்லாமல் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்*  *குறித்து புகார் அளிக்க வேண்டுமானால்*
எங்களது
" *தனியார் பள்ளி புகார்* *98655 90723* *என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு*
*உங்களது பெயர் ஊர் குறிப்பிட்டு அனுப்புங்கள்*

மாறுங்கள்! மாற்றுங்கள்!!

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!!

எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள்! அய்யய்யோ நமக்கு எதுக்கு வம்பு!
நமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்?
அவர்கள் கேட்கும் கட்டணத்தினை எப்படியாவது கடன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்று நீங்கள்  நினைக்கும் காரணத்தினால் தான் இந்த கொள்ளையர்கள் சுக போகமாக வாழ்கிறார்கள்.

*கவலை வேண்டாம்*!!
*உங்கள் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு பள்ளி நிர்வாகம் வழங்கும் என உறுதி மொழி கொடுத்து தான் பள்ளிக்கு உரிமம் பெறுகின்றனர்*

*அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை உண்டு*

*கல்வி கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்*🤝
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ *இலவசக்கல்வி விழிப்புணர்வு பணியில்*
வாழ்த்துக்களுடன்............
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

" *சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு* "
*LEGAL AWARENESS AND ANTI -CORRUPTION ORGANIZATION*
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

# *முக்கிய அறிவிப்பு*
*நிர்வாகிகளின் தொடர்பு எண்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் நேரம் அறிவித்துள்ளோம்*
*இந்த நேரங்களில் மட்டும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு வேண்டுகிறோம்*

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்,
உலாபேசி :98655 90723
தொடர்பு நேரம் : *தினமும்  இரவு 9.30 முதல் 10.30 வரையிலும்*

அரியலூர் ரா. சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303
தொடர்பு நேரம் : *தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மற்றும்  மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும்*

ரா.கோபால்சாமி
மாநில துணை தலைவர்
உலாபேசி :98422 98761
தொடர்பு நேரம் :
*தினமும் இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை*

ஆ.பழனிக்குமார்
மாநில அமைப்பு செயலாளர்
உலாபேசி :97910 50513
*தொடர்பு நேரம் : நாள் முழுவதும்*

கோ.தாணு மூர்த்தி
மாநில பொருளாளர்
உலாபேசி :99438 14132
*தொடர்பு நேரம் : மாலை :5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை*

*தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்துள்ள படி 100 சதவீதம் இந்த கல்வி ஆண்டில் ஏழை எளியவர்களின் குழந்தைகள் இலவச கல்வி பெற்று பயனடைய வேண்டும் என்பதே எங்களின் இலட்சியம்*

எங்களின் இலட்சியம் நிறைவேறிட
நண்பர்களே  படித்து விட்டு உடனடியாக மற்றவர்களுக்கு பகிருங்கள் உங்களால் ஒரு ஏழை குழந்தையாவது பயன்பெறும் அல்லவா?????

ம.விவிலியராஜா