புதன், 31 ஆகஸ்ட், 2016

பழந்தமிழரின் 47 வகையான நீர் நிலைகள்

🙏                                               
பழந்தமிழரின் 47 வகையான நீர் நிலைகள் தெரிந்துகொள்வோம் !

01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி.

05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 *கட்டுந் கிணக்கிணறு* (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. *கடல்* - (Sea) சமுத்திரம்.

13. *கம்வாய் (கம்மாய்)* -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. *கலிங்கு* - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. *கால்* – (Channel) நீரோடும் வழி.

16. *கால்வாய்* - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. *குட்டம்* – (Large Pond) பெருங் குட்டை.

18. *குட்டை* - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. *குண்டம்* - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. *குண்டு* – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. *குமிழி* – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. *குமிழி ஊற்று* – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . *குளம்* - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. *கூவம்* – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . *கூவல்* – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. *வாளி* (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. *கேணி* –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. *சிறை* - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. *சுனை* - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. *சேங்கை* – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. *தடம்* - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . *தளிக்குளம்* - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. *தாங்கல்* – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. *திருக்குளம்* – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. *தெப்பக்குளம்* -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. *தொடு கிணறு* - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. *நடை கேணி* – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. *நீராவி* - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. *பிள்ளைக்கிணறு* -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. *பொங்கு கிணறு* - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. *பொய்கை* - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. *மடு* - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. *மடை* - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. *மதகு* - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. *மறு கால்* - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. *வலயம்* - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47 *வாய்ககால்* - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.                                               🙏🙏

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

மௌரிய பேரரசு பற்றிய சில தகவல்கள்:-

மௌரிய பேரரசு பற்றிய சில தகவல்கள்:-
💠 தோற்றுவித்தவர் - சந்திர குப்த மௌரியர்
💠 சந்திர குப்த மௌரியரை மௌரிய புத்ரா என்று அழைத்தவர்
- விசாகதத்தர்
💠 சந்திர குப்த மௌரியரின் அரசியல் குரு - சாணக்கியர்
💠 சாணக்கியர் வேறு பெயர்கள் - கௌடில்யர், விஷ்ணுகுத்தர், இந்தியாவின் மாக்கியவல்லி
💠 சந்திர குப்த மௌரியர் மனைவி - ஹெலன்
💠 ஹெலனின் தந்தை - செல்யூகஸ் நிகேடர்
💠 அலெக்சாண்டர் படைதளபதி - செல்யூகஸ் நிகேடர்
💠 செல்யூகஸ் நிகேடர் தூதர் - மெகஸ்தனிஸ்
💠 மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா
💠 சந்திரகுப்த மௌரியர் பின்பற்றிய சமயம் - சமண சமயம்
💠 சந்திரகுப்த மௌரியர் நினைவாக கட்டப்பட்டது - சந்திராபாஸ்டி
💠 சந்திரகுப்த மௌரியர் உடன் சென்றவர் - பத்ரபாகு
💠 சந்திரகுப்த மௌரியர் மகன் - பிந்துசாரர்
💠 பிந்துசாரர் பட்டப்பெயர் - அமித்ரகாதன்
💠 அமித்ரகாதன் என்பதன் பொருள் - எதிரிகளை அழிப்பவன்
💠 பிந்துசாரர் அவைக்கு வந்த சிரியா நாட்டு தூதர் - டைமக்கஸ்
💠 பிந்துசாரர் மகன்கள் - சுமனா, அசோகர்
💠 சுமனா ஆண்ட பகுதி - தட்டசீலம்
💠 அசோகர் ஆண்ட பகுதி - உஜ்ஜயினி
💠 முதல் தேசிய அரசர் - அசோகர்
💠 அசோகர் மனைவி - தேவி
💠 அசோகர் முதலில் வணங்கிய கடவுள் - சிவன்
💠 அசோகர் பிறகு பின்பற்றிய மதம் - புத்த மதம்
💠 அசோகர் மகன் - மகேந்திரன், மகள் - சங்கமித்திரை
💠 அசோகர் கூட்டிய புத்த மாநாடு - 3வது பாடலிபுத்திரம்
💠 அசோகர் பட்டப்பெயர் - தேவனாம் பிரியர், பிரியதர்சன்
💠 மௌரிய பேரரசின் கடைசி அரசர் - பிரகத்ரதன்

சுங்க மரபு பற்றி சில தகவல்கள் :-
💠 சுங்க மரபு தோற்றுவித்தவர் - புஷ்ய மித்ர சுங்கர்
💠 புஷ்ய மித்ர சுங்கர் பின் பற்றிய சமயம் - இந்து சமயம்
💠 புஷ்ய மித்ர சுங்கர் ஆதரித்த சமயம் - வைதீக பிராமண சமயம்
💠 பிஷ்ய மித்ர சுங்கர் மேற்கொண்ட யாகம் - அசுவமேத யாகம்
💠 புஷ்ய மித்ர சுங்கர் காலத்தில் வாழ்ந்த இலக்கிய வல்லுநர் - பதஞ்சலி
💠  புஷ்ய மித்ர சுங்கர் மகன் - அக்னி மித்ரன்
💠  அக்னி மித்ரன் தலைவனாக கொண்டு இயற்றப்பட்ட நூல் - மாளவிகாக்கினி மித்ரம்
💠 மாளவிகாக்கினி மித்ரம் நூல் இயற்றியவர் - காளிதாசர்
💠 சுங்க வம்சத்தின் கடைசி அரசர் - தேவபூதி
💠 தேவபூதி மந்திரி பெயர் - வாசுதேவ கன்வா
💠 வாசுதேவ கன்வா வால் கொல்லப்பட்டவர் - தேவபூதி

குப்த பேரரசு பற்றிய சில தகவல்கள்:-
💠 குப்தப் பேரரசு தோற்றுவித்தவர் - ஸ்ரீகுப்தர்
💠குப்தப் பேரரசு தலைநகரம் - பாடலிபுத்திரம்
💠 குப்தப் பேரரசு ஆட்சி மொழி - சமஸ்கிருதம்
💠 ஸ்ரீ குப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் சந்திர குப்தர்
💠 குப்த சகாப்தம் - கி.பி.320
💠 குப்த சகாப்தம் தோற்றுவித்தவர் - முதலாம் சந்திர குப்தர்
💠 முதலாம் சந்திர குப்தர் மனைவி - குமாரதேவி
💠 நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் அரசி - குமாரதேவி (லிச்சாவி இளவரசி)
💠 முதலாம் சந்திர குப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் - சமுத்திர குப்தர்
💠 சமுத்திர குப்தர் படை தளபதி - அரிசேனர்
💠 சமுத்திர குப்தர் பற்றி கூறும் கல்வெட்டு - அலகாபாத் தூண் கல்வெட்டு
💠 அலகாபாத் தூண் கல்வெட்டு செதுக்கியவர் - அரிசேனர்
💠 குப்த பேரரசு சிறந்த அரசர் - சமுத்திர குப்தர்
💠 சமுத்திர குப்தர் தென்னிந்திய படையெடுப்பின் போது அவர் வெற்றி கொண்ட அரசர்கள் - 12
💠 சமுத்திர குப்தரால்  தோற்கடிக்க பட்ட இடைகால பல்லவ அரசன் - விஷ்ணு கோபன்
💠  சமுத்திர குப்தர் பட்டப்பெயர் - கவிராசர், இந்தியன் நெப்போலியன்
💠 சமுத்திர குப்தரை இந்தியன் நெப்போலியன் என்று அழைத்தவர் - ஸ்மித்
💠 சமுத்திர குப்தர் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் சந்திர குப்தர்
💠 இரண்டாம் சந்திர குப்தர் மனைவி - குபேரநாக (நாகர்குல இளவரசி)
💠 இரண்டாம் சந்திர குப்தர்  அவைப்புலவர்கள் - நவரத்தினம்
💠 நவரத்தினத்தில் தலைமை புலவர் - காளிதாசர்
💠 இரண்டாம் சந்திர குப்தர்  காலத்தில் வருகை தந்த சீனா பயனி - பாகியன்
💠 இரண்டாம் சந்திர குப்தர் பட்டப்பெயர் - சாகரி, விக்ரமாதித்தன்
💠 இரண்டாம் சந்திர குப்தர் பின் ஆட்சிக்கு வந்தவர் - குமார குப்தர்
💠 நாலந்தா பல்கலைக்கழகம் நிறுவியவர் - குமார குப்தர்
💠 குமர குப்தர் ஆட்சிகாலத்தில் படை எடுத்து குப்த பேரரசு அழித்தவர் - யூணர்கள்
💠 யூணர்கள் தலைவன் - தோரமானர், மிகிரகுலர்
💠 குப்த பேரரசின் கடைசி அரசர் - ஸ்கந்த குப்தர்

குஷாணர்கள் மரபு பற்றிய சில தகவல்கள்:-
💠 குஷாணர் வம்சத்தை தோற்றுவித்தவர் - குஜாலா காட்பீசசு
💠 குஷாணர் எந்த இனத்தை சார்ந்தவர் - யூச்சி
💠 குஜாலா காட்பீசசு மகன் - வீமா காட்பீசசு
💠 குஷணா வம்சத்தின் சிறந்த அரசர் - கனிஷ்கர்
💠 சக சபாத்தம் தோற்றுவித்தவர் - கனிஷ்கர்
💠 சக சகாப்தம் ஆண்டு - கி.பி.78
💠 கனிஷ்கர் பாமிர் முடிச்சை கடந்து சீனாவில் கைபற்றிய இடங்கள் - கோட்டான், யார்க்கண்டு, காஷ்கர்
💠 கனிஷ்கர் காலத்தில் புகழ்பெற்ற தத்துவ ஞானி - அசுவகோசர்
💠 இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்
💠 கனிஷ்கர் கூட்டிய புத்த சமய மாநாடு - 4 இடம் - குந்தல்வனம்
💠குந்தல்வனம் புத்த மாநாட்டில் கலந்து கொண்ட துறவிகள் - அசுவகோசர், வசுமித்திரர், நாகர்ஜூனர், பார்சவர்
💠 அசுவகோர் இயற்றிய நூல் - புத்தசரிதம்
💠 நாகர்ஜூனர் இயற்றிய நூல் - மத்திய மிக சூத்திரம்
💠 வசுமித்திரர் இயற்றிய நூல் - மகாவிபாஷம்
💠 நான்காவது புத்த சமய மாநாட்டில் புத்த மதம் எவ்வாறு பிரிந்தது - 2 இரண்டாக
💠 மகாயான புத்த மாதத்தில் சிறந்த அறிஞர்கள் - நாகர்ஜூனர், அசுவகோசர்
💠 கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த மருத்துவர் - சரகர்
💠 சரகர் இயற்றிய நூல் - சரக சமிதம்
💠 கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் - சுசுருதர்
💠 சுசுருதர் இயற்றிய ஊ - சுசுருத சமிதம்
💠 கனிஷ்கர் காலத்தில் கட்டிடக் கலை முறை - காந்தார கலை
💠 கனிஷ்கர் இறப்பு - கி்.பி். 180

சாதவாகனரகள் பற்றிய சில தகவல்கள்:-
💠சாதவாகனர் மரபு தோற்றி வித்தவர் - சீமுகா
💠 சாதவாகனர் ஆண்ட பகுதி - கிருஷ்ணா கோதாவரி இடைப்பட்ட பகுதி
💠 சீமுக மகன் பெயர் - முதலாம் ஸ்ரீசதகர்ணி
💠 முதலாம் ஸ்ரீசதகர்ணி மாளவத்தை வென்று மேற்கொண்ட யாகம் - அசுவமேத யாகம்
💠 முதலாம் ஸ்ரீசதகர்ணி தலைநகர் - பிரதிட்டன்
💠 சாதவாகனர்களின் மிக சிறந்த அரசர் - கௌதமிபுத்ர சதகர்ணி
💠 கௌதமிபுத்ர சதகர்ணி சாகர்களை வெற்றி பெற்று கிடைத்த பட்டம் - சாகாரி
💠 கௌதமிபுத்ர சதகர்ணி பின் ஆட்சி செய்தவர் - விசிஸ்ட புத்ர புலமாயியக்ன சதகர்ணி
💠 விசிஸ்ட புத்ர புலமாயியக்ன சதகர்ணி நிர்மாணித்த நகரம் - நவங்கரா
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் புரதத்தில் இருந்த நாணயம் - கார்சபணம், சுவர்ணம்
💠 சாதவாகனர் ஆட்சி மொழி - பிராக்கிருதம்
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் இயற்றிய இலக்கிய நூல்கள் - சப்தசடாகா, பிருகத்கதா
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் இயற்றிய இலக்கண நூல் - கடாந்திரா
💠 சாதவாகனர் காலத்தில் அமைக்கப்பட்ட குகை ஓவியங்கள் அமைந்துள்ள இடம் - அமராவதி, நாகர்ஜூனா கொண்ட
💠 சாதவாகனர் காலத்தில் கிழக்கு கடற்கரையில் அமைந்த துறைமுகங்கள் - கண்டகசோலா, கஞ்சம்.

மாநிலங்கள் - நடனங்கள்

மாநிலங்கள் - நடனங்கள்

1. உத்தராஞ்சல் – குமயோண், ஜகர்ஸ், சோலிய, தாலி – ஜட்ட
2. அரியானா – ஸ்வாங், கோரியா, குக்க நடனம், லூர், சங், தாம
3. குஜராத் - கர்பா, தாண்டியா, ராஸிலா, திப்பனி, பாவை
4. கேரளா - கதகளி, ஒட்டன் துள்ளல், மோகினி ஆட்டம், சகிர கூத்து, சவிடு நாடகம், கைகொட்டி கலை, கூடியாட்டம், கிருஷ்ண வட்டம், முடியேட்டு
5. பீகார் - ஜதடஜதின், பிதஸிய, பாகுன, புர்பி
6. ராஜஸ்தான் - கயால், காம்கோர், சமர்கினாட்,சக்ரி, லீலா, சுசினி, கல்பேலியா,
7. பஞ்சாப் - பங்கிரா, கிடா, தாமன் மழவை, ஜ்ஹுமார், கர்தி, கிக்லி, சம்மி, லுடி, டண்டாஸ்
8. ஒடிசா – ஒடிசி, சவரி, ஹுமர, பைக, சாஹு, gotipua, சம்பல்பூர்
9. அசாம் – பிஹீ, ஒஜபலி, அங்கிய நட்
10. மேற்கு வங்காளம் - காதி, ஜாத்
11. உத்திரபிரதேசம் - கதக், காரண், சப்பேலி, குமயோண், நௌடாங்கி
12. மிசோரம் – சிராக் (மூங்கில் நடனம்)
13. ஜம்மு காஷ்மீர் - சாக்ரி, ரௌஃப்
14. மகாராஷ்டிரம் - தமாஸா, லாவனி, தாஹிகால, லேசிம்
15. கர்நாடகம் – யக்ஷகானம், பயலடா, சிம்ஹா நுடர்யா, தொல்லு குனித, வீரகசே
16. ஆந்திரா பிரதேசம் - குச்சிப்பிடி, கொட்டம்
17. மத்திய பிரதேசம் - மாச்சா, லோத்தா, பாண்ட்வானி, தேர்டாளி, சர்குல, ஜவரா, மட்கி, ப்ஹுல்பட்டி, மான்ச், கிரிட கூர் மரிய
18. இமாச்சல் பிரதேசம் - லூட்டி, காயம்கா, முன்ஜர, கணயலா, ஹிகட்
19. தமிழ் நாடு - பரதநாட்டியம், தெருக்கூத்து, கும்மி, கோலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம்
20. அருணாச்சல பிரதேசம் – அஜி லாமு, பர்டோ சஹம், போபிர், சலோ, சிங்கம் & மயில் நடனம்
21. சட்டீஸ்கர் – பந்தி, ராட் நச்சா,
22. கோவா – புக்டி, தேஹன்னி, தரங்கமல், தலோ
23. ஜார்கண்ட் - கர்மா
24. லட்சத்தீவுகள் - லவா
25. புதுச்சேரி - கரடி
26. சிக்கிம் - சிங்ஹி சாம், யாக் சாம், மருனி, ரேசுங்க்மா
27. தெலுங்கானா – பெரிணி தாண்டவம், தப்பு, லம்பாடி
28. திரிபுரா – ஹோஜகிரி, கோரிய, லேபங் பூமணி,
29. மணிப்பூர் – தங் டா, மணிபுரி, தொல் சொலோம்

புதிய தமிழக அமைச்சரவை பட்டியல் விவரம்:*

*புதிய அமைச்சரவை பட்டியல் விவரம்:*

01. முதலமைச்சர் - ஜெயலலிதா - பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் பணி, காவல் மற்றும் உள்துறை 
02. நிதி அமைச்சர் - ஓ.பன்னீர்செல்வம் 
03. வனத்துறை - திண்டுக்கல் சீனிவாசன் 
04. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணித்துறை 
05. செல்லூர் ராஜூ - தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை 
06. தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை 
07. வேலுமணி - உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் 
08. ஜெயக்குமார் - மீன் வளத்துறை, 
09. சி.வி. சண்முகம் - சட்டத் துறை 
10. கே.பி.அன்பழகன் - உயர் கல்வித் துறை 
11. வி.சரோஜா- சமூக நலத்துறை மற்றும் சத்துணவு 
12. கே.வி. கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் துறை 
13. ஆர்.காமராஜ் - உணவு மற்றும் இந்த சமய அறநிலையத்துறை 
14. எம்.சி.சம்பத் - தொழில்துறை 
15. ஓ.எஸ். மணியன் - ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை 
16. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி 
17. விஜயபாஸ்கர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை 
18. மாஃபா கே. பாண்டியராஜன் - பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை 
19. கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் செய்தி விளம்பரத்துறை 
20. ராஜேந்திர பாலாஜி - பால்வளத்துறை 
21. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை 
22. பெஞ்சமின் - ஊரகத் தொழில் துறை 
23. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
24. உதயகுமார் - வருவாய் துறை 
25. மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம் 
26. ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 
27. எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர் 
28. துரைக்கண்ணு - வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை 
29. கே.சி. வீரமணி - வணிக வரித்துறை

வழக்குகள் பற்றி

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

Oru Shot Cut மு. மேத்தாவின் படைப்புகள் :

Oru Shot Cut
மு. மேத்தாவின் படைப்புகள் :
1. இதயத்தில் நாற்காலி
2. சோழ நிலா
3. நந்தவன நாட்கள்
4. மனசிறகினிலே
5. ஆகாயத்தில் அடுத்த வீடு
6. கண்ணீர் பூக்கள்
7. ஊர்வலம்
இதயத்துல நாற்காலி, போட்டு உக்காந்துட்டு சோழ நிலாவை பாத்து, தன்னுடைய நந்தவன நாட்களை எண்ணி, எண்ணி, மனசிறகுல, ஆகயத்துல அடுத்த வீடு கட்ட முடியும் என்று நினைத்து கண்ணீர் பூக்களே சிந்தி ஊர்வலமா சென்றார். மு. மேத்தா.

Oru Shot Cut
உமாபதி சிவாசாரியார் அவர்களின் படைப்புகள்
1. திருவருட்பயன்
2. சிவபிரகாசம்
3. உண்மை நெறி விளக்கம்
4. நெஞ்சிவிடு தூது
5. கொடிக்கவி
6. வினாவெண்பா
7. சங்கற்ப நிராகரணம்
8. போற்றிப்பாரோடை
திரு சிவபிரகாசம் அம்வர்களே உண்மை ( நெறி விளக்கம் ) யில் நெஞ்சி, கொடி இருந்தால் வினாவென்பவை சங்கமத்தொடு போற்றி பாடுங்கள் பாப்போம்.

சச்சிதானந்தம் அவர்களின் படைப்புகள்
1. தமிழ் பசி
2. யாழ்ப்பான காவியம்
3. ஆனந்த தேன்
4. அன்னபூரணி
சச்சிதானந்தத்திற்கு தமிழ் பசி எடுத்ததால யாழ்ப்பாண காவியத்தில் ஆனந்த தேன் ஊற்றி அன்னம் போட்டாங்க

Oru Shot Cut
பரிதிமார்கலஞர் அவர்களின் படைப்புகள்
1. மதி வாணன்
2. ரூபவதி
3. கலாவதி
4. நாடகவியல்
5. மான விஜயம்
6. சித்திரகவி
7. தனிபாசுற தொகை
மதிவாணன் என்பவன் ரூபவதியும் கலாவதியும் வெச்சி நாடகவியல் நடத்தி மான (விஜயம் ) பங்கப் படுத்திட்டான் இதை பருதிமார்களைஞர் சித்திரகவிலயும் தனிபாசுற தொகைலையும் வெளியிட்டுட்டார்

Oru Shot Cut.
புலவர் குழந்தையின் படைப்புகள்.
1. தீரன் சின்னமலை
2. குழந்தை பாடல்கள்
3. காமஞ்சரி
4. நெறிஞ்சிபழம்
5. ராவண காவியம்
6. கொங்கு வரலாறு
தீரன் சின்னமலை என்கின்ற குழந்தையை, தூங்கவைக்க குழந்தை பாடல் பாடி , காமஞ்சரியை காட்டி, நெறிஞ்சிபழதை கொடுத்து, ராவணகவியதையும் , கொங்கு வரலாறையும் சொல்லி தூங்க வெச்சாங்க.

Oru Shot Cut
அறிஞர் அண்ணாவின் படைப்புகள்
1. சந்திர மோகன்
2. நல்ல தம்பி
3. ஓர் இரவு
4. அற்றங்கரையிலே
5. ஏ தாழ்ந்த தமிழகமே
6. பேய் ஓடிபோச்சி
7. கலிங்க நாட்டு ராணி
8. ரங்கோ ராத
9. வேலைக்காரி
10. பார்வதி பி.எ
11. சூதாடி
12. சொர்கவாசல்
13. நீதி தேவனுக்கு மயக்கம்
14. செவ்வாழை
15. அன்னதானம்
16. கம்பரசம்
17. கண்ணீர் துளிகள்
சந்திர மோகன் என்ற நல்லதம்பி ஒரு நாள் இரவில், ஆற்றங்கரையிலே நின்று ஏ தாழ்ந்த தமிழகமே என்று காத்த, பேயோடிபோச்சி னு பாத்தா, அங்கே கலிங்க நாட்டு ராணி ராங்கோ ராதாவின் வேலைக்காரி பார்வதி பி.எ அவ ஒரு சூதாடி. அவள் சொர்கவசலில் உள்ள நீதி தேவனுக்கு செவ்வாழை இலை ல அன்னதானம் போட்டு கம்பரசம் ஊற்றுவதை பார்த்த அறிஞர் அண்ணா கண்ணீர் துளி விட்டு அழுதார்.

Oru Shot Cut
மு. மேத்தாவின் படைப்புகள் :
1. இதயத்தில் நாற்காலி
2. சோழ நிலா
3. நந்தவன நாட்கள்
4. மனசிறகினிலே
5. ஆகாயத்தில் அடுத்த வீடு
6. கண்ணீர் பூக்கள்
7. ஊர்வலம்
இதயத்துல நாற்காலி, போட்டு உக்காந்துட்டு சோழ நிலாவை பாத்து, தன்னுடைய நந்தவன நாட்களை எண்ணி, எண்ணி, மனசிறகுல, ஆகயத்துல அடுத்த வீடு கட்ட முடியும் என்று நினைத்து கண்ணீர் பூக்களே சிந்தி ஊர்வலமா சென்றார். மு. மேத்தா.

Oru Shot Cut.
பாரதிதாசனின் படைப்புகள்
1. இருண்ட வீடு
2. அமைதி
3. குடும்ப விளக்கு
4. மணிமேகலை
5. தேன் அருவி
6. சாரல்
7. இசை அமுது
8. பாண்டியன் பரிசு
9. எதிர்பாராத முத்தம்
10. காதல் நினைவுகள்
11. பிசிலாந்தை
12. சேரதாண்டவம்
13. பிள்கினி
14. இளைஞன்
15. காதல கடமையா
16. கடமை
17. இனையற்ற வீரன்
18. நல்ல தீர்ப்பு
இருண்ட வீட்ல அமைதியான குடும்ப விளக்காக மணிமேகலை என்ற பெண் தேன் அருவி சாரலில் இசை அமுதை கேட்க்கும்போது பாண்டியன், பரிசு கொடுத்து எதிர்பாராத முத்தமும் கொடுத்தான். இருவருக்கும் காதல் நினைவுகள் ஆரம்பமாவதை பார்த்த பிசிலாந்தையார் சேர தாண்டவம் ஆடி நாட்டமை பிள்கிநியிடம் இளைஞன் ஐ அழைதுசென்றார் அவர் காதலா? கடமையா ? என்று கேட்க, கடமை என்று கூறினான். உடனே நீதான் இணையற்ற வீரன் என நல்ல தீர்ப்பு கூறினார்.

Oru Shot Cut
கவிகோ அப்துல் ரகுமான் அவர்களின் படைப்பு
1. பித்தன்
2. ஆலம்பிகை
3. அவளுக்கு நிலா என்று பெயர்
4. இது சிறகுகளின் நேரம்
5. கம்பரின் அரசியல் கோட்பாடு
6. மின்மிநிகளுக்கு ஒரு கடிதம்
7. நவ கவிதை
8. ரகசிய பூ
9. முத்தங்கள் ஓய்வதில்லை
10. சுட்டு விரல்
11. நிலவில் இருந்து வந்தவன்
12. தன் சொந்த சிறகு
13. மகரந்த சிறகு
14. கடவுளின் முகவரி
15. பால் வீதி
16. நேயர் விருப்பம்
17. பசி எந்த சாதி
18. நெருப்பை அணைக்கும் நெருப்பு
19. விதைபோல் விழுந்தவன்
20. முட்டை வாசி
21. காக்கை சோறு
22. தொலைபேசி கண்ணீர்
23. மரணம் ஒரு முற்று புள்ளி அல்ல.
அப்துல் ரகுமான் என்பவர், ஒரு பித்தன். ஆலம்பிகை என்ற பெண்ணுக்கு அவளுக்கு நிலா என்று பெயர் வெச்ச நேரம் இது சிறகுகளின் நேரமபோசாம். அவர் கம்பனின் அரசியல் கோட்பாடு படிச்சிட்டு, அந்தே பொண்ணுக்கு மின்மினிகள் ஒரு கடிதம் எழுதினார். அந்தே கடிதத்தில் நவ கவிதையாக எழுதினார் அந்தே கவிதையில ரகசியமா ஒரு பூ வ கொடுத்து, முத்தங்கள் ஓய்வதில்லை என்று சொல்லி, இந்தே கவிதை எல்லாத்தையும் தன்னுடைய சுட்டு விரல் ல எழுதி, இந்தே கவிதையை நிலவில் இருந்து வந்தவன் கிட்ட தன் சொந்த சிறகு மற்றும் மகரந்த சிறகையும் கொடுத்து கடவுளின் முகவரிக்கு பால் வீதி பக்கமாக கொண்டுபோய் கொடுக்க சொன்னார். கொண்டுபோய் கொடுக்கற வழியில அவர் நேயர் விருப்பமாக பசி எந்த சாதி மற்றும் நெருப்பை அணைக்கும் நெருப்பு என்ற படலை கேட்டான் பாட்டை கேட்டவுடனே அவன் விதைபோல் விழுந்து இறந்துவிட்டான் இறந்தவனுக்கு முட்டை வெச்சி காக்காக்கு சோறு வெச்சி படைச்சாங்க நடந்ததை எல்லாத்தையும் அப்துல் ரகுமான் அந்தே பொண்ணுகிட்ட தொலைபேசியில் கண்ணீர் விட்டு சொன்னார் மரணம் ஒரு முற்று புள்ளி அல்ல என்று .

Oru Shot Cut அனைத்து வருடங்களும் 10ண் அடுக்கு
உறவு முறைகள்
தாதா
தந்தை
மாமா
சித்தப்பா
அண்ணா
மகாத்மா காந்தி பிறந்த வருடம் 1869 தாதா
தந்தை பெரியார் பிறந்த வருடம் 1879 தந்தை
ஜவஹர்லால் நேரு பிறந்த வருடம் 1889 மாமா
நாராயணகவி பிறந்த வருடம் 1899 சித்தப்பா
அறிஞர் அண்ணா பிறந்த வருடம் 1909 அண்ணா