சிந்து பற்றிய விவரங்கள் தெரிந்திருப்பது அவசியம்.
சிந்து பற்றிய சிறு குறிப்பு இதோ:
முழு பெயர்: புசர்லா வெங்கட சிந்து.
பிறந்தது: 1995, ஜூலை 5ம் தேதி.
பிறந்த நகரம்: ஹைதராபாத்
உயரம்: 5 அடி 9 இன்ச்.
பேட்மின்டன் அறிமுகம்: சிந்து 8வது வயதில் இருந்தே பேட்மின்டன் ஆட தொடங்கினார். 13 வயதில் தொழில்முறை ஆட்டக்காரராக மாறினார்.
குடும்ப பின்னணி: தந்தை ரமணா, தாய் விஜயா ஆகியோர் முன்னாள் கைப்பந்தாட்டக்காரர்கள்.
பயிற்சியாளர்கள்: சிந்துவின் முதல் பயிற்சியாளர் மெகபூப் அலி. தற்போது கோபிச்சந்த் பயிற்சியளிக்கிறார்.
தர வரிசை: சிந்து தற்போது உலக தர வரிசையில் 10வது இடத்தில் உள்ளார்.
மொழி அறிவு: தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம்
முக்கிய சாதனைகள்: 2011ல் இந்தோனேஷிய இன்டர்நேஷனல் கோப்பை, 2013 மற்றும் 2016ல் மலேசியா மாஸ்டர்ஸ் , 2013, 2014, 2015 ஆகிய ஆண்்டுகளில் மகாவு ஓபன் ஆகிய தொடர்களை சிந்து வென்றுள்ளார்.
2013 மற்றும் 2014ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றார். 2014 ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
2014 மற்றும் 2016களில் இருமுறை ஊபர் கோப்பை அணிக்காக வெண்கலம் வென்றார். 2014 காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார். 2011 மற்றும் 2012ல் முறையே கிம்செயான் மற்றும் துக்லஸ் போட்டிகளில் தங்கம் வென்றார்.
விருதுகள்: 2013ல் அர்ஜுனா விருதையும், 2015ல் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்ற கவுரவத்திற்கு சொந்தக்காரர் சிந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக