வியாழன், 25 ஆகஸ்ட், 2016

குப்த பேரரசு பற்றி சில தகவல்கள்:-

குப்த பேரரசு பற்றி சில தகவல்கள்:-

🔹 குப்தப்பேரரசு தோற்றிவித்தவர் - ஸ்ரீ குப்தர்
🔹 குப்தப்பேரரசு தலைநகரம் - பாடலிபுத்திரம்
🔹 குப்தப்பேரரசு ஆட்சி மொழி - சமஸ்கிருதம்
🔹 ஸ்ரீ குப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் சந்திர குப்தர்
🔹 குப்த சகாப்தம் - கி.பி.320
🔹 குப்த சகாப்தம் தோற்றிவித்தவர் - முதலாம் சந்திர குப்தர்
🔹 முதலாம் சந்திர குப்தர் மனைவி பெயர் - குமாரதேவி
🔹 நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் அரசி - குமாரதேவி (லிச்சாவி இளவரசி)
🔹 முதலாம் சந்திர குப்தர் பின் ஆட்சிக்கு வந்தவர் - சமுத்திர குப்தர்
🔹 சமுத்திர குப்தர் படை தளபதி - அரிசேனர்
🔹 சமுத்திர குப்தர் பற்றி கூறும் கல்வெட்டு - அலகாபாத் தூண் கல்வெட்டு
🔹 அலகாபாத் தூண் கல்வெட்டு செதுக்கியவர் - அரிசேனர்
🔹 சமுத்திர குப்தர் தென்னிந்தியாவில் படையெடுப்பில் தோற்கடித்த அரசர்கள் - 12
🔹 சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ அரசன் - விஷ்ணு கோபன்
🔹 சமுத்திர குப்தர் பட்டப்பெயர் - கவிராசர், இந்தியன் நெப்போலியன்
🔹 சமுத்திர குப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் சந்திர குப்தர்
🔹 இரண்டாம் சந்திர குப்தர் பட்டப்பெயர் - விக்கிரமாதித்தன், சாகரி
🔹 இரண்டாம் சந்திர குப்தர் மனைவி பெயர் - குபேரநாகா
🔹 இரண்டாம் சந்திர குப்தர் அவைப்புலவர்களை எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் - நவரத்தினம்
🔹 நவரத்தினங்களில் முதன்மையானவர் - காளிதாசர்
🔹 இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் வருகை புரிந்த சீன பயணி - பாகியான்
🔹 இரண்டாம் சந்திர குப்தர் பின் ஆட்சிக்கு வந்தவர் - குமார குப்தர்
🔹 நாலந்தா பல்கலைக்கழக நிறுவியவர் - குமார குப்தர்
🔹 குமார குப்தர் ஆட்சிகாலத்தில் படை எடுத்து குப்தப்பேரரசு அழித்தவர்கள் - யூணர்கள்
🔹 யூணர்கள் தலைவர்கள் - தோரமானர், மிகிரகுலர்
🔹 இந்தியாவின் பொற்காலம் - குப்தர் ஆட்சிகாலம்.

1 கருத்து:

  1. We are looking for serious kdney donors for sum of 3 crore,For more info Email: healthc976@ gmailcom
    Call or whatsapp +91 9945317569

    பதிலளிநீக்கு