செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

மௌரிய பேரரசு பற்றிய சில தகவல்கள்:-

மௌரிய பேரரசு பற்றிய சில தகவல்கள்:-
💠 தோற்றுவித்தவர் - சந்திர குப்த மௌரியர்
💠 சந்திர குப்த மௌரியரை மௌரிய புத்ரா என்று அழைத்தவர்
- விசாகதத்தர்
💠 சந்திர குப்த மௌரியரின் அரசியல் குரு - சாணக்கியர்
💠 சாணக்கியர் வேறு பெயர்கள் - கௌடில்யர், விஷ்ணுகுத்தர், இந்தியாவின் மாக்கியவல்லி
💠 சந்திர குப்த மௌரியர் மனைவி - ஹெலன்
💠 ஹெலனின் தந்தை - செல்யூகஸ் நிகேடர்
💠 அலெக்சாண்டர் படைதளபதி - செல்யூகஸ் நிகேடர்
💠 செல்யூகஸ் நிகேடர் தூதர் - மெகஸ்தனிஸ்
💠 மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா
💠 சந்திரகுப்த மௌரியர் பின்பற்றிய சமயம் - சமண சமயம்
💠 சந்திரகுப்த மௌரியர் நினைவாக கட்டப்பட்டது - சந்திராபாஸ்டி
💠 சந்திரகுப்த மௌரியர் உடன் சென்றவர் - பத்ரபாகு
💠 சந்திரகுப்த மௌரியர் மகன் - பிந்துசாரர்
💠 பிந்துசாரர் பட்டப்பெயர் - அமித்ரகாதன்
💠 அமித்ரகாதன் என்பதன் பொருள் - எதிரிகளை அழிப்பவன்
💠 பிந்துசாரர் அவைக்கு வந்த சிரியா நாட்டு தூதர் - டைமக்கஸ்
💠 பிந்துசாரர் மகன்கள் - சுமனா, அசோகர்
💠 சுமனா ஆண்ட பகுதி - தட்டசீலம்
💠 அசோகர் ஆண்ட பகுதி - உஜ்ஜயினி
💠 முதல் தேசிய அரசர் - அசோகர்
💠 அசோகர் மனைவி - தேவி
💠 அசோகர் முதலில் வணங்கிய கடவுள் - சிவன்
💠 அசோகர் பிறகு பின்பற்றிய மதம் - புத்த மதம்
💠 அசோகர் மகன் - மகேந்திரன், மகள் - சங்கமித்திரை
💠 அசோகர் கூட்டிய புத்த மாநாடு - 3வது பாடலிபுத்திரம்
💠 அசோகர் பட்டப்பெயர் - தேவனாம் பிரியர், பிரியதர்சன்
💠 மௌரிய பேரரசின் கடைசி அரசர் - பிரகத்ரதன்

சுங்க மரபு பற்றி சில தகவல்கள் :-
💠 சுங்க மரபு தோற்றுவித்தவர் - புஷ்ய மித்ர சுங்கர்
💠 புஷ்ய மித்ர சுங்கர் பின் பற்றிய சமயம் - இந்து சமயம்
💠 புஷ்ய மித்ர சுங்கர் ஆதரித்த சமயம் - வைதீக பிராமண சமயம்
💠 பிஷ்ய மித்ர சுங்கர் மேற்கொண்ட யாகம் - அசுவமேத யாகம்
💠 புஷ்ய மித்ர சுங்கர் காலத்தில் வாழ்ந்த இலக்கிய வல்லுநர் - பதஞ்சலி
💠  புஷ்ய மித்ர சுங்கர் மகன் - அக்னி மித்ரன்
💠  அக்னி மித்ரன் தலைவனாக கொண்டு இயற்றப்பட்ட நூல் - மாளவிகாக்கினி மித்ரம்
💠 மாளவிகாக்கினி மித்ரம் நூல் இயற்றியவர் - காளிதாசர்
💠 சுங்க வம்சத்தின் கடைசி அரசர் - தேவபூதி
💠 தேவபூதி மந்திரி பெயர் - வாசுதேவ கன்வா
💠 வாசுதேவ கன்வா வால் கொல்லப்பட்டவர் - தேவபூதி

குப்த பேரரசு பற்றிய சில தகவல்கள்:-
💠 குப்தப் பேரரசு தோற்றுவித்தவர் - ஸ்ரீகுப்தர்
💠குப்தப் பேரரசு தலைநகரம் - பாடலிபுத்திரம்
💠 குப்தப் பேரரசு ஆட்சி மொழி - சமஸ்கிருதம்
💠 ஸ்ரீ குப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் சந்திர குப்தர்
💠 குப்த சகாப்தம் - கி.பி.320
💠 குப்த சகாப்தம் தோற்றுவித்தவர் - முதலாம் சந்திர குப்தர்
💠 முதலாம் சந்திர குப்தர் மனைவி - குமாரதேவி
💠 நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் அரசி - குமாரதேவி (லிச்சாவி இளவரசி)
💠 முதலாம் சந்திர குப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் - சமுத்திர குப்தர்
💠 சமுத்திர குப்தர் படை தளபதி - அரிசேனர்
💠 சமுத்திர குப்தர் பற்றி கூறும் கல்வெட்டு - அலகாபாத் தூண் கல்வெட்டு
💠 அலகாபாத் தூண் கல்வெட்டு செதுக்கியவர் - அரிசேனர்
💠 குப்த பேரரசு சிறந்த அரசர் - சமுத்திர குப்தர்
💠 சமுத்திர குப்தர் தென்னிந்திய படையெடுப்பின் போது அவர் வெற்றி கொண்ட அரசர்கள் - 12
💠 சமுத்திர குப்தரால்  தோற்கடிக்க பட்ட இடைகால பல்லவ அரசன் - விஷ்ணு கோபன்
💠  சமுத்திர குப்தர் பட்டப்பெயர் - கவிராசர், இந்தியன் நெப்போலியன்
💠 சமுத்திர குப்தரை இந்தியன் நெப்போலியன் என்று அழைத்தவர் - ஸ்மித்
💠 சமுத்திர குப்தர் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் சந்திர குப்தர்
💠 இரண்டாம் சந்திர குப்தர் மனைவி - குபேரநாக (நாகர்குல இளவரசி)
💠 இரண்டாம் சந்திர குப்தர்  அவைப்புலவர்கள் - நவரத்தினம்
💠 நவரத்தினத்தில் தலைமை புலவர் - காளிதாசர்
💠 இரண்டாம் சந்திர குப்தர்  காலத்தில் வருகை தந்த சீனா பயனி - பாகியன்
💠 இரண்டாம் சந்திர குப்தர் பட்டப்பெயர் - சாகரி, விக்ரமாதித்தன்
💠 இரண்டாம் சந்திர குப்தர் பின் ஆட்சிக்கு வந்தவர் - குமார குப்தர்
💠 நாலந்தா பல்கலைக்கழகம் நிறுவியவர் - குமார குப்தர்
💠 குமர குப்தர் ஆட்சிகாலத்தில் படை எடுத்து குப்த பேரரசு அழித்தவர் - யூணர்கள்
💠 யூணர்கள் தலைவன் - தோரமானர், மிகிரகுலர்
💠 குப்த பேரரசின் கடைசி அரசர் - ஸ்கந்த குப்தர்

குஷாணர்கள் மரபு பற்றிய சில தகவல்கள்:-
💠 குஷாணர் வம்சத்தை தோற்றுவித்தவர் - குஜாலா காட்பீசசு
💠 குஷாணர் எந்த இனத்தை சார்ந்தவர் - யூச்சி
💠 குஜாலா காட்பீசசு மகன் - வீமா காட்பீசசு
💠 குஷணா வம்சத்தின் சிறந்த அரசர் - கனிஷ்கர்
💠 சக சபாத்தம் தோற்றுவித்தவர் - கனிஷ்கர்
💠 சக சகாப்தம் ஆண்டு - கி.பி.78
💠 கனிஷ்கர் பாமிர் முடிச்சை கடந்து சீனாவில் கைபற்றிய இடங்கள் - கோட்டான், யார்க்கண்டு, காஷ்கர்
💠 கனிஷ்கர் காலத்தில் புகழ்பெற்ற தத்துவ ஞானி - அசுவகோசர்
💠 இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்
💠 கனிஷ்கர் கூட்டிய புத்த சமய மாநாடு - 4 இடம் - குந்தல்வனம்
💠குந்தல்வனம் புத்த மாநாட்டில் கலந்து கொண்ட துறவிகள் - அசுவகோசர், வசுமித்திரர், நாகர்ஜூனர், பார்சவர்
💠 அசுவகோர் இயற்றிய நூல் - புத்தசரிதம்
💠 நாகர்ஜூனர் இயற்றிய நூல் - மத்திய மிக சூத்திரம்
💠 வசுமித்திரர் இயற்றிய நூல் - மகாவிபாஷம்
💠 நான்காவது புத்த சமய மாநாட்டில் புத்த மதம் எவ்வாறு பிரிந்தது - 2 இரண்டாக
💠 மகாயான புத்த மாதத்தில் சிறந்த அறிஞர்கள் - நாகர்ஜூனர், அசுவகோசர்
💠 கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த மருத்துவர் - சரகர்
💠 சரகர் இயற்றிய நூல் - சரக சமிதம்
💠 கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் - சுசுருதர்
💠 சுசுருதர் இயற்றிய ஊ - சுசுருத சமிதம்
💠 கனிஷ்கர் காலத்தில் கட்டிடக் கலை முறை - காந்தார கலை
💠 கனிஷ்கர் இறப்பு - கி்.பி். 180

சாதவாகனரகள் பற்றிய சில தகவல்கள்:-
💠சாதவாகனர் மரபு தோற்றி வித்தவர் - சீமுகா
💠 சாதவாகனர் ஆண்ட பகுதி - கிருஷ்ணா கோதாவரி இடைப்பட்ட பகுதி
💠 சீமுக மகன் பெயர் - முதலாம் ஸ்ரீசதகர்ணி
💠 முதலாம் ஸ்ரீசதகர்ணி மாளவத்தை வென்று மேற்கொண்ட யாகம் - அசுவமேத யாகம்
💠 முதலாம் ஸ்ரீசதகர்ணி தலைநகர் - பிரதிட்டன்
💠 சாதவாகனர்களின் மிக சிறந்த அரசர் - கௌதமிபுத்ர சதகர்ணி
💠 கௌதமிபுத்ர சதகர்ணி சாகர்களை வெற்றி பெற்று கிடைத்த பட்டம் - சாகாரி
💠 கௌதமிபுத்ர சதகர்ணி பின் ஆட்சி செய்தவர் - விசிஸ்ட புத்ர புலமாயியக்ன சதகர்ணி
💠 விசிஸ்ட புத்ர புலமாயியக்ன சதகர்ணி நிர்மாணித்த நகரம் - நவங்கரா
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் புரதத்தில் இருந்த நாணயம் - கார்சபணம், சுவர்ணம்
💠 சாதவாகனர் ஆட்சி மொழி - பிராக்கிருதம்
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் இயற்றிய இலக்கிய நூல்கள் - சப்தசடாகா, பிருகத்கதா
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் இயற்றிய இலக்கண நூல் - கடாந்திரா
💠 சாதவாகனர் காலத்தில் அமைக்கப்பட்ட குகை ஓவியங்கள் அமைந்துள்ள இடம் - அமராவதி, நாகர்ஜூனா கொண்ட
💠 சாதவாகனர் காலத்தில் கிழக்கு கடற்கரையில் அமைந்த துறைமுகங்கள் - கண்டகசோலா, கஞ்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக